Print this page
புதன்கிழமை, 15 March 2023 15:30

பக்தி- (5வகை) நம்முள் நிலைக்க பரிசுத்தமான மனத்துடன் பக்தியில் ஆழ்ந்திரு.

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.


#*#*#*#*#

 

35.பக்தி- (5வகை) நம்முள் நிலைக்க பரிசுத்தமான மனத்துடன் பக்தியில் ஆழ்ந்திரு.

 

1.அழிஞ்சில் பக்தி- அழிஞ்சில் மரத்தின் காய் முற்றியவுடன் கீழே விழுந்து உடைந்ததும் அதன் விதைகள் ஓர் ஆதர்ஸன சக்தியில் தாய் மரத்தினை நோக்கி நகர்ந்து அடியில் ஒட்டிக் கொள்ளும். விதைகள் எங்கிருந்து வந்ததோ அங்கேயே சென்று விடுவதுபோல் பலதடைகளைத் தாண்டி இறையை அடைவதே நம் இலக்காக இருக்கும் பக்தி.

2.காந்த பக்தி. இரும்பை காந்தம் இழுத்துவிடும். சிலகாலம் அப்படியே விட்டால் அந்த இரும்பிலும் காந்த சக்தி இருக்கும். நம் பக்தி விரும்பியதை அடைவதற்காக உண்டாவது. ஞானி, யோகிகளின் இறை வழிபாடு ஒரே திடமாய் இருப்பதால் அவர்களிடம் காந்த பக்தி தோன்றும்.

3.பதி பக்தி- தன் சொந்த காலில் நிற்கும் பெண்கள்கூட பதி பக்தியில் சிறந்து விளங்குகின்றார்கள். பதிவிரதை சர்வ காலமும் தன் பதியின் நினைவிலே இருப்பதைப் போல் நாமும் இறை நினைவிலே இருக்க வேண்டும்.

4.கொடி பக்தி- கொம்பைச் சுற்றியிருக்கும் கொடியை பிரித்தெடுத்தாலும் அடுத்த நாளில் அது மீண்டும் போய் கொம்பைச் சுற்றிக் கொள்ளும். நம் பக்தியும் இப்படி இருக்க வேண்டும்.

5.நதி பக்தி- கடல் நீர் ஆவியாகி உப்புச் சுவையின்றி மேலே சென்று மழையாகப் பொழிந்து நிலத்தின் சுவையை அடைந்து மீண்டும் உப்பின் சுவை பெற்று கடலில் கலக்கின்றது. இறைவனை நோக்கி நாம் செல்லும் போது எவ்வளவு தடைகள் வந்தாலும் அதைக் கடந்து செல்லும் நம்மை கடல்நீர் நதிநீரை எதிர்கொண்டு அழைப்பதைப்போல் இறைவன் எதிர்கொள்வார்.


#*#*#*#*#

Read 338 times
Login to post comments