Print this page
புதன்கிழமை, 15 March 2023 15:45

தேக நலம் தரும் கோடைகால வழிபாடுகள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.


#*#*#*#*#

 

41.தேக நலம் தரும் கோடைகால வழிபாடுகள்!


ஒவ்வொரு பருவகால மாற்றத்திலும் அப்போது நிலவும் சூழலுக்கு ஏற்ப வழிபாடு முறைகளை ஏற்படுத்தி உடல் நலத்தைக் காத்துக் கொள்ள வகை செய்துள்ளனர் முன்னோர்கள்.

உஷ்ணகாலத்தில் வழிபட வேண்டிய தெய்வங்கள்: ஜுரதேவர், சீதளாதேவி, மாரியம்மன், திருச்செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்கள். வெம்மை நோயிலிருந்து காத்து ஆரோக்கிய ஆயுளை அருள்பவர்கள்.

சீதளாதேவி: தேவலோகப் பெண் ஒருத்தி பிரம்மனிடம் மற்ற தெய்வங்களைப் போல் தன்னையும் வணங்க வரம் கேட்க அவள் தகுதியை பரிசோதிக்க உலக மக்களுக்கு வரக்கூடிய நோய்களை எல்லாம் ஒன்று திரட்டி அதை உளுந்தம் பருப்பாக மாற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து இதை கீழே சிந்தாமல் நான் குறிப்பிடும் காலம் வரை எங்கு சென்றாலும் எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்ல, பூலோகத்தில் அவளது கவனம் திசை திரும்பி உளுந்து சிந்த, பிரம்மன் அந்த உளுந்தில் அடக்கி வைத்திருந்த பிணிகள் எல்லாம் வெளிப்பட்டு பரவி மக்களை வாட்டி வதைக்க, தன்னால்தான் இந்நிலை என வருந்தியவள், மக்களை காப்பாற்ற பிரம்மனிடம் சென்று தன் செய்த தவறை ஒப்புக்கொண்டு தன்னை தண்டித்து மக்களை நோய்களிலிருந்து காக்க வேண்டினாள்.

செய்த தவறை மறைக்காமல் ஒப்புக்கொண்டு மக்கள் படும் அவஸ்தையை கண்டு மனம் வருந்தும் தகுதியால் பூவுலகில் உன்னால் பரவிய நோய்களைத் தீர்க்கும் தெய்வமாக நீ விளங்குவாய் என அருளினார். சீதளாதேவி எனும் பெயருடன் உஷ்ணத்தால் ஏற்பட்ட மக்களின் வெம்மை நோய்களை தன்னை வணங்குபவர்களுக்கு நீக்கி அருள் புரிகின்றாள்.

ஜுரதேவர்: சீதளாதேவியின் சகோதரர் ஜூரதேவர். தன் தங்கையை பூவுலகில் பார்த்துவிட்டு வரும் வழியில் மக்கள் விஷஜுரத்தால் பாதிக்கப்பட்டு தவிப்பதைப் பார்த்து பிரம்மனிடம் சென்று மக்களின் துயரத்தைப் போக்க வேண்டினார். தங்கையைப் பார்த்த சந்தோஷத்தைவிட மக்களின் துயரத்தை நினைக்கும் உனக்கு அந்த விஷ ஜுரத்தைப் போக்கும் ஆற்றலை அளிக்கின்றேன் என்றார். உன்னை வழிபடுபவர்களுக்கு அருள் புரிவாய் என்றார்.


மாரியம்மன்: கோடைக்காலதில் அனைத்து உயிர்களையும் தன் அருள் மழையினால் குளிர வைப்பதால் மாரி. அம்மை நோய் கண்டு தன்னை வணங்குபவர்களின் இன்னலைத் தீர்ப்பவள். தான் தங்கிட குளிர்ந்த நிழலும் காற்றும் தந்த வேப்ப மரமும் அதன் இலைகளுமே கோடையில் வரும் நோய்களை தடுக்கும் ஆற்றல் பெற அருள்.

திருச்செந்தூர் முருகன்: தன்னை வழிபட்ட மக்களுக்கு பன்னீர் இலையில் அளிக்கப்படும் பிரசாதம் வெப்ப மற்றும் ஆரோக்கிய குறைபாடுகளை நீக்க வல்லது.


#*#*#*#*#

Read 329 times
Login to post comments