Print this page
புதன்கிழமை, 15 March 2023 16:14

நிமித்தக் குறி சாத்திரங்கள் (8)!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.


#*#*#*#*#

 

50.நிமித்தக் குறி சாத்திரங்கள் (8)!

 

1.அந்தரிக்ஷ நிமித்தம்-சூரியன் சந்திரன், விண்மீன்கள் போன்றவற்றைக் கொண்டு நடக்கப்போகும் நன்மை தீமைகளைக் கூறுவது அந்தரிக்ஷம். இதன் மூலம் தான் பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்றது.

2.பௌமம்.-பூமியில் ஒரு குழியைத் தோண்டி வேள்விக்குண்டம் நடத்தி பலன்களை உரைப்பது.

3.அங்க நிமித்தம்.-மனிதன் மிருகம் ஆகிய உடல்களிலிருந்து இரத்தம் உடல் உறுப்புகளைப் பார்த்து நன்மை தீமைகளை உரைப்பது.

4.ஸ்வர நிமித்தம்-ஆந்தை அலறல், நாய் அழுதல் போன்ற குரல் ஒலிகளை வைத்து நல்லது, கெட்டது உரைத்தல்.

5.இவ்யஞ்ஜன நிமித்தம்-உடலின் நிறம் கொண்டு நன்மை தீமைகளை நிர்ணயம் செய்தல்.

6.லட்சண நிமித்தம்-உலகில் சூரியன், சந்திரன், சுவஸ்திகம், கலப்பை, ஈட்டி, தீவு, கடல், மாளிகை, விமானம், பர்ணம், பட்டிணம், கோபுரம், இந்திரக்கொடி, சங்கு, கொடி, உலக்கை, குதிரை, ஆமை, அங்குசம், சிங்கம், யானை, எருது, மீன், குடை, படுக்கை, இருக்கை, வர்த்தமானம், ஸ்ரீவத்ஸம், சக்கரம், அக்னி, கும்பம் ஆகிய 32 சுப லட்சணங்களை பார்த்து நன்மை தீமைகள் சொல்லுதல்.

7.சிந்ந நிமித்தம்-ஆயுதம், முள், எலி இவற்றால் ஏற்பட்ட வெட்டுகளைக் கொண்டு பலன் சொல்வது.

8.சொப்பண நிமித்தம்.-கனவில் தோன்றுவதைக்கொண்டு பலன் கூறுவது

#*#*#*#*#

Read 384 times
Login to post comments