Print this page
புதன்கிழமை, 15 March 2023 16:21

கனவுகளின் நன்மை தீமை பலன்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

 

#*#*#*#*#

 

52.கனவுகளின் நன்மை தீமை பலன்கள்!

 

கனவு கான்பது மனித இயல்பு. அவற்றிற்கு பலன்களும் உண்டு. தூங்கும்போது ஏற்படும் கனவிற்கு நற்பலன்களும், தீயபலன்களும் ஏற்படலாம்.

நற்பலன்தரும் கனவுகள்-

மலையின் மீது ஏறுதல்
குதிரை-யானை-காளை இவற்றின்மீது சவாரி செய்தல்
வெள்ளை நிறப் பூக்கள் பூத்துக் குலுங்குதல்,
கேசம் நரைத்துப் போயிருத்தல்,
வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருத்தல்,
பசு, எருமை, பெண்குதிரை, சிங்கம், யானை ஆகியவற்றிடம் பால் அருந்துதல்,
கையில் கத்தியுடன் நடத்தல்,
பெரியோர், தேவர்களிடம் ஆசி பெறுதல்,
பசுவின் கொம்பிலிருந்து கொட்டும் நீர் தெளிக்கப்படுதல் ஆகியன வரப்போகும் நன்மைகளை உணர்த்துபவை.

மரணம், விபத்திற்கு ஆளாதல்,
அரசின் பரிசு பெறுதல்,
குதிரை-யானை-காளை இவற்றைக் காணுதல்,
அரச சபைக்குச் செல்லுதல்,
உறவினர்கள் சேர்க்கை,
கொடி மரத்தில் ஏறுதல்,
மேல் மாடியில் நடத்தல்
நிர்மலமான ஆகாயம் பார்த்தல்,
காய் கனிகளுடன் இருக்கும் மரங்கள் ஆகியன மன மகிழ்ச்சியுடன் நன்மை தருபவை.

சிரச்சேதம், சந்திரக்கலையிலிருந்து விழுதல், சிங்காசனத்தில் அமர்ந்து முடி சூடுதல் ஆகியன அரசுப் பதவிகளைக் கொடுக்கும் கனவுகள்.

ஆணின் வலது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு இடது கண், தோள் துடிப்பதும் அதிர்ஷ்டம் வரப்போகும் அறிகுறிகள்.

தீய பலன்தரும் கனவுகள்-

நாபி தவிர மற்ற இடங்களில் தாவரம் வளர்ந்திருப்பது போல காண்பது,
மொட்டைத்தலை,
சேறு படிந்த உடல்,
நிர்வாண உடல்,
உயரமான இடத்திலிருந்து கீழே விழுதல்,
தொட்டிலில்படுத்து ஆடுதல்
கம்பி வாத்தியங்கள் இசைத்தல்,
இறந்த பாம்பு வழியில் கிடத்தல்,
செந்நிறப் பூக்கள்: பூத்து குலுங்கள், ஆகியன வரப் போகும் துன்பத்தை தெரிவிப்பன.

கரடி, கழுதை, நாய், ஒட்டகச் சவாரி,
சந்திர சூரியர்கள் நிலை பெயர்தல்,
மீண்டும் கர்ப்ப வாசம் அடைதல்,
சிதையில் எரிதல்,
பூகம்பம் போன்ற பேரிடர்கள்,
மூத்தோர் சினத்திற்கு ஆளாகுதல் ஆகியவை துன்பத்தை அளிப்பவை.

ஆணின் இடது கண், தோள் துடிப்பதும், பெண்ணுக்கு வலது கண், தோள் துடிப்பதும் துன்பத்திற்கான அறிகுறிகள்

இது போன்ற தீய கனவுகள் கண்டால் விழித்தெழுந்து கைகால்கள் முகம் கழுவி கிழக்கு முகமாக அமர்ந்து இறைவனை- சிவனை ஓம் என்ற பிரணவம் உச்சரித்து தியானம் செய்து பின்னரே உறங்கத் தொடங்க வேண்டும். அப்போது அதன் பாதிப்புகள் குறையும்.

#*#*#*#*#

Read 362 times
Login to post comments