Print this page
ஞாயிற்றுக்கிழமை, 24 September 2017 10:05

தாயாய் எழுந்தருளிய தயாபரன்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

கணேசனே காப்பாய் போற்றி கவலைகள் தீர்ப்பாய் போற்றி
கங்கையாள் புதல்வா போற்றி கணநாதா போற்றி போற்றி
மூவுலகாளும் முதல்வா போற்றி! முக்குணங்கடந்த நாதா போற்றி!
கற்பகக் களிரே குருவே போற்றி! நாலிறு புயத்தாய் நாயகா போற்றி!

தாயாய் எழுந்தருளிய தயாபரன்!

சீராப்பள்ளி என்ற தலத்தில் பத்மாவதி என்ற பெண் தன் கணவனோடு வாழ்ந்து வந்தாள். சிவபெருமானிடம் பக்தியுடன் இருந்தவள் மகப்பேறு அடைந்தாள். குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கியதால் வேதனை மிகக் கொண்டாள். இதுகாறும் துணையாயிருந்த தாய் அக்கரையில் இருக்கும் ஊருக்கு சென்றிருந்தாள். காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மாலை சீராப்பள்ளி வரவேண்டியவள் இரவு அந்த ஊரிலேயே தங்க வேண்டியதாயிற்று. பத்மாவதி தாயின் துனையின்றி பிரசவவேதனையுடன் சிவனைத் துதித்துக் கொண்டிருந்தாள். தம்பால் பத்மாவதி கொண்ட பக்திக்காக சிவபெருமான் அவர் தாயின் உருக்கொண்டு அன்று இரவு அருகிலிருந்து குழந்தைப் பிறப்பில் உதவினார். மறுநாள் காலை வெள்ளம் வடிந்தவுடன் தன் மகள் எப்படியிருக்கின்றாளே என்ற கவலையில் தாய் ஒடோடி வந்தாள். இதுவரை தாயாக இருந்த சிவபெருமான் மறைந்தார். தாய் வந்து விசாரனை செய்ததும் இதுகாறும் அங்கிருந்தது தான் வணங்கும் ஈசனே தாயாய் எழுந்தருளி தயாபரன் என்பதை பத்மாவதி அறிந்தாள்.

#####

Read 17374 times Last modified on திங்கட்கிழமை, 13 November 2017 18:18
Login to post comments