Print this page
வெள்ளிக்கிழமை, 08 June 2018 04:29

செவ்வாய்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

$$$$$

செவ்வாய்!

மகரிஷி வசிஷ்டர் பரம்பரையில் வந்த பரத்வாஜர் நர்மதை நதியோரம் தவம் செய்து வந்தார். அங்கு வந்த தேவமங்கை நீராடிக் கொண்டிருக்க அம்மங்கையை மோகித்து விவாகம் செய்து ஒராண்டு அவந்தி நகரத்தில் வாழ்ந்திருந்தார். ஒரு குழந்தை பிறந்ததும் அந்த தேவலோக மங்கை தேவலோகம் சென்றுவிட்டாள். பரத்வாஜரும் அக்குழந்தையை விட்டு மீண்டும் தவமேற்கொண்டார். தனியே விடப்பட்ட செக்கர்வானம் போன்ற நிறத்துடன் இருந்த குழந்தையை பூதேவி அங்காரகன் எனப் பெயரிட்டு வளர்த்துவர எழு வயது அடைந்ததும் தன் தந்தை பற்றி விபரங்களைக் கேட்க பூமாதேவி அக்குழந்தையை அவன் தந்தை பரத்வாஜரிடம் சேர்க்க அவரிடம் கல்வி பயின்று சகலகலா வல்லவனாக விளங்கிய அவன் சர்வ வல்லமை பெற வெண்டும் என விரும்பியதால் பரத்வாஜர் அவனை கணபதியை நோக்கித் தவமிருக்கச் சொன்னார். அவன் தவத்தைக் கண்டு காட்சி கொடுத்த விநாயகரிடம். சர்வ மங்களமான உருவத்துடன் தங்களை தரிசித்த என்னை மங்களன் என்றும், நான் அமிர்தம் அருந்தி அமரனாக வேண்டும், சதுர்த்தியில் தங்களின் தரிசனம் கிட்டியதால் இந்த நாளை விசேடமாக கொண்டாட வேண்டும், என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வத்தை அளிக்கும் கிரகமாக மிளிர வேண்டும் என்ற வரங்களைப் பெற்றார்.

மங்களன் என்ற செவ்வாய் உஜ்ஜயினி மங்களநாதரைத் தரிசித்து மங்கள கிரகம் என்ற கிரகப்பதவியை அடைந்த தலம். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் சிப்ரா நதியில் நீராடி மங்களநாதரை தரிசித்து செவ்வாய் தோஷம் நீங்கப் பெறலாம்.

அங்காரக சதுர்த்தி. செவ்வாய்க் கிழமை வரும் அங்காரக சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி ஆனது. நாளடைவில் கிருஷபட்ச சதுர்த்தியை ஏற்று விரதம் மேற்கொள்கின்றனர். அவந்தி நகரில் தனக்கு தரிசனம் கிடைத்த தென்மேற்கில் ஜவாஸியா கிராமம் என்ற இடத்தில் கணேசரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்-- சிந்தாமணி விநாயகர். விநாயகர் உதவியால் விண்ணுலகம் அடைந்து அமிர்தம் உண்டு அமரனாகி கிரகப் பதவி அடைந்தார். உஜ்ஜயினில் உள்ள ஆறு விநாயகர் தலங்களில் இந்த சிந்தாமணி விநாயகர் தலமே பெரியது. சிறப்புடையது. இது அங்காரக சேத்திரம். முதன் முதலில் சங்கடஹர சதுர்த்தி துவக்கப்பட தலம்.

மேனி செவ்வண்ணமாக இருப்பதால் லோகிதாங்கன், ரக்தாயதேஷணன், ரக்தவர்ணன், நிலமகளின் சேயாக வளர்ந்ததால் குஜன், பௌமன். கரத்தில் வேல் இருப்பதால் சக்திதரன். அழகிய திருவுருவம் கொண்டதால் குமரன். பெரிய திருமேனியாக இருப்பதால் மகாகாயன். செல்வத்தை வழங்குவதால் தனப்ரதன். செவிகளில் பொற்குண்டலம் அமைந்திருப்பதால் ஹேமகுண்டலி. மேலும் பூமிபத்ரன், ஆரன், குவாலன், குதிரன், யூமன், குணஹர்த்தா, ரோகக்ருத், ரோகநாசனன். வித்யுப்ரமன். வரணகரன், காமதன். தனஹ்ருத், ஸாமகானப்ப்ரியன், ரக்தஉத்ஸான், க்ரகநாயகன், ஸர்வகர்மா, வபோதகன், ரக்தமால்யாதரன் ஆகிய பெயர்களும் கொண்டவன். அங்காரன் தோன்றிய உஜ்ஜெய்னில் கோவில்-மங்கள்நாத்-பிண்டி என கூறப்படும் சிவலிங்கம் போன்ற அரூருவமே கருவறையில்.
அங்காரகன் மனைவி –மாலினி, சுசீலினி, சிவந்த திருமேனியில் செம்மலர் மாலை .அழகிய திருமுடியுடன் நான்கு திருக்கரங்கள். வலது அபயமும், அக்தியாயுதமும் இடதில் கதையும் சூலமும். மேஷவாகனம். செவ்வாயின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-வில்வ மரம்

ஒருவர் மீளமுடியாத கடன், சகோதரர் வழியில் ஒற்றுமை இன்மை, சகோதரர் உடல் நலம் பாதிப்பு, விபத்துகள் ஏற்படுதல், வீடு மனை சார்ந்த பிரச்சனைகள் செவ்வாய் தோஷத்திற்கு காரணமாகும். வைத்தீஸ்வர கோவில் சிவன் மற்றும் முத்துக்குமாரசாமி வழிபாடு நலம் தரும்.

கிரகத்தின் பெயர்: செவ்வாய்
உரிய மலர்: செண்பகம்
உரிய மரம்: வில்வ மரம்
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
ரத்தினம்: பவளம்
கிழமை: செவ்வாய்க் கிழமை
திசை: தெற்கு
உலோகம்: செம்பு
நிறம்: சிகப்பு
சமித்து: கருங்காலி
வழிபடும் பலன்கள்: பகைவரை வெற்றி கொள்ளல்,சகல சாஸ்திர ஞானம்

நவகிரக செவ்வாய் பகவான் காயத்திரீ-(வீடு மனை பிரச்சனைகள், சகோதர வேற்றுமைகள் தீர)

”ஓம் வீரவத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம பிரசோதயாத்”
(சிறப்புறுமணியே செவ்வாய்த் தேவே குணமுடன் வாழ குறையிலாது அருள்வாய் மங்களச் செவ்வாய் மலரடிபோற்றி, அங்காரகனே அவதிகளை நீக்குவாய்.)

”ஓம் பூமி புத்ராய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம பிரசோதயாத்”
(புவித்தாயின் புதல்வனே, தவிப்போர் துயர் நீக்கும் தீரனே, அங்காரகனே, கரம் குவித்து உன்னைப் பணிந்தேன் போற்றிப் போற்றியே.)

$$$$$

Read 17167 times Last modified on வெள்ளிக்கிழமை, 14 December 2018 11:34
Login to post comments