Print this page
வெள்ளிக்கிழமை, 08 June 2018 04:48

வெள்ளி!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

$$$$$


வெள்ளி!

சுக்ராச்சாரியார்- சுக்கிரபகவான் வெண்ணிறமுடையவர்- அசுரர் குரு- மகாபலி மூன்று அடியை வாமனருக்குத் தானம் செய்யும்போது வந்திருப்பது வாமனர் உருவில் மகாவிஷ்ணு என்ற உண்மை அறிந்து வண்டு ரூபத்தில் தாரை வார்க்கும் நீரை தடுக்கும் போது வாமனர் ஒரு தர்பையினால் குத்த ஒருகண்ணை இழந்தார். திருமயிலையில் வழிபட்டு மீண்டும் கண் பெற்றார். தாமரை ஆசனம். வெள்ளைக் குதிரை பூட்டிய தேர். வெள்ளிக் கிழமை வழிபடின் நல்ல மனைவி, மக்கள், வீடு, சங்கீத் திறமை, அழகு, இளமை, செல்வம் கிட்டும். சனியும், புதனும் நண்பர்கள். குருவும் செவ்வாயும் சமமானவர்கள். மற்றவர் பகைவர். அதிதேவதை-இந்திராணி. பிரத்யதிதேவதை- இந்திரன், வாகனம் -கருடன். சுக்கிரன் மனைவி -சுகீர்த்தி, சுக்கிரனின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-அத்தி மரம்

சுக்கிரன், வெள்ளி, பார்க்கவன், சுக்ராச்சாரி, அசுர குரு என்று சொல்லப்படும் சுக்கிர பகவானின் அமைப்பை பொறுத்தே ஒருவரது குடும்ப வாழ்க்கை அமையும். என்பதால் இல்லற அமைப்புக்கான கிரகம் சுக்கிரன். தம்பதியரிடையே ஒற்றுமை யின்மை, கழிவு உறுப்புகளில் உபாதை, நல்ல சூழல் நழுவுதல், பெரிய மனிதர்களால் பிரச்சனை, வாகனம் பழுது சங்கடங்கள் ஆகியவற்றிற்கு சுக்கிர தோஷம் காரணமாகும். வழிபடவேண்டிய தலம் மாங்காடு வெள்ளீஸ்வரர், கஞ்சனூர்-அக்னீஸ்வரர்.

கிரகத்தின் பெயர்: சுக்கிரன்
உரிய மலர்: வெண்தாமரை
உரிய மரம்: அத்தி
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
ரத்தினம்: வைரம்
கிழமை: வெள்ளிக் கிழமை
திசை: கிழக்கு
உலோகம்: வெள்ளி
நிறம்: வெள்ளை
சமித்து: அத்தி
வழிபடும் பலன்கள்: விவாகப் பிராப்பதம், சௌபாக்யம், மற்றும் மலட்டுத் தன்மை நீக்கம்.

நவகிரக சுக்கிர பகவான் காயத்திரீ-(கல்யாணத் தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமையாக வாழ)

”ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர பிரசோதயாத்”
(அசுவக் கொடியுடைய அசுர குருவே, சுபமிகு தருவாய், வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே வக்கிரமின்றி வரமிகு அள்ளிக் கொடுப்பாய் அருளே.)

$$$$$

Read 19168 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 June 2018 05:26
Login to post comments