Print this page
வெள்ளிக்கிழமை, 08 June 2018 05:09

ராகு!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

$$$$$

ராகு!

ஸ்வர்னபானு -பாற்கடலில் கிடைத்த எல்லாவற்றையும் தேவர்களே பெறுவது கண்ட அசுரர்கள் தகராறு செய்ய ஆரம்பிக்க பிரம்மா நீங்கள் அமிர்தம் பெற்றுக் கொள்வீர்களாக என்றார். அதன் படி அமுதம் முழுவதும் தங்களுக்கே வேண்டும் என்று அசுரர்கள் தகராறு செய்ய தேவேந்திரன் அமுதத்தை எப்படியும் தேவர்கள் வசம் சேர்க்க எண்ணம் கொண்டு திருமால் உதவியை நாட அவர் மோகினியாகி அனைவரையும் தன் அழகால் கட்டுப்படுத்தி அசுரர்களை நீராடி வரச்சொல்லிவிட்டு இடைப்பட்ட நேரத்தில் அமுதத்தை தேவர்களுக்கு வழங்கும்போது நிகழ்வை அறிந்த அசுரன் ஸ்வர்னபானு தேவன்போல் உருமாறி அமுதம்பெற்று அருந்திவிட்டதைக் கண்டுபிடித்த சூரியன், சந்திரர் திருமாலிடம் கூற தன் கையில் இருந்த கரண்டியால் அந்த அசுரனின் தலையை துண்டிக்க, அமிர்தம் அருந்தியதால் ஸ்வர்பானுவின் உயிர் போகாமல் இருக்க தலையை பைடினஸன் தம்பதியினரும் உடலை மினி என்ற அந்தனரும் இருவேறு இடத்தில் இருவராலும் வளர்க்கப்பட்டு பின் அவர்கள் விஷ்ணுவை வழிபட்டு வேண்டி பாம்பு உடல் பெற்று ராகு எனவும் பாம்புத் தலை பெற்று கேது எனவும் கிரக பதவிதனை திருமாலால் அடைந்தனர்.

ராகு கேது இரண்டும் ஒரே உருவாக இருந்த அசுரனின் இருகூறான உடல் பகுதிகள் என்பதால் இரண்டில் எந்த அமைப்பு சரியாக இல்லாவிட்டாலும் அதை சர்ப்ப தோஷம் என்றே சொல்லப்படும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஏழம் இடமான சம சப்த ஸ்தானம் என்ற அமைப்பிலேயே இருக்கும். ராகுவிற்கும் கேதுவிற்குமிடையே மற்ற கிரகங்கள் கடிகாரச் சுற்றிற்கு எதிர் சுற்றிலிருந்தால் அதை காலசர்ப்ப தோஷம் என்பர். ராகுவும் கேதுவும் சாயா-நிழல் கிரகங்கள். நேரடியான தாக்கமின்றி மற்ற கிரகங்களின் தாக்கத்தை இந்த கிரகங்களின் அமைப்பு அதிகரிக்கச் செய்யும். ராகு மனைவி -சிம்ஹிதேவி, ராகுவின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-மருத மரம்

சட்டப்புறம்பான செயல்கள், அரசினால் சங்கடம், கூடா நட்பினால் சங்கடம், உணவும் மருந்தும் நஞ்சாதல், விஷ ஜந்து தொல்லை, அலர்ஜி, தம்பதியருள் மனஸ்தாபங்கள், புது நோய்கள், மனிதில் வெறுப்பு ஆகியவற்றிற்கு ராகு தோஷம் காரணம். துர்க்கையை வழிபடல் சிறப்பு. திருநாகேஸ்வரம், காளஹஸ்தி வழிபாடு சிறப்பு.

கிரகத்தின் பெயர்: ராகு
உரிய மலர்: மந்தாரை
உரிய மரம்: மருத மரம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
ரத்தினம்: கோமேதகம்
கிழமை: ஞாயிற்றுக் கிழமை
திசை: தென் மேற்கு
உலோகம்: கருங்கல்
நிறம்: நீலம்
சமித்து: அருகு
வழிபடும் பலன்கள்: எல்லா காரியத்திலும் வெற்றி

நவகிரக இராகு பகவான் காயத்திரீ-(காலசர்ப்ப தோஷம் நீங்க)

”ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹூ பிரசோதயாத்”
(அரவக்கொடியுடைய ராகு அய்யனே. கஷ்டங்கள் நீக்கித் தொடர் அருள்புரிவாய், அனைத்திலும் வெற்றி பெற அருள் தருவாய் ராகுவே சரணம்.)

$$$$$

Read 19503 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 June 2018 05:28
Login to post comments