Print this page
செவ்வாய்க்கிழமை, 08 January 2019 16:39

சக்திபீடம்-50-ள/ளம்

Written by
Rate this item
(0 votes)

சக்திபீடம்-50-ள/ளம்
ஓம்நமசிவய!

மண்ணாய் விண்ணாய் மலர்ந்தாய்
கண்ணுள் மணியாய்க் கலந்தாய்
நீர்தீக் காற்றாய் நின்றாய்
கார் குளிராகக் கணிந்தாய்
பகலவன் நிலவாய்ப் பரந்தாய்
நிகர்மீன் கணமாய் நிலைத்தாய் போற்றி!

#*#*#*#*#

எண் சக்திபீடம்-50 

அட்சரம் ள/ளம்(முப்பத்து நான்காவது சமஸ்கிருத மெய்யெழுத்து)
தோன்றிய இடம் சாயாபுரம் ஈங்கோய்மலை
அட்சரதேவிகள் பந்தமோகினிதேவி/ பந்தமோசனீதேவி
அங்கம் முகஜோதி
பைரவர்/இறைவன் சிவபபைரவர்/ வண்டுறைநாதர்
அங்கதேவி/ இறைவி லலிதாம்பிகை
பீடங்கள் ஓட்யாணாயை நம
51-ல் நம் உடலில் இதயம் முதல் இன உறுப்புவரை
ஊர் ஈங்கோய்மலை
அருகில் குளித்தலைஅருகில், திருச்சி-42, நாமக்கல்-41
மாகாணம்/நாடு தமிழ்நாடு

இது சாயாபுரம் பீடம் எனும் மகாசக்தி பீடம். இங்குள்ள மரகத லிங்கத்திற்கு கற்பூர ஆரத்தி காட்டும்போது அந்தஜோதி நிலைக் கண்ணாடியில் பிரதிபலிப்பதுபோல் பிரதிபலிக்கும். ஸ்ரீ லலிதாம்பிகையின் பீஜாக்ஷரம் தோன்றிய சாயாபுரம். மூல ஸ்தானத்தில் அம்மன் உருவத்திற்குப் பதிலாக பார்த்திவ மேரு பிரதிஷ்டை. வண்ண மலர்களால் பூஜை.

அட்சர சக்தி மகிமை, அங்க மகிமை, தலமகிமை, பைரவர் மகிமை ஆகிய நான்கையும் கொண்ட புனித இடமே மகா சக்தி பீடம்.

பொன்னிற மேனி- பொன்னிற ஆடை- ஆறு கரங்களுடன் வலது கரங்களில்- அபய முத்திரை, அங்குசம், கத்தி, இடது கரங்களில்- சூலம், கேடயம், வர முத்திரையுடன் யானை வாகனத்தில் காட்சி.
தியானஸ்லோகம்:
ளோ பந்த மோசிநீ தேவீ ஸ்வர்ணாபா கஜ ஸம் ஸ்திதா
ஷட் புஜாங்குச சூலாஸி கேட் தா நாபயாந் விதா:

#####

Read 14222 times Last modified on திங்கட்கிழமை, 14 June 2021 10:39
Login to post comments