gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

குருஸ்ரீ பகோரா

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:44

சாமுத்ரிகா ராஜலட்சணம்!

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!


#^#^#^#^#

 

9.சாமுத்ரிகா ராஜலட்சணம்!

சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒரு ஆணுக்கு இருக்கும் முப்பத்திரண்டு லட்சணங்களாகும். அப்படி இருந்தால் அது ராஜ லட்சணம் எனப்படும். அரசர் குலத்தில் இவைகளைப் பார்ப்பதுண்டு.

1. தாமரை போன்ற திருவடி
2. திரண்ட நீண்ட சங்கினைப் போன்ற கணைக்கால்
3. எலும்பு தெரியாத சதைப்பற்றிள்ள முழங்கால்
4. யாணையின் துதிக்கை போன்ற தொடை
5. சிறுத்த வயிறு
6. ஆழ்ந்த உந்தி
7. கண்ணாடி போன்ற பரந்த மார்பு
8. வீணையைப் போன்ற முழந்தாள்-முழங்கால்முட்டி
9. முட்டியைத்தொடும் அளவிற்கு நீண்ட கைகள்
10. மேரு மலையையொத்த இரு தோள்கள்
11. வலம்புரிச்சங்கைப் போன்ற கண்டம்
12. செந்தாமரையை நிகர்த்த முகம்
13. வயிறு, தோள், நெற்றி, மூக்கினடி, மார்பு, கையடி உயர்ந்திருந்தல் சிறந்த செல்வம்
14. கண், கபாலம், மூக்கின்முனை, கை, மார்பு நீண்டிருத்தல் நன்மை
15. குடுமி, தோல், விரலின் கணு, நகம், பல் சிறுத்திருந்தால் ஆயுள் மிகும்
16. கோசம், கணைக்கால், நாக்கு, முதுகு குறுகி இருத்தல் செல்வப் பயன்
17. தலை நெற்றி அகன்று இருத்தல் நன்று
18. உள்ளங்கால், உள்ளங்கை, உதடு, கடைக்கண், நா மேல்வாய், நகம் சிவந்திருப்பது
நன்மையுடன் இன்பம் தரவல்லது
19. மார்பு, கழுத்து, கொப்பூழ் வலிமை
20. மார்பு, கழுத்து, கொப்பூழ் ஓசை ஏற்படுத்துதல்
21. மார்பு, கழுத்து, கொப்பூழ் ஆழம் பெற்றிருத்தல்
22. நீண்ட ஆயுள்
23. அழியாப் புகழ்
24. நீதி தவறாமை
25. நற்குணங்கள் நிறைந்து இருத்தல்
26. அன்புடைமை
27. பண்புடைமை
28. அமைதியுடைமை
29. அருள் பார்வை
30. ஈகை குணம்
31. கல்வி அறிவு
32. வெல்வதற்கு அரியவன்

#^#^#^#^#

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:42

பெண்களுக்கு நன்மை!

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!


#^#^#^#^#

 

8.பெண்களுக்கு நன்மை!


குலப்பெண்ணுக்குத் துணை புருஷன். புருஷன் தர்மாத்மாவாக நற்குலத்திலிருந்து வந்தவனாக, நீதிமானாக, புத்திமானாக, சத்யவானாக, விநயமுள்ளவனாக, திடவிரதமுள்ளவனாக இருக்க வேண்டும். புருஷன் வசிக்கும் இடத்தில் மனைவி வசிக்க வேண்டும். சான்றோர்கள், ஒத்த கருத்துடையவர்கள் வசிக்குமிடத்தில் மூத்தவர்களின் அனுமதியுடன் வசிக்க வேண்டும் அண்டை அயலாருக்கு கஷ்டங்களைத் தரக்கூடாது.

கணவன் வெளியில் சென்றிருக்கும்போது அலங்கார அணிகலன்கள் அணிந்து கொள்ளக்கூடாது. தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது. சென்றாலும் விரைவில் வீடு திரும்ப வேண்டும். கணவனை மதிக்க வேண்டும்.

பெண்கள் சோம்பியிருத்தல் கூடாது. சாப்பிடக்கூடாததை சாப்பிடுவது, மயக்கம் தரும் பெருட்களை உபயோகிப்பது, பிறர் வீட்டு நிகழ்வில் தலையிடுவது, மந்திர தந்திரங்களில் ஆர்வம் கொள்ளுதல், வேண்டாதவர்களுடன் யாத்திரை செல்லுதல், சாமியார்களுடன் சகவாசம், கணவனை விட்டு நீண்ட நாள் பிரிந்து இருப்பது, கோபம் கொள்வது, பொறுமையின்மை, பயமின்மை, பொறாமை கொள்வது, கருமித்தனம் ஆகியன பெண்களுக்கு நன்மை பயக்காது.

கருச் சிதைவு செய்தல் பிரம்ம ஹத்தி தோஷமாகும்.


#^#^#^#^#

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:40

ஸ்திரி- புருஷ லட்சணங்கள் எவை!

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!


#^#^#^#^#

 

7.ஸ்திரி- புருஷ லட்சணங்கள் எவை!

நல்ல முறையில் நாடிநரம்புகள் அமைந்து விட்டால் நமக்கு நல்ல உடல் கிடைத்துவிடும். உடல் ஆரோக்கியமாக இருக்க ரத்த ஓட்டம் நாடி நரம்புகள், வாயுக்களின் ஆகியவற்றின் பணி செவ்வனே அமைய வேண்டும். அருமையான உடல் அமைப்புடன் உள்ள ஒழுக்கமும் நன்கு அமைந்து விட்டால் அதுவே ஸ்திரி- புருஷ லட்சணங்களுக்கு அடிப்படையாகும்.

தினசரி முறைப்படி நித்யர்மானுஷ்ட கர்மங்களைச் செய்து நல்லொழுக்கம் திடமான சித்தம் பெற்றவர் வாழ்வில் சுகமும் மகிழ்ச்சியும் பெறுவார்.

வெண்மை நிறப் பற்களுடன் கூர்மையான பர்வையுடைய கண்களும், கைகள், குறி, முதுகு மூன்றும் நீளமாக அமைந்திருத்தல் வயிற்றின் மீது மூன்று மடிப்புகள் காணப்படுவது ஆகியவையே லட்சணங்கள்.

இறைவனிடமும் முன்னோர்களிடமும் பணிவு முக்கியமாக வேண்டும்.

நேரம் அறிந்து மகிழ்ச்சி அடைதல், லாபம் ஈட்டல், அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் ஆகிய மூன்றும் மூன்றுவகை ஒழுக்கங்களாகும்.

மூக்கு, முகம், அக்குள், விடும் மூச்சுக்காற்று ஆகியவை துர்கந்தமாக இருக்கக்கூடாது.


#^#^#^#^#

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:35

உத்தமப் பெண்கள்!

ஓம்நமசிவய!


பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!


#^#^#^#^#

 

6.உத்தமப் பெண்கள்!

நல்லதோற்றம், நல்ல வளர்ச்சி, உருண்டையான தொடைகள், சிறுத்த இடை, அலைபாயும் துறு துறு விழிகள் கொண்ட இன்முகம் ஆகியன மிகவும் லட்சணமாகும்.

கருமையான நீள்கேசம், எடுப்பான தனங்கள், நெருக்கமான கால்கள், சீரான நடை, அரச இலைபோன்ற இரகசிய இடம், நடுவில் சிறு பள்ளம் கொண்ட கணுக்கால்கள், கட்டை விரலளவு நுனி கொண்ட நாபிக்கமலத்தை உடைய பெண் மிகமிக அற்புத லட்சணங்களாகும்.

செந்தாமரைப் பொன்ற பாதங்களை உடைய பெண்கள் பாக்கியவதிகள்

பூமியை முழுவதும் தொடாத கடினமான பாதங்களை யுடையவர்கள் மத்திமமான யோகமுடையவர்கள்.

விரல்கள் நெருக்கமாக உள்ள பெண்கள் ராஜயோகத்தை அனுபவிப்பர்.

விரல் நகங்கள் சிவப்பாகவும் ஒளியுடனும் இருந்தால் எல்லா சுகங்களையும் அனுபவிப்பர்.

சிங்கங்கத்தினுடையது போன்ற முழங்கால் மூட்டுக்கள் இருந்தால் அதிர்ஷ்டக்காரர்கள்.

கைகளில் 4 நரம்புகள் தெரியும் பெண் கணவனின் அன்பை அதிகம் பெறுவாள்.

கைவிரல்களில் சக்கரம் மேன்மை அவர்களைத் தேடிவரும்.

சங்கு போன்ற கழுத்தை உடைய பெண்கள் பிறந்த வீட்டிற்கும் புகுந்தவீட்டிற்கும் பெருமையைத் தேடித் தருவார்கள்.

கழுத்தில் 4 அங்குல சுற்றளவிற்கு 3 மடிப்புகள் இருந்தால் ரத்ன ஆபரணங்கள் கழுத்தை அலங்கரிக்கும் வாய்ப்பு.

மடிப்பு இல்லாத, நீளமான, ஏற்ற இறக்கமான கழுத்துள்ள பெண்கள் பிரசவத்தின்போது கவனமாக இருக்க வேண்டும்.

வில் பொன்ற புருவத்தையுடையவர்கள் சௌபாக்யவதிகள்.

கூந்தல் மென்மையாக கருப்பாக இருப்பது உத்தமம்.

அன்னம், குயில், வீணை, வண்டு, மயில் போன்ற குரலுக்குச் சொந்தக்காரர்கள் சுகத்தை அடைந்து வீட்டில் வேலைக்காரர்களை வைத்திருப்பார்கள்.

அன்னம், பசு, காளை, மதயானை, சக்ரவாகம் போன்றவற்றின் நடையை ஒத்ததாக இருப்பின் அவர்கள் சார்ந்த குலத்திற்குப் பெருமை சேர்ப்பர்.

மலர் போன்ற கன்னங்களும், மூக்குக்கு நேராக வளைந்த புருவங்களை உடையவளும், கணவனை மனதார நேசிக்கும் மனைவிக்கு உரிய லட்சணங்கள்.

கண் புருவங்கள் வில்லைப் போன்று வளைந்து இரு புருவங்களும் சேராமல் இருந்தால் உலகில் எந்தக் குறையும் இன்றி சுகபோக வாழ்வு வாழ்வார்கள்.

மூக்கு ஒடிசலாகவும், அதிக நீளமாக அல்லது உயரத் தூக்கியோ இல்லாமல் இருப்பது அழகு.

மூக்கு நீண்டு இருந்தால் நீண்ட ஆயுளையும் செல்வத்தையும் பெறுவார்கள்.

எந்த வீட்டில் பெண்கள் கௌரமாக நடத்தப் படுகின்றார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கின்றார்களோ அங்கு திருமகள் வாசம் செய்வாள் என்கிறது வேதம்.

நேர்மையாக இருப்பதும் அடிக்கடி பெரியோர்களை தரிசித்து ஆசிபெறுவதும் கோவிலுக்குச் சென்று தெய்வ தரிசனம் செய்வதும் வளமான செல்வத்தை அருளும்.

சத்வகுணம் கொண்ட பெண்கள் நல்லொழுக்கம் கொண்டவராய் கணவனே கண்கண்ட தெய்வமாய் இருப்பர். இவர்கள் உத்தம ஸ்திரீகள். இவர்கள் புருஷர்களால் அனுபவிக்கத் தக்கவர்களாகவும் வீட்டுக் காரியங்களில் ஆவலுள்ளவர்களாகவும் இருப்பர். இவர்கள் போற்றிக் கொண்டாடத் தகுந்தவர்கள். இவர்கள் பிரம்மனால் படைக்கப்பட்ட மெய்யான பெண் ரூபங்கள் என்றும் சகல உலகங்ளுக்கும் பதிவிரதா ரூபங்கள் என்றும் சொல்லப்படும்.

உத்தம ஸ்திரீகள் அக்னியைப் போன்றவர்கள். அதனால் ஒவ்வொருவரும் தனது மனைவியைத் தவிர பிற பெண்களைத் தாயாகவும், சகோதரிகளாகவும் பாவிக்க வேண்டும். மனதில் ஏற்படும் சபலத்தினால் பிற பெண்களிடம் தவறான ஆசைகொள்பவர்கள் இம்மையிலும் மறுமையிலும் கொடிய துன்பங்களை அனுபவிப்பார்கள்- மகரிஷி ச்யவணர்

ஒவ்வொரு குடும்பத்திலும் கணவர் உடல் என்றால் மனைவி உயிர் ஆகும். உயிர் இல்லாமல் உடல் இயங்காது. குடும்பத்தின் ஆத்ம சக்தி மனைவி. கணவனின் ஆரோக்கியமன வாழ்வு, நற்குணங்கள் கொண்டவர்களாக குழைந்தைகளை வளர்த்தல் பித்ருக்களுக்கு உரிய காலத்தில் சிரார்த்தம் செய்வதில் கணவருக்கு ஆதரவாக இருப்பது தர்ம பத்தினி என்ற உத்தமப் பெண்களே.

கருவுற்ற உத்தம பெண்கள் நல்ல விஷயங்களையே நினைத்து இறைவனின் திவ்ய சரித்திரங்களையும் பாடல்களையும் தர்ம உபதேசங்களையுமே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். தாய் கேட்கும் அனைத்தையும் கருவிலுள்ள சிசு கிரகித்துக் கொள்ளும். புவியில் பிறந்தபின் சிசுவின் சிந்தனைகள் தன் கர்ப்பவாசத்தின்போது கிரகித்துக் கொண்ட அடிப்படையில்தான் உருவாகும்.

திருமணம் ஆகும்வரை பெண்களுக்கு தாய் தந்தையிரே தெய்வம். திருமணத்திற்குப்பின் கணவணே தெய்வம். விதி வசத்தால் வறுமையிலிருந்தாலும் கணவரைவிட்டு அகலாமல் துணையாக இருக்கும் உத்தம பத்தினியரை தேவர்களும் வணங்குவர்.

தாமச குணம் கொண்ட பெண்கள் கூர்மையான நாக்குடையவராய் சண்டை சச்சரவில் ஈடுபடுபவர்களாய் எதிலும் நம்பிக்கை அற்றவராய் கணவனுக்கு துரோகம் இழைப்பவர்களாக இருப்பார்கள். இனம் தெரியாத குலமும், முகமும், குலத்தை நசஞ்செய்யும் துர்க்குணமும், யாருக்கும் அடங்காமலும், வம்பு கலகங்களில் ஆவலும் விபச்சாரத்தனமும் கொண்டிருப்பார்கள். இவர்கள் அதர்ம ஸ்திரீகள் ஆவார்கள்.

ராஜச குணம் கொண்ட பெண்கள் தன்னலம் கொண்டு வாழ்க்கையின் இன்பங்களைத் துய்ப்பதில் நாட்டம் கொண்டவர்களாய் கூடிக் களிக்கும் போகத்தில் அதிக ஆசை உள்ளவராக இருப்பர். தங்கள் கூட்டுறவு இன்பத்தினாலேயே ஆடவரைத் தன் வசப்படுத்திக் கொள்வர். இவர்கள் மத்திம ஸ்திரீகள் எனப்படுவர்.


#^#^#^#^#

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!


#^#^#^#^# 

 

5.பிரமச்சர்ய காலம்- நடந்து கொள்ள வேண்டிய முறை!


காலையில் எழுந்தவுடன் தன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும். விடியலில் துயிலெழுவது என்பது அவசியம் கடைபிடிக்க வேண்டிய செயலாகும். அதிலும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது மிகவும் சிறப்பு. அந்த வேளையில் சகல தேவர்களும் பூ உலகத்திற்கு வருகின்றனர் என்பதால் அந்த வேளை விழித்திருந்து வழிபாடு செய்வதால் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிட்டும். எழுந்தவுடன் இந்நாள் நல்ல நாளாக கழிய கடவுளை தியானிக்கவேண்டும். அதேபோன்று இரவு சயனிக்குமுன் இந்நாள் நன்றாகக் கழிந்ததற்கு இறைவனை தியானிக்க வேண்டும்.

குளித்த பின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.

சூரியனை துதித்து குருவை பூஜித்து முதலில் அம்மா, பின் சகோதரி, சித்தி ஆகியோர் உணவிட அருந்தவேண்டும். குருவை நினைத்து மானசீக அனுமதி பெற்று அருந்தினால் புத்தி பலம் பெறும். இந்த உணவு அருந்துதல் ஒருவகை பிச்சை. இதை வெறுக்கக்கூடாது. அன்னத்தை வெறுத்தால் உடலில் நலிவு ஏற்படும். நீராடியபின் தூய ஆடைகளை அணிந்து தினசரி செயல்களில் ஈடுபடல் பிறரின் கஷ்டங்களை அறிந்து உதவுதல் ஆகியவை அன்றாட கடமைகளாகும்.

பாடங்களை / வேதங்களைப் படிக்க கிழக்கு பக்கமாக அமர்ந்து, படிக்க ஆரம்பிக்கும் போதும், படித்த பின்னும் குருவை வணங்க வேண்டும். குரு மற்றும் பெரியோர்கள் பிரசங்கம் செய்யும் பொழுது குறுக்கிடக்கூடாது. சந்தேகங்களை பிரசங்கம் முடிந்தபின்னரே தனித்து கேட்க வேண்டும். சூழ்நிலை தெரியாமல் கேள்வி கேட்பதோ பதில் சொல்வதோ கூடாது. லௌகீக அத்யாத்மீக, வைதீக விஷயங்களை கொடுப்பவர் மரியாதைக்குரியவர். பொதுவாக மற்றவர்கள் பேச்சில் குறுக்கிட்டு குறுக்கே பேசக்கூடாது.

யாரிடமிருந்து நல்ல உபதேசம் ஒருவருக்கு கிடைக்கின்றதோ அவரே அவருக்கு குரு. அவரிடமிருந்து நல்லறிவைப் பெற்று வேத சாஸ்திரங்களை கற்க முடியும். அறிவைப் போதிப்பவர் தவிர, தந்தை கல்வி அறிவைத் தருவதாலும், அண்ணன் தந்தையின் பொறுப்பை ஏற்பதால் தந்தைக்கு சமமானவனாதலாலும், தாய்வழி மாமனும் குரு ஸ்தானத்திலிருந்து ஒழுக்கம் நற்சிந்தனைகளைக் கற்றுக் கொடுக்கத் தகுதியானவர்கள். தாத்தாக்களும், வீட்டிற்குப் பெரியவரும், பெண் கொடுத்த மாமனாரும் ஆசீர்வத்து ஆலோசனை சொல்பவர்கள். பெண்களில் தாயார், பாட்டி, அத்தை, அண்ணி, மாமியார், குருபத்தினி ஆகியோரும் குருவிற்குச் சமமானவர்கள்.

குருவின் முன்னாள் சரிசமமாக ஆசனத்தில் அமரக்கூடாது. அப்படி ஆசனத்தில் அமர்ந்திருக்கும்போது குரு மற்றும் பெரியோர் வந்தால் எழுந்து மரியாதை செய்ய வேண்டும். குரு இல்லாதபோது அவர் பெயரை உச்சரிக்கக்கூடாது. குருவை கேலி பேசவோ அவர் குரலைப் போல் பேசிக் காட்டக் கூடாது.

வயதில் மூத்தவர்கள் ஆண்களாயிருந்தாலும் பெண்களாயிருந்தாலும் அவர்களிடம் மரியாதை கொண்டு வணக்கம் செலுத்த வேண்டும். தாய் மூத்த சகோதரி ஆகியோர்களையும் தினமும் வணங்க வேண்டும். சித்தப்பா, மாமா, மாமனார், குரு ஆகியோரை வணங்கும்போது அவரின் உறவு முறைச் சொல்லி வணங்குதல் வேண்டும். தாயின் சகோதரி, மாமி, அத்தை, குருவின் பத்தினி ஆகியோரும் வணக்கத்திற்குரியவர்களே. அண்ணனின் மனைவி எப்போதும் தாயைப் போன்று வணங்கப்பட வேண்டியவள்.

ஆன்றோர்களையும், சான்றோர்களையும், சன்னியாசிகளையும், ஆத்மபலம் பெற்ற ஞானிகள், யோகிகள் ஆகியோரை எங்கு கண்டாலும் வணங்க வேண்டும். அவர்களின் ஆசீர்வாதம் ஒரு பலம் பொருந்திய கவசமாக உயிர்களைக் காக்கும்.

உறவுவினர்கள் எல்லோரிடமும் பாரபட்சமில்லாத அன்பை கொண்டிருக்க வேண்டும். அந்த அன்பு அந்த ஆத்மாவிற்கு முன்னிலைப் பதவியை அளிக்க வல்லது.

செல்லும் வழியில் பெரியோர்கள், வயதானவர்கள், நோயாளிகள், தலைவர்கள், மணமக்கள், பெண்கள், பாரம் சுமப்பவர்கள், மரியாதக்குரியவர்கள் எதிர்பட்டால் அவர்கள் முன்னே செல்ல வழி விடுதல் வேண்டும். முடிந்தால் அவர்களுக்கு உதவி செய்யலாம். ஊனமுற்றவர்கள் சாலையில் இருந்தால் முடிந்த அளவிற்கு அவர்கள் சாலையை கடக்க உதவி செய்யவேண்டும்.

உயர்ந்த நிலை, யக்ஞம், வித்தை, உபநிஷதம் ஆகியவற்றின் மூலத்தைக் கற்பிக்கும் ஆசிரியர், ஆச்சாரியர்களைவிட தந்தை நூறுமடங்கு உயர்ந்தவர். பிதாவைக் காட்டிலும் தாய் ஆயிரம் மடங்கு உயர்ந்தவர். ஓரு ஆத்மா கர்ப்பத்திலிருந்து பிறக்கும்போது ஒரு பிறப்பும், யக்ஞத்தின் தீட்சையின் போது இன்னொரு பிறப்பும் எடுப்பதாக நம்பம்படுகின்றது.

வேத மந்திரங்களைக் கற்றபின் தினமும் தவறாமல் நீராடி தெய்வங்களுக்கான பூஜைகளைச் செய்யவேண்டும். பவித்திரமான மந்திரங்களை தவறாக உச்சரிக்கக்கூடாது. மற்றவர்களுக்குச் சொல்லும்போது கேட்போர் மனத்தை கவரும் வண்ணம் சொல்ல வேண்டும். இனிமையான குரலில் தெளிவாகப் புரியும்படி கூறி உள் அர்த்தங்களை அழகுடன் விளக்க வேண்டும். அப்படிப்பட்டவர் தங்கியிருக்குமிடம் புனிதமானதாகிவிடும். அவரின் சீடர்கள் அநியாயமாய் பொருள் சேர்க்க விழையக்கூடாது. அவர்கள் தார்மீகச் சிந்தனையுடன் சுத்தமானவர்களாகவும் பக்திமான்களாகவும் சாத்வீக குணமுள்ளவர்களாகவும், இருத்தல் வேண்டும். பிற உயிர்களை இம்சை செய்தல் கூடாது. பொய்பேசுதல், தூஷனை-புறம் சொல்லுதல், வம்பு பேசுதல், காம, குரோத லோபங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

வேதம் படித்தவன் என்பதை, வேதங்களை ஓதுவதை விட அறவழியில் நடப்பதானாலும் அவன் மேற்கொள்ளும் நடத்தையினாலுமே அவனை உயர்வானவனாக கருத முடியும். என்ன செய்கின்றனர் என்பதைவிட எத்தகைய குணம் படைத்தவர்கள் என்பதுதான் ஒருவனின் அடையாளம்.

வஞ்சகர்களுடன் நட்பு, உறவு, நம்பிக்கை துரோகம் செய்பவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது.

இரவில் மரத்தின் நிழல், மாயானம் இவற்றை அனுகக்கூடாது.

குழைந்தைகள் இருக்கும் அறையில் தீபங்கள் எரிவது அவசியம்.

சுத்தமாய் கை,கால் கழுவாமல் சமையறைக்குச் செல்லக்கூடாது.

கோல் சொல்பவர் வீட்டில் லட்சுமி தங்கமாட்டாள்.

ஆன்மாக்கள் நதிக்கரையிலும், வீட்டில் இடம் இருக்கிறது என்பதற்காகத் தெற்கு பக்கமும், சுடுகாட்டிலும், துளசிச் செடிக்கு அருகிலும் நடக்கக்கூடாது.

#^#^#^#^# 

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:29

அங்க லட்சணங்கள்!

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!


#^#^#^#^#

 

4.அங்க லட்சணங்கள்!


வெண்மை நிறங்கொண்ட பற்களும், கூர்மையான கண்களும், கைகள், குறி, முதுகு மூன்றும் நீளமாக அமைந்திருந்து, வயிற்றின் மீது மூன்று மடிப்புகள் ஆகியன நல்ல லட்சணங்கள்.

உள்ளங்கால் தாமரை மலர் போன்று நிறத்துடன் சதைப்பிடிப்புடன் இருந்தால் அரசன் போல் வாழ்வான். முறம் போலிருந்தால் சுகமில்லாதவனாயிருப்பன். நீண்டிருந்தால் தேச சஞ்சாரம் செய்வான்.

கால் நகங்கள் பவளம் போன்று சிவப்புடனிருந்தால் ராஜ்யத்தை ஆள்பவர்களாக இருப்பர். செம்புபோல் இருந்தால் எதிலும் வெற்றி அடைவர். கருப்பு வண்ணமாக இருந்தால் மிகவும் கஷ்டப்படுவார்கள். நகங்கள் விசாலமாக இருந்தால் செல்வம் பெருகி கொழிக்கும். நகத்தின் முனைகள் கூர்மையாகவும் வளைந்தும் இருத்தல் கூடாது. முழங்கால்கள் பெரியதாக சதைப் பற்றுடன் இருந்தால் அரசு பதவிகள் கிடைக்கும்.

ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர்களாகவும் மிகுந்த அதிகாரங்கள் உடையவராகவும் இருப்பர்.

சற்றே நீலம் பாய்ந்த நாக்கினை உடையவர்கள் உத்தமமான திரண்ட ஐஸ்வர்யங்களைப் பெற்றிருப்பர்.

குழிந்த மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள் இரக்கச் சிந்தனை உள்ளவர்கள்.

மூக்கு, முகம், அக்குள், விடும் மூச்சுக் காற்று ஆகியவை துர்கந்தமாக இருந்தால் லட்சணங்கள் குறைந்தனவாம்.

கண்விழிகள், கேசம், இரு புருவங்கள் கருப்பாய் இருக்க வேண்டும். கற்றையான கேச வளர்ச்சி, உயர்ந்த கன்னங்கள், சீரான எலும்புகள், உயர்ந்த மூக்கு,

உடலில் மயிர் வரிகள், மெல்லிய தோல், விரல் நகங்கள் உயர்ந்து மிருதுவாக இருத்தல், உடல் அங்கங்கள் பூரண வளர்ச்சியுடன் இருத்தல், நிற்கும்போது கைகள் சமமாக இருத்தல் ஆகியவை அங்க லட்சணங்களாகும்.


#^#^#^#^#

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:26

பிறப்பு சம்பந்தமான தோஷங்கள் நீங்க!

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!


#^#^#^#^#

 

3.பிறப்பு சம்பந்தமான தோஷங்கள் நீங்க!

கிரகங்களில் (வீடுகளில்) கிரகப்பிரவேசம், உபநயணம் (பூணூல் அணிவித்தல்) திருமணம், சீமந்தம், அன்னப்ராசனம் (குழந்தைகளுக்கு முதல் பிரசாதம் அளித்தல்) போன்ற கைக்காரியங்கள் நிகழும்போது மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த தந்தை, தாய் வழியினருக்கு “நாந்தீச்ராத்தம்” எனும் சிரார்த்தத்தை (ஆண்டுதோறும் செய்வதைப் போன்றே) வஸ்திரம் அளித்து போஜனம் செய்வித்து, தட்சணை கொடுத்து அவர்களை வணங்கி அனுக்கிரகத்தைப் பெறவேண்டும். அப்போது நம் கிரகங்களில் நடைபெறும் ஒவ்வொரு சுபகாரியத்திற்கும் நம் முன்னோர்கள் மனமுவந்து எழுந்தருளி சுபகாரியங்களை நடத்திக் கொடுத்து பரமானுக்ரகம் செய்கின்றனர் என்கிறது வேதங்கள்.

ஜாதகர்மா- தொப்புள்கொடி அறுபட்ட பிறகு முதன் முதலாக வேத மந்திரங்களைச் சொல்லி பிறந்த ஆத்மாவின் உடல்- குழந்தைக்கு பொன் நகையால் தேன் பால் கலவையை தொட்டு நாக்கில் தடவ வேண்டும்.

பெயர் சூட்டல்- பிறந்த 10 வது நாள் / 12 வது நாள் / 18 வது நாள் / ஒருமாதம் / மூன்றாவது மாதம் குழந்தையின் நட்சத்திரத்தன்று பெயர் சூட்ட வேண்டும். பெயர் மங்களகரமாக உச்சரிக்க இனிமையானதாய் இருக்க வேண்டும் கஷ்டமானதாக கண்டிப்பாய் இருக்கக்கூடாது. பெண்களின் பெயர்களின் முடிவில் ‘ஆ’ / ‘இ’ ஒலி வரும்படி ரம்யமாக வைக்க வேண்டும். பெண்களுக்கு நட்சத்திரம், மரம், நதி, பர்வதம், பட்சி, பாம்பு போன்றவற்றின் பெயர்களை சூட்டாமலிருப்பது நல்லது.

அன்னப்ராசனம்- ஆறாம் மாதம் முதன் முதல் அரிசி சாதம் ஊட்ட வேண்டும்.

முடி இறக்குதல்- மூன்றாம் வருடம் முடியிறக்கி காதணி செய்ய வேண்டும். தற்போது அவசரம் கருதி 11 வது மாதத்திலேயே எல்லாம் செய்து விடுகின்றனர்.

உபநயனம்- உபநயனம் செய்ய விரும்புவர் ஆறு (பிரம்ம தேஜஸ்) / எட்டு (தனத்தைப் பெற) வயதில் செய்யலாம்.

#^#^#^#^#

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:23

வாழ்க்கை தர்மம்!

ஓம்நமசிவய!

#^#^#^#^#


வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!


#^#^#^#^#

 

2.வாழ்க்கை தர்மம்!


எல்லா ஜீவராசிகளுக்கும் பிறப்பு என ஒன்றிருந்தால் இறப்பு நிச்சயம் என்பதை உணர்ந்து இயமனுக்குப் பயந்து நல்ல தர்மங்களைச் செய்திடல் வேண்டும். நாளை நாளை என தள்ளிப் போடாமல் யோகமும் போகமும் பெற்று நலமுடன் வாழ்ந்து இறுதியில் சொர்க்க போகத்தைப் பெற்றுவாழ முயற்சிக்க வேண்டும்.

அனைத்து உற்பத்திகளுக்கும் பசி-உணவு, உறக்கம்-விழிப்பு, அச்சம்-பயம், புணர்ச்சி ஆகிய உணர்வுகள் இருந்தாலும் மனிதனுக்கு மட்டும்தான் ஞானம் உண்டு. அதனால் கல்வி வித்தை எல்லாம் கற்று ஞானம் அடைந்து தெளிய வேண்டும். உடல் தேகம் பெற்ற ஜீவர்கள் சுவர்க்கம், மோட்சம் அடைய உள்ளத் தூய்மை, பக்தியுடன் பிரார்த்தனை செய்தும் தானதர்மங்களைச் செய்தும் தர்ம மார்க்கத்தைப் பின்பற்றி முக்திக்கு முயலவேண்டும்.

பிராணிகளைக் கொல்லாமை, உண்மையே பேசுவது, எளியோரிடம் இரக்கப் படுதல், பிராணிகளிடம் அன்பு, இறைவனிடம் பக்தி, மறையோர், மூத்தோர் முதலியவர்களிடம் பணிவாக நடத்தல், பெற்றவர்களை ஆதரித்தல், அனைவரிடமும் நட்பு பூணுதல், மூதாதையர்களை வணங்குதல், ராஜபக்தி, கஷ்டங்களில் மனம் தளராமை, கற்க வேண்டிய விஷயங்களை தெளிவாக நுட்பமாகக் கற்றல், இறையிடம் தளராத நம்பிக்கை வைத்தல் ஆகிய விதி முறைகளைக் கடைப்பிடிப்பதுடன் புல், பூண்டு, செடி, கொடிகள் போன்றவைகளை தெரிந்தோ தெரியாமலோ பிடுங்கி அல்லது வெட்டி எறிதல் உயிர்க் கொலை பாவத்திற்கு ஒப்பானவை என்பதையும் அரிய வேண்டும்.

அடுத்தவரைப் பார்த்து பொறாமை படாதிருத்தல், மன்னித்தல், சிரமமில்லாமல் இருத்தல், மங்களமாக இருத்தல், தீயச்சொற்களை உபயோகிக்காதிருத்தல், நல்ல வார்த்தைகளை பேசுதல், இருப்பதைக் கொண்டு திருப்தியடைதல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைபடாமல் இருத்தல் ஆகியவற்றை அறிந்து தர்மம் தவறாமல் அற வழியில் வாழ்க்கை நடத்துபவன் எந்த இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கு பிரம்மத்துவ பதவி கிட்டும்.

மாத்ரு தேவோ பவ! பித்ரு தேவோ பவ!
ஆசார்ய தேவோ பவ! அதிதி தேவோ பவ!

என்கிறது தைத்திரிய உபநிடதம். அதாவது தாய், தந்தை ஆசிரியர், விருந்தினர் ஆகியோரைத் தெய்வமாகப் போற்றி வாழ வேண்டும் என்கிறது உபநிடதம்.

#^#^#^#^#

 

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:16

புண்ணிய பூமி!

ஓம்நமசிவய!

#^#^#^#^#


தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!


#^#^#^#^#


1.புண்ணிய பூமி!

தேவர்களில் தவறு செய்து சாபம் அடைந்தவர்கள், பிரமஹத்தி தோஷம் அடைந்தவர்கள், தெய்வங்களாக கருதப்பட்டவர்கள் அனைவரும் மண்ணில் பிறந்து இறை வழிபாட்டில் ஈடுபாடு கொண்டு, இறையின் அருள் பெற்றதாக புராணங்கள் மூலம் தெரிகின்றது. இதிலிருந்து இப்புவியில் தேவர்களும், தெய்வங்களும் தோன்றியுள்ளார்கள். அவர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக மண்ணில் மலர்ந்து வாசம் புரிந்துள்ளார்கள். அந்த முறையில் அவர்கள் பிறவி எடுத்த இப்பூமி சிறப்பை அடைகின்றது. உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான் என உணர்த்துகின்றார்கள். அதுவே இந்த புவிக்கு இம்மண்ணுக்கு பெருமை. ஆன்மாக்களே “அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்பதன் முழுமையும் புரிந்து கொள்ளுங்கள். அரிதான மனிடப் பிறவியில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கடைபிடித்து வாழ்கையை வளமாக்கி ஆனந்த சந்தோசத்தை உயிர்கள் அனுபவிக்க வேண்டும் என ஆசி கூறும் அடியேன் -குருஸ்ரீபகோரா

உயிர்களின் உடம்பின் சகவாசம் அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. உயிர்கள் தாங்கள் நீண்ட நாள் பழகிய நண்பர் / உறவினரின் பழக்க வழக்கங்கள் தங்களுக்கும் தொற்றியிருப்பதை அறியலாம். அது இயல்பான ஒன்று. இதற்கு முக்கிய காரணம் இரு உடம்பிற்கு இடையில் பிராணம் பரிமாறப்படுகின்றது. அது மனிதராகவோ அல்லது மற்ற உயிரினங்களாகவோ இருக்கலாம். ஒவ்வொரு உயிர் பரிமானத்தைச் சுற்றி இருக்கும் ‘ஆரா’ என்ற ஒளிவட்டமே இதற்குக் காரணம். கண்ணுக்கு புலப்படாத இது ஒவ்வொருவருக்கும் தனக்கென்று ஓர் நிறத்தோடு இருக்கும். இந்த ஆராவின் நிறம் அந்த உடலின் உயிரின் குணத்தைக் குறிக்கும். ஒரு ஆரா மற்றொரு ஆராவுடன் தொடர்பு கொள்ளும்போது அது மாற்றம் பெறும். இந்த மாற்றம் அந்த உயிர்கள் பழகும் உடம்பினால் உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை சொல்வதாகும். இதைக் காரணமாகக் கொண்டுதான் நம் முன்னோர்கள் ஒருவருடன் பழகும்முன் அவரைப் பற்றி நன்கு அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒருவரைபற்றி அறிய அவரின் நண்பனை அறிந்தால் போதும் என்றும் கூறினர்.

#^#^#^#^#

 

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:00

சாஸ்தி சம்பி!

ஓம் நமசிவய ஓம்


முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

#^#^#^#^#^

சாஸ்திர சம்பிரதாயங்கள்!


அறியாமை என்னும் இருளை நீக்குவதற்காக சாஸ்திரங்கள் தோன்றியுள்ளன. அந்த சாஸ்திரங்கள் ஆத்மாக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த என்னென்ன சொல்கின்றது என்பதே இதன் கருத்து. படித்தபின் சந்தேகங்கள் தோன்றினால் சாஸ்திரங்கள் கற்ற பெரியோர், மிகவும் மூத்தோர் ஆகியோரை கேட்டு சந்தேகங்களை அழித்து கொள்ளுங்கள்.

#^#^#^#^#^

நன்மை தீமைகளை உணர்ந்து கொள்ளப் பழக வில்லையென்றால் அதை அனுபவம் காட்டிக் கொடுக்கும். அது துன்பம் தருவதாய் இருக்கக்கூடாது. முட்செடிகள் ஒட்டகத்திற்கு விருப்பமான உணவு. அதை உண்ணும்போது முட்கள் குத்தி வாயில் இரத்தம் வரும். இருந்தாலும் ஒட்டகம் முட்களையே விரும்பும்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டபின் சில செயல்களால் ஏற்படும் துன்பங்களும் கஷ்டங்களும் நிறைய உள்ளன. சில நாட்களில் அவைகளை மறந்து விடும் மனித மனம். மீண்டும் அதே செயல்களை செய்ய விழைகின்றது. பாம்பு எலியை விழுங்க முயல்கின்றது. விழுங்க முடியவில்லை. ஆனால் துப்பவும் மனமில்லை. இந்நிலையே மனித வாழ்க்கையில் ஆத்மாக்களின் நிலையாகின்றது.

ஓர் ஆன்மா பிறப்பெடுத்ததிலிருந்து என்னென்ன செய்தால் அதன் வளமான வாழ்க்கைக்கு துணைபுரியும் என்ற ஆராய்வில் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர சம்பிரதாயங்களைப் பின்பற்றி தர்ம நெறியில் வாழ்வை அமைத்து வாழ்க்கையை வெற்றிப் பயணமாக்குங்கள்.

வாழ்வில் உயிர்கள் பின்பற்றி செயலாக்கம் கொள்ள வேண்டியவைகள் பற்றி சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் என்ன சொல்கின்றது என்பதை அறிய முயற்சியே இந்த பகுதி. முடிந்தவரையில் உயிர்கள் பின்பற்றி வாழ்வில் மேன்மை அடைய ஆசிகளுடன்-குருஸ்ரீ.

சாஸ்திர சம்பிரதாயங்கள்!

பொதுவாக நல்ல சிந்தனையுடன் தர்ம நியாயங்கள், விரதங்கள், வேண்டுதல்கள், தலயாத்திரை, தவம், தானம், ஆகியன மேற்கொண்டால் அதற்குரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும். ஆண், பெண் எல்லா ஆத்மாக்களுக்கும் ஒன்று சொல்வேன். நமது பாரத தேசத்தை நம்புங்கள். பாரத தர்மத்தை நம்புங்கள். நமது ஆத்ம பக்தியின் பலத்தையும் ஆன்மீக நம்பிக்கையையும் வைத்துக்கொண்டு நாம் மற்றவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது கொஞ்சம் என்பதையும் நாம் பிறருக்கு கற்பித்துக் கொடுக்க வேண்டியது அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சாஸ்திர சம்பிரதாயங்களின்மேல் நம்பிக்கையும் பக்தியுமே வழ்க்கையின் ஒப்பில்லா ஆதாரங்கள்! குருஸ்ரீ பகோரா.

1.புண்ணிய பூமி!
2.வாழ்க்கை தர்மம்!
3.பிறப்பு சம்பந்தமான தோஷங்கள் நீங்க!
4.அங்க லட்சணங்கள்!
5.பிரமச்சர்ய காலம்- நடந்து கொள்ள வேண்டிய முறை!
6.உத்தமப் பெண்கள்!
7.ஸ்திரி- புருஷ லட்சணங்கள் எவை!
8.பெண்களுக்கு நன்மை!
9.சாமுத்ரிகா ராஜலட்சணம்!
10.உத்தமர்கள் யார்! நற்குணங்கள்! ஒழுக்கம்!
11.பெண்களிடம் நிலைப்பாடு!
12.ஆசாரியர்,உபாத்தியாயர்,குரு/ரிஷி,மகாகுரு/மகரிஷி!
13.உயிரினங்கள்மீது!
14.திருமணம்-அறுபதாம் கல்யாணம்!
15.திருமண இணைப்பு!
16.அக்னி நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை!
17.ஆடிச்சீர் ஏன்!
18.முன்னோர்களின் பெயரும், மூன்று உருண்டை சாதம் வைப்பதும் ஏன்!
19.பித்ருக்கள் வழிபாடு!
20.உணவு: எவற்றை உண்ணக்கூடாது!
21.வாழை இலையில் சாப்பாடு ஏன்!
22.வெற்றிலை பாக்கு!
23.யாகத்தின் பலன்!
24.நீராடல் எப்படி!
25.குற்றங்கள்-தண்டனை-அரச தர்மங்கள்!
26.கோவில்- எப்படி நடந்து கொள்ள வேண்டும்!
27.கருவறை சிறியது ஏன்!
28.திருமுழுக்கு- அபிஷேகம்!
29.பூஜை எப்படி செய்ய வேண்டும்!
30.பூஜையில் வாழைப்பழம் தேங்காய் ஏன்!
31.அர்ச்சனைக்கு ஏற்றது எது!
32.தெய்வ படங்கள்!
33.விரதங்கள்!
34.கர்மங்கள்-பாவங்கள்!
35.பக்தி- (5வகை)-நம்முள் நிலைக்க பரிசுத்தமான மனத்துடன் பக்தியில் ஆழ்ந்திரு.
36.வழிபாடு எப்படி செய்ய வேண்டும்!
37.யாத்திரை எதற்கு!
38.அன்றாடக் கடமைகளாக செய்ய வேண்டியவை!
39.நோய்கள் வராமலிருக்க!
40.மூச்சுகள்!
41.தேக நலம் தரும் கோடைகால வழிபாடுகள்!
42.எந்த மாதத்தில் என்ன செய்யலாம்!
43.செவ்வாய்க்கு செவ்வாய் தோஷம்- ஏன்!
44.வணங்கும்முறை!
45.தானம் ஏன் செய்ய வேண்டும்!
46.கிரகங்கள் பாதிப்பிலிருந்து விடுபட!
47.தவறுக்கான தண்டனைகள்!
48.பிராயச்சித்தம்!
49. வர்ணாசிர தர்மம்!
50.நிமித்தக் குறி சாத்திரங்கள்(8) !
51.உற்பாதங்கள்-இடைஞ்சல்கள்!
52.கனவுகளின் நன்மை தீமை பலன்கள்!
53.சகுனங்கள்!
54.நிலத்தின் தன்மையை அறிவது எப்படி!
55.மரம் ஏன் வளர்க்க வேண்டும்!
56.ஓம்சாந்தி 3முறை ஏன்!
57.ஏழுகோடி மந்திரங்கள்!
58.ஒன்பதின் பகுப்பு- சிறப்பானது!
59.தோஷங்கள்!

#^#^#^#^#^

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

25108410
All
25108410
Your IP: 35.172.111.47
2023-06-08 04:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg