gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சட்டைமுனி சித்தர்

Written by

சட்டைமுனி சித்தர்


விவசாயக் கூலிகளாக வாழ்க்கை நடத்தியவர்களுக்கு மகனாய் சட்டைமுனி ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் மாதத்தில் பிறந்தார். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்றுத் தம் தாய் தந்தையருக்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் வடநாட்டிலிருந்து வந்த சங்கு அணிந்திருந்த ஒருவரைப் பார்த்து அவருக்கு ஏதோ சக்தி இருப்பதாக நினைத்து அவருடன் சென்று விட்டார். பின்னர் போகரிடம் வந்து சேர்ந்தார்.
கொங்கணர் இவருடைய நண்பரானார். ஞானத்தை மனித குலம் அனைத்திற்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுதினார். நேரிடையாக எழுதுவதை தடை செய்ய சிவபெருமானிடம் சித்தர்கள் செல்ல இவரின் நூல்கள் குகையில் வைத்து பாதுகாக்கும்படி செய்தார்.
சட்டைமுனி ஊர் ஊராக சுற்றி வரும்போது தூரத்தில் ஸ்ரீரங்கநாதர் கோவில் கோபுரம் கண்டு அதன் நடை சாத்துவதற்குள் தரிசிக்க விரைந்தார். அதற்குள் கோவில் நடை சாத்தப்பட்டது. ஏமாற்றத்துடன் வாசலில் நின்று ரங்கா, ரங்கா என கத்த தவுகள் தாமாக திறந்தன. அரங்கணின் தரிசனம் கிடைத்தது. அவரின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக சட்டைமுனிமேல் வந்து சேர்ந்தன. இவர் ரங்கா எனக் கூப்பிட்ட சப்தம் கேட்டு திரண்ட மக்கள் வியப்படைந்தனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே சட்டைமுனி இறைவனுடன் ஒன்றாக கலந்தார். சட்டைமுனி ஜீவசமாதி திருவரங்கத்தில் உள்ளது.
சட்டைமுனி நிகண்டு 1200, வாதகாவியம் 1000, சரக்குவைப்பு 500, நவரத்தின வைப்பு 500, வாக்டம் 200, முன்ஞானம் பின் ஞானம் 200, கற்பம் 100, உண்மை விளக்கம் 51 ஆகிய நூல்கள் எழுதினார்.
சட்டைமுனி சித்தர் தியானப்பூசைக்கு
“சித்தவேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே
அரங்கணிடத்தில் அணிகலன்கள் பெற்ற அற்புத
மூர்த்தியே எம் அறியாமை நீக்கி ஞானவரம்
அருள்வாய் ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் கருவூரார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வம், விருட்சிப்பூ, ஜாதிப்பூ ஆகிய மலர்களால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி
கவலைகளை அகற்றுபவரே போற்றி
காம குரோதத்தை அழிப்பவரே போற்றி
சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி
திருவரங்கனின் அருள் பெற்றவரே போற்றி
தேகத்தைக் காப்பாற்றுவாய் போற்றி
நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி
நோய்களை அழிப்பவரே போற்றி
ராமநாமப் ப்ரியரே போற்றி
வருணபகவானை வணங்குபவரே போற்றி
வில்வ அர்ச்சனையை ஏற்பவரே போற்றி
ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி
நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி- செவ்வாழை இவற்றுடன் பலவர்ண வஸ்திரம் வைத்து வெள்ளிக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
கேது கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக கேது தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். திருமணத்தடை மற்றும் களத்திற தோஷம் நீங்கி திருமணம் நல்ல முறையில் நடக்கும். போதைப் பொருள்களுக்கு அடிமை ஆகுதல் புகை பிடித்தல் குடிப்பழக்கம் நீங்கும். ஆன்மீக எண்னங்கள் தோன்றும். உறவினர்களின் பலம் உண்டாகும். ஞாபக சக்தி அதிகமாகும். சகவாச தோஷம் நீங்கும். மன வளர்ச்சி அபிவிருத்தி அடையும்.
 “ஓம் ஸ்ரீசட்டைமுனி சுவாமியே போற்றி”
                                                       ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

சிவவாக்கியர் சித்தர்

Written by

சிவவாக்கியர் சித்தர்


பிறக்கும்போதே சிவ சிவ என சொல்லிக் கொண்டே பிறந்ததால் சிவ வாக்கியர் எனப் பெயர் பெற்றார். இளம் வயதில் குருவை நாடி வேதங்களைப் பயின்றார். காசியைப் பற்றி கேள்விப்பட்டு காசிக்குச்சென்று அங்கு செருப்பு தைக்கும் தொழில் செய்த சித்தர் ஒருவரைச் சந்தித்தார். அவரைச் சோதிக்க நினைத்த சித்தர், சிவவாக்கியா செருப்பு தொழிலில் செய்த காசு என்னிடம் உள்ளது. அதை என் தங்கையான கங்கா தேவியிடம் கொடு, அப்படியே கசப்பான இந்த பேய்ச் சுரைக்காயின் கசப்பையும் கழுவிக்கொண்டுவா என்றார்.
கங்கையில் இறங்கி நீரில் கை வைத்ததும் கங்கையிலிருந்து வளையல் அணிந்த மென்மையான ஒரு கை வெளியில் வந்து அவரிடம் கையை நீட்டியது, சிவ வாக்கியர் தாம் கொண்டு சென்ற காசுகளை அந்தக் கையில் வைக்க அந்தக் கை நீரில் மறைந்தது. அதைக் கண்ட சிவவாக்கியர் சிறுதும் ஆச்சரியப்படாமல் தான் கொண்டு சென்ற பேய்ச் சுரைக்காயை அலம்பி சித்தரிடம் வந்து கொடுத்தார். சித்தர் அவரை மீண்டும் சோதிக்க நினைத்து சிவவாக்கியா, இந்த தோல் பையிலும் கங்கை தோன்றுவாள் நீ அங்கே கொடுத்த காசைக் கேள் கொடுப்பாள் என்றார். அப்படியே சிவவாக்கியர் கேட்க செருப்பு தொழில் செய்யும் பையிலிருந்து ஒரு கரம் நீண்டு வந்து காசுகளைக் கொடுத்துவிட்டு மறைந்தது. அப்போதும் சிவவாக்கியர் ஆச்சரியப்படாதது கண்டு அவரின் பக்குவநிலையை அறிந்து அவரை தழுவிக்கொண்டார் சித்தர்.
அப்பா சிவவாக்கியா முத்தி சித்திக்கும்வரை நீ இல்லறத்தில் இரு என்று சொல்லி கொஞ்சம் மணலும் பேய்ச்சுரைக்காயையும் கொடுத்து இவற்றைச் சமைத்து தரும் பெண்ணை மணந்துகொள் என்றார். அவைகளுடன் குருவிடம் விடைப்பெற்று நரிக்குறவர்கள் கூடாரம் அமைந்தபகுதி பக்கமாகச் சென்றார். கூடாரத்திலிருந்து வந்த கன்னிப்பெண் சிவவாக்கியரைப் பார்த்தாள். உள்ளுணர்வினால் சுவாமி தங்களுக்கு வேண்டியதை தர சித்தமாயிருக்கின்றேன் என்றவளிடம் என்னிடம் இருப்பவைகளை வைத்து சமைத்து தர முடியுமா என்றார். என்ன ஆச்சரியம் மணல் அருமையான சாதமாகவும் பேய்ச் சுரைக்காய் கறி உணவாகவும் சமைந்தது.
சிவ வாக்கியருக்கு பரிவோடு பரிமாறினாள். குருநாதர் குறிப்பிட்ட பெண் இவள்தான் என்று நினைத்து மகிழ்வோடு உணவு உண்டார். காட்டிலிருந்து அப்பெண்ணின் உறவினர்கள் வந்தார்கள். தவம் செய்யும் எனக்குத் துணையாக ஒரு பெண்ணைத் தேடிவந்தேன். உங்கள் குலப்பெண்ணான இவளை நான் மணம் புரிய விரும்புகிறேன் என்றார். சுவாமி நீங்கள் எங்களுடன் தங்க சம்மதித்தால் நாங்கள் பெண் கொடுக்க சம்மதிக்கின்றோம் என்றனர், சிவவாக்கியரும் சம்மதித்து மணம் புரிந்து இல்லறத்தில் இருந்து கொண்டே தவத்திலும் ஈடுபட்டார்.
ஒருநாள் காட்டிற்குள் சென்று ஒரு மூங்கிலை வெட்டினார். வெட்டிய இடத்திலிருந்து தங்கத் துகள்கள் சிதறி ஒழுக ஆரம்பித்தது. சிவவாக்கியர் இறைவா நான் உன்னிடம் முக்தியை அல்லவா கேட்டேன். இப்படி பொருளாசையை உண்டாக்கலாமா என்றார். அங்கு வந்த நரிக்குறவர்களிடம் எமன் வருகிறான் என்று துகள்கள் வருவதைக் காட்ட ஆச்சரியப் பட்டவர்கள் மூட்டைகளில் வாரிக்கட்டிக் கொண்டனர்.
இருட்டிவிடவே அங்கேயே தங்க முடிவு செய்தனர். இருவர் மூட்டைகளைக் காவல் காக்க இருவர் உணவு வாங்கி வர அருகில் உள்ள ஊருக்குச் சென்றனர். உணவு உண்டனர். நிறைய தங்கம் இருக்கின்றது. அவர்கள் இருவரையும் கொன்று விட்டால் நாம் இருவரும் பங்கு போட்டு ஆயுளுக்கும் சந்தோஷமாக வாழலாம் எனத்திட்டமிட்டு வாங்கிய உணவில் இருவருக்கும் விஷம் வைத்தனர். உணவுடன் வந்தவர்களைப் பார்த்ததும் அருகில் இருந்த கிணற்றிலிருந்து நீர் கொண்டு வாருங்கள் என்றனர். நீர் கொண்டுவரச்சென்ற இருவரையும் அவர்கள் போன்றே நினைத்த இவர்கள் அவர்கள் காலைவாரி கிணற்றில் தள்ளி கொலை செய்தனர். பின் விஷம் கொண்ட உணவை சாப்பிட்டு இவர்களும் இறந்தனர். காலையில் வந்த சிவவாக்கியர் நான்கு பிணங்களையும் பார்த்து வருந்தினார்.
ஒருநாள் வான்வீதியில் சென்ற கொங்கணச் சித்தரைப் பார்த்தார். கொங்கணரும் இவரைப் பார்க்க இருவரும் சந்தித்து மகிழ்ந்தனர். நண்பர்களாயினர். அடிக்கடி சந்தித்தார். தங்கம் செய்யும் வித்தையை அறிந்தும் சிவவாக்கியர் மூங்கில் கூடைகளை பின்னும் தொழில் செய்வதை கண்டு வருந்தினார். அவர் இல்லாத சமயத்தில் அவர் மனைவியை சந்தித்து சில பழைய இரும்புகளை தங்கமாக்கி கொடுத்தார். சிவவாக்கியர் வந்ததும் அவர்மனைவி கொங்கணர் வந்ததைக்கூறி தங்கத்தை அவர்முன் கொண்டு வந்து வைத்தார். இதைக் கொண்டுபோய் கிணற்றில் போடு என்றதும் அவர் மனைவி அப்படியே செய்தாள். மனைவியிடம் தங்கத்தின்மேல் ஆசையா என்றார். அவர் சுவாமி தங்களின் மாறாத அன்பு ஒன்றே எனக்குப் போதும் என்றார்.
சிவனடியார்கள் சிலர் சிவவாக்கியரிடம் வந்து தாங்கள் சித்தர்கள் செய்யும் சித்து விளையாட்டைக் கற்று அதன் மூலம் இரும்பை பொன்னாக்கி உலகில் உள்ள வறுமையை ஒழிக்கப் போகிறோம். எனவே எங்களுக்கு சித்தர்களை அறிமுகம் செய்யுங்கள் என்றனர். உங்களின் பொருளாசையை ஒழியுங்கள் நீங்களே தங்கமாக ஆவீர்கள். இதுதான் நல்ல வழி என்று எல்லாரையும் அனுப்பிவைத்தார். தியானத்தில் ஆழ்ந்து இறைவா மக்களுக்கு தூய்மையான எண்ணம் உருவாக நீதான் கருணை காட்டவேண்டும் என்று வேண்டினார்.
தன் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். இவர் பாடல்கள் சிவவாக்கியம் எனப்படும். இவர் ஓர் சமரசஞானி, முதலில் நாத்திகராக இருந்து பின் சைவராக மாறினார். பின் வீர வைணவராக மாறினார். கும்பகோணத்தில் சித்தி அடைந்தார்.
நாடிப்பரிட்சை எனும் நூல் எழுதினார்.
சிவவாக்கியர் சித்தர் தியானப்பூசைக்கு
“சிவனில் சிந்தை வைத்து ஜீவனில் சித்து
வைத்து அவனியைக் காக்க வந்த அழகர்
பெருமானே, அபாயம் நீக்கி சிவாயம் காட்டும்
தங்கள் தாமரைத் திருவடியே காப்பு”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் சிவவாக்கியர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து சங்குப் பூ, தும்பைப் பூ ஆகிய மலர்களால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
எங்கும் வியாபித்திருப்பவரே போற்றி
கலைகளுகெல்லாம் அதிபதியே போற்றி
காருண்ய மூர்த்தியே போற்றி
சர்வ வல்லமை படைத்தவரே போற்றி
சிவ பெருமானின் அவதாரமே போற்றி
சிவசக்தி உருவமாகத் தோன்றுபவரே போற்றி
தீமைகளை அழிப்பவரே போற்றி
தேவர்களுக்கெல்லாம் தேவரே போற்றி
பாவங்களைப் போக்குபவரே போற்றி
ருத்ரனின் அவதாரமே போற்றி
மனநிம்மதி அளித்து மங்களங்கள் தருபவரே போற்றி
ஐஸ்வரியம் அளித்து ஜீவராசிகளைக் காப்பவரே போற்றி
நிவேதனமாக பழங்கள் சுத்தமான விபூதி, இவற்றுடன் வெள்ளை வஸ்திரம் வைத்து திங்கள்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக சந்திர தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று நிம்மதி கிடைக்கும், சரியான நேரத்தில் குழப்பம் தவிர்த்து தெளிவாக முடிவெடுக்க முடியும். சஞ்சல புத்தி நீங்கி படிப்பிலும் தொழிலிலும் கவனம் செலுத்தி மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

 “ஓம் ஸ்ரீ சிவவாக்கிய சித்தர் பெருமானே போற்றி”
                                            ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

சுந்தரானந்தர் சித்தர்

Written by

சுந்தரானந்தர் சித்தர் 


அகமுடையார் குலத்தில் ஆவணி ரேவதி நட்சத்திரத்தில் சுந்தரானந்தர் பிறந்தார். இவரின் குரு சட்டைமுனி. யோகத்தில் பல ஆண்டுகள் இருந்து ஆற்றல் பெற்றார். அகத்தியர் வழிப்பட்ட லிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
சுந்தரானந்தர் மதுரை நகரின் வீதிகளில் ஆணைப் பெண்ணாக்கியும், பெண்ணை ஆணாக்கியும், ஊனமுற்றவர்களை குணப்படுத்தியும், திடிரென மறைந்தும் பல சித்துக்கள் செய்ததை மக்கள் மன்னனிடம் தெரிவிக்க சித்தரை அரண்மனைக்கு அழைத்துவர ஆள் அனுப்ப, சுந்தரானந்தர் அரசன் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி விட்டார்.
சித்தரைப் பார்க்க அரசர் வந்தார். அப்போது ஒருவன் கையில் கரும்புடன் நிற்க சித்தருடன் பேசிக்கொண்டிருந்த அரசன், சித்தரே இவன் கையில் இருக்கும் கரும்பை அந்தக் கல்யானை உண்ணும்படியாகச் செய்யுங்கள் என்றார். சித்தர் கரும்பை வாங்கி கல்யானையிடம் கொடுத்து கண்சிமிட்டினார். யானை கரும்பை பெற்று உண்டது. மீண்டும் கல் யானையாக மாறியது. அதைக் கண்ட அனைவரும் அதிசயப்பட்டனர். அன்பும் பக்தியும் பெருக்கெடுத்தோட சித்தரின் காலில் விழுந்து வணங்கினர்.
கோவிலில் உள்ளே சென்று மறைந்தார். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சமாதி இருக்கின்றது.
சுத்தரானந்தர் வைத்திய திரட்டு, காவியம், விஷநிஷவாணி, வக்கிய சூத்திரம், கேசரி, சுத்த ஆனம், தீட்சா விதி, அதிசய காரணம், சிவயோக ஞானம், மூப்பு, தாண்டகம் ஆகிய நூல்களை எழுதினார்.
சுந்தரானந்தர் சித்தர் தியானப்பூசைக்கு
“சித்து விளையாட்டில் சிறந்தவரே சிவனுடன்
கலந்தவரே ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே மதுரையம்பதி
வாழ் மகத்துவமே உன்பாதம் சரணம்”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் சுந்தரானந்தர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வத்தால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அபயமளிப்பவரே போற்றி
அவதார புருஷரே போற்றி
இந்திரனுக்கருளியவரே போற்றி
ஜடாமுடிப்பிரியரே போற்றி
ஒளி பொருந்தியவரே போற்றி
ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி
சகல சித்திகளை உடையவரே போற்றி
சுகங்களைத் தரும் சிவயோகியே போற்றி
சூட்சமாக சஞ்சாரிப்பவரே போற்றி
தடைகளை நீக்குபவரே போற்றி
தாய்போல் காப்பவரே போற்றி
தைரியத்தை கொடுப்பவரே போற்றி
நிவேதனமாக கடலை, வெண்பொங்கல் இவற்றுடன் மஞ்சள் அல்லது காவி வஸ்திரம் வைத்து வியாழக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
வியாழக் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக குரு தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். புத்ர பாக்யம் உண்டாகும். புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும். சித்த பிரமை வியாதி குணமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். வயிறு குடல் நோய்கள் தீரும். வறுமை அகன்று வளமான வாழ்வாகும்.
 “ஓம் ஸ்ரீ சுந்தரானந்தர் சுவாமியே போற்றி
                                    ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

திருமூலர் சித்தர்

Written by

திருமூலர் சித்தர்


எல்லா சித்தர்களுக்கும் முதன்மையானவர். இயற்பெயர் சுந்தரநாதர். அகத்தியரிடம் சீடராயிருந்து அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப் பெற்றவர். குருவின் ஆலோசனையின் பேரில் கயிலை சென்று நந்தியம் பெருமானிடமும் சிவ பெருமானிடமும் உபதேசம் பெற்றவர். அகத்தியரின்மேல் கொண்ட அன்பால், அவருடன் சில காலம் தங்க கயிலையிலிருந்து தென் திசை நோக்கி வந்தார்.
வழியில் கேதாரம், பசுபதி, நேபாளம், காசி (அவிமுத்தம்விந்தமலை) திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவதிகை வீரட்டானம் ஆகிய தலங்களில் வழிபட்டு அங்குள்ள சிவ யோகியர்களைக் கண்டு மகிழ்ந்தார்.
திருவாவடுதுறை இறைவனை வழிபட்டு சொல்லும் வழியில் காவிரிக்கரையில் ஆட்டிடையன் கர்ம யோகத்தின் வழி உணர்ந்து பாடிக் கொண்டிருந்தான். அப்போது ஒருகருநாகம் அவனைத்தீண்ட மண்ணில் விழுந்து மாண்டான். பசுக்கூட்டங்கள் கண்ணீர் சிந்தி வருந்துவதைக் கண்டார். சாத்தனூரில் ஆனிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் பசுக்களை மேய்க்கும்போது தன் விதி முடிந்த காரணத்தாலோ அல்லது சுந்தரநாதரின் வாழ்வின் மாற்றம் ஏற்படவோ, உயிர் நீங்கி இறந்து கிடந்தான். அவனைச் சுற்றி சுற்றி வந்தன பசுக்கள். பசுக்களின் துயர் துடைக்க ஓர் எண்ணம் உண்டாக தம் உடலை மறைவாக ஓரிடத்தில் கிடத்திவிட்டு பரகாயப் பிரவேசம் என்ற முறையில் கூடு விட்டு கூடு பாய்தல் செய்து தம் உயிரை இடையனின் உடம்பில் புகச் செய்தார். மூலன் எழுந்ததும் பசுக்கள் சதோஷமடைந்து இறையை தேடி உண்டது. நீர் பருகச் செய்தபின் பசுக்கள் பழக்கம் காரணமாக சாத்தனூரை நோக்கிச் செல்ல இவர் பின் தொடர்ந்தார்.
பசுக்கள் அதனுடைய இடம் செல்ல மூலனின் மனைவி அன்புடன் வீட்டிற்கு அழைக்க மூலனின் வடிவில் இருந்த சிவயோகியர் நான் உன் கணவனில்லை என்று கூறி அருகில் இருந்த இடத்தில் அமர்ந்தார். மனைவி ஊர் பெரியோர்களைக் கூட்டிவர அவர்களிடம் நடந்ததைக் கூறினார். எல்லோரும் காட்டைநோக்கி நடந்தனர். சிவயோகியர் தம் உடலைத் தேடிச்சென்றார். சிவனின் அருளால் அது மறைக்கப்பட்டிருந்ததால் மரப்பொந்தில் அவர் உடல் இல்லை. அது உமை வாகனமான சிம்மம் எடுத்து போயிற்று. வேறு வழி தெரியாமல் திருவிடைமருதூருக்கு சென்று ஓர் மரத்தடியில் அமர்ந்து யோகத்தில் ஆழ்ந்தார். ஊர் பெரியவர்கள் இவர் பொய் சொல்லவில்லை ஆனால் உடல் இல்லை என்ன செய்வது என குழம்பினர். அவர் முகத்தில் தோன்றிய ஒளி அறிந்தவர்கள் அவர் கூறியதை ஏற்றனர். மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொன்னார்கள்.
ஓர் ஆண்டிற்கு ஒரு பாடலாக மூவாயிரத்திற்கு அதிகமான பாடல்களைப் பாடினார்.
திருமூலர் கிரந்தகம் 8000, சிற்ப நூல் 1000, சோதிடம் 300, மாந்திரிகம் 600, சல்லியம் 1000, வைத்தியகாவியம் 1000, வைத்திய கருக்கிடை 600, வைத்திய சுருக்கம் 200, சூக்குமஞானம் 100, பெருங்காவியம் 1500, கோர்வை வீதி 16, தீட்சை விதி 8, தீட்சை விதி 18, யோகஞானம் 16, விதிநூல் 24, ஆறாதாரம் 64, பச்சைநூல் 24, பெருநூல் 3000 ஆகிய நூல்களை அருளியுள்ளார்.
காலங்கி சித்தர், கஞ்சமலைச் சித்தர் மற்றும் 14 சீடர்கள் இருந்துள்ளனர்.
திருமூலர் சித்தர் தியானப்பூசைக்கு
“சித்து விளையாட்டில் சிறந்தவரே நந்தியின்
மாணாக்கரே சிவனுடன் கலந்தவரே, ஆயசித்தி
அனைத்தும் அறிந்தவரே, அபயம் அளிக்கும் அருளாளரே
திருவாவடுதுறைவாழ் மகத்துவமே உன்பாதம் சரணம்”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் திருமூலர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து வில்வத்தால் கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அகத்தியரின் நண்பரே போற்றி
அவதார புருஷரே போற்றி
ஆனிரை காப்பாளனே போற்றி
சகல சித்திகளை உடையவரே போற்றி
சித்தர்களில் முதல்வா போற்றி
சிவன் உபதேசம் பெற்றவரே போற்றி
நந்தீசர் மாணாக்கனே போற்றி
பரகாய பிரவேசம் செய்தவரே போற்றி
ஐஸ்வரியம் அளித்து ஜீவராசிகளைக் காப்பவரே போற்றி
வில்வ அர்ச்சனையை ஏற்பவரே போற்றி
நிவேதனமாக பொங்கல் இவற்றுடன் காவி வஸ்திரம் வைத்து வியாழக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
புத்ர பாக்யம் உண்டாகும். நல்ல பழக்கங்கள் தோன்றும். பிரமை வியாதி குணமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும். கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். நோய்கள் தீரும். வறுமை அகன்று வளமான வாழ்வாகும்.
 “ஓம் ஸ்ரீ திருமூலர் சுவாமியே போற்றி”
                                      ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

தேரையர் சித்தர்

Written by

தேரையர் சித்தர்


ஔவையார் ஒரு ஊமை பிராமணனை அகத்தியரிடம் அழைத்துவர அகத்தியர் அச்சிறுவனை தன்னுடைய மாணாக்கனாக ஏற்றுக்கொண்டார். பாண்டிய மன்னன் கூன் பண்டியனின் முதுகை தாம் சரி செய்வதாகக் கூறி தன் சீடர்களிடம் சில மூலிகைகளைக் கொண்டுவரச் சொல்லி அவற்றை இடித்து சாறு பிழிந்து ஓர் பாத்திரத்தில் உற்றி கொதிக்க வைத்தார். அப்போது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே ஊமைச் சிறுவனிடம் அடுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிச் சென்றார்.
கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவிபட்டு ஆசிரமத்தின் மேல் கூரையிலிருந்த ஓர் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததைக் கண்ட சிறுவன் மூலிகைச் சாற்றை அடுப்பிலிருந்து இறக்க, அங்குவந்த அகத்தியரிடம் மூங்கில் நிமிர்ததைக் காட்டி தான் இறக்கி வைத்ததை சாடையில் கூற சிறுவனை பாராட்டினார் அகத்தியர். அந்த மூலிகைத் தைலத்தால் மன்னரின் முதுகு கூன் நிமிர்ந்தது.
காசி மன்னன் தலைவலியால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தபோது அகத்தியர் அங்கு வர அவரிடம் தன் வேதனையைக் கூறியவன் அதை நீக்க வேண்டினான். அகத்தியர் நீ தூங்கும்போது ஒரு தேரைக்குஞ்சு உன் மூக்கு வலியாக உள்ளே சென்று மூளைப்பகுதியை அடைந்ததுதான் காரணம். இருந்தாலும் கவலைப்படாதே அதை நான் சரிசெய்கிறேன் என்றார் அகத்தியர்.
மன்னனை மயக்க நிலையில் ஆழ்த்தி சிகிச்சை தொடங்கப்பட்டது. சில நொடிகளில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. அங்கு தேரை இருந்தது. அதை எப்படி எடுப்பது என்று நினைத்தபோது சிறுவன் தண்ணீரை தேரையின் கண்ணில் படுமாறு வைக்க அது குதித்தோடியது. அகத்தியர் சந்தானகரணி எனும் மூலிகையினால் மன்னனின் மண்டை ஓட்டை மீண்டும் பழையபடி மூடினார். சிறுவனை கட்டித்தழுவி பாராட்டினார். இந்த நிகழ்வுக்குப்பின் சிறுவன் தேரையர் என்றழைக்கப்பட்டார்.
முன்பிறவியில் இராமதேவராக இருந்து தேரையர் ஆன சீடருக்கு தனக்குத் தெரிந்த சித்திகளையெல்லாம் போதித்தார். அவருடைய ஊமைத் தன்மையைப் போக்கினார். அப்போது தொல்காப்பியம் என்ற நூலை எழுதி தொல்காப்பியர் ஆனார். ஒருமுறை சித்தர் ஒருவருக்கு வயிற்றுவலி ஏற்பட அகத்தியர் மருந்து கொடுத்தார், சரியாகவில்லை. தேரையரை அழைத்து அவரைப்போய்ப் பார்த்து வைத்தியம் செய்யச் சொன்னார். தேரையர் சென்று பார்த்து ஒரு கடுக்காய் குச்சியை எடுத்து வாய் வழியாக உள்ளே செலுத்தி அதன் துளைவழி மருந்தை செலுத்தி வயிற்றுவலியை சரி செய்தார். அகத்தியர் கொடுத்த மருந்து வேலை செய்யாததற்கு காரணம் சித்தர் வாயின் பற்களில் உள்ள விஷத்தன்மையே என்பதை அறிந்து தேரையர் மருந்து கொடுத்தார் என்பதை அகத்தியர் உணர்ந்தார். தேரையரின் திறமையை வெளி உலகுக்குத் தெரியப்படுத்த அவரை அழைத்து விருப்பமான இடங்களுக்குச் சென்று மக்களுக்கு நன்மை செய்ய பணித்தார்.
அணமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்துவரும்போது அங்குள்ள அடியவர்களின் பிணியை நீக்கினார். அகத்தியருக்கு கண்பார்வை குறைந்து கொண்டு வந்தது. சீடர்களுக்கு தேரையரின் நினைவு வர அகத்தியரிடம் அனுமதி வாங்கிச் சென்றனர். அகத்தியர் புளியமரத்தடி நிழலில் உறங்கிச் செல்க என்றார். வெகு நாட்களுக்குப்பின் அணமயம் காட்டை அடைந்த சீடர்கள் தேரையரை சந்தித்தனர். விபரம் அறிந்தார். சீடர்கள் இரத்த வாந்தி எடுக்க தேரையர் அவர்களை வேப்பமரத்தடியில் தூங்கி செல்லுமாறும் தான் இரண்டு நாளில் வருவதாகவும் சொன்னார்.
திரும்பவந்த சீடர்கள் உடல் நலத்துடன் இருப்பதை அறிந்த அகத்தியர் இது தேரையரின் வைத்தியம் என்பதை உணர்ந்தார். தேரையர் வந்தார். அகத்தியரின் கண்ணை பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து சரி செய்தார். பார்வை தெளிவடைந்த அகத்தியர் தேரையா நீ தாடி மீசையுடனிருந்தால் எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்றவரை வீழ்ந்து வணங்கினார்.
ஒருநாள் அகத்தியர் தேரையரிடம் ‘கண்வெடிச்சான் மூலிகை’ வேண்டும் என்றார். அந்த மூலிகையைப் பறித்ததும் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறிந்தவர் கண் பார்வை போய்விடும். ஆனால் தேரையர் தயங்காமல் அதைக்கொண்டு வருகிறேன் என்று கிளம்பினார். காட்டில் அந்த மூலிகையைக் கண்டார். அதைப் பறிக்காமல் அதன் அருகில் அமர்ந்து தேவியைத் தியானம் செய்ய தேவி தோன்றி, தேரையா இந்தா மூலிகை என்றார். அகத்தியரிடம் மூலிகையைத் தர அவர் மிக மகிழ்ந்து தேரையா அனைத்து சோதனைகளிலும் நீ தேறினாய். நீ அறிந்த மூலிகைகள் பற்றி நூல் எழுது எனச் சொன்னார்.
தேரையர் பதார்த்த குணசிந்தாமணி, நீர்க்குறிநூல், நோய்க்குறிநூல், தைல வர்க்க சுருக்கம், வைத்தியமகா வெண்பா, மணிவெண்பா, மருந்துப் பதம், குலைபாடம் ஆகிய நூல்களை எழுதினார். நீண்ட நாள் மருத்துவ சேவையில் ஈடுபட்டு தோரணமலையில் தவம் செய்து ஜீவசமாதி அடைந்தார்.
தேரையர் சித்தர் தியானப்பூசைக்கு
“மாய மயக்கம் நீக்கி காய
கல்பம் தேடி மீலிகை கொணர்ந்து
முதுகுக்கூன் நிமிர்த்திய அகத்தியர்
சீடரே உன்பாதம் சரணம்.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் தேரையர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு ஐந்துமுக விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து மூலிகைகளால் அர்ச்சனைசெய்து கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அகத்தியர் மெச்சிய சீடரே போற்றி
குறிப்பறிந்து குறை தீர்க்கும் குணசீலரே போற்றி
சஞ்சலங்கள் தீர்க்கும் சாந்த சொரூபவரே போற்றி
சகல பாபங்களைப் போக்குபவறே போற்றி
சித்த சுத்தி உடையவரே போற்றி
சிவனை பூஜிப்பவரே போற்றி
துக்கத்தைப் போக்குபவரே போற்றி
கண் ஒளிதந்த கருணையே போற்றி
வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி
நோய் தீர்க்கும் மருந்தே போற்றி
தேரையை அகற்றிய தேரையரையே போற்றி
ஞானம் அளித்து துக்கம் போக்கும் சித்தியே போற்றி
நிவேதனமாக மிளகுபொங்கல், பால்பாயாசம், தேங்காய்சாதம் இவற்றுடன் வெள்ளை அல்லது ரோஜாவண்ண வஸ்திரம் வைத்து ஞாயிற்றுக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
சூரிய கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக சூரிய தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்படையும். பெண்களின் வயிற்றுவலி, இடுப்புவலி குணமடையும். தீராத தலைவலி குணமாகும். உடலில் ஏற்படும் அலர்ஜி எல்லாம் சரியாகும். வீண்பழி அவமரியாதை நீங்கு புகழ் தோன்றும். வக்கு பலிதம் ஏற்படும், ராசியோகம் உண்டாகும். சரியான முடிவெடுக்கும் ஆற்றல் ஏற்படும்.
“ஓம் ஸ்ரீ தேரையர் சித்தர் சுவாமியே போற்றி”
                                           ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

பதஞ்சலி சித்தர்

Written by

பதஞ்சலி சித்தர்


பிரம்ம தேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும், சப்த ரிஷி மண்டலத்தில் பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், அனுசூயாதேவிக்கும் மகனாகப் பதஞ்சலி பிறந்தார். ஆதிசேடனின் அவதாரம். இவரின் மூச்சுக் காற்று பட்டவர் சாம்பலாகிவிடுவர் ஆகையையால் தம் சீடர்களுக்கு அசரீரையாகவே பாடம் நடத்தினார். இவருக்கும் சீடர்களுக்குமிடையில் ஓர் திரைச்சீலை இருக்கும். அன்றைய தினம் கௌடபாதர் என்ற சீடரை வேலை நிமித்தம் வெளியில் அனுப்பியிருந்தார். தாம் எழுதிய வியாகர்ண சூத்திரத்தை உபதேசித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த சீடர் ஒருவருக்கு தன் குருநாதரைப் பார்க்க ஆவல் ஏற்பட திரைச்சீலையை நீக்கிய அடுத்தகணமே அனைவரும் சாம்பலாயினர். குரு எதை நினைத்து நடக்கக்கூடாது என்றிருந்தாரோ அது நடந்தது. அப்போது ஒரு சீடர் வருவதையறிந்து மானிட நிலையை அடைந்தார் பதஞ்சலி முனி.
தன் நண்பர்கள் சாம்பலாகியது கண்ட கௌடபாதருக்கு பதஞ்சலி ஆறுதல் கூறி நீமட்டும் சீடனாக வேண்டும் என்பது விதியானது. மனதை தேற்று. உனக்கு நான சகல கலைகளையும் கற்றுத் தருகிறேன் என்றார். யோகத்தில் ஆழ்ந்தபோது குருநாதர் பதஞ்சலியாரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கிடைக்கப் பெற்றார்.
பதஞ்சலி வியாகர்ண சூத்திரம், யோகம் ஆகிய நூலகள் எழுதினார். பதஞ்சலி முனி சிதம்பரத்தில் சமாதியடைந்தார்.
பதஞ்சலி சித்தர் தியானப்பூசைக்கு
“ஆயசித்தி அனைத்தும் பெற்ற
சத்திய சித்தரே சப்தரிஷி மண்டலத்தில்
பிரகாசிப்பவரே பக்தியுடன் வணங்கும் எமக்கு
நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் பதஞ்சலியார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு இரண்டுமுக விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து பிச்சிப்பூ, முல்லைப்பூ மற்றும் பொன்நிறமலர்களால் அர்ச்சனைசெய்து கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
அஷ்டமா சித்திகளையுடையவரே போற்றி
ஆதிசேஷன் அவதாரமே போற்றி
இன்பொழிபேசி இகபரசுகம் தருபவரே போற்றி
ஒளிமயமானவரே போற்றி
கடும் நச்சுக்காற்று மூச்சுடையவரே போற்றி
கருணாமூர்த்தியே போற்றி
பூலோக சூரியனே போற்றி
மந்திரத்தின் உருவமே போற்றி
மகாவிஷ்ணு பிரியரே போற்றி
யோக சூத்திரம் அருளியவரே போற்றி
யோகங்கள் அருளும் முனியே போற்றி
ஞானம் அளித்து அஞ்ஞானம் போக்கும் யோகியே போற்றி
நிவேதனமாக இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் இவற்றுடன் பொன்னிற வஸ்திரம் வைத்து வியாழக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
வியாழன் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக குரு தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்படையும். செல்வம் பெருகி மகிழ்ச்சி உண்டாகும். எழும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும். நல்ல மக்கட் பேறு உருவாகும். கல்வி கலைகளில் சிறந்து விளங்குவர். தடைகள் நீங்கி வெற்றிகள் வந்தடையும். உஷ்ண நோய்கள் தீரும். நலன்கள் பல பெற்று இன்புற்றிருப்பார்கள்.
 “ஓம் க்லம் ஸ்ரீ பதஞ்சலி சித்தர் பெருமானே போற்றி”
                                    ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

பாம்பாட்டி சித்தர்

Written by

பாம்பாட்டி சித்தர்


கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பாம்பட்டியார் பிறந்தார். பாம்பை பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பதுவே அவரின் தொழிலாக இருந்ததால் அவர் பாம்பாட்டி எனப்பட்டார். விஷமுறிவு மூலிகைகள் பற்றி அறிந்திருந்ததால் மூலிகை வைத்தியராக இருந்தார்.
ஒருநாள் மருதமலையில் நாக மாணிக்கத்துடன் ஒரு பெரிய பாம்பு இருப்பதைக் கேள்விப்பட்டு அதைப் பிடிக்கச் சென்றார். காட்டில் அதை தேடியபோது சிரிப்பொலி கேட்டுத் திரும்ப சட்டை முனி சித்தரைப் பார்த்தார். எதற்கு வந்தீர், எதை தேடுகின்றீர் என்றதற்கு தான் மாணிக்க பாம்பை தேடுவதாக கூறினார்.
உனக்குள்ளேயே நவரத்னபம்பை வைத்துக் கொண்டு வெளியே தேடுகின்றாயே எனச் சிரித்த சட்டைமுனி, இதை தேடுவதை விடுத்து உனக்குள் இருக்கும் ‘குண்டலினி’ பாம்பைத்தேடிப் பிடி. மனிதனுள் இறைவனைக்காணும் ரகசியம் இதுவே, தியானம் சித்தியாகும். என்றார். உண்மைகளை உணர்ந்த பாம்பாட்டி அவர்காலில் வீழ்ந்து வணங்கினார். தொடர்ந்து யோகம் செய்ய குண்டலினி சக்தி கைவந்தது. சித்துக்கள் சித்தியானது.
பல இடங்களையும் சுற்றிவந்தார். ஆங்காங்கே மக்களின் நோய்களைத் தீர்த்தார். ஒருநாள் அரசன் ஒருவன் இறந்திருப்பதை வான்வழியே வரும்போது பார்த்தார். அவன் உடலில் புகுந்தார். அனைவரும் மகிழ்வுற்றனர். அரசனின் செயல் முறைகள் மாறி இருப்பதை இராணி உணர்ந்தார். மக்களும் மன்னன் சித்தன்போல் பிதற்றுகின்றார் என்றனர். அரசியார் தன் சந்தேகத்தைப் போக்க மன்னனிடம் நிங்கள் யார் என்றார். மன்னன் உடலில் இருந்த சித்தரும் உண்மையைக் கூற அனைவரும் அவரை வணங்கினர்.
மன்னரான சித்தர் பல தத்துவப் பாடல்களைப் பாட அனைவரும் கவனமுடன் கேட்டனர். பின்னர் மன்னன் உடலிலிருந்து சித்தர் வெளியேரி தன் உடம்பில் புக, மன்னர் உடம்பு தரையில் வீழ, சித்தரின் ஆலோசனைப்படி ராணியார் ஆட்சி புரிந்தார்.
பாம்பாட்டியார் சித்தர் பாடல்கள், சித்த ஆரூடம், வைத்திய நூல்கள் முதலியனவற்றை எழுதியுள்ளார். மருதமலையில் சித்தியடைந்தார்.
பாம்பாட்டி சித்தர் தியானப்பூசைக்கு
“அடவிவாழ் பாம்பிகளை ஆட்டுவித்துபின் உடலில்வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடுபாய்ந்து ஞானமுத்து கொடுத்தவரே, குவலயத்தின் காவலரே
ஆதிசேஷனின் அருள் கண்டு ஆதி சிவன் மகன் வரம் கொண்டு
ஜாதி மதங்கள் பேதம் இன்றி காக்கும் சித்தரே, காக்க, காக்க.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் பாம்பாட்டியார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து அல்லி, தாமரை, மகிழம்பூ, சம்பங்கி ஆகிய மலர்களால் அர்ச்சனைசெய்து கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
ஆலகால விஷத்திலிருந்து காப்பவரே போற்றி
ஓம் வசி பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி
சனீஸ்வர பகவானின் நண்பரே போற்றி
சிவனின் ஆபரணமானவரே போற்றி
சர்ப்ப ரட்சகரே போற்றி
நந்தி தேவரின் நண்பரே போற்றி
நடு நிசியில் சஞ்சரிப்பவரே போற்றி
பசும்பாலில் பிரியம் உள்ளவரே போற்றி
பாற்கடலில் வாசம் செய்யும் பூஜ்ய சித்தரே போற்றி
முருகப் பெருமானின் பிரியரே போற்றி
மூன்று வண்ணங்கள் கொண்டவரே போற்றி
வாக்கில் சுத்தம் உடையவரே போற்றி
நிவேதனமாக சர்க்கரைப்போடாத பச்சைபால், வாழைப்பழம் இவற்றுடன் கருப்பு நிற வஸ்திரம் வைத்து சனிக்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
ராகு கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக ராகு தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். தாம்பத்திய ஒற்றுமை சிறப்படையும். மாயை அகன்று தெளிவு ஏற்படும். போதைப் பழக்க வழக்கங்கள் அகலும். வேலை வாய்ப்பு வெளிநாடு பிரயாணங்கள் உண்டாகும். ராகு பகவானால் ஏற்படும் களத்திர தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும். வியாபாரம் பெருகும். பயம் அகன்று பலம் கூடும். நரம்பு சம்பந்தமான கோளாறுகள் நீங்கும்.
“ஓம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் பெருமானே போற்றி”
                                        ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

புலிப்பாணி சித்தர்

Written by

புலிப்பாணி சித்தர்
போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டதால் புலியை வசியப்படுத்தி அதன் மீதேறி சென்று வெறும் கையாலேயே தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். புலிமேல் சென்று பாணி- நீர் கொண்டுவந்ததால் புலிப்பாணி எனப் பெயர் வந்தது. இவர் போகரின் சீடர் ஆவார்.
பழனி மலை சிலை செய்ய போகருக்கு மிக உதவியாக இருந்தவர் இவர்தான். நவபாஷான மூலிகைகளை புலிமீதேறிச் சென்று பறித்து வந்தார். போகர் சமாதிக்கு செல்லுமுன் தண்டாயுதபணி பூஜைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். போகர் முருகன் சிலையை செய்து முடித்ததும் சீனா சென்று தன் தவ வலிமைகளை இழந்துவிடவே புலிப்பாணியார் அவரை முதுகிலே சுமந்து வந்து பழனியில் வைத்து அவருக்கு தவ வலிமைகளை மீண்டும் அளித்தார். வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் திறமையானவர்.
புலிப்பாணி வைத்தியம் 500, ஜோதிடம் 300, ஜாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூஜாவிதி 50, சண்முகபூஜை 30, சிமிழ்வித்தை 25, சூத்திரஞானம் 12, சூத்திரம் 9 ஆகிய நூல்கள் எழுதினார்.
புலிப்பாணி சித்தர் தியானப்பூசைக்கு
“மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரி
சித்தரே புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே எம்
கலிப்பாவம் தீர்க்க உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் பாம்பாட்டியார் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து ரோஜா, செவ்வரளி, சாமந்தி பூ, அரளிப் பூ, ஆகிய மலர்களால் அர்ச்சனைசெய்து கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
உலகம் முழுவதும் சஞ்சரிப்பவரே போற்றி
எளிதில் மகிழ்ச்சி அடைவரே போற்றி
கம்பீரமான தோற்றம் உடையவரே போற்றி
சித்த மருந்துகளின் தலைவரே போற்றி
சூலாயுதம் உடையவரே போற்றி
தெய்வயானையுடைய புதல்வா போற்றி
புலி சொரூபரே போற்றி
மிருகங்களால் பூசிக்கப்படுபவரே போற்றி
முருகப்பெருமானை வழிபட்டவரே போற்றி
ஐஸ்வர்யங்கள் அளிப்பவரே போற்றி
வனத்தில் வாசம் செய்பவரே போற்றி
ஞானம் வரம் கொடுப்பவரே போற்றி
நிவேதனமாக கமலா ஆரஞ்சு கொட்டை நீக்கி உரித்த சுலையாய், தக்காளி விதை எடுத்து உப்பு தூவி, தயிர் சாதம் உப்பில்லாமல் தாளிக்காமல் வைத்து சிவப்பு வண்ண வஸ்திரம் வைத்து செவ்வாய்க்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக செவ்வாய் தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் தீரும். சொந்த மனை வீடு கிட்டும். வியாபாரிகளுக்கு தடை நீங்கி வெற்றி கிட்டும். திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும். இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். அரசியல் வெற்றி கிடைக்கும்.
“ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தர் பெருமானே போற்றி”
                                      ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

 

போகர் சித்தர்

Written by

போகர் சித்தர்


சீன தேசத்தில் துணிகள் வெளுத்து துவைக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தவர் போகர். இவர் புலிப்பாணியின் குரு. போகர் திருமூலர் காலத்தைச் சேர்ந்தவர். பழனி தண்டாயுத பாணி சிலையை புலிப்பாணியின் உதவியுடன் நவபாஷானக் கட்டில் தயாரித்தார்.
இறந்தவர்களைப் பிறக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியை பெற மேரு மலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்களின் சமாதியை அடைந்தார். ஒன்பதிரின் தரிசனம் போகருக்கு கிட்டியது. அவர்களிடம் சஞ்சீவினி மந்திர வித்தையைக் கற்றுத்தர வேண்டினார். தகுதியுள்ள வர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு. அவர்களை நீண்டகாலம் வாழவை என போகருக்கு அதுவரை தெரியாத காயகல்ப முறைகளை சொல்லித் தந்தனர்.
ஒருநாள் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். ஒரு புற்றிலிருந்து ஒளிக்கற்றை வருவதைப் பார்த்து அருகில் சென்றபோது உள்ளே ஒருவர் தியானம் செய்வதை அறிந்து வெளியே அமர்ந்து இவரும் தியானத்தில் இருந்தார். இவர் தியானத்தால் அவரின்தியானம் கலைந்தது. புற்றிலிருந்து வெளியே வந்தர் போகா எதிரிலிருக்கும் மரத்தின் பழத்தை உண்டால் வாழ்நாள் முழுவதும் பசி எடுக்காது. நரை திரை மூப்பு வராது. தவம் செய்ய துணை செய்யும். என்று புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து இது உனக்குத் தவம் செய்ய பயன்படும் என்றார். அப்போது ஒர் பதுமை தோன்ற மேல்கொண்டு உனக்குத் தேவையானவைகளை இப்பதுமை சொல்லும் எனக் கூறிமறைந்தார். பழத்தைச் சாப்பிட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம், ஆகியவைகளை தெளிவாக சொல்லக்கேட்ட போகர் ஆச்சரியத்தில் இருக்கும்போது அது மறைந்தது.
பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்தபோது உணவு சமைத்து உண்டபின் நீர் வேண்டி அருகில் உள்ள வீட்டிற்குச் சென்றார். ஒர் வீட்டுத் திண்ணையில் கூட்டமாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தாகத்திற்கு நீர் கேட்டார். யார் நீ, தூரப் போ, அருகில் வந்தால் துர் நாற்றம் வீசுகிறது என்றார்கள். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டார். அந்தப் பக்கம் வந்த பூனை ஒன்றை அழைத்து அதன் காதில் வேதத்தை ஓதினார். பூனை வேதம் ஓதியது. அதைகண்ட அந்தணர்கள் தங்கள் அறியாமையால் செய்த பிழையை மன்னிக்க வேண்டினர். அவர்கள் வறுமை நீங்க வழி கேட்டனர். போகர் அவர்கள் வீட்டிலிருந்த இரும்பை எல்லாம் ஆதிரசத்தால் தங்கமாக்கி கொடுத்தார்.
தாம் தயாரித்த இரச குளிகைகள்போல் நிறைய தயாரித்து தம் சீடர்களுக்கு வழங்க வேண்டுமென விரும்பினார். ரோமாபுரி சென்று தூய்மையான ரசம் கொண்டு வர நினைத்து குளிகை ஒன்றினை வாயில் போட்டுக்கொண்டு ரோமாபுரியில் தோன்றி அங்கு இருந்த இரசக் கிணற்றை தேடிப் பிடித்து தம்மிடம் இருந்த குடுவையில் நிரப்பிக் கொண்டார். விண்மார்க்கமாக பொதிகைமலை அடைந்தார்.
காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பி தஞ்சை பிரகதீசுவரர் ஆலய லிங்க பிரதிஷ்டை செய்ய பணித்தார். தட்சிணாமூர்த்தி உமைக்கு அருளிய ஞான விளக்கம் ஏழு லட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணாக்கர்களுக்கு உபதேசம் செய்தார் போகர், மற்ற சித்தர்கள் இறைவன் உபதேசத்தை வெளியில் சொல்வது குற்றம் அதை அவர் உடனே நிறுத்த வேண்டும் என தட்சிணாமூர்த்தியுடம் சொன்னார்கள். தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரித்தார்.
போகரே, நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்துள்ளீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுத்து அரசனாக்கினீர், மேறுமலைக்குச் சென்று தாதுக்களை தங்கமாக மாற்றினீர், ரோமாபுரி சென்று ஆதி ரசம் கொண்டு வந்தீர். உமாதேவிகு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீர். நீர் செய்த அந்த நூலைச் சொல்வீராக எனக் கேட்டு போகரின் நூலாழத்தையும் பொருள் சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்தார் போற்றினார்.
பழனியில் கடும் தவம் செய்து முருகப் பெருமானைக் கண்டார். அவரிடமிருந்து அவரை மூலவராக வடிவமைத்து விக்கிரமாகச் செய்து, அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும், காரிய சித்தி உபாயத்தையும் கேட்டு அறிந்தார். போகர் கனவில் முருகப் பெருமான் சொன்னபடி நவபாஷாணத்தில் சிலை செய்து பிரதிஷ்டை செய்தார். சிலையில் ஊறிவந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். அது போகருக்கு உள்ளொளியை பெருக்கியது.
போகர் காண்டம் 12000, சப்தகாண்டம் 7000, நிகண்டு 1700, வைத்தியம் 1000, சரக்கு வைப்பு 800, ஜெனன சாகரம் 550, கற்பம் 360, உபதேசம் 150, இரணவிகடம் 100, ஞானசாராம்சம் 100, கற்ப சூத்திரம் 54, வைத்திய சூத்திரம் 77, மூப்பு சூத்திரம் 51, ஞான சூத்திரம் 37, அட்டாங்க யோகம் 24, பூஜாவிதி 20 ஆகிய நூல்கள் எழுதியுள்ளார். பழனியில் சமாதியடைந்தார். போகர் பூசித்த புவனேஸ்வரியம்மன் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் உள்ளது.
போகருக்கு புலிபாணி சித்தர், காக புசுண்டர் உள்பட 63 சீடர்கள் இருந்தனர்.
போகர் சித்தர் தியானப்பூசைக்கு
“சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே
சிவபாலனுக்கு ஜீவன் தந்த சித்த ஒளியே
நவபாஷாணத்து நாயகனே உங்கள் நல்லருள் காக்க காக்க.”
தேக சுத்தியுடன், அதற்கென்று உபயோகிக்ககூடிய விதத்தில் ஒரு பலகையை சுத்தமாக கழுவி அதில் போகர் திரு உருவப் படத்தை வைத்து தாமரை அல்லது வாழைத்தண்டு திரிபோட்டு குத்து விளக்கு தீபமேற்றி கலசம் அல்லது சொம்பில் ஊற்று அல்லது ஆற்று நீர் நிரப்பிவைத்து ஜாதிப்பூ, சாமந்திப்பூ, சம்பங்கிப்பூ, கதிர்பச்சை மற்றும் செவ்வரளி ஆகிய மலர்களால் அர்ச்சனைசெய்து கீழ்கண்ட போற்றிச் சொல்லி தீப ஆராதனைக் காட்டி வழிபடவும்.
ஆம், ஊம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி
உலகத்தைக் காப்பவரே போற்றி
கிரிவலத்தில் நம்பிக்கை உடையவரே போற்றி
சித்த வைத்தியத்தின் தலைவரே போற்றி
சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி
நாக தேவைகளால் பூசிக்கப்படுபவரே போற்றி
நவபாஷாணம் அறிந்தவரே போற்றி
பசும்பால் பிரியரே போற்றி
பிரணவ ஸ்வரூபமாக இருப்பவரே போற்றி
மகா முனிவர்களால் பூசிக்கப்படுபவரே போற்றி
முருகப்பெருமானை தரிசித்தவரே போற்றி
வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி
நிவேதனமாக பால், பழம் வைத்து இவற்றுடன் சிவப்பு வண்ண வஸ்திரம் வைத்து செவ்வாய்க்கிழமை வழிபடின் சிறப்பு,
தியானபூசைப்பலன்கள்
செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர் ஆகையால் ஜாதக செவ்வாய் தோஷங்கள் விலகி நன்மை பயக்கும். நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் தீரும். சொந்த மனை வீடு கிட்டும். வியாபாரிகளுக்கு தடை நீங்கி வெற்றி கிட்டும். திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கும். இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். அரசியல் வெற்றி கிடைக்கும்.
 “ஓம் ஆம் ஓம் ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமியே போற்றி”
                                       ******

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் / கொங்கணர் / சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்

பதினென்-சித்தர்கள்

Written by

                                           

                       ஓம் சிவயநமக!

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான்

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்

தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

                                         0=0=0=0=0=0        

 

சித்தர்கள்


சித்தர்கள் யோகக் கலையின் பிதாமகன்கள். தங்கள் யோக பலத்தால் செய்த சாகசங்கள் நம்மால் நம்பமுடியாத அளவிற்கு இருந்தாலும் அவைகள் உண்மைகள். காலங்களை வென்று பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், இரும்பை பொன்னாக்கியும், கூடு விட்டு கூடு பாய்ந்ததும், மூச்சடக்கி வான் வெளியில் பறந்ததும், நவகிரகங்களை வசப்படுத்தியதையும் படிக்கும்போதும் கேள்விப் படும்போதும் நம் உணர்வுகள் அந்த சாதனைகளை அற்புதங்களை ஏற்று உள்ளத்தில் அவர்களைப் பற்றிய ஆச்சரியத்துடன் ஓர் உயர்ந்த எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கின்றது.

சித்தர்கள் சித்தத்தில் சிவனை சிந்தனை செய்து சிவத்தைக் கண்டவர்கள். தாங்கள் பெற்ற சித்திகளை அனுபவத்தின் மூலமாக மனித வாழ்வு மேநிலையடைய உதவி செய்பவர்கள். பிறக்கும்போதே ஞானியாக, சித்தராக பிறந்தவர்கள்- கருவிலே திருவுடையவர்கள் பிரகலாதன், ஞானசம்பந்தர், பிறந்தபின் ஆண்டவன் அடியவராகி அருளில் ஒன்றியவர்கள்- நாயன்மார்கள், ஆழ்வார்கள். கல்பமருந்துகள், மூலிகைகள், பாஷாணங்கள் மூலம் உடலை இறுக்கி முக்தி அடைந்த காயசித்தர்கள்- போகர், கோரக்கர். உடலைத் தவம், யோகம் ஆகியவற்றாலும் ஒளஷதங்களாலும் சுத்தி செய்து முக்தியடைந்தவர்கள். சிவனிடம் உபதேசம் பெற்ற மகேஸ்வரசித்தர்கள். திருமூலரை குருவாகக் கொண்ட மூலவர்க்க சித்தர்கள், பாலமுருகனை குருவாகக் கொண்ட பாலவர்க்க சித்தர்கள், அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தர்கள் என பலவகைச் சித்தர்கள் இருந்தாலும் சித்தர்கள் என்றால் முதலில் பதினெண் சித்தர்கள்தான் நினைவில் தோன்றும்

வெறும் சித்து விளையாட்டுகளுடன் நிற்காமல் அவர்கள் கற்ற தெரிந்த யோக, ஞான, வைத்திய நெறிமுறைகளை எதிர்கால மக்களின் நன்மைக்காக அருளிச் செய்துள்ளனர். ஒரு மனிதனின் பிறப்பின் நோக்கத்தை அறிவித்து அவனை நல்வழிப்படுத்தி இறைவனுடன் இனிதாக இணைத்து வைத்து அவன் முக்தியடைய வழிகளை சொல்லியிருக்கின்றார்கள். அதைப் புரிந்து தெரிந்து அதன் வழி நடந்தால் மனித குலம் மேன்மையடையும். 

சித்தர் வழிபாடு

நந்தி, அகத்தியர், மூலம், புண்ணாக்கீசர், நற்றவத்துப்புலத்தியரும்,

பூனைக்கண்ணர், கந்திடைக்காடரும், போகர், புலிக்கையீசர், கருவூரார்,

கொங்கணவர், மாகாலங்கி, சிந்தியழகண்ணரகப்பையர், பாம்பாட்டித்

தேரையரும், குதம்பைச்சட்டசித்தர், செந்தமிழ்ச்சீர்சித்தர் பதினெண்மர்

பாதம்சிந்தித்தே அணியாகச் சேர்த்துவாழ்வோம்

 

சித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்

அகத்தியர் / அகப்பேய்சித்தர் இடைக்காட்டுச்சித்தர் உரோமரிஷி கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் குதம்பைச்சித்தர் /கொங்கணர்/சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்



புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26930853
All
26930853
Your IP: 3.238.87.31
2024-03-28 21:29

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg