gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
ஞாயிற்றுக்கிழமை, 10 May 2020 10:21

நவாக்கரி சக்கரம்!

Written by
Rate this item
(2 votes)

ஓம்நமசிவய!

பாலொடு தேனும் பருகுவோய் மேலொடு கீழாய்
மிளிர்வாய் எய்ப்பில் வைப்பாய் இருந்தோய்
மெய்ப்பொருள் வேழமுகத்தாய் நால்லார்க்
கெட்டும் நாதா பொல்லா மணியே புராதன போற்றி!

#####

நவாக்கரி சக்கரம்!

1219. நவாக்கரி சக்கரம் புதுமையைத் தரும் ஓர் எழுத்தான அம்மையே ஒன்பது எழுத்துக்களைக் கொண்ட தேவி மந்திரமாக அதுவே எண்பத்தொரு வகையாக் நவக்கரி கிலீம் முதல் சௌம் வரை இருக்கும்.

1220. முதலில் சௌ, ஔ, ஹௌ, கிரீம், கௌ, ஐ, இரீம், கிரீம், கிலீம் என்ற இந்த ஒன்பதும் மந்திர உறுப்பாய்க் கொண்டு இவற்றுடன் கிலீம் மந்திரம் மூலமாகக் கொண்டு செம்மையாக உள்ளெழுந்த முறையில் சிவயநம என உச்சரிப்பாயக.

1221. நவாக்கரி என்பது நான் அறிந்த ஸ்ரீவித்தையாகும். இதனால் நன்மைகள் அனைத்தும் உண்டாகும். நாவில் வைத்து நினைத்தால் நவாக்கரி சத்தி நன்மைகள் அருள்வாள்.

1222. ஞானம் கல்வி முதலிய நன்மைகள் எல்லாம் உண்டாகும் கொடுமையைத் தரும் சஞ்சிதம்-பழவினைகள் அந்த உயிரை விட்டுப் போகும். இந்தப் பிறவியில் அறியாமையால் ஈட்டப்படும் ஆகாமிய வினைகளை நீக்கி வரம் தரும். சந்திர மண்டலம் விளங்குவதை அனுபவத்தால் அறியலாம்.

1223. சக்கரத்தை வெள்ளி பொன் தகடுகளில் அமைக்க வேண்டும். மனதில் தியானித்தால் அமையவுள்ள வினைகளை வெல்லலாம்.. நீங்கள் வாழ்கின்ற பூமி உங்களுக்கு வெற்றியை அளிக்கும். உங்கள் தியான் நிலைக்கு ஏற்ப நிலைத்திருக்கும்.

1224. ஸ்ரீம் முதல் கிலீம் வரை தியானிக்கவும். அப்படி தியானிக்கும்போது முதலாக உள்ளது இறுதியாக அமையும். நெல்லும் அறுகம்புல்லும் கொண்டு தியானித்து வணங்குங்கள். உங்கள் வழிபாட்டை விரும்பி வெளிப்பட்டு அருள்வாள்.

1225. வெளிப்பட்டு அருள் செய்யும் சத்தி எத்தகைய நிறம் கொண்டவள் என்பதை உணர அழகிய காயம் பூவைப்போல் கரிய வண்ணம் ஆகும். அப்படி கருதி தொழுதால் எண்ணியவை யாவும் கைகூடும். அவள் விரும்பும்படி நடந்து கொள்வாயாக.

1226. இவ்வுலகில் எல்லா நன்மைகளும் உண்டாகும். காலன் உனக்குரிய ஆயுளாக எண்ணிய நாள்களும் கடக்கும். எங்கும் பரவும் சூரியனின் கதிரைப் போல் புக்ழானது பரவும். பராச்த்தி உன்னிடம் பொருந்துமாறு நடந்து கொள்க.

1227. . பொன்னும் மணியும் வெள்ளியும் தானே வந்தடையும். பராசத்தியின் அருளூம் ஞானமும் வரும். தேவர் வாழ்வு கை கூடப்பெறும். அவற்றை அடையும் வகையைத் தெரிக.

1228. நவாக்கரியை தேவர்கள் ஆவதற்கு மக்கள் அறிவார்கள். அவளை அறிந்த தேவர்களூக்கு தேவர்களீன் தலைவன் சிவபெருமான் அருள் செய்வான். பாயும் தீ கங்கையை சூடி அதன் வேகத்தை மாற்றியருளிய சிவபெருமானை அடைய முயல்வாயாக.

1229. வணங்குதற்குரிய சக்கரத்தில் பொருந்திய் எழுத்துக்கள் உலகம் புகழ்கின்ற ஹிரீம் முதலான் ஸ்ரீம் இறுதியாக் உள்ளவையாகும்.. இதனை வழிபட்டு மாலையை அணிந்து புகழுடன் கூடிய பராசத்தியை மேகம் போன்ற மண்டலத்தில் கண்டு கொள்வீர்.

1230. தனக்கு நிகரில்லா தலைவி சத்தியை தரிசனம் செய்யுங்கள். அள்ளிக் குடிப்பதைப் போல்முகப் பொலிவு உண்டாகும். மென்மையான பரமசிவத்தை மஞ்சமாகத் தாங்கும் நிலையான சத்தியை போற்றி உள்ளத்தே கொள்ளுங்கள்.

1231. அடையும் பேறாக உள்ள பெருமையை எண்ணினால் நாட்டை ஆளும் மன்னரும் வசமாவர். பகைவர் வாழ்வதுமில்லை இறைவனை ஒரு பகுதியிலே கொண்டவளைத் துதியுங்கள்.

1232. எட்டுத் திசைகளுக்கும் தலைவி சத்தியை வழிபடுங்கள். தேவர்கள் வாழ்வு எத்தகையது என்பதை எண்ணி அதில் கொண்ட ஆசையை அறுங்கள். மீண்டும் பிறந்து இப்பூமியில் வரும் வழியை மற்றுங்கள். நாயகியின் திருவடி துணையை பற்றித் தெளிவு அடையுங்கள்.

1333. சத்தியின் திருவடிகளை இடைவிடாது நினைத்திருந்தவர் நா அசையாமல் உள்ளே செபிப்பர். தங்களது அகப் பார்வையை செலுத்தி இருக்க பெருமையுடைய திருவடியைக் காண்பவர் ஆவர்.

1334. ஐம் முதலெழுத்து வலர்ந்து தோன்றும் சக்கரம் ஐம் முதலான பீசங்களோடு ஹிரீம் இறுதியாகும். அகர வாக்கியப் பொருளான சிவனுக்குரிய சத்தியை மாயைக்குத் தலைவியாய் போற்றுக.

1335. வாகீசுவரியான சத்தியை வேதங்கள் பகுத்து ஓதும். அவை அனைத்தையும் சேர்த்து நாவால் பயில அதற்கு அருள் செய்ய வல்லவளை அண்ணாக்கின் உள்ளே முன் எழக் கண்டு கொள்வீர்.

1336. இந்த இயல்புடைய சக்கரத்தை நாவில் எழுதினால் இது கூத்தப் பெருமானின் வடிவமாகும் பொன் மன்றில் இருக்கும் சபா வித்தையும் உயிர்கள் கையதாகும். மெல்லியலான நவாக்கரி அருள் பொருந்துவதால் உலகத்தை வெல்லலாம்.

1337. மென்மையான இய்ல்புடைய உண்மைப் பொருளானவளைக் குருவின் உபதேசப்படி விடாது பற்றுங்கள். தியானியுங்கள். இன்ப துன்ப கலப்புடைய நாள்கள் பலவும் நல்ல இன்ப நாள்களாகவே அமைந்திடும்.

1338. நன்மைகள் யாவும் சொல்லியபடி நடக்கும். சொல்லிய வண்ணம் சொல்லிய பயனும் தொடர்ந்து விடும். வாக்கீசுவரியே நாவில் பொருந்தி இருப்பதால் எல்லாக் கலையும் பொருந்தி நாவரசனாக இருப்பான். பரந்த உலகில் பகையும் இராது.

1339. பகைக் கெடுக்கும் கௌம் முதல் ஐம் இறுதியாய் உள்ள சக்கரத்தை நன்றாய் அறிந்தவரை பிறர் பழித்திட மாட்டார். பற்பல வடிவங்களாய் உள்ளவை யாவும் இவருக்கு வேறான்வை அல்ல. வேறுவகையின்மையாக எல்லாம் இவரை வணங்குபவனாம்.

1340 தத்துவ நாயகியை எல்லாரும் வணங்குவர். அந்நல்லவர் எல்லாம் அவளிடம் பொருந்தியிருப்பர். காமம், வெகுளி, மய்க்கம் என்ற மூன்று குற்றங்களும் அகலும், எண்ணிய செயல் கைகூடப்பெறும்.

1341. தனக்குமேல் பிறர் இல்லாமல் தானே பேசி அடங்குவன் ஆவான். தான் ஒருவனே எண்ணிய வண்ணம் ஒளிக்காமல் பேசுபவனாவான். தானே பேருழிக் காலத்தில் சிவபெருமானின் சங்காரத் தாண்டவத்தைக் காண்பவன் ஆவான். தானே வணங்கப்படக்கூடிய தலைவனும் ஆவான்.

1342. எல்லா உயிர்களும் ஆகியவள் சத்தியே எல்லாவற்றையும் பெற்றெடுத்த அழகுடைய அன்னை அவள் திருவடியை வணங்கினால் வினைகள் நீங்கிப் புண்ணியன் ஆகலாம்.

1343. உலகம் எங்கும் பொருந்திப் புண்ணியன் ஆகி மதிக்கத் தக்கவராய் அனைவருடன் கலந்து விளங்குவான். அருள் நிறைந்தவனாக உலகம் முழுவதும் இனிமையாக அமர்ந்திருப்பான்.

1344. சக்கரத்தின் பீசம் கிரீம் முதல் சௌம் வரை அது தானாக உள்ள சக்கரம் என்று அறிபவர்க்கு அஞ்ஞானமயமான காட்டில் இருள் மயமாகக் கலந்திருந்த அழியாத பராசத்தி உ”றவாகி அறிவு நிலையில் ஒளீயாக எல்லா உயிர்களிடத்தும் விளங்குவாள்.

1345. ஒளி செய்யும் பராசத்தி உள்ளத்தில் எழுந்தருளினாள் களிக்கும் மனத்தில் உண்மைப் பொருளை விளக்கித் தெளிவு தரும் மழையுடனே செல்வத்தையும் உண்டாக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கு அருள் செய்வாள்.

1346. நவாக்கரி சக்கரத்தை பூசை செய்து அறிவாய். உலகத் துன்பம் யாவும் விலகும். பகையை தடுத்து நிறுத்தும். மன்னனும் வணங்கும்படி செய்யும், மனத்தை கலங்கச் செய்யும் துன்பங்கள் ஏற்படாது.

1347. சக்கர வழிபாட்டைச் செய்பவர்க்கு துன்பங்கள் உண்டாவதில்லை. உள் உடல் பொன் ஒளியுடன் விளங்கும். பிற உயிரைக் கொல்லாதவர் என்பதால் பிறவியை அடைய மாட்டார்கள். வாழ எண்ணமுடைய உயிர்களுக்கு இதைவிடச் சிறந்த வழியில்லை முடிவும் இல்லை.

1348. தியானம் செய்தவர் ஒளி பெற்றுத் திகழ்வர். சினத்துடன் எழும் ஆகாமய வினைகளைக் காணாதவர் ஆவார். பரந்து எழும் உள்ளொளி அவர் வாழும் பகுதியில் படரும். அப்பகுதியில் பரவிய இருள் மயமான அஞ்ஞானம் கெட்டு ஒளியைப் பெற்று ஞான மயமாய் இருக்கும்.

1349. ஹௌம் முதல் கிரீம் வரை உள்ள மகிழ்ச்சியைத் தரும் சக்கரத்தை கண்டறிவார்க்கு தெளிவான ஞானமும் மனமும் உண்டாகும். அவர் வணங்கி வழிபடுவது ஐந்தெழுத்துடன் கூடிய நவாக்கரியாகும்.

1350. சதாசிவ மூர்த்திக்கு அருள் சத்தியாய் விளங்குபவள். இவள் கீழ் நோக்கும் சத்தியாக உயிர்களைச் செலுத்துபவள். சுவை, ஒளி, ஊறு, ஓசை, இவற்றை அறியும் அறிவாய்த் துணை இருப்பாள். அருவ நிலையில் எல்லா உயிர்களையும் தன்னுடன் அடக்கிக் கொண்டவள்.

1351. எல்லா உயிர்களையும் தன்னுள் கொண்ட ஈசான மூர்த்தி வடிவில் என்னுள்ளே இடம் பெற்று இருப்பவள். அவளை மண்ணிலும் நீரிலும் ஒளியிலும் காற்றிலும் வானிலும் கண்ணின் கருமணிப் பார்வையிலும் உடலிலும் காணலாம்.

1352. சத்தி உயிருடன் கலந்து நின்று உயிர்களுக்குச் செய்யும் உதவியை காணலாம். அவளை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் கூடி இருப்பவரிடம் கண்பது சிவபேதமின்மையால் காணக்கூடும். உயிர்க்கு உயிராய் இருக்கும் அவள் வழியே உயிர்கள் செயல்படுவதைக் காணமுடியும். அவளிடம் என்றும் பிரியாத வண்ணம் கருத்துப் பொருந்தி நிற்பாய்.

1353. பயிற்சி செய்பவருக்கு ஏழு உலகங்களும் ஒன்றாக கலந்து நிற்கும். எல்லா உயிர்களிடமும் கலந்து பொருந்தி தானாக கண்பர். நிலத்தின் எல்லா இயல்புகளையும் உள்ளவாறு அறிவார். உயிர்கள் வலிய எய்திய வினைகளை விலக்கும் உண்மைப் பொருளாய் விளங்குவர்.

1354. மெய்ப் பொருளான ஒளம் முதம் ஹௌம் வரை உள்ள சக்கரத்தில் சிவம் விளங்க வீற்றிருக்கின்ற அமுதேசுவரி நன்மையைத் தரும் பொருளாக உடல் நடுவில் இருப்பார்.

1355. மூலாதாரம் முதல் பிரம்ரந்திரம் வரை பேரொளியாக இருக்கும் அமுதேசுவரியுடன் மூல வயுவை மெலே கொண்டு வந்து பொருந்தச் செய்தால் நள்தோறும் புதுமைகளை பார்த்தபின் நாடு முதலிய வேறுபாடுகள் இல்லை. நாள் தோறும் புதுமைகளைக் கண்டபின் அவர் உடலுக்கு கேடு ஏதுமில்லை.

1356. மூலாதாரத்தினின்று மேல் நோக்கி எழும் ஒளியை அறிந்தபின் கேடு வந்து சேராது. பேரொளியைக் கண்டபின் நாடு முதலிய வேறுபாடுகள் இல்லை. அமுதேசுவரியின் அருள் வரும் வழியைக் கண்ட பின்னர் உலக துக்க காடும் இல்லை.

1357. நாவ வந்தடைந்த உலகம் தோன்றாதபடி பாழ் செய்து அந்த உலகத்தில் கண்டறிந்த யாவும் வெட்ட வெளியாயிற்று. தானே எங்கும் நிறைந்திருப்பதால் வேறு இடம் இல்லை. உலவுவதற்கு வேறு வழி இல்லை. தான் என்ற பொருளே இல்லை. சலிப்பிற்குரிய இடம் ஏதுமில்லையாதலால் அசையாமல் அனுபவத்தில் நிலை பெறுக.

1358. பயிற்சி செய்பவர்க்கு ஏழு கடலும் முன் நிற்கும். உள்ளத்தில் நினைத்தவை யாவும் முன்னே நிற்கும். சத்தி தன்னிடம் நிலை பெறக் காண்பவர்க்கு தலையின்மீது ஒளிகள் அமைந்து இருக்கும்.

1359. விளங்குகின்ற ஒளியாய் திகழும் ஸௌம் முதல் ஒளம் வரை பீசங்களை உடைய நவாக்கரி சக்கரம் உண்மைப் பொருளாகும். அதில் இருக்கும் மின்னல் கொடி போன்றவளை ஞானத்தை உடையவளாய் அறிந்து இருப்பாயாக.

1360. தெரிய வரும் உண்மைப் பொருளைச் சொன்னால் எங்கும் இருக்கும் சத்தியே அவள். இந்த உண்மையான ஞானப் பொருளை உணர்ந்தவரே சத்தியை உணர்ந்தவர் ஆவார்.

1361. அந்த சத்தி தானே வானம் போல் உருவு இல்லாமல் எங்கும் பரந்து காணப்படுப்வள். தானே அனைத்துப் பொருளுமாகி எல்லாவற்றையும் த்ன்னுள் அடக்கிக் கொண்டவள். எல்லா அண்டங்களும் தானாகத் திகழ்பவள்.

1362. அண்டங்கள் யாவற்றிலும் அளத்தற்கு இயலாதவளாய் இருக்கின்றாள். பிண்டமான உடலில் ஞானம் இருக்கும் பெருவெளியைத் தன்க்குரிய இடமாக கொண்டவள். ஓமம் செய்கின்ற ஓம குண்டத்தில் பல நன்மைகளைப் பெற்றாலும் கண்டத்திற்கு மேல் இருக்கும் நிலையான கலப்பை அறியாதவாராய் சிலர் உள்ளனர்.

1363. சத்தி கடல் சூழ்ந்த உலகம் எல்லாம் கலந்திருப்பதை அறியார்கள். உடலுடன் கூடிய உயிர் உடலை விட்டு ஒருநாள் பிரிந்துவிடும் என்பதை அறியார்கள். சிறு தெய்வத்தை நாடியதால் நாதத்தை அறியர்கள். இதற்கு அவர்கள் தலையெழுத்தே காரணம்.

1364. சுயம்புவாகத் தோன்றிய அந்தசக்கரத்தைப் பற்றிச் சொல்லின் கோடுகள் குறுக்கும் நெடுக்குமாக பத்து வரைக. இரேகைக்கு உட்பட்ட அறைகள் ஒன்பதாகக் குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் அறைகள் எண்பத்தொன்?றாய் அமைக்க.

1365. சக்கரத்தில் கட்டங்களுக்கு வெளியான மதி மண்டலம் பொன் நிறம் உடையது. கட்டங்களில் அமைந்துள்ள கோடுகள் சிவப்பு நிறமாக இருக்கும். சத்தியினது எழுத்துக்கள் அடைக்கும் கட்டங்கள் பச்சை நிறமாகும்

1366. பொருந்திய் மரப் பட்டையில் எழுதிய சத்தி பீசங்கள் எண்பத்தோர் அறைகளில் அடைக்க வேண்டும். பின்பு அவிசை நெய்யுடன் கலந்து ஓமம் செய்துபின் உயிர் ஆகுதி செய்ய வேண்டும்.

1367 .இயந்திரத்தில் அமைந்த சத்தி பொன்போன்றவள் பரபரப்பு இல்லாது சிக்கெனப் பிடித்துக் கொள்வாயாக. தியானிக்கத் தொடங்கிய நாளிலே இன்பம் உண்டாகும். வேள்வியின் தலைவனான நான்முகன் சேர்த்தபின் நேயப் பொருளை சிவத்துடன் நன்கு சேர்தலுமாகும்.

1368. அரைக்கப்பட்ட குங்குமச் சாந்து, குங்குமப்பூ, கத்தூரி மணம் எங்கும் பரவும் பல நறுமணங்களின் கூட்டு சவ்வாது புனுகு நெய் பச்சைக் கர்பூரம் பசுவின் கோரோசன்ம் பனிநீர் என்ற ஒன்பது பொருள்களையும் சேர்த்து சக்கரத்திற்குச் சார்த்துவயாக.

1369. சத்தியுடன் உள்ளத்தை வைக்கும் தவத்தை செய்தால் உள்ளே எழும் முதிராத இளங் கொங்கைகளை உடைய வாலைப் பெண்ணைப் பொருந்தி நவாக்கரியாக இருக்கும் இம்மந்திரத்தை ஆயிரக்கணக்கில் உருவகம் செய்க.

1370. உள்ளத்தே இருக்கும் ஒளிவடிவான் தாயும் தந்தையுமான நவாக்கரி தேவிக்கு கைகள் ஆறு. மழு, சூலம், தோட்டி, பாசம், வில், அம்பும், என்பவைகளுடன் கிலீம் பீசத்தை உடைய் தேவி வழிபடுபவர் முன்னாள் வெளிப்படுவாள்.

1371. அம்மையைச் சூழ யோகினி சத்திக/ள் அறுபத்து நால்வர் இருப்பர்.. வாமை, சேட்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரதமனி, சர்வபூததமனி எனும் எட்டு பேரின் இருகைகளிலும் வில்லும் அம்பும் கொண்டு இருப்பர். யோகினி சத்திகள் சக்கரத்தை நோக்கியபடி சுற்”றிலும் இருப்பர்.

1372. பொன்னால் ஆன காதணி, முடி ஆடை முதலானவற்றுடன் காணப்படுவது திருவுருவம். இம்மூர்த்தம் அக்கினியை மேனியாய் கொ?ண்டது. பழமையாகவே தன் பேரொளியை இருப்பிடமாகக் கொண்டு இருப்பவள்.

1373. இதை அறிந்து மனதுள் ஒப்பில்லாத சத்தியை தரிசித்தால் நீக்கமில்லாமல் நிறைந்து அருள்வாள். பின் எங்கும் கலந்துள்ள நாதமும் ஒளியும் ஆன பிரணவம் தோன்றும். உடம்பைத் தாண்டி கீழ் நோக்கி சகசிரத்தளம் இருக்க அருள்வாள்.

1374. பேரொளிவடிவான சத்தி உண்மையை அளிக்கும் தத்துவ ஞானத்தை அடியவரின் குரு மண்டத்திலிருந்து விளங்கச் செய்வாள். அவரிடம் இறைமைக் குணங்கள் இருக்குமாறு இருந்து கருவின் வழி பிறக்கும் செயலைப் போக்கி பெரிய வீட்டு நெறியை அருள்வாள்.

1375. பேரொளி பெருஞ்சுடராய் மேலான ஒளியாகி இருக்கும் தலைவி சூரிய ஓளி போன்ற கன்னியாய் பொன் நிறத்துடன்பூமி தத்துவத்தில் ஒளீயாய் எங்கும் பரந்து நின்றாள்.

1376. சத்தி மேலே தூக்கிய கைகளீல் தாமரை மலரும் குமுத மலரும் கொண்டு இருப்பாள். அபய வரதமான இரண்டு கைகளும் கொய்யும் தளிர்போன்ற அழகுடனும் தனங்கள் முத்தும் பவள்மும் நிறையப் பெற்று நல்ல மணி பொதிந்த ஆடையுடன் இருப்பாள்.

1377. சத்தி மாணிக்கம் பதித்த முடி தலையிலும் சிவப்பு என்ற அணி பாதத்திலும் அணீந்து அருள் வழங்குபவளும் அவளே. புலன்களீன் வழி போகாது அடக்கியவர் மனத்தில் அருள்மயமாய் அவள் எழுந்தருளியிருப்பாள்.

1378. நவாக்கரி சக்கரத்தை சூழ்ந்து பரந்து உள்முகமாய் பரவியுள்ள அறுபது சத்திகளும் எட்டுக் கன்னியரும் சூழ்ந்து நிற்க இரண்டு கைகளிலும் பூக்களைத் தாங்கிச் சிறந்தவர்கள் வணங்கும் ஸ்ரீம் பீசத்திற்குகுரிய செல்லமாக இருப்பாள்.

1379. செல்வமான சத்தியை தியானித்து உள்ளம் வெலியே ஓடாமல் அடங்கி நிற்குமாயின் ஓராண்டில் ஆசைப் பளுவான சுமை நீங்கி திருவருளால் எண்ணியவை கைகூடும். சிவசூரியனிடம் பொருந்தும் செய்ல் நடக்கும்.

1380. பொருந்திய மூலாதாரத்தில் எழுந்த முழு மலராகிய நான்கு இதழ் தாமரையிலிருந்து மேலே பேரொளி பிழம்பான சகசிர தளத்தில் முன் கூறிய சத்தி பரவியுள்ள முழுமைப் பொருளாய் இருந்தபின் மூலம் முதல் துவாத சாந்தம் வரை ஒளிமண்டலம் ஆகிடும்.

1381. இந்த சோதி மண்டலத்துள் சத்தி விரும்பி எழுந்தருளியிருப்பாள். உயிரும் மெய்யும் ஆகிய ஐம்பத்தோர் எழுத்தும் விந்து எழுத்து ஐந்தும் ஆகிய ஐம்பத்தாறு எழுத்துக்களையும் இயக்கும் திறம் உடைய்வ்ள். ஐம்பத்தாறு எழுத்துக்களை இயக்கும் ஐம்பத்தைந்து இயக்கிகள் சூழ நடுவே வீற்றிருப்பாள்.

1382. அம்மையை அருட்கண்ணால் பார்ப்பவர்க்கு முடியிலிருந்து அடிவரை பேரொளி பிழம்பாய் இருப்பாள். அவள் திருமேனி முத்துப் போன்ற வெண்மையாய் இருக்கும். அழகிய கைகள் நான்கில் மஞ்சள் வரையுடைய பைங்கிளியும் ஞான முத்திரையுமாக மேல் ஏந்திய கைகளில் பாசமும் அங்குசமும் கொண்டு இருப்பாள்.

1383. நாதமான ஞான முத்திரையை உணர்ந்து பாசமாகிய வேரை அறுத்து அன்புடன் மனத்தில் சத்தியைத் துதித்தபடி இருந்தால் ஐந்து ஆண்டில் கேடு தருவன எல்லாம் அகன்று மண்ணுலகத்திற்கு மேல் அமர்ந்துள்ள சிவமாகலாம்.

1384. நெற்றிக் கண்ணையுடைய சத்தியின் அருளைப் பெறும் வழியாகி தடையில்லாத நாத தரிசனம் தனக்குள் அமையுமானால் வான் மண்டலத்தில் உள்ள பேரொளி விளங்க ஹிரிங்காரப் பீசத்திற்குரிய சத்தி மண்டலம் அமையும்.

1385. ஹிரீங்க மண்டலத்துள் எழும் பேரொளியைக் கண்டு மனத்தில் நினைத்தால் அது கீழிருந்து மேலே பிளந்து கொண்டு உள்ளே எழும். வீணாத் தண்டில் பொருந்திய யாவற்றையும் தாங்க முடியும்.

1386. கொப்பூழ் தாமரையினுள் ஓங்கி மேலே எழும் பிரணவத்திற்கு உண்ர்வாய் இருப்பவள். வருத்தமுற வரும் பிறவியை எண்ணி நீக்கிட அடங்கியிருந்த நாதம் வலிமையுடன் மேல் ஓங்கி எழுந்து இருக்கும்.

1387. நல்ல மணிகளை அணியாக உடைய வாகீசுவரியும் பொன் முடியும் பொன் ஆடையும் பூண்ட திருமகளும் ஆற்றலை அளித்தருளும் வெண்ணிற ஒளியில் இருக்கும் கலைமகளும் உயிர்களின் தலைவியான மனோன்மணி சகசிர தளத்தில் எழுந்தருளியுள்ளாள்.

1388. சத்தியை வழிபடும் முன்பாக இடைகலை பிங்கலையால் வெளியே போய் பொருளை அளந்த வகையில் சத்தியை வழிபட்டபின் வெண்ணிற அமுத கலசங்களாகப் பொன்னம்பலத்தைத் தரிசிக்க வழியாதலை அறிந்து அங்கு இருந்தவர் தத்துவங்களை இய்க்கிக் கொண்டிருக்கும் சத்தியை காண் வல்லவர் ஆவார்.

1389. காரணிகளான எழுத்து சத்திகள் ஐம்பத்திரண்டு காரணியாக அவற்றை இயக்கும் கன்னிகள் ஐம்பத்து இருவர். காரணி இருக்கும் பொன்னம்பலத்தில் வெளிப்பட்டும் மற்ற தத்துவங்களில் மறைந்தும் இருந்து தன் அறிளால் வழிபடுவோர்க்கு வெளிப்பட்டு அருள்வாள்.

1390. எல்லாவற்றிற்கும் காரணியாய் இருக்கும் இச்சத்தி சகசிர தளத்தில் நிலை பெற்றிருக்க கண்டு ஓராண்டு பயிற்சி செய்தால் உன்னை விட்டு அகலாமல் இருப்பாள். மேற்கொள்ளும் விரதம் குறையாமல் இரும்பின் பரமாகாயத்தில் இருக்கும் சிவகதிரவனைக் காண்லாம்.

1391. அன்பர்களீன் சித்தம் உலகப் பொருளுடன் இருந்தால் சத்தி இதயத் தாமரையிலிருப்பாள். உலகப் பொருளுடன் இல்லாது உலகக் காரணமான விந்து நாத சித்தம் ஆனபோது சிவனையும் உடம்பையும் பிறவியில் பொருந்தியிருக்கும் வாயுவின் கட்டினை நீக்கி உள்ளத்தில் இன்பம் பெருக்குவாள்.

1392. சத்தி தன் எட்டு கரங்களிலும் மலர்ந்த பூ, கிளி, பாசம், மழு, வாள், கேடயம், வில், அம்பு ,ஆகியவற்றைத் தாங்கி ஆரவாரத்துடன் கூத்தையும் விரும்பி நடித்தனள்.

1393. சத்தி பொன் முடியையும் முத்து மாலையையும் விரும்புவள். பவழ மாலையையும் செம்பட்டு உடையையும் உடுத்துபவள். அண்ணாந்து ஏந்திய அழகிய முலையில் கச்சினை அணிந்தவள். அரிய உயிர் இன்பம் அடைந்து உய்ய மலர்ந்த முகத்துடன் இருப்பவள்.அவள் மேனி பரிய நிறமானது.

1394. ப்ச்சை நிறம் கொண்ட இவள் சத்திகள் நாற்பத்தெட்டு. மழலை பேசும் தோழியர் எட்டு எப்போதும் உடன் இருப்பவர்கள் ஆவர். கச்சு அணிந்த கொங்கைகளுடன் இரண்டு பக்கமும் காவல் உடையவளாக மெலிந்த இடையை உடையவளாய் இனிது வீற்றியிருப்பாள்.

1395. மூலத்தில் தாங்கிய பேரொளி வடிவான சத்தியை சுழுமுனை வழி கலந்து கொள் என விருப்பம் ஆக மூலாதார வாயுவை மேலே செலுத்தி தீ காதலனைக் கூடப்போகும் காதலியைப் போல் வான் வெளிக்குச் செல்லுக.

1396. கொப்பூழுக்கும் இதய்த்திற்கும் இடையில் உள்ள சூரியன் க்ண்ணில் இருக்கும் சந்திரனுடன் சேர்வதால் நத சத்தி இருக்கும் ஞானச் சூரியன் ஆனது. அத்வே சந்திர மண்டலத்தின் விரிவாகும்.

1397. விழிக்கு மேல் இருக்கும் சத்திக்கு பத்து திசைகளும் பத்து முகங்கள் ஆகும். தாபத்தை உண்டாக்கும் சூரியன் தன் நிலையை விட்டு சந்திர மண்டலத்தில் மெல்ல அடங்கி வருவதால் ஆபத்தைச் செய்யும் பத்து நாடிக”ள் கீழும் மேலும் செல்வதை விட்டு அடங்கும். .வழிபடுவர்களின் பாசத்தை அறுக்க சூலத்தை பயன் படுத்தினாள்.

1398. சூலப்படை, தண்டு, வாள், பறை, ஒளி தரவல்ல ஞான வடிவான வேல், அம்பு, உடுக்கை, கிளி, வில்தாங்கி, காலம், பூ, பாசம். மழு, கத்தி ஆகியவற்றைக் கைகளில் தாங்கி அழகிய சங்கு அபயம் வரதங்களுடன் இருக்கும் கைகளை நினைத்து துதிப்பாயாக.

1399. வழி பட்டோர் எண்ணத்தில் விரும்பி அமரும் சத்திகள் நாற்பத்து நால்வருடன் உள்ளத்தில் அமர்கின்ற தோழியர் நாற்பத்து நால்வர். எண்ணம் உருப்பெரும் சகசிரதளத்தில் இருந்தவள் உலக எண்ணங்களைக் கடந்தபோது அவள் நின்றாள்.

1400 கடந்து நின்றவள் பொன் முடியுடன் மணி முத்து பவளம் சேர்ந்து செய்யப் பட்ட கச்சினை அணிந்து ப்ரந்த இடுப்பில் பட்டாடை உடுத்தி சிலம்பை அணிந்து வாலை வடிவில் வீற்றிருப்பாள்.

1401. சத்தி த்டையேதுமில்லா மேருவாகவும் அணீமா முதலிய சத்தியாகி பழைய சாத்திர அறிவை அகற்றி பேரொளியைப் பொருந்தி உணர்ந்தார்க்கு உண்மை அறிவு ஊண்டாகும்.

1402. கீழ் நோக்கிய சகசிரதளத்தில் காணப்படுபவளே சதாசிவ நாயகியான மனோன்மணி. அவள் சதாசிவரைப் போலவே முகம் ஐந்தும் கைக்ள் பத்தும் உடையவள்.

1403. நல்ல மணி சூலம், கபாலம், கிளி பல மணிகளையுடைய பாம்பு, மழு, கத்தி ஆகியவற்றுடன் இருப்பாள். மாணிக்கம் போன்ற தாமரை, உடுக்கையும் உண்டு. பொன்னாலும் மணியாலும் அவள் அலங்கரிக்கப் பட்டவள்.

1404. தன்னை வழிபடுகின்ற் சத்திகள் நாற்பதின்மர் சூழ நேசத்தையுடைய பராசத்தி நாற்பது கன்னியர்க்கு நேராக உடம்பில் உள்ள சகசிர தளத்தில் கலந்தவள். குற்றம் ஏதும் வராதபடி மகிழ்வுடன் இருந்தாள்.

1405. பிரண்வத்துள் இருக்கும் பேரொளியைச் சுமையான உடலில் இருந்து உடலில் கடந்து எழுந்திட அதையே தனக்கு ஆதாரம் என உணர்ந்து அதை எண்ணி மனோலயம் பெறுபவர்க்கு ம்ண்ணின்று நீரைப் பருகி எழுகின்ற மேகம்போல் பராசத்தி தலையில் வெளிப்படுவாள்.

1406. சுவதிட்டான சக்கரத்தில் நிலை கொண்ட அ கார உ காரங்கள் சகசிர தளத்தில் சிவயநம என அகக் கண்ணுக்கு புலனாகும்படி விந்து நாதங்களாய் வெளிப்படும். காண அரியது அன்று. நாதம் எழுந்தது பயிற்சியாளருக்கு காட்சி தந்து திருவடியில் வைத்துக் கொள்வதற்கே ஆகும்.

1407. சந்திரக்கலையிடை விளங்கிய அமுதத்தை ஏந்திய கொங்கையையுடைய பராசத்தி அக்கினிக் கண்டத்தில் இடைகலை பிங்கலையால் சுவாதிட்டானத்தில் செய்ல்படும் சுக்கில சுரோணிதத்தைக் கொண்டு அமுதமயமாக மேலே இருந்தாள்.

1408. நீல மலரும் முத்தும் கலந்த குளிர்ச்சியுடைய ஒளியில் ஆனந்தமயமாக இருக்கும் அழிவில்லாத சத்தி அமுதம் போன்ற அழகான மேனியுடன் வெண்ணிற ஒளியாக வெளிப்படு அருள்வாள்.

1409. அழிவு இல்லாத முப்பத்தாறு சத்திகளும் நாடுதற்கு அரிய முப்பத்தாறு தோழியாரும் சக்கரத்தை இல்லமாகக் கொண்டவர்கள் சக்கரத்தின் இதழ்களில் குடியிருந்து இவர்கள் காலவரையைக் கடந்து நின்ற அம்மையைச் சூழ நின்றனர்.

1410. புத்தி தத்துவத்தில் சிவம் நாதமாக நிறைந்து நின்றது. அதன் ஒளியான சோதி உள்ளத்தினின்று நீங்காது இருக்கும். ஓராண்டு சாதனை கூடிவரும்போது முன்பு கூறிய ஒள் காரம் விளங்கியது.

1411. வானில் நிலைபெற்ற அண்டங்களுள் வாழும் உயிர்கள் யாவும் மண் உலகில் வாழ்கின்ற உயிர்களைப் போல் பயிற்சியாளரை வணங்கும். திருமாலைப் போன்று பெறும் இன்பங்களைப் பற்றித் துனபம் தரும் நோய் நிறைந்ததை இங்கிருந்து சொல்ல முடியாது..

1412. மூலாதாரத்தில் கீழ் நோக்கும் முகமாய் இருந்த குண்டலினி சத்தி உ காரத்தை பொருத்தி இடை நாடியில் இருந்து எழும் ஒளியாய் சகசிரதளத்தில் நிலைபெற்று எண்ணங்களை எல்லாம் நிறைவு செய்யும் கற்பக மரம் போல் ஆனாள். அவளே எல்லா சித்திகளையும் அளிக்கும் இலக்குமி ஆவாள்.

1413. பொற் கொடி போன்ற பராசத்தியை வழிபட்டால் செருக்கைத் தரும் அகங்காரம் நீங்கி நிலையான பெருவெளியில் பரமகாயத்தில் பின்னிய கொடி போல இருக்கும் சத்தியைக் காணலாம்.

1414. பராசத்திக்கு எல்லா உயிர்களையும் பேணும் பெண்மையே அழகாகும். சிவமே தந்தையாகும். மாதரசியானவளுக்கு மண்ணுலகம் சிறிய திலகமாய் பல சத்திகள் சூழ மேலே குவிந்த இடத்தில் இருப்பாள்.

1415. சத்திகள் முப்பதிருவர் இருந்தனர். கன்னியான முப்பத்திருவரும் சூழப்பரவிய இதழ்களை உடைய சகசிர தளத்தில் கண்கின்ற பல் இடங்களையும் தனக்கு இடமாக்கிக் கொண்டு எழுந்தருளியிருந்தாள்.

1416. நவக்கரி சக்கரத்தில் உள்ள சத்திகள் கூத்தப் பெருமானின் ஒளியைக் கண்டு ஊர்த்துவ சகசிரதளத்தில் இருப்பர். பெருமானும் சத்திக்ளும் உலகத்திற்கு கரணமாவார்கள். இவர்களை பழைமையான வேதம் அறிந்து கொள்ளத் தேடும். சிவசத்தி என் உடலிலும் மனத்திலும் பொருந்தி என்னை ஆட்கொண்டாள்.

1417. சிவ ச்த்திகள் தாமே வீடாய் அமைந்து ஆளப் பெற்றால் அவர்களுக்கு இல்லாதது ஏதுமில்லை. இந்த தனமையுடையவர் அயலாரிடம் சென்று இருப்பதில்லை. அவர்களுக்கு தேவர்களும் நிகராக மாட்டார். சிவசி=க்தி இவர்களின் ஆன்மாவை இடமாகக் கொண்டுள்ளதால் இவர்கள் இல்லாத இடமே இல்லை.

1418. தத்துவங்களுக்கு மன்னான ஆன்மா அறுபத்து நானகு தறிகளால் கட்டப்பட்டது. ஆன்மாவான பிரணவம் அறுபத்து நான்கு ஒளிக்கதிர்கலால் ஆனது. ஆன்மா அறுபத்து நான்கு கலைகளில் இருக்கும். பிரண்வத்தின் விந்து நாதமான சீவனும் சிவனும் உள்ளனர்.

#####

Read 5422 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27037887
All
27037887
Your IP: 52.14.221.113
2024-04-19 02:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg