gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#####

சூக்கும பஞ்சாக்கரம்!

2709. எம்பெருமானான சிவனை எள்ளி நகையாடி அவனது இயல்பைப் பற்றி வாதிடுபவர் அறியாதவர் ஆவார். அப்படியின்றி அப்பொருமானை ஒளிமயமாய் நினைந்து உருகும் மனம் உடையவராய் அவனே ஒளியாய் வெளிப்படுவான் என்று எண்ணிச் சிவயநம என்று ஓதுங்கள். அப்போது இரசவாதிகள் குளிகையையிட்டுச் செம்பை பொன் ஆக்குவதைப் போல் அவன் மலக் குற்றத்துடன்கூடிய உடலைப் பொன்னொளி பெறச் செய்வான்.

2710. சிவயநம் என்னும் ஐந்தெழுத்தில் முறையே சிவன் சத்தி சீவன் அடுகின்ற மலம் மாயை என்பன உள்ளன, அதைச் செபித்தால் துன்பத்தைத் தரும் ஆணவம் கன்மம் மாயை மாயேயம் திரோதாயி என்னும் ஐந்து மலங்களும் நீங்கச் சிகர வகரத்தால் உணர்த்தப்படும் சிவன் சத்தியுடன் ய ஆகிய சீவன் பொருந்தத் துன்பத்தை தரும் பாசம் சீவனைப் பற்றாமல் அகலும்.

2711. சிவசத்தியின் சிவயநம என்ற ஐந்தெழுத்தானது சிவன் சத்தி ஆன்மா திரோதாயி மாயா மலம் என விளங்கும் சீவன் சிகாரத்தை முதலாக ஓதும் முறையில் வினைகளை நீங்குதலுடன் பிறப்பு நீங்கிப் பரசிவனாகும்.

2712. சிவயநம என்று எண்ணுவதில் நம என்பதால் குறிக்கப்படும் மலமான இருள் அகன்று ஆதி சத்தியான குண்டலினி சத்தியை விட்டுச் சித்சத்தியாய் ஒளிமயமாய்ப் பிரகாசிப்பதில் தீமை இல்லாத சிவஞானயோகம் கைகூடும். அப்போது சிவய என்ற ஒளியை வழிபடுங்கள். இதுவே மலம் நீங்கிய உண்மை நிலையாகும்,

2713. நகரம் முதல் முறையாகவுடைய சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆஞ்ஞை ஆகிய ஆதாரங்களில் நனவு முதலிய நிலைகளில் தொழிற்படும் உணர்வு மறைப்பும் சத்தியால் இயங்கிச் சீவரின் ஆதிசத்தியினது நிலையான ஒளியில் பொருந்த நனவாதி நிலைகளில் பொருந்திய உண்ர்வு முடிவடையும். முடிவடைந்து சுத்த வித்தியா தத்துவம் தலையின்மீது விளங்கித் துரிய நிலையைத் தம்மிடம் பெற்று மூலாதாரம் முதல் பேரொளியாக விளங்குவதில் சமாதியுற்றுச் சிவயநம் என நினைப்பதில் சிவமாவர்.

2714. அருளின் வேறுபட்டவையான சத்திக் கூட்டமும் அத்தனாகிய சிவமும் கலப்பதில் ஆன்மாவை உடலுடன் பொருந்தும்படி செய்தவர் ஆவார். அந்த உடல் மாயையில் தங்கும் ஆயின் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் விலகச் சிவய என்று ஒளி உருவாக வழிபாடு செய்யுங்கள். அப்போது நீங்குதற்குரிய வினைக் கூட்டங்களைப் போக்குவது சிவய எனபதாகும்.

2715. வாய் பேசாத மௌனிகளும் சிவசிவ என்று எண்ணுவதில் உள்ள நன்மையை அறிகிலர். சிவசிவ என்று எண்ணுவதுடன் மூச்சின் கதியும் இயங்காமல் இலயம் அடையும். அடையச் சிவமும் சத்தியும் ஆகிய மகாமனுவைத் தெளிந்தவர்கள் திருவருள் பெற்றுச் சிவசத்தியாகவே அமைவர்.

2716. முறபிறவியில் செய்த தீவினையின் கரணமே சிவசிவ என்று ஓதாமல் இருக்கின்றனர். எத்தகைய தீவினையளரும் சிவசிவ எனச் சொல்வாராயின் தீய வினைகள் யாவும் கெட்டுப் போகும். மேலும் அவர்கள் தேவவுடல் பெற்று விளங்குவர். சிவசிவ என்று கணிப்பதால் சிவகதி உணடாகும்.

2717. சிவயநம என்ற ஐந்தெழுத்தை உச்சரிக்கும் முறையில் நம என்ற எழுத்துக்களை நாவுள் கழுத்த்ப் பகுதியில் நிறுத்திச் சிவ என்ற திருப்பெயரை தலையின்மீது மனமண்டலத்தில் நினைக்கப் பாவம் நீங்கும் தனமையும் அதுவாகும். அதனால் அஞ்ஞானம் நீங்கும் பிறவியும் நீங்கும்.

#####

அதி சூக்கும பஞ்சாக்கரம்!

2718. சிவயநம என்று உள்ளத்தி வெளியே சொல்லாது அந்நிலையதாக்கி மலத்தால் ஆன துன்பத்தை நீக்கிச் சிவத்துக்கு அடிமையாக்கிச் சிவய சிவசிவ என்று பலமுறை சித்தத்தில் எண்ணின் அச்சம் நீங்க் ஆனந்தம் உண்டாகும்.

2719. மிக நுண்மையான ஐந்தெழுத்துத் தரிசனத்தால் மூலாதாரத்தில் உள்ள அக்கினி கதிர மண்டலாத்தைப் பேதித்துச் சென்று தோளுக்குமேல் விளங்கும் சந்திரன் மண்டல ஒளியில் ஐயறிவுகளும் பொருந்தும் முறையில் சென்று யோக நித்திரையில் பொருந்தியிருக்கும் அவன் உலகை மறந்திருக்கும் அச்சமயத்தில் சிவத்தை நெஞ்சிடம் எனக் கொண்டு பிரியாமல் இருக்கும் நிலையைப் அடையலாம்.

2720. வேதம் ஆகமம் வேதாங்கம் என்பனவற்றை முறையாக ஓதினாலும் அவை எல்லாம் சிவபெருமான் எழுத்து ஒன்றான சி காரத்தில் இருப்பவையாகும். ஐயம் நீங்கி அவ்வெழுத்தின் உண்மையினை உணர்ந்து சாதனை செய்தால் அதுவே முத்திக் கரையை அடைவதற்குரிய அரிய தோணியாகும்.

2721. பழைய மறையில் சிரசில் உள்ள ஐந்தெழுத்துக்களான கனி முதிர்ந்து கிடக்கின்றது. ஆனால் அக்கனியை உண்பதற்கு அதனைச் சிந்தித்து அறிநெறியில் கொள்ளும் செயல் அறிபவர் இலர். மூடர்கள் அதன் பெருமையை அரியாமல் அஃது எழுத்துக்களானவைதானே என்று கூறுவர். அஃது அவர் தலையெழுத்தை மாற்றிப் படைக்கும் எழுத்து என்பதை அறியார்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:09

தூல பஞ்சாக்கரம்!

Written by

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

தூல பஞ்சாக்கரம்!

2698. ஐம்பது எழுத்துக்களால் வேதங்கள் எல்லாம் கூறப்பெற்றுள்ளன. அப்படியே எல்லா ஆகமங்களும் ஐம்பது எழுத்துக்களால் கூறப் பெற்றுள்ளன. ஐம்பது எழுத்துக்களும் உடலுள் பொருந்தியிருக்கும் முறையை அறிந்தால் ஐம்பது எழுதோசையால் அடையக்கூடியதை நமசிவய என்ற ஐந்து எழுத்தால் அடையலாம்.

2699. எழுத்துக்கள் அ முதலாக ஐம்பத்தோர் எழுத்துக்களாகி உ காரம் முதலாக நிலைபெற்று நின்று மகரத்தால் இறுதி அடைந்து தேய்ந்து தேய்ந்து மேல் போய் நகாரத்தை முதலாக உடைய நந்தியின் பெயர் நமசிவய என்பதாகும்.

2700 அ முதலான உயிர் எழுத்துக்கள் பதினாறுடன் கலந்த பரை என்ற சிவசத்தியுடன் பரையில் பிரிந்து மற்ற மெய்யெழுத்து முப்பத்தைந்தையும் இயக்கும் பிராமி முதலிய எட்டு சத்தியுடன் கலந்து ஒளியாய்த் திகழும் சிவம் அதனது கைவசமாம் கண்ட சிவயநம என்ற மகாமந்திர அங்குசமாகும். இதை அறிந்தவர்க்கு வேதம் கூறும் ந முதலிய நமசிவய என்ற உணர்வு மூலாதாரம் முதல் உடலிலே பொருந்தும்.

2701. வாயால் கூறப்படும் இறைவனின் ஐந்து எழுத்தான சிவயநம என்பது வாய், கழுத்து இதயம் உந்தியுடன் இலிங்கம் என்ற ஐந்து இடங்க்ளிலும் பொருந்தி மேலிருந்து வான் மயமாய் படர்ந்து மூலாதாரத்தை அடைந்து முதுகுத்தண்டின் வழியாய் நேரே வான் வீதியான உச்சியில் உள்ள சகசிரதளத்தை அடைந்து முடிவதில் நமசிவய என்ற பேரொளி வடிவம் மேற்கூறிய ஐந்து இடங்களிலிருந்து எழும்.

2702. ஏழு நிறக் கதிர்களும் தலையின்மீது ஒளிமயமாக விளங்கிக் கருவிகளை விட்டு யோகியின் உயிர் தலைக்குமேல் போகும் போதும் இயல்பாக இறப்பு வந்து கருவிகளை விட்டு உயிர் பிரியும் போத்ம் பாதுகாவலாய்த் துணை செய்வது ஐந்தெழுத்தாகும்.

2703. கதிரவனும் சந்திரனும் மிக்கு மேல் எழும்போது அழகுடைய ஒளியாய் விளங்கும் மந்திரத்தை எவரும் அறிய்வில்லை. செம்மை நிறமுடைய குண்டலினி அம்மைக்குரிய ஐந்தெழுத்தை வாய்க்குள் மென்மையாக உச்சரித்தல் கூடும்.

2704. தெளிந்த அமுதமயமான ஒளி உண்டாகச் சிவயநம் என உள்ளே ஒளிபெற ஒருமுறை எண்ணுங்கள். இவ்வாறு வெள்ளம்போல் பெருகி வரும் சீவ ஒளியை விரும்பிப் பெறாதவர் துல்லிய நீர் மீண்டும் நீரிலேயே விழுந்து கெடுவதுபோல பிறவிச் சக்கரத்தில் மீண்டும் வந்து விழுவர்.

2705. ஒளி நெறியின் இயல்பை உணர்ந்து நின்று பிறவிக்குக் காரணமான வினைகளை ஒழிக்க அப்பிறவி வரும் வழியைத் தடை செய்யும் திறன் உடையவர்க்கு அருள் நெறியைக் காட்டுவது ஐந்தெழுத்தகும்.

2706. உள்ளம் தடுமாற்றத்தை அடையும்படி தீவினையால் ஏற்படும் துயரம் வந்தபோது உன்னிடம் பொருந்தியுள்ள சிவத்தை ஒளிரச் செய்ய ஐந்தெழுத்தை ஓதுக. உன் விருப்பத்தை அறிந்து ஒலிக்கின்ற திருவடியால் உனக்கு உறுதுணையாக இருப்பதை உணர்த்துவான்,. இத்தகைய் குறிப்பை அறிபவரது தவம் சிவ வடிவத்தை உருவாக்கும்.

2707. நாள் தோறும் உறங்குவதற்ம் திருவைந்தெழுத்தை நினைத்து தம் தொண்டை வழியாகப் பிரமரந்திரம் போகும் மேல்முகமான கதியை எழுப்பிச் சிவனது திருவடியில் அடைக்கலம் புகுவதாக எண்ணியிருப்பின் பனிப்படலம் போன்ற வெண்மையான சகசிரதளத்தில் விளங்கும் அஞ்செழுத்தில் விளங்கும் சிவபெருமானின் அருளைப் பெறலாம்.

2708.பரவியுள்ள பூமித்தத்துவம் முழுவதும் கீழோடு எல்லாவற்றையும் தாங்கும் குண்டலியான பம்பை உள்ளும் புறமுமாய் இயக்குபவனே சிவன். அத்தகைய இ/றைவன் அருளீய ஐந்தெழுத்தின் பெருமையை உண்ராமல் ஞானச் செல்வம் பெறாத ஏழை மக்கள் அவர்களிடம் பொருந்திய அஞ்ஞானமான இருளை அகற்ற முடியாது.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:08

ஓளி!

Written by

ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####

ஓளி!

2681. ஆன்ம ஒளியை அறிந்து நின்றால் உருவமான உடல் நினைவு மறைந்து போகும். மறைந்து போகும் உடல் நினைவு இருக்குமானால் மீண்டும் பிறப்பு வரும். ஆனம ஒளியில் உள்ளம் உணரின் ஒளிமயமாகத் தோன்றும். ஒளியில் தோய்ந்து நிற்க அந்த ஒளி உருகிச் சீவன் விளங்குவான்.

2682. ஆன்மப் பேரொளியை அறிந்து அதில் நிலைபெறும் ஆற்றல் உள்ளவர்க்கு உலகத்தில் உள்ள எட்டுத்திசைகளிலும் தங்கு தடை இல்லாமல் போகும் ஆற்றால் கைவரப்பெறும். அன்னாரின் உள்ளத்தில் அகண்ட ஒளி பரவும். அந்த ஒளி வெளி இருளையும் மாற்ற வல்லது. அது சகசிரதளத் தாமரையில் விளங்கிக் கதிரவன் போன்ற ஒளியைச் செய்யும். மாறான மல இருளைப் போக்கி ஒளியைத் தந்து எம் பெருமான் அவ்விடத்தே பொருந்தி நின்றான்.

2683. பேரொளி மயமான சிவன் ஆனமாவில் விளாங்க ஒளிமயமான அக்கினியும் விரிந்த கதிர்களையுடைய சூரியனும் சந்திரனும் வளம் உடைய ஒளிகளாய் ஆன்மாவில் ஒளிர்ந்தன. வளமை உடைய ஒளிமயமான ஆன்மா அடைந்தது என்ன என்றால் பேரொளியான சிவன் ஆன்மாவை இடமாய்க் கொண்டு கலந்து விளங்கியதே காரணம்.

2684. விளங்கும் ஒளியையே திருமேனியாகக் உடைய சிவன் ஒரு போதும் பிறவி எடுக்காதவன். விளங்கும் ஒளியையுடைய சூரியனும் சந்திரனும் அவனுடைய க்ண்கள். வளம் மிக்க ஞான ஒளியை வீசுவதான அக்கினியும் அவனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் ஆகும். இப்படி விளக்கமான ஒளியைத் தரும் மூன்றும் ஞானியர் உடலில் அமையும்.

2685. தலையின்மேல் உள்ள வானம் ஒளிமயமானது. அதன் கீழ் உள்ள காற்று ஒளிமயமானது. பால் உணர்ச்சியை தரும் மூலாக்கினி கீழே இருக்கின்ற வானத்தில் பரந்த ஒளியாக உள்ளது. நீரை முகமாக உடைய அபானனை நீண்டு உணர்ந்து போகும் வீணாத்தண்டின் ஊடே சுழுமுனைக்குச் செலுத்தினால் மேலான நிலஒளி நீர் ஒளி நெருப்பொளி தீயான காற்றொளி வான் ஒளி என்னும் ஐந்தும் ஒரே ஒளிமயமாய்த் திகழும்.

2686. மின்னலைப் போன்ற தூய ஒளி மாட்சிமையுடைய செந்நிற ஒளி வேதங்களால் புகழ்ந்து பேசப்படும் ஆன்மாவின் ஒளி ஆறு ஆதாரங்களில் பொருந்திய ஒளி என்னும் இவற்றை தூய மொழியான சிற்சத்தி நாள்தோறும் சீவனின் விருப்பத்துக்கு ஏற்றவாறு ஒரே பேரொளியாய் அமைத்துத்தருவாள்.

2687. விளங்கும் ஒளி மின்னல் ஒளிபோல் ஆன்மாவில் மறைந்து ஒளிர்கின்ற ஒளியான ஈசனை இடைவிடாமல் சிந்தியுங்கள் அப்போது உள்ளத்தை இடமாகக் கொண்டவன் உடலில் விளங்கிப் பிராண சத்தியாய் வளத்தைத் தருபவனாய் எங்கும் பொருந்தி நின்று அருள் செய்வான்.

2688. விளங்கும் ஒளியான ஆன்மா தன் உண்மை அறியாது அறியாமையான இருளில் அழுந்தும், பிரகாசமான ஒளியுடைய சிவன் வழிபடுபவர்க்கு ஒளியைப் பெருக்கி விளங்குவான். உப்பு நீர் பாயும் வழியில் வெளிப்படுத்தும் நஞ்சை அமுதமாய் ஏற்றுப் பொருந்தும் சுழுத்தை இடமாகக் கொண்ட இறைவனின் இயல்பு அப்படி மாறச் செய்வதேயாகும்.

2689. இயல்பாய் பேரொளியாய் விளங்கியது எதுவோ அதுவே சிவம் ஆகும். சிவத்தின் சத்தியும் அங்ஙனமே ஒளிமயமாய்ச் சிவத்தின் விருப்பத்துக்கு ஏற்பச் செயலை செய்து முடிப்பாள். சத்தி ஆற்றலில் விளங்கும் நீங்கள் சூரியன் சந்திரன் அக்கினி என்ற மூன்றும் விரிந்த சுடராக விளங்கி மனத்தில் அவை ஒன்றாகி அந்த ஒளியில் சிவனும் உடன் நின்று அருள் செய்தான்.

2690. உள்ள மண்டலத்தில் விளங்கும் ஒளி எனது நுண்னுடலில் உள்ள சீவனேயாகும். அந்த ஒளிக்குள் ஒளியாய் விளங்கும் சீவனை விட்டு விலகாத மாணிக்கம் போன்ற பேரொளி மின்னல் ஒளிபோல் மின்னி வானத்தை அடைந்து அங்கு வளம் செய்யும் ஒளியாம் சீவ ஒளிக்கிரணச் சமூகத்துடன் கலந்து நின்றான்.

2691. விளங்கும் ஒளியுடைய விகிர்தனான சிவன் முன்பு மிக்க ஒளியுடன் கூடிய மாயையுள் வலிய இருள் பொருந்தாதபடி களங்கத்துடன் கூடிய இருளில் சிவன் நடிக்க விளங்கும் ஒளியிலே மன மண்டலத்தில் விளங்கி நின்றான்.

2692. ஞானப் பயிற்சியால் ஆதியான பரம் பொருளைத் தேவர் தலைவனான உருத்திர சோதியுடனும் தலையின் உச்சியில் விளங்கும் சகசிரதள மலரில் போய் அடைந்தவர் ஆன்மப் பேரொளியும் அண்டத்தில் அப்பால் உள்ள பேரொளி பிழம்பும் ஆவர். இம்முறையில் ஆதியான பரம் பொருள் சீவர்களை மாயையினின்று கடக்கச் செய்யும்.

2693. உலகுக்குக் காரணமானவன் ஒருவன் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லும் கொளகை உடையவர் உலகத்தில் உண்டு. ஆன்மாவுக்கு மேலான ஒன்று பழமையில் இல்லை. எனக் கூறுபவர்க்கு மேலான சிவகதி இருக்கக் கூடுமோ. அங்ஙனம் இருப்பதைக் கண்டதில்லை என்று கூறுபவருங்கூட அறிய வேண்டும் என்று எண்ணம் ஏற்படின் வான்மயமான தில்லையான மனமண்டலத்தில் விளக்கமான ஒளியாய் இறைவன் விளங்குவதைக் காணலாம்.

2694. சுடர் பொருந்துமாறு உயர்வான் ஒண்மையான ஒளிவடிவாய்ப் பயிற்சியாளனின் அக நோக்கத்தில் படர்ந்து விரிந்து சூரியன் போல் இறைவன் காட்சி தருவான். அந்த ஒளியால் அடர்ந்துள்ள மாயையின் இருளை வேறுபடுத்தினால் உடலுடன் கூடியிருந்து ஞானத்தால் பயிற்சியாளன் உலகைத் துறந்தவன் ஆவான்.

2695. ஒளியைத் தரும் பவளம் போன்ற மேனியை உடையவனும் அதன்மேல் வெண்னிற ஒளி படிந்தவனும் புவனம் போன்ற செம்பொன் நிறமுடைய ஆதிப் பிரானும் ஆன சிவன் மூலாதாரத்திலிருந்து க்ளிப்பைத்தரும் பவள நிறத்தவனாக விளங்கிக் கரிய பாச இருளை அகன்று ஒளி பெற்ற பவள நிறம் உடையவனாய் என்னுடன் இருந்தான்.

2696 வான் மண்டலத்தில் இறைவன் இருந்தான். அங்கேயே தேவரும் இருந்தனர். அப்படியிருப்பினும் அவர்கள் ஒளியின்றி மக்களைப் பூமியை நோக்கிச் செலுத்துபவராய் இருக்கின்றனர். இருவினை ஒப்பு வரவே இறைவன் அருளால் பழைய வினையுடன் புதுவினையும் அடியோடு நீங்க மலர் பக்குவமானபோது வெளிப்படும் நறுமணம் போன்று சிவன் வியாபகம் அடைவான்.

2697. தேவர்கள் மக்களை உலக்த்தில் செலுத்துபவர் ஆயினும் தேவர்களுக்கும் தலைவனாய்ச் சிவன் உள்ளான். சீவர்களுக்கு முத்தியை அளித்துத் தன்னுடன் பொருந்துமாறு செய்பவன் அவன். அல்லாமல் வேறு எவரும் இல்லை. இந்தப் பெரிய உலகத்தில் அச்சிவமே வான் வடிவில் நிலைபெற்றுள்ளது. அப்போது சீவன் பரவாய் இருக்க எங்கும் பரவுதலும் கூடும்.


#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:06

பிரணவ சமாதி!

Written by

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

பிரணவ சமாதி!

2675. அ, உ, ம என்ற மூன்றால் ஆகியது ஓம். இது தூலப் பிரணவம். இது பருவுடலுக்கு இன்பத்தைத் தரும். மறைகளால் பாதுகாக்கப்பட்ட விந்து நாதமான நுண்மைப் பிரணவம் மேலான பராசத்தியின் வடிவம். களிப்பைத் தரும் நேரத்தில் செய்யப்படும் செயலே நுண்பிரணவத்துக்குக் காரணமாகும். இந்தச் சூக்கும பிரணவத்தை அறிவதே வேதாந்த நெறியாகும்.

2676. ஓம் என்ற பிரணவ மொழிக்குள்ளேயே உபதேசத்துக்குரிய ஒரு மொழி தோன்றும். அஃது உருவையும் அருளையும் தனக்குள் கொண்டது. அதில் பல வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய ஓம் என்னும் பிரணவத்தை அறிவதில் மேலான சித்தியும் முத்தியும் உண்டாகும்.

2677. அகண்டமான பிரணவத்துள் மண் முதலிய ஐந்து பூதங்கள் உண்டாயின. இதனின்றும் ஐந்து பூத மாற்றத்தால் அசையும் உயிர்களும் அசையாத உயிர்களும் உண்டாயின. பிரணவத்தைக் கடந்த அதிதீதத்தில் சகலர், பிரளயகலர், விஞ்ஜானகலர் என்னும் மூவகை உயிர் இனமும் உள்ளன. அதனால் பிரணவம் உயிர் வாழ்பவையான சீவர்களுக்கும் மற்ற ஆன்மாவின் தொகுதிக்கும் சிவனுக்கும் உரிய நிலையாகும்.

2678. அ, உ, ம, என்ற எழுத்துட்ன் கூடிய ஓங்கார இறுதியில் உள்ள நாதப் பிரமம் இன்ப வடிவனதும் வியாபகமானதுமாகும். அதனுடைய சுருங்கிய நிலையே சரமாகவும் அசரமாகவும் உலகில் உள்ளன. பெரியதான் உலகம் எல்லாம் நாதப் பிரமத்தின் படிவம் ஆகும். இந்த உண்மையை ஞானம் கைவரப்பெற்றவர் ஆறிவர்.

2679. மயக்கத்தையுடைய உள்ளத்தால் பிராணன் இயக்கம் நடைபெற்று உள்ளம் அலைவதாகும். மயக்கம் தெளிந்த நிலையில் ஞான குருவால் உணர்த்தப் பெறுவது ஒளி நெறியாகும். இதற்கு இடமும் கூட்டமும் தவமும் சீவர்களது சித்தம் ஆகும். இவ்வாறு சன்மார்க்க உபதேசத்தால் நன்மை ஏற்படும்.

2680. பதினாறு கலை பிராசாத நெறி கூறும் சன்மார்க்கத்தில் உள்ளவர்களுக்குத் தலையின் மேல் விளங்கும் துவாத சாந்தவெளியின் இறுதியும் பதினாறு கலைகளின் இறுதியுமான உன்மனையின் முடிவும் பிரணவமான வில்லையும் கடந்து மேல் சென்று ஞானநிலையில் நேயப் பொருள் முடிவில் இருக்க முடியும்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:04

ஞான குரு தரிசனம்!

Written by

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

#####

ஞான குரு தரிசனம்!

2656. முப்பத்தாறு தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கினால் சிவன் வெளிப்பட்டு ஆன்மாவைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும். அந்நிலை அமைந்த பின்பு மேலான சிவப்பேறு கிட்டப்பெறும். இதன் பயனாய் ஆன்மா உலக இன்பத்தை விட்டுச் சிவானந்தத்தில் நிளைத்துச் சிவபோகத்தை அடையும்.

2657. சீவ துரியம் பரதுரியம் சிவ துரியம் என்னும் மூன்றும் கடந்து விளங்கும் அறிவுப் பேரொளியான அரிய பரசிவம் யாவுமாய்ப் போக்கும் வரவும் இல்லாத இடத்தில் இருக்கும் பெருமை மிக்க குருபதத்தின் இயல்பைப் பேச முடியாது.

2658. தாய் போன்ற அருளை யுடைய நந்தியை என் மீது பெற்றேன். வாய் போன்ற கோபுர வாயிலில் விளங்கும் நந்தியை வாழ்வதற்கு வாயைப் பெற்றேன். உலகத்துக்கே பீசமாய் விளங்குகின்ற சிவத்தை ஞான சாதனையால் காண்பதற்குப் போதுமான அறிவைப் பெற்றேன். என்வுணர்வுக்கும் அப்பாற்பட்ட நந்தியை உணர என்னுடைய சிந்தையைப் பெற்றேன்.

2659. கருட மந்திர உபாசனை செய்பவன் தன் ஆத்ம ஆற்றலால் கருட மந்திரத்துக்குரிய கருடனை நினைத்தவுடனே நாகத்தால் கடியுண்டவன் மிக்க நஞ்சு தீர்ந்து மரணப்பயம் நீங்கி எழுவான். அதைப் போன்று ஞானப் பயிற்சியாளன் பேரொளிப் பிழம்பான ஞான குருவைத் தியனித்தவுடனே மும்மலங்களும் நீங்கிடப் பேரொளிப் பிழம்பாய் விளங்குவான்.

2660. சிவபெருமான் நிலையாய் உள்ள இருப்பிடம் எது என்பதை உலகத்தவர் எவரும் அறிந்து கொள்ளவில்லை. அவனது இருப்பிடம் சீவனிடந்தான் என்பதை ஞான விசாரனையால் அறிந்து கொண்டவர்க்கு அவனும் நிலையாக அவர்களது உள்ளத்தில் அமர்ந்து விடுவான். அவ்வாறு தம்மிடம் சிவகுருநாதனைப் பார்ப்பவர் சிவமாய் விளங்குவர்.

2661. முகத்தின் முன் தோன்றிய ஒளியை அறிவதும் அறிந்தும் அறியாதிருப்பதும் ஆன மயக்க அறிவு மாறிவரும் நனவு கனவு சுழுத்தியால் ஆகும். சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என்ற மூன்றையும் கடந்தபோது நனவு முதலிய மூன்று நிலைகளும் நீங்கும். அப்போது திருவடியைப் பதிப்பித்த நந்தியான குருநாதன் பிரணவ உடலில் மாணவனை விளங்குமாறு அருள் செய்வான்.

2662. சந்திர மண்டலம் விளங்கும் இரண்டு புருவங்களுக்கும் இடையில் மணத்தை அறியும் நாசியின் மேல் பாகத்தில் இரண்டு இதழ்த் தாமரையில் உள்ள சத்தி பந்தம் ஒன்றும் இல்லாத பளிங்கு போன்ற உருவத்தை உடையவள். இவளே பந்தங்களை அறுக்கும் குருவடிவுடையவள். ஆதலால் இவளைப் பற்றித் தியானத்தை தொடங்குக.

2663. புருவ நடு தியனத்தினால் உடம்பில் உள்ள மூலாதரம் முதலான ஏழு இடங்களும் வளர்ச்சி பெற உள்ளத்தில் பரமகுரு எழுந்தருள்வான். அவன் வானமயனாய்த் தலையிடை விளங்கிப் பிருதுவியைச் செலுத்திபவனாகச் சுவாதிட்டானமான நிலத்தை அடைந்தான். பின்பு அவன் தலையைச் சூழவுள்ள அட்டதிக்குப் பாலர்கள் குறுப்பு நீங்கும்படி அருள் செய்தான். அங்ஙனம் அஞ்ஞானமான தத்துவங்களைக் கடந்து மேல் சென்றவனது ஊர் வடக்கு ஆகும்.

2664. சீவன் அன்னமய கோசம் முதலிய ஐந்து கோசங்களையே தான் என்று எண்ணி இருந்தது. அவை சீவனாகிய பறவை தங்குவதற்குரிய காடு என்று கூறத்தக்கவையாம். ஆனால் இவை தானல்ல தான் வேறு என்று சோடசகலை மார்க்கத்தினால் தன் உண்மை நிலை உணரலாம். இஃது அன்றி இந்தவுண்மை உணர்வதற்குத் தசகாரியம் விளக்குகின்ற வேறு நெறியும் உள்ளது.

2665. சீவர்களின் பக்குவத்தைக் கண்டு கலந்த பின்பு பிரியாத எம் தலைவனான சிவபெருமானது தன்மையினை நினைப்பவருக்குச் சிவபேதம் கெடும். அவனது பேரொளியில் கலந்து உள்ளத்தில் உணர வல்லவர்க்கு இங்கு அவரைச் சுற்றியுள்ள அரிய வினைகள் கெட்டொழியும். இவ்வினைகளுக்கு ஈடான மாயையும் அழியும்.

2666. சிவஞானத்தை உணர்த்தும் சிவபெருமானை வாழ்க்கையில் உணரலாம். அதனால் பலமாய்ப் பற்றியுள்ள பாசத்தைத் தளிர்க்க விடாதபடி அறுத்துப் பாச வழியில் செல்லாது சிவத்தை இடைவிடாமல் சிந்தித்து நிலைபெறச் செய்தால் சிவநெறியில் போய்ப் பேணுதல் முடியும்.

2667. குருவானவர் காட்டிய வழியில் சிவனை நினைத்திருப்பாரானால் சிவபெருமானும் அவனை நினைத்தருள்வான். அப்படி அருள்புரியும் பொருட்டுப் புருவ நடுவில் விளங்கும் ஒளிப் பொருளைச் சாதியாலும் அறிவாலும் தினையைப் போன்ற சிறியவராய் இருந்தாலும் இடைவிடாது சிந்திக்கும் மனத்துடன் அடைந்தால் அவர் பெருமையுடையவர் ஆவார்.

2668. சிவபெருமானை வணங்குதற்குரிய சாதனை செய்யும் காலத்தில் அவ்வழிபாடு தடைபட்டால் அது தீய வினையினால் உண்டானது என்று அறிக. எனினும் எல்லாவற்றுக்கும் காரணமாயுள்ள ஆதியான சிவத்தை தளர்ச்சியில்லாமல் சிந்தித்திருப்பவர் அவனது அன்பைத்தேடிக் கொள்வர்.

2669. சிவபெருமானை இடைவிடாமல் நினைந்து மெய்யுணர்வு பொருந்தப் பெற்றவர் அப்பெருமானுடன் பிரியாதிருபார். அவர்கள் எம் தலைவனுடன் பொருந்தி உலகியலில் எடுபடாமல் இருப்பர். உலகியலைப் பற்றாதபடியால் உலகச் சிறப்பை விரும்பாதவர் ஆனார். அங்ஙனம் அவர்களுக்குப் புகழத் தக்க மெய் உணர்வைத் தந்து பெருமான் அவருடன் ஒன்றாக விளங்கினான்.

2670. பசைக் கல்லின்மீது சிகப்புக் கல்லைப் பொருந்தினல் மற்றோர் ஒளி வரும். அதுபோல் தக்க குருவால் உபதேசிக்கப்பட்ட சன்மார்க்கத்தில் மாணவனிடம் வேறோர் தகுதி வந்து சேரும். இப்படிச் சேர்வதில் உண்டாகும் ஒளி நெற்றியின் அடிப்பகுதியான புருவ நடிவில் அழகிய சீவ ஒளிக்குள் விளங்கும் ஒளியாகும்.

2671. ஞான குருவிடம் சிவம் உண்ணும் வாயாகவும் உடலாகவும் உயிராகவும் பார்வையாகவும் விளங்கும். மண் நீர் தீ வாயு வானமாகவும் வானமற்ற அறிவு உருவாகவும் உடல் இயல்பை விட்டு நிற்கும் ஞான குருவின் நிலை உள்ளது.

2672. உலகம் முழுவதும் தலைவன் என்று போற்றிப் புகழும் சிவபெருமானின் ஆணை வழிச் சிவசக்தியாய் இவ்வுலகம் நடைபெறும். அவன் பெரிய வானத்தில் விளங்கித் தன்னை வணங்கும் அடியார்க்கு தகுதியான வான் வண்ணத்தையும் இவ்வுலகத்தில் அளித்து விளங்கினான்.

2673. விரிந்தும் உயர்ந்தும் உலகங்கள் எல்லாம் ஞானத்தில் விளங்கும் சிவபெருமானின் அருளால் நடைபெறுகின்றன். அங்ஙனமின்றித் தாம் வெறொன்றும் அறியவில்லை என்று அறிஞர் சொல்வர். இனி வான் மண்டலத்தில் வாழ்பவரான தேவரும் அசுரரும் இத்தன்மையைக் கண்டவர் அல்லர். ஆனால் எம்பெருமானின் அருளைப் பெற்றவரே அவனைக் கண்டவர் ஆவார்.

2674. பசுத்தண்மை உடைய ஆன்மாக்களை மற்றவர் வணங்கும்படியான தலைவர் ஆக்கி பின் மற்றவர் நாவால் துதித்து வணங்குமாறு குருநாதன் அருள் செய்தான். ஆதலால் நாம் இனிமேல் மற்றத்தெய்வத்தை வணங்கமாட்டோம். சிவம் ஒன்றாலேயே மற்றத் தெய்வங்கள் அதிகாரம் பெற்றுள்ளன. என்பதை தெளிந்தோம். இனி நாமே மக்களால் வணங்கும் கடவுள் ஆனோம்.

#####

வியாழக்கிழமை, 16 July 2020 12:02

குருமட தரிசனம்!

Written by

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

ஒன்பதாம் தந்திரம்

குருமட தரிசனம்!

2649. படைக்கப்பட்டவையும் தீயில் இடும் ஆகுதியும் பரந்த ஓமத்தீயினின்று கிளம்பும் புகையும் வேத ஒலியும் என்னும் இவை எல்லாம் எம் சிவபெருமானைக் கருதிச் செய்வனவே என் எண்ணிக் குவிந்த மனத்துடன் குருவடிவாய் விளங்கும் ஒளியைத் தரிசித்தவர் இறைவனின் திருவடியைப் பொருந்த்தி நின்று உலகியல் வெம்மையை விட்டு நின்றவர்.

2650 அடியவனின் உள்ளத்தை விட்டு உறைவதற்கு வேறு இடம் இல்லை. உண்மையை ஆராயின் சீவனுக்கு வேறு இடம் உண்டோ. அங்ஙனம் அவனுக்கு இவன் உள்ளம் ஆகும் என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவன் சிவன் வேறாக இருக்கின்றான் எனக் கூறுகின்றனரே. என்னே அறியாமை.

2651. அறிஞரால் விரும்பபடும் சகசிரதளத்தை நான் அறிந்து கொண்டேன். பின்பு ஆராய்ந்து அறியப்பட்ட சிவபெருமானின் ஒளி ஒலியான திருவடிகளை என்னுள் கண்டு கொண்டேன். தேடிக் காண ஒண்ணாதவனும் மனமண்டலத்தைக் கோயிலாகக் கொண்டவனும் ஆகிய என் இறைவன் எப்போதும் மாறிக் கொண்டிருக்கும் உலகமாகவும் உயிராகவும் இருப்பதை உணர்ந்தேன்.

2652. இறைவன் எழுந்தருளி இருக்கும் இடம் எது மலை எது என்று கூறுவேன். சித்தமாகிய குகையும் குகையுள்ள இடமும் எனச் சொல்வோர் ஆறு ஆதாரங்களுடன் அஞ்ஞானமான காடு எது எனச் சொல்வேன். இவற்றைப் பதினான்கு உலகத்தில் உள்ளவர்க்கும் சொல்வேன்.

2653. ஞானியர் பொருந்தியிருக்கும் இடம் முகம் ஆகும் பெருமையுடைய மடம் முன் உள்ள ஒளியாகும். உள்ளத்தில் உண்ட்டாகும் நல்ல எண்ணங்களே அடியார் கூட்டமாகும். பிறர்க்கு நன்மை செய்வதை எண்ணியிருப்பதே நல்ல காட்சியாகும். நுண்ணுடம்பே மேலான ஆசனம் ஆகும். அருவுருவான ஈசனின் திருப்பெயரைக் கணித்தல் செயலாகும். அறிவு வானமே அவர் பொருந்தியிருக்கும் குகையாகும் இவையே அவரைத் தாங்கி நிற்பனவாகும்.

2654. அகநோக்குட்ன் ஆராயும் ஞானியர்க்கு அகமுகத்தில் விளங்கும் ஆன்மாவான பீடமே எல்லாத் தத்துவங்களுக்கும் ஆதாரம். உலக சொருபமான சத்தியே எல்லாவற்றிற்கும் இருக்கை. உலக காரணமாகிய தெய்வமே அனைத்தையும் இயக்கும் சிவம்.

2655. தூமாயை துவா மாயை என்னும் இரண்டும் ஆன்மாவை மறைக்க அதன் அறிவு விளங்காது நிற்கும். அன்னமய கோசம் பிராணமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞானமய கோசம் ஆனந்தமய கோசம் என்ற ஐந்து திசைகளும் நீங்கிட அந்த ஆன்ம ஒளியில் நிலைபெற்று ஆராயும் ஞானியர் காண்பான் காணப்படுவான் காண்கின்றான் என்ற மூன்றையும் கடந்து மேலான பிரணவ யோகத்தை அறிவர்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:26

முத்தியுடைமை! சோதனை!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

முத்தியுடைமை!

2633. முத்தி நிலையில் சிவபெருமானின் முழு அருளையும் உயிர் பெற்று முப்பத்தாறு தத்துவங்களும் வேறு எனக்கண்டு நீங்கி உண்மையுணர்ந்து தன் கடமை இறைவனை எண்ணியிருத்தலே என்று தவமாகும் என்று வினைகளின் நீங்கிய உண்மையான பத்தியில் ஈடுபட்டவர் மேன்மையுடைய சிவானந்தத்தைப் பெற்ற மெய்யறிவுடையவர் ஆவார்.

2634. சிவம் என்னும் கனியை நாடிய வன்மை மிக்க தாளையுடைய சீவன் என்ற பறவை உள்ள மண்டலத்தில் விளங்கும் சிவம் கனியை விரும்பிச் சித்தித்திருக்கும் போது கண்டத்துக்கு மேல் விளங்கும் அக்கினியில் சுழுமுனையாகிய விளக்கை பற்றி அந்தக்கரணங்கலான நால்வரும் உட;ல் அற்ற இடத்தில் இன்பத்தை நாடுபவர் ஆயினர்.

#####

சோதனை!

2635. பெருமையுடைய சிவபெருமானை உறையற்று விளங்கும் நிலையில் அப்பெரியோன் அடி ஞானத்தால் அருள் கடலில் முழுகினோம். எல்லா விதமான மாயா தொடர்புகளையும் கடக்கச் செய்து அவற்றினின்றும் வேறுபடுத்திச் செயல் அற்று இருக்கும்படி செய்வதே சோதனை.

2636. அகண்ட அறிவுடைய அரிய வேதத்தால் புகழ்ந்து பேசப்படுபவன் தேவர்களூக்குத் தலைவன், ஐம்ம்புல அறிவுகளையும் விட்டு அகன்அ அறிவை அறியும் பொறியை உடையவன். இத்தன்மையுடைய அடையாளங்கலையுடைய குருநாதனை நான் பொருந்தி யிருப்பேன்.

2637 உலகத்தவர் அறிவு அறிவு என்று ஓயாமல் கூறுகின்றனர். அவர்கள் சொல்லும் அறிவு பாச அறிவாகிய அறியாமை என்பதை எவரும் அறியவில்லை. பாச அறிவைக் கடந்து சிவஞானமாகில் உயிர்களிடமுள்ள பாச அறிவு என்ன இலக்கணம் உடையது என்பது புலனாகும்.

2638. சோதனைக்குப்பின் சுட்டறிவு இல்லாமல் யாவற்றையும் ஒரு சேர அறியும் அறிவில் கீழான மலங்கள் போய் அடையாத சேர்க்கையில், அவனது அறிவே கண்ணாகக் கொண்டு தம் அறிவு கெட்டு ஏகாக்கிரச் சித்தத்துடன் நெறியாக உள்ள மேலான நந்தியின் அருளுடன் ஒன்றுபட்டுத் தான் என்ற ஒன்று இல்லாமல் இருத்தலே சிவமாம் தன்மை அடைதல் ஆகும்.

2639. எம் தலைவன் காற்றில் பிரிக்க முடியாத் பரிசமும் கரும்பில் பொருந்திய இனிமையும். பாலுள் மறைந்துள்ள நெய்யும் இனிய பழத்துள் பொருந்திய சாறும், மலருள் பொருந்திய நறுமணமும் போல் சீவனுடன் உடனாய் இருக்கின்றான். அவனே யாவற்றிலும் கலந்து விளங்குகின்றான்.

2640. விருப்பத்துடனே சிவபெருமானை நாடி இமயத்தைச் சாரும் உமையம்மையைப் போல் விருப்புடன் இருப்பவர் மனத்தில் எம் இறைவன் ஒளிவமாய் விளங்கிடுவான்.

2641. தம்=லைவனான சிவபெருமான தலயின்மீது விளங்கும் பெருவெளியில் வந்து எனது மன மண்டலத்தையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருந்தான். அங்ஙனம் அப்பெருமான் எழுந்தருள என் உயிர் தந்தை வந்து விட்டான் என்று என் உயிர் அறிவு கெட்டு நின்றேன். அங்ஙனம் நின்றதும் எம் மனத்துள் சிவன் சிறந்து விளங்கியிருப்பதைப் பார்த்தேன்.

2642. சத்து சித்து ஆனந்தம் என்ற பண்புகளை உடையவனும் தவத்தின் பயனாக இருப்பவனும் தவம் செய்வார்க்கு நன்மை செய்பவனும் உள்ளமான நடுவில் வீற்றியிருப்பவனும் அழியும் இயல்புடையவற்றைக் கடந்து நிற்பவனும் ஆன இறைவனை நாடுங்கள். அவ்வாறு நாடினால் எண்ணில்லாத சீவ கோடிகளில் உம்மை மேலானவனாக அவன் ஆக்குவான்.

2643. சிவகுருவாய் எழுந்தருளி வந்து அத்துவா சோதனை செய்த போது நல்ல நாதனான சிவபெருமான் உடனாய் இருக்கின்றான். பரமாகவும் அபாரமாகவும் உள்ள அப்பெருமான் எல்லாவற்றிலும் கலந்து உள்ளான். மேலும் அவன் யாவற்றையும் கடந்து நின்று கலை முதலிய அத்துவாக்களைக் கடப்பதற்குத் துணையாகின்றான்.

2644. தேவராலும் அறிய இயலாத அப்பரம்பொருள் மேலே சொன்னபடி நல்ல நெறியில் செலுத்தும். இந்த வாழ்வில் தந்தையும் தாயும் தோழனும் போல் இனியவனாய் எனக்குத் துணை செய்யும். எனக்கு வழிகாட்டியாய் இருந்து சிவவுலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு வைக்கும். இந்த வகையாக நந்தி உதவி செய்வான்.

2645. சோதனைக்குப்பின்பு ஞானமாகிய வாளை உறையினின்றும் எடுத்து அஞ்ஞனமான இருளைப் போக்குவதாகும். அவ்வாறு அருளிய பெருமையுடையவன் இருப்பதை அறியவும் கூடும். அறிவதோடு தேவதேவனான அவனை நெருங்கிப் பொருந்தவும் கூடும். அப்போது அஞ்ஞான இருளில் செலுத்தும் பல கூட்டத்தை நீங்கக்கூடும்.

2646. சிவகுருவால் உணர்த்தப்பட்ட ஞானமென்ற வாளை மனம் என்னும் கையில் எடுத்தவுடன் என்னை வேறுபடுத்தி தன்னெறியினின்றும் நீக்க வல்லார் எவரும் இல்லை. சிவம் அல்லாதவை நிலைபெறாதபடி ஞான விசாரணையால் என் மனத்தைச் சோதனை செய்வேன். அப்போது ஆதி மூர்த்தியாகிய சிவத்தைப் பொருந்த்திச் சிவமாக இவன் ஆகின்றான்.

2647. குருவானவர் பிறவிக்குக் காரணாமான பாசத்தையும் அருவமான மாயையும் கன்மங்கள் உருவாக்கும் பந்தத்தையும் அங்ஙனம் செய்யும்போது உண்டாக்கும் அச்சத்தையும் அச்சத்தினால் தீய நெறியில் போகும் சிந்தையைத் திருத்தலுமாணவர் நன்னெறியைச் சேர்ந்தார். அங்ஙனம் சோதனை செய்யப்படும் திறமை உடையவர்க்கே சிவத்தைச் சார்ந்து சிவமாக முடியும்.

2648. சொல்லால் சொல்ல முடியாத ஒன்றை பிரணவ உப்தேசத்தை என் அக உணர்வில் குருநாதன் உபதேசம் செய்தான். எல்லை கடந்த நூல் ஆராய்ச்சியில் விருப்பத்தை ஒழித்து அலைபோல் வந்து அழியும் இயல்பு கொண்ட உடம்பை அழியாமல் இருக்கச் செய்து குற்றம் நீங்கப் பெற்ற என்னிடத்தில் பரன் வந்து பொருந்துவான்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:24

பத்தியுடைமை!

Written by

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!

#####

பத்தியுடைமை!

2623. இறைவன் உயிர்களுக்கு வீடுபேற்றை அளிக்கும் ஞான வடிவாகவும் மந்திர வடிவாகவும் உள்ள தலைவன். அழியாத தேவர்களை நடத்துபவன். தூய்மையானவன். தூய நெறியாக விளங்குபவன். இத்தகைய இறைவன் அடியார்களால் போற்றப்படும் உயிர்களின் தலைவனும் ஆவான்.

2624. சிவபெருமானின் சந்தான ப்ரம்பரையில் வ்ந்த அடியாரிடம் அடிமைக்கு அடியவனாகி அவரிடம் அடிமைப் பட்டேன். அப்படி அடியார் அருளால் சிவஞானம் பெற என்னையும் அவன் அடையார்களுள் ஒருவனாய் ஏற்றுக் கொண்டான்.

2625. இறைவன் தன்னைச் சார்ந்தவ்ர்க்கு நீரை விடக் குளிர்ச்சியுடையவன். உலகத்தைச் சார்ந்தர்க்குத் தீயை விட வெம்மையைத் தருபவன். அவனது இப்படிச் செய்யும் இச்செய்கையை அறிபவர் யார். ஆனால் உலகத்தின் பயன் அளிப்பவரைக் காட்டிலும் நேர்மையானவன். அத்தகையவன் நினைப்பவர் உள்ள்ச்த்தில் உமையம்மையுடன் எழுந்தருளியிருப்பவன் ஆவான்.

2626. ஏழு உலகங்களில் உள்ளவர் ஒன்றாய்க் கூடி ஆராய்ந்தாலும் ஆராய முடியாத ஒப்பற்றவன் ஆன என் தலைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தை யார் அறிய வல்லார். சிவத்திடம் பத்தி கொண்டூ ஊர்த்துவ சகசிரதளம் விழிப்படைந்த குருவை அடைந்து அவரது உதவியைப் பெற்றவர்க்கே அல்லாமல் முத்தைப் போன்ற வெண்மையான ஒளியில் விளங்கும் அவளைக் (குண்டலினியை) காணலாம் எனக் கூறுவர் யவருமிலர்.

2327. கன்று தாயை நாடிக் கதறி அழைப்பதைப் போன்று நான் கன்றின் தன்மையில் இருந்து என் தாயான சிவத்தைப் பக்தியிப்னால் கதறி அழைத்தேன். வான் உலகு வாழ்பவர்களுக்கும் அப்பாற்பட்டு நிற்கும் மறைப் பொருள் ஊனில் கட்டப்பட்டிருக்கும் என்னை விரும்பி என் மனத்தில் எழுந்தருளியுள்ளான்.

2328. மலத்தால் கட்டப்பட்டிருக்கும் சீவர்கள் பிறக்கும் நியதியைக் கடவாதவர். ஆதலால் அவர்களாகச் செய்து கொள்ளும் பயிற்சி பலனை அளிக்காது. போகும் முதற் நிலையில் உள்ளவர் இவனைத் தவிர வேறு எதனையும் நினையாதவராதலால் அவர்களின் முயற்சியில்லாமலேயே வேண்டியவை எல்லாம் அவர்களுக்குப் பொருந்தும். தலைவனான சிவத்துக்கு மலக்கட்டு உடையவர்க்குப் பிறவிப் பிணிப்பும் மலம் அற்றவர்க்குக் காட்டும் அருட் பிணிப்பும் ஆகிய அருட் செயல்களால் இறைவனைப் ப்ற்றிக் கொண்டு விளங்குபவர்க்குச் செயல் ஏதும் இல்லை.

2329. உடல் கற்பமாகக் குண்டலினி சத்தி உடம்பில் விளங்கவும் நாத ஒலி கேட்கத் தலையின் உச்சியில் விளங்கும் ஒளி மண்டலத்தில் ஏறித் தேன் சிந்தும் சகசிரதள மலரைக் கொண்டு சிவபெருமானை வழி படுவதல்லாது பிற கடவுளைத் தெய்வம் என்று எண்ணி வழிபடுவதற்கு என் மனம் இடம் அளிக்காது.

2330. அடியார்க்கு எப்போதும் தக்க துணையான நந்தியும் தேவர்க்குத் தலைவனும் ஆகிய இறைவனைத் துணைவனாகப் பெற்றுக் கொண்டு பிறப்பை ஒழித்துக் கடைத்தேறுங்கள். அவனை நெருக்கமான துணைவனாய்க் கொண்டு அவனது திருவடியைச் சிந்தித்திருக்கத் துணைவனாய் ஒளி வடிவினனாய் நின்று அருளுவான்,.

2331. ஒளி மண்டலத்து வாழ்பவர்களான தேவர்களை அடக்கியிருகின்ற இருள் மண்டலத்தில் வாழ்பவர்களான அசுரர்களது முப்புரத்தை எரித்த தலைவனை நாதமயமானவன் என்றும் வீரிய கோசத்தில் விளங்குபவன் என்றும் ஊன் பொதிந்த உடலுள் விளங்குபவன் என்றும் அறிந்து ஞானியர் வழிபட்டனர்.

2332. குண்டலினி சத்தியை மூலாதாரத்தினின்று எழுப்பிச் சகசிர தளத்தில் சேர்க்கும் முறையை அறிந்து நிலைபெறுக. அல்லது அறியாது கேடு செய்க என்று கருவி கரணங்களைப் படைத்துக் கொடுத்தவன் சிவன். அப்பொருமானினை நாடி என் மனம் ஒளி பெற்று விளங்கும். சிரமான மலையிலும் நெற்றி நடுவான வானத்துள்ளும் விரிந்த சகசிரமான புறத்திலும் மூலாதாரமான உலையிலும் மன மண்டலம் என்ற உள்ளத்திலும் தியானித்து ஆழ்ந்து இருந்தேன்.

#####

செவ்வாய்க்கிழமை, 07 July 2020 16:22

ஞானி செயல்! அவாவறுத்தல்!

Written by

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

#####

ஞானி செயல்!

2610. தனமையை அளிக்காத ஐம்புலன்களின் தன்மையை ஆராய்ந்தால் தன்மையைத் தரும் தன் இயல்பை உணர்ந்த தத்துவ ஞானியர் முன் பிறப்பில் செய்த பழவினைகள் வந்து சேருமாயின் அவற்றை அனுபவித்துக் கழிப்பர். அதன் பின்பு இப்பிறவியில் செய்யும் வினைகளைக் கருதிச் செய்யாமல் அவற்றினின்ரும் நீங்க முயற்சி செய்பவர் ஆவார்.

2611. தன் உண்மையை உணர்ந்த ஞானியர் பழ வினையில் பந்தத்தைச் சிவ சிந்தனையால் விலக்கி விடுவார்கள். தலையின் மீது விளங்கும் சிவனின் திருவருளால் பின் வர இருக்கும் வினையயைத் தோற்றம் எடுக்காமலே அழித்து விடுவர்.

2611. சீவர்களின் மனம் மொழி செயல்களால் வலிய வினை வந்து சேரும். சீவர்களின் முக் கரணங்களும் உலகியலைப் பற்றாமல் சிவனைப் பற்றியதாகில் வலிய வினை வந்து பற்றும்படி இல்லை. சாதனையால் மனம் சொல் செயல் கெட்டு மௌனமாய் இருப்பவர் தன்னை வினை பற்றாமல் மாறி அமைத்துக் கொள்ளும் ஞானியாவர்.

#####

அவாவறுத்தல்!

2613. பிராணனையும் சுழுமுனையையும் பற்றிப் பேசியும் பேசுவதுடன் அவற்றை நெறிப்படுத்தும் முறையை அறிந்து மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் ஒரு பயனையும் அடைய முடியாது. பொருளின் மீது செல்லும் ஆசையையும் மக்கள் மீது செல்லும் ஆசையையும் அகற்றுங்கள். அங்ஙனம் நீங்கியபின்பு இறைவன் இருக்கும் இடம் எளிதாய் உணரப்படும்.

2614. சிவபெருமான் வீட்டுச் சுவரின் மாடங்களில் இருப்பவன் அல்லன். தனியான் மண்டபத்தில் இருப்பவன் அல்லன். வீட்டுக் கூடங்களில் இருப்பவன் ஆவான். ஆலயங்களில் இருப்பவன் அல்லன். ஆனால் மனத்தில் ஆசையை விட்டவரின் மனத்தில் உள்ளிருந்தபடியே அவரை இயக்கி முத்தி அருளுபவன்.

2615. எவ்வகைப்பட்ட ஆசைகளையும் அறவே விட்டு விடுங்கள். இறைவனோடு கூட ஆசையை செலுத்தாமல் கைவிடுங்கள் ஆசை உண்டாக ஆசை உண்டாக அவற்றால் உயிர்க்குத் துன்பம் வரும். ஆசையை அறவே விட்டால் ஆனந்தம் உண்டாகும்.

2616. நுண்மையான பூதங்கள் சத்தம் பரிசம் ரூபம் இரசம் கந்தம் என்பன. அவை சீவர்களை உலகமுகமாய்த் தூண்டி துன்பப் படுத்துகின்றன. அவை உடனிருந்து தீய வழியில் செலுத்துவன ஆதலால் உண்டாகும் பற்றுகளை விட்டு அழித்து ஆசையை விட்டு உண்மையான் ஞானத்தை எட்டுவது சீவர்கள் தமது உண்மை நிலையை அறிமுகப் படுத்துவதாகும்.

2617. நிறைமதியில் பொங்கும் கடல்போல் அளவு இல்லாது அளவின்றிப் பொங்கி உலகை அழிக்கின்ற பல ஊழிகள் சென்றன. இன்ப துன்பமான கடலில் ஆழ்ந்து தேவர் முதலியவர் இறந்தனர். உலகத்தவர் ஆசைக கடலுள் பட்டுப் பிறவியை விடாதவர் ஆயினர். ஆனால் ஈசன் ஆனந்தக் கடலில் நிலையாய் நின்று அருளுகின்றான்.

2618. நெடுங்காலம் நீங்கமல் நின்று இருவினைகளையும் மூன்று மலங்களையும் அகற்றாமல் ஆன செயலும் பொருந்தும் இயக்கம் அற்றுத் தூயமை பெறுதலும் பின்பு படைப்பு முதலிய ஐந்து தொழில்களையும் நீக்கி அருள் மயமாக்கி ஆழ்ந்து நிற்கச் செய்தலே ஞானியரின் தூய்மையான நிலைகளாகும்.

2619. சீவன் தன் உண்மை வடிவம் ஒளி மயம் என்று உணர்ந்து நிற்கில் அறிவுடன் கூடிய சித்தியும் முத்தியும் உண்டாகும். பெண்மீது கொள்ளும் ஆசையை விட்டு நின்றால் எண்பெருஞ்சித்திகள் கிட்டும். உறுதியான சிவப் பற்றுடைய ஞானி தன் தேகத்தை நழுவ விடடால் சிவத்தின் அருள் நின்று பின் சிவத்தைச் சார்ந்துவிடுவர்.

2620. சீவன் சிவமாக ஆக வேண்டும் என்று இறைவனை அன்புடன் நாடி சிவனாகவே இவன் மாறிப் பதி நிலையை அடைகின்றான். என்ற உண்மையை உலகத்தவர் உணரமாட்டார். ஆயின் இச்சீவன் பலவகையான பிறவிகளை எடுத்துப் பல உலகங்களுக்குச் செல்வது உண்மையை உணராமல் பொய்ப் பொருளில் பற்றுக் கொண்டிருப்பதே ஆகும்.

2621. இவ்வுலகம் முழுவதும் துன்பம் தரும் பருவுடலில் விழுவதும் அது நீங்குமாறு செய்வதும் மீண்டும் பிற்வியில் சேர்ப்பதும் ஆகியவற்றைச் செய்யும் நான்முகன் முதலிய ஐவரை அறிவுடையோர் விரும்ப மாட்டார். வெறுப்பைச் செய்கின்ற பருவுடலில் நுண்ணுடலுக்குச் செல்லும் சுழுமுனை நாடியை அவர்கள் பொருந்தியிருப்பதால்.

2622. மேல் வரும் பிறவியை மாற்றி அமைக்கும் ஞானத்தை பெற்றுள்ளோம் என்பீர். அத்தகைய ஞானத்துகு அடிப்படை எது என்பதை அறிய மாட்டீர். மூலாதாரத்தில் வீரிய சத்தியாகக் கலந்துள்ள உருத்திர மூர்த்தியைச் சிந்தனையால் கீழ் உள்ள அக்கினியை மேலே எழும்படி செய்து ஒளிமயமாய்க் கண்டால் முன் நோக்கியுள்ள பிறவியைப் போக்குதற்கு மூலகாரணமாய்ப் பொருந்தும்.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

22142914
All
22142914
Your IP: 3.239.58.199
2021-09-21 13:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg