gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:50

வார சரம்! வார சூலம்!

Written by

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

#####


வாரசரம்!

790. திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் இடைநாடி வழியாக மூச்சு இயங்க வேண்டும். செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வலநாடியில் இயங்க வேண்டும். வளர்பிறை வியழனில் இடைகலையிலும் தேய்பிறை வியாழனில் வல் நாடியிலும் இயங்க வேண்டும்.

791. திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் மூச்சு பயிற்சியின் காரணமாக வலக்கை மூக்கைவிட்டு இடைகலையில் ஓடினால் சிறந்த உடம்பிற்கு அழிவு இல்லை. இது வள்ளலான சிவன் கூறியது.

792. செவ்வாய், சனி, ஞாயிறு கிழமை மற்றும் தேய்பிறை வியாழக்கிழமை ஆகிய நாட்களில் மூச்சை வலப்பக்கம் அறியும் யோகி இறைவன் ஆவான். இந்நாட்களில் மூச்சுமாறி இயங்கும் தன்மையை அறிந்து வலப்பக்கத்தில் ஓடும்படி செய்பவருக்கு ஆனந்தம் உண்டாகும்.

793. சந்திரகலை, சூரியகலை இரண்டும் இடைகலை, பிங்கலையில் மாறிமாறி இயங்கும். அப்போது இடைகலை வழியாய் ஏறி பிங்கலை வழியாய் இறங்கியும் பிங்கலை வழி ஏறி இடைகலை வழி இறங்கியும் மூச்சானது நடு நாடியில் ஊர்ந்து போகும். அதனால் மூச்சில் சிவம் இருப்பதை அறிவீர்.

794. பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் மாறி ஓடும்போது ஒரு பக்கம் கனமாகவும் மறுபக்கம் இலேசாகவும் மெலிந்து ஓடும். பிராணன் அகன்றும் தணிந்தும் ஓடுதல் நீங்கி ஒரு நாடியிலே மிகுதியாக ஓடினால் தோன்றிய இராசியை விடுத்து மிகுதியாய் ஓடும் நாடியைக் கொண்டு சந்திரன் என்றோ சூரியன் என்றோ அறியவும்.

795. சரியாக சுழுமுனையில் பொருந்தி நிற்காமல் இடம் அல்லது வலம் ஓடும் வாயுவில் பொருந்தி நாடிகள் ஒத்து இயங்கும் புருவ நடுவில் இனிமைதரும் குண்டலினியைச் சேர்த்தால் நடு நாடியின் உச்சியில் தீப ஒளி அமையும் என நந்தியெம்பெருமான் அருளினார்.

796. ஆராயத்தக்க பொருளான சிவன் கண்மலர்களுக்கு மேல் உள்ளான். அப்பெருமனை நினைத்து சுவாசக் கலையைச் மாறச் செய்யின் பதினாறு கலைகளையுடைய சந்திரன் விளங்கும். அக்கலை வலிமையுடன் மனத்தை அழிக்கின்ற ஆதரமான ஆயுளும் நாளும் தியான காலமான முகூர்த்த காலமாய் அமையும்.

#####

வார சூலம்!

797. வார நாட்களில் சூலம் வரும் திசைப் பற்றி சொன்னால் திங்கட் கிழமையும் சனிக் கிழமையும் கிழக்கே சூலம். செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் வடக்கு சூலம். ஞாயிற்றுக் கிழமையும் வெள்ளிக் கிழமையும் மேற்கு சூலம்.

798. வியாழக் கிழமை சூல திசை தெற்கு சூலம் இடப்பக்கமாகவும் பின்பக்கமாகவும் அமைந்திடல் பயணம் நன்மை. வலப்பக்கமும் முன்பக்கமும் இருக்கச் சென்றால் பயணத்தில் மேலும் மேலும் தீமை விளையும்.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:48

ஆயுள்பரிட்சை!

Written by

ஓம்நமசிவய!

ஏத்தி எனதுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனி வெண்கோட்டு மதமுகத்துத் தூத்தழல் போல்
செக்கர் திருமேனிச் செம்பொற் கழலைங்கை
முக்கட் கடாயானை முன்!

#####


ஆயுள்பரிட்சை!

770. தலையில் வைத்த கையானது பருத்தும் சிறுத்தும் இல்லாமல் அளவாய் தோன்றினால் நனமை. பெருத்து தோன்றினால் ஆறு மாதங்களில் இறப்பு.. அது இரண்டு மடங்கு பருத்து தோன்றினால் ஒரு மாதத்திற்குள் இறப்பு ஏற்படும்.

771 .மனதில் உண்டாகும் சூக்குமம் ஈசனுக்கு நிகரானவை. நாதத்தைக் கடந்தவர் ஈசனை நினைத்து நாதாந்தத்தில் இருப்பர். நாதாந்தத்தில் இருப்பவர் மனதில் ஈசனும் ஓசையால் உணர்ந்து உணர்வாய் இருப்பான்.

772. அழிகின்ற நிலையை உடைய நான்கு அங்குல வாயுவைக் கண்டு அதை அழியாமல் பொருந்தச் செய்தால் மேல் உண்ணாக்கு மேல் அமையும் சகசிரதளம் விரிந்து நன்மை தரும். சகசிரதளாத்தில் ஞானம் நிலைபெறும். அந்த ஞானம் உலகத் தலைவராக்கும்.

773. தலைவன் எழும் இடக்கண் பார்வையை வலக்கண் பார்வையுடம்ன் பொருந்தும் செயல் அறிபவர் இல்லை. இடக்கண் வலக்கண்ணுடன் பொருந்தினால் சக்தி தோன்றும். இவருக்கு ஞானேந்திரியங்கள் ஐந்தும் தன் வயப்பட்டமையால் அவரின் வயது நூறாகும்.

774. ஆறு விரற்கடை அளவு மூச்சு வெளியேறினால் எண்பது ஆண்டுகள் வாழலாம். ஏழு விரல் அளவு மூச்சு வெளிப்பட்டால் அவரின் வாழ்நாள் அறுபத்திரண்டாகும் என்பதை தெளிந்து நின்று அறிவாய்.

775. எட்டு விரல்கடை அளவு மூச்சு நீண்டால் அவரின் ஆயுள் ஐம்பது ஆண்டுகள். சிறப்பாக ஒன்பது விரற்கடை அளவு இயங்கினால் காலம் முப்பத்தி மூன்று ஆண்டுகளாகும்.

776. பத்து விரல்கடை அளவு மூச்சு நீடித்தால் இருபத்தெட்டு ஆண்டுகள் வாழ்வு. பதினைந்து விரற்கடை அளவு மூச்சு நீண்டால் இருபத்தைந்து ஆண்டுகள் வாழ்வு.

777. கதிரவன் இல்லாத பகல் முப்பது நாழிகையும் திங்கள் பகுதியில் சேர்ந்து நின்றால் தலையின் ஈசான திசையில் உணர்வை உதிக்கச் செய்து சுழுமுனையில் மூச்சு போதலை செய்யலாம்.. இப்படிச் செய்தால் அகர உகர நாடிகள் செம்மையாகி பத்தான அக்னிக் கலையில் விளங்குவதை பார்க்கவும் முடியும்.

778. இரு நாள்களிலும் சுழுமுனையில் மூச்சு இயக்கங்களை கீழ் நோக்குடைய அபானனும் வியாபாகமான திங்களும் சிவனுக்கு பகையாகாமல் உதவுவர். இப்படி கீழ் நோக்கும் சக்தியை குறைத்து மூன்று நாட்கள் நிலை பெற்றால் வாழ்நாள் நீடிக்கும்.

779. அளக்கும் வகையால் நான்கு நாட்கள் சுழுமுனையின் வழியே மூச்சு இயங்கினால் சிவம், சக்தி, விந்து, நாதம் காணலாம்.. செம்மையாக ஐந்து நாட்கள் இவ்வழியில் இயங்கினால் சிவம், சக்தி ஆன்மா என்ற மூன்றையும் காணலாம்.

780. பத்து நாட்கள் சுழுமுனையில் அறிவு பொருந்தியவர்களுக்கு தன்னுள் பொருந்திய சிவம் சக்தியைக் காணலாம். இப்படியே காலதன்மையில் பதினைந்து நாட்கள் சுழுமுனையில் பொருந்தி இருந்தவர்க்கு உள்ளத்தில் சிவம் ஒன்றை மட்டும் காணலாம்.

781. இருமுனைகள் சுழுமுனையில் நிலை பெற்றால் வானக் கூறிலிருந்து ஆறு ஆதாரங்கள் அறியலாம். இருபத்து ஐந்து நாட்கள் இயங்கினால் தேயு, வாயு, வானம் மூன்றும் விளங்கும். இன்னும் இருபது நாட்கள் இயங்கினால் தேயும் வானமும் சிறப்பாக விளங்கும்.

782. சுழுமுனையில் இருபத்தேழு நாட்கள் இருந்தால் சோதி வடிவான சிவத்தை பிறர்க்கு உணர்த்தலாம். இருபதெட்டு நாட்கள் இருந்தால் பத்தாம் நிலையான மேல் நோக்கிய சகசிரதளத்தில் இருக்கும் ஆன்மாவை மற்றவர்க்கு உணர்த்த முடியும்.

783. பத்து ஐந்து ஆறு எட்டு ஆகிய இருபத்து ஒன்பது நாள்களும் உலகத்தார் அஞ்சும் பகையான இந்நாட்கள் யோகியர்க்கு பத்து நாள்கள் போல் விளங்கும். அன்பை பெருக்கும் வகையில் இறையுடன் கலந்திருக்கும் முப்பது நாட்களும் ஏழு நாட்கள் கழிதல் போல தோன்றும்.

784. இறைவனுடன் இருக்கும் நாட்கள் முப்பதொன்றானால் சிறுமைதரும் நாட்கள் மூன்று நாட்களாய் தோன்றும். முப்பத்திரண்டு நாட்கள் பொருந்தியிருந்தால் உலக நடையினர்க்குரிய இரண்டு நாட்கள் செல்வதுபோல் தோன்றும்.

785. மூன்று மாதங்கள் சிவமும் ஆன்மாவும் ஒன்றியிருந்தால் சகசிரதளாத்தில் சூக்குமவாக்கு விளங்கும்படி நந்தியெம்பெருமான் செய்வான். எந்தவொரு செயலும் இன்றி பரமாகாயத்தில் நிற்பவர் தன்னுடன் பொருந்தி நின்ற சிவமே ஆகுவர்.

786. பரவெளியில் எங்கும் பரவி சூக்கும நிலையில் இருக்கும் தீயான பூதத்தை அறியார். கலந்துள்ள காற்று பூதத்தையும் யாரும் அறியார். எல்லாவற்றையும் ஒடுக்கியுள்ள சிவத்தையும் அறியார். இப்படி மற்றவர் அறிந்து கொள்ளாத அறிவை சிவத்துடன் சேர்ந்து அறிந்தேன்.

787. காற்றுடன் கூடி ஐந்து தன்மாத்திரைகளை அறியும் அறிவாகிய சிவம் உலகுயிர் எல்லாவற்றின் அறிவாகும். சிவத்தை பிரித்து அதனை வேறாகக் காணாமல் ஒன்றாய் காணின் சிவம் உயிருடன்கூடி நின்று எல்லாப் பொருளையும் விளக்கித் தானும் விளங்கும்.

788. சிவம் அருளிய உலகம் ஞானியர்க்கு மயக்கம் தரும். நாள்தோறும் பொது அறிவைத் தரும். இன்பத்தைச் தரும் சக்சிரதளத்தில் விளங்கும் பராசக்தி இந்த பேற்றை ஞானியர்க்கு சேர்த்து வைப்பதால் ஞானியர் சிவமே ஆவர்.

789. படைப்ப்ச் செயலை எண்ணிய பெருந்தகை நந்தியெம்பெருமானுக்கு பிறப்பு இல்லாமல் கண்பவரின் அழகிய உடல் பழமையான இடம். என்ற உண்மையை அறிந்தவர்க்குப் பற்று விலகும். ஆசைக்கு காரணமான பாசங்களை வருந்துமாறு செய்பவர்க்கு அகன்ற அறிவு உண்டாகும்.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:47

காலச்சக்கரம்!

Written by

ஓம்நமசிவய!

களியானைக் கன்றைக் கணபதியைச் செம்பொன்
ஒளியானைப் பாரோர்க் குதவும் - அளியானைக்
கண்ணுவதும் கைத்தலங்கள் கூப்புவதும் மற்றவன்தாள்
நண்ணுவதும் நல்லார் கடன்!

#####

காலச்சக்கரம்!

740. சந்திர மண்டலத்தில் உள்ள வியாபினி முதலிய ஐந்து கலைகளின் குணங்கலை அறிந்து அவற்றை நீக்கி சிரசின்மேல் துவாத சாந்தப் பெரு வெளியில் அமர்ந்து சிவசக்தி அருளும் முறையும் ஆளுகையை விட்டுக் கடக்கும் முறையையும் தெரிந்தேன்.

741. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் அறிவு, இந்த ஐவகை அறிவை தனியாக இருந்து ஆராயும் ஆறாம் அறிவு, பொருள்களின் நன்மை தீமைபற்றிய ஏழாம் ஆறிவு, கல்வியால் ஏற்படும் எட்டாம் அறிவு, அதனால் தம் அனுபவம் பற்றிய ஒன்பதாம் அறிவு ஆகிய இந்த ஒன்பது அறிவுக்கும் சிவசக்தியே காரணம் என்பதை அறிந்து பலவகையான அறிவின் இயல்பிற்கு ஏற்றவாறு நடக்காமலிருந்து உயிர்கள் காலம் வரையறை செய்தலுக்கேற்ப அழிகின்றனர்.

742. உயிர்கள் அழியும் காலம் இருபத்தைந்து முதல் இருபத்தெட்டு, முப்பது ம்தல் முப்பத்தி மூன்று, அறுபதுமுதல் அறுபத்திரண்டு, நூறு என வாழ்நாள் நான்கு கண்டங்களாக உள்ளது.

743. உயிரின் திருந்திய பிறந்தநாள் அதனுடன் சேர்ந்து நிற்கும் பிறவி விண்மீன் கூடிய நாள் ஒன்று, பின் பிறவி விண்மீன் நாளுடன் பதினாறு நாட்கள் கூட்டப் பதினேழாம் நாளும் ஆறு நாட்கள் கூட்ட ஏழாம் நாளும் ஆகியவை தவிர பொருந்திய நாட்களை ஆராய்நது வருத்தம் இல்லாமல் யோகப் பயிற்சி தொடங்குவதற்கு ஏற்ற நாள்.(ஜன்ம நட்சத்திரம் 3, 5, 7, 10, 14, 19, 22, 27 என்ற நாட்கள் விலக்கப்பட வேண்டியவை)

744. மனம் விரும்பி ஞான யோகம் செய்பவர்கள் இருபத்து ஐந்து தத்துவங்களும் பன்னிரண்டு ராசிகளில் செல்லும் கதிரவன் அறிவால் உண்மையை அறிந்து பக்குவப்பட்டு சிவபெருமான் இருக்கும் ஆறு ஆதாரங்கள் செயல்படும் வழிகள் என்பதை அறிந்து அவற்றைக் கடக்கும்போது சிவம், சக்தி, நாதம், விந்து, என்பதை உணர்வர்.

745. நான்முகன், திருமால், ருத்திரன், மகேசுவரன் ஆகிய நால்வரையும் கடந்து அருவுருவம், அருவமாகிய விந்து, நாதம், சக்தி, சிவன் நான்கும் ஆகமொத்தம் ஒன்பது வடிவங்களாக நெற்றியைக் கடந்து இருபத்தைந்து தத்துவங்களால் விளங்கும் குறியை கடந்ததால் நச்சுத் தன்மையுடைய வினையை ஈட்டும் ஆறு ஆதாரங்களை தாண்டும் ஆன்மா என்ற கதிரவனை யார் அறிவார்.

746. ஆறு ஆதாரங்களிலுள்ள தாமரை இதழ்கள் மொத்தம் நாற்பத்தி எட்டு. இரண்டாவதாக கதிரவன் இருபத்தாறில் அமைவதாய் இருக்கின்றது என்பதைக் கூறும் சந்திர வட்டம் இருபத்தேழு. வேறு முறையாகவும் நாட் கணக்கை அமைத்துள்ளனர்.

747. இருபத்தெட்டு என்ற இலக்கத்தை அக்கினி, சந்திரன், கதிரவன் என்ற முன்று கண்டங்களில் அறிவீர். அதில் முப்பத்து மூன்று தத்துவங்களையும் தொகுத்து ஒன்றாக அறியலாம். பத்து எட்டு ஆகியவற்றை புவி முதலாகப் பொருத்தி அறியலாம். அவை நான்கு, மூன்று, இரண்டாய் இருப்பதையும் அறியலாம்.

748. குருவின் உபதேசப்படி முயற்சிக்காவிட்டால் இறைவனை தொடர்பு கொள்ளுதல் அரியதாகும். மறைவாகச் சொன்னது உபதேச முறைப்படி பெற வேண்டும் என்பதற்க்காகத்தான். மறை பொருளை மறையைப்போல் வெளிப்படுத்தாது பெற்று வாழ்நாளைப் பெருக்குக.

749. உடலை நிலைத்திருக்கச் செய்யும் முறைகளை மறைத்து வைத்துள்ளமையை அறியாது இருப்பவர் மூர்க்கர்கள். உடல் நிலைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள் மூலாதாரத் தீயை அடக்குதலே நிலையில்லா உலகில் நிலைத்து நிற்பதற்கான வழியாகும்.

750. சிறு விரலை கயிராக (ஒரு கையிலுள்ள சிருவிரல், அணிவிரல், நடுவிரல் என்ற மூன்று விரல்களுடன்) மற்றொறு கையில் உள்ள மூன்று விரல்களையும் கண்கள் புருவங்களை நெறித்துப் பிடித்தால் பிரணன், அபானன் என்பவை மார்பில் சம்மாய் நிற்கும்.

751. உயிர்ப்பு அடங்கிய ஒவியமாய் இருக்கும் நிலையை அறிந்து கொள்ளுங்கள். பாவிகள் இதன் பயனை அறியார். தீவினைக்கு காரணமான இந்த உடலில் மூன்று மண்டலங்களும் சுழுமுனையில் பொருந்தி சகசரதளத்தில் விளங்கும்.

752. முதுகுத் தண்டுடன் இணைந்து சென்று பிரமந்திரத்தை அடைந்த யோகிக்கு சந்திரன், கதிரவன், அக்னி மண்டலங்கள் மூன்றும் ஒத்து உடலில் மகிழ்வு ஏற்படும்படி அமையும். இந்த வண்மையைக் கண்டவர்கள் ஞானிகள். உண்மையை அறியாதவர்கள் உடல் வினையால் அழியும்படி விட்டு விடுகின்றனர்.

753. கதிரவனான அறிவு குண்டலியின் வழி காமச் செயல் செய்வதால் வண்க்கத்திற்கு உரிய வாழ்க்கை கெட்டு, நாயானது மலத்தை உன்பதில் ஆசை கொள்வதைப்போல் காமச் செயல்களில் விருப்பம் கொண்டு உடல் அழியும்.

754. காமத்தின் வயப்பட்டு அலைந்தால் சகசரதளத்துக்கு மேல் விளங்கும் ஈசன் திருவடியை உணரமுடியாது. தன்னொளியில் மேல் நிலைக்காமல் கீழ் அக்னி மண்டலத்தில் உயிர்கள் அழிகின்றன. இறைவன் சிலம்போசை கேட்டு அதன் வழி செல்பவர்க்கு சுழுமுனையில் கூத்தன் தென்படுவான்.

755. கூத்தனின் நாதம் கேட்பதால் ஏற்படும் பய்ன்களை அறிந்தவர் மெய்நாற்பொருளை உணர்ந்து நிற்பர். அப்படி உள்ளே தியானம் செய்வது தொடர்ந்தால் யோக்கியரும் தானும் வேறுபாடின்றி ஒருவராக இருப்பதை உணர்வர்.

756. இறைவனுடன் பிரிப்பு இல்லாமல் பொருந்தியிருப்பவரின் வாழ்நாள் அதிகரிக்கும்.. அழிவும் இருக்காது. உலக நலம் கொண்ட பூரகம் இரேசகம், கும்பகம் ஆகியன இல்லாமல் முப்பது நாழிகை சமாதி செய்யின் சகசரதளத்தில் உள்ள கூத்தன் பொன்னொளியுடன் விளங்குவான்.

757. உடலில் கூத்தை நிகழ்த்தும் பிராணன் நுண்ணியமாக அடங்கும் நிலையை அறிந்து அந்தவிடத்து பத்து எழுத்துக்கள் கூடும் அநாகத்தில் அட்டதள கமலத்தைப் பொருத்தி அதில் விளங்கும் சிவனை கண்டு மகிழ்ந்த் இருப்பவர்க்கு எடுத்த உடல் நூற்றாண்டு காலம் வாழ்வர்.

758. சொல்லிய நூராண்டு காலம் வாழ்பவர் உடலை ஆயிரம் ஆண்டுகளுக்கு குறையாமல் காப்பார்கள். ஆயிரம் ஆண்டு வாழப்பெற்றவர்கள் அறிவால் முதிர்ந்து பல யுகம் வாழலாம்.

759. நீண்டகாலம் கண்டவர் தளர்ச்சியின்றி இருப்பர். உள்ளத்தால் சிறந்த பொருளான சிவனை எண்ணி இடைவிடாது தியானித்து சிவம் என்றும் தாம் என்றும் இரண்டாய் அறியாமல் ஒன்றே என உணர்ந்து நீண்டகாலம் வாழ்ந்து உயர்வை அடைவர்.

760. சிவம் என்ற தன்மையை அடைந்து உயர்ந்தவர் உலகத்துடன் கூடி பயன் அடைந்தவர் என்ற உண்மையை பலர் அறிந்து கொள்ளாமல் கன்மங்களை மேலும் ஈட்டுவர். சிலர் அந்தப் பேற்றை அடைய வேண்டும் என்ற விருப்பமின்றி மீனைப்போல் எப்போதும் இமைக்காத கண்ணையுடைய பராசக்தியை அறியாதவர் ஆவர்.

761. பேரொளியைக் காண முடியாதவர்கள் பிறவிப் பய்னை அடையாமல் வீணே கழிவர். வெட்கமின்றி சாத்திரங்களின் நயங்களைப் பேசி கழிவர். பராசக்தியின் ஒளியைக் காணாதவர்கள் தத்துவப் பொருளை அறியாமல் தொண்டு செய்யாமல் கழிந்து போவர்.

762 .பிணைப்புகளை ஏற்படுத்தும் உலகப் பொருளை புறக் கண்ணால் பார்க்காதவர் நீங்குகின்ற அப்பொருளின் தன்மையை அகக் கண்ணால் பார்க்கலாம். நீங்கும் பொருளின் உள்ளே உள ஒருமையுடன் பார்த்தால் எப்பொழுதும் நீங்கா சிவனை உணரலாம்.

763. மூன்று கண்களையுடைய பிறப்பு இல்லா நந்தியெம்பெருமானை மனத்துள் ஆரய்ந்து கண்டால் பத்து திசைகளிலும் இருப்பதுடன் தனித்து இருப்பதும் புலப்படும். உறுதியைத் தருகின்ற சிவசக்தியைக் காணலாம். தேடும் யோகியர் அடையும் பயன் இதுவே.

764.. நந்தியெம்பெருமானை அறிய வல்லாரின் வாழ்நாள் அகன்று விடுவதால் அழிவில்லை. அவ்வாறு அறிந்தபின் அவர் உயிர்களின் தலைவராவார். யோகியர் கண்ட உண்மை இது. சிவனைக் கூட வேண்டும் என விருப்பமுடையவர்க்கு இந்த உண்மையைச் சொல்வர்.

765. தக்கவருக்கு உணர்த்த வேண்டிய பொருள் அகர உகாரங்கள். அகர உகாரங்கள் மனத்துள் நிலை பெற்றால் மகாரம் சுழுமுனை வழி உயர்ந்து சென்று நாதமாய் அமைந்து மாயையின் ஆறு ஆதாரங்களிலும் குறும்புகள் அற்றுச் சிவம் விளங்கித் தோன்றும்.

766. சிவன் இருக்கும் இடத்தை எவரும் அறியார். ஒளிமயமாய் வீற்றிருக்கும் இடத்தை அறிபவர் உள்ளத்தை விட்டு அகலாது நிற்பான் சிவன். அப்போது அவன் சிவமாகி விடுவான்..

767. தான் சிவன் ஆகும் இயல்பை அறிவார் எவரும் இல்லை. சிவன் ஆகும் தன்மையை கேட்பாயாக!. சிவன் ஆன்மாவின் நுண்மை வாக்கிலும் நுண்ணிய ஒளியிலும், ஆகாய கூற்றாகி வான் கூற்றில் விளங்குவான்

768. ஆதாரச் சக்கர வட்டங்கள் ஏழும் உன்னுள் மலர்ந்து. மேனமையுடைய சிவன் இருக்கும் இடத்தை அடைய அறிவீர்! உபாயம் செய்து சிவனுடன் பொருந்துக. கரும்புக் கட்டியைப் போன்று இன்பம் இருக்கும் இடத்தை அப்போது அறியலாம்.

769. ஆதார சக்கரங்களில் நான்முகன், திருமால் என்பவர்களையும் நீலகண்டன், மகேசுவரன் என்பவர்களையும் காணலாம். உன் உடல் உயிர் என்பன்வற்றில் இவர்கள் பொருந்தியிருப்பதை அறியலாம்.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:45

சரீர சித்தி!

Written by

ஓம்நமசிவய!

மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!

#####

சரீர சித்தி!

724. உடல் அழிந்தால் உயிர் நீங்கும். உடல் வன்மை குன்றப் பெற்றவர் உறுதியான ஞானத்தை பேணும் முறையை அறியார். உடலைப் பேணிக் காக்கும் முறையை அறிந்து உடலைக் காத்து உயிரையும் காத்தேன்.

725. உடலைக் குற்றம் உடையது என நினைத்திருந்தேன். அவ்வுடலில் சிறந்த சிவத்தைக் கண்டேன். அதில் சிவன் கோயிலாக இருப்பதை உணர்ந்து உடலைப் பாது காத்துக் கொண்டிருக்கின்றேன்.

726. உலகமாயை நோக்கி போகும் மனத்தை சிவபெருமானை நினைக்கச் செய்தாலே தூய்மையாகும். சிவ சிந்தனையால் குற்றங்களைப் போக்கி கவிழ்ந்த ஆயிரம் இதழ் தாமரையை மலர வைத்து கீ நோக்கிச் செல்லும் நோக்கை மேல் நோக்கி திருப்பினால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிறைந்த உடல் உண்டாகும்.

727. யோகத்தை மாலை வேளையில் பயின்றால் உடலின் குற்றம் ஆன கபம் அகலும். நண்பகலில் செய்தால் கொடிய வாத நோய் நீங்கும். சிறப்பான விடியர் காலையில் செய்தால் பித்த நோயுடன் நரை திரையும் அகலும்.

728. உடலின் மூன்று முடிச்சுகளும் இடைகலை, பிங்கலை நாடிகளும் பாம்பு போல் பின்னி உள்ளன. இயக்கம் உள்ள உடலுக்கு பன்னிரண்டு அங்குலத்தால் உணர்த்தப்பட்ட பிராணன் கிழ் நோக்கிச் செல்லும் சூரிய சந்திர நாடிகளை ஒன்றாக்கி கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோகுமாறு செய்தால் பிராண லயம் பெற்று உடல் அழியாது.

729. சிரசில் நூறு நாடிகள் கீழ் நோக்கியும் ஒரு நாடி மேல் நோக்கியும் இருக்க மேல் நோக்கும் நாடி சிறப்பை அடைய நூறு நாடிகளும் மாற வேண்டும். தொன்ணூற்றாறு தத்துவங்களில் உள்ள அறுபது தாத்துவிகங்களும், ஆறு அத்துவாக்களும் மாறி குற்றம் நீங்க வேண்டும். இடைகலை பிங்கலை வழி தூய்மையடைந்தால் பிராணன் தூயமையாய்விடுபவர் நூறு ஆண்டையும் மாறும்படி நீண்டநாள் வாழ்வர்.

730. சந்திர க்லையை சூரிய கலையில் பொருந்துமாறு சாதனை செய்தால் நண்பகலில் பிராணவ ஒலி கேட்கலாம். இன்பத்தைத் தரும் சிவ நடனத்தை கண்டு களிக்கலாம். இது உண்மை, இறைவன் மீது ஆணை.

731. மிகுந்த தூய்மையுடன் இருக்கும் அகரம் பொருந்தும்படி நினைவு கொண்டு சகாரத்தை ஓதுங்கள் அம்சம் என்று சொல்வதே மந்திரம். இப்படி முழுமையாய் எண்ணிப் பெற்ற நாதமே யோகியின் வழிபாட்டு மூர்த்தி யாகும்.

732. கொப்பூழ் தாமரையில் இருக்கும் உயிர்ப்பைச் சிவசிவ என்று உச்சித் தொளையான பிரமரந்திரத்தில் நிறுத்தி கீழ் நோக்கிச் செல்லும் காற்றை தடுத்து மேல் நோக்கிச் செலுத்தினால் அவர் சிவத்தின் இயலபை அடைவர்.

733. நீங்கா மலம் பொருந்திய எருவாய்க்கு இரண்டு விரல் மேல், சொல்லா இயலாத பால் உணர்வைத் தரும் குறிக்கு கீழே உள்ள மூலதாரத்தில் உடலையே வழியாகக் கொண்டு சீவர்களை வழி நடத்தும் சிவனை வழிபடுங்கள். உபதேசம் பெற்று அவனைக் காணுங்கள்.

734. நீல ஒளியுடன் இருக்கும் சக்தியுடன் முழுவதுமாகச் சேர்ந்து அவளை அடைக்கலம் என நம்பி இருப்பவர்க்கு உலகத்தில் மற்றவர்களுக்கு ஏற்படும் நரை திரை மூப்பு மாறி இளமை தோற்றம் ஏற்படும் இது சிவன் ஆணை.

735. கருவாய் செயல் படவில்லை என்றால் உயிர்களுக்கு எந்தவித இழப்பும் இல்லை. உடல் மெலிந்தால் சத்துவ குணம் தோன்றி உயிர்ப்பை வெல்லலாம். மேல் நிற்பவருக்கு உணவானது குறைவதற்கு பல வழியுண்டு. யோக நெறியில் நிற்பவர் நீலகணடன் ஆவர்.

736. உடலின் மூலாதரத்தில் உள்ள காம வாயுவைத் தலையில் உள்ள ஆயிரம் இதழ் தாமரைக்குச் செல்லும் பயிற்சியை முயற்சித்தவர் வண்டுகள் விரும்பும் நறுமணத்தைக் கொண்ட மலர்களை அணியும் பெண்கள் விரும்பும் அழகான வடிவத்தைப் பெறுவர்.

737. எப்போதும் யாவரும் அஞ்சும்படியான சினத்தோற்றத்துடன் வரும் இயமனை கண்டு வெகுண்டு, ஒளியுடன் கூடிய மூலாதாரத்தில் உள்ள சக்கரத்தில் சிவனது ஒலிக்கும் திருவடியைக் கண்டவர் அப்போதே இவ்வுலகிலும் மேல் உலகிலும் வாழ்பவர் ஆவார்.

738. நான் தரிசித்த அக்னியாகிய சிவன், திங்கள் கதிரவன் அக்கினி விண்மீன் என்ற நான்கு கலைகளிலும் ஏழு ஆதாரங்களிலும் தான் கண்ட பிராணனாய் உடலில் வெளிப்பட்ட உணர்வாய் அதோ முகச் சிவன் இன்பம் அடைந்து வளர்கின்ற முறையில் துணை ப்ரியும்.

739. ஆசனத்தில் வெளிப்படும் வேதசக்தியை ஏற்றுக் கொண்டு அன்புடன் நெல்லை விதைப் பண்டமாகவும் உணவுப் பண்டமாகவும் சேமித்து வைத்தலைப் போன்று நிறைவான பயிற்சியால் இருளுக்கும் ஒளிக்கும் இடையே நடந்த போரில் இருள் கீழாகி ஒளிச் சேமிப்பு உண்டாகி அதில் ஒடுங்குவாயாக.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:44

கலைநிலை!

Written by

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

#####

கலைநிலை!

712. காமத்திற்கு காரணமாகிய சுவாதிட்டானத்திலிருந்து செயல் நடக்கச் செய்து கொண்டிருக்கும் நெற்றிக்கண்னையுடைய சிவன் மேல் அன்பு கொண்டு கண்கள் இரண்டினால் சேர்ந்தவண்ணம் மேல் நோக்கினால் அன்பின் வழியாக கங்கை வெள்ள்ம் பெருகும். இந்த அன்பு செய்யும் முறை உடலின் உயிரை அழியாது காக்கும்.

713. மனம், புத்தி, அகங்கரம், சித்தம் என்ற அந்த காரணங்கள் நான்கையும் பாசவழியின்ரி பதிவழியில் செலுத்தினால் காக்கமுடியும். அந்தகாரணங்கள் நன்மை செய்வதால் சந்திர கலை பதினாறும் நிலைத்து நிற்குமாறு காக்கலாம். பாசம் கொண்ட மனம் சிவ ஒளியைப் பற்றி நின்றால் பிராணனும் அதனுடன் கலந்து வானத்தில் கருத்தூன்றி நிற்கலாம்.

714. சுழுமுனையில் சென்ற காற்று, காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட விளக்கைப் போன்றும் அசைவற்ற மலையைப் போன்றும் அசைவின்றி நிற்கும். சந்திர கலையில் பதினாறில் சிவசக்தி இருப்பதை அறிந்தால் மனமும் அசையாமல் நிற்கும்.

715. எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் பூத நாயகன் பிராணன் மற்ற சிறு நாடிகளில் மாறிச் செல்லாமல் நடுநாடியில் ஒன்றி நிற்கும் நிலை அடைந்தால் கதிர்களாகிய சடையுடன் கூடிய சங்கரன் விந்து மண்டல காளையில் ஏறி அமர்ந்திருப்பான்.

716. சமாதியில் நின்றால் காலங்கள் ஏதும் அறியா நிலை ஏற்ப்டும். வரும் காலத்தின் பெருமைதனை எதிர் நோக்கி சுழுமுனையில் ஒன்றி, ஆயிரம் இதழ் தாமரையில் பொருந்தி செருக்கு இல்லாது இருந்தால் சாதகன் ஆவான்.

717. சாதகமான அத்தன்மையை நோக்கி ஆராய்ந்து வழிபடுங்கள். அவ்வாறு செய்து மூச்சுக்காற்றை ஆயிர இதழ் தாமரையில் உள் புகும்படி செய்வது, இரசவாதம் செய்யும் வாத குளிகையினைப்போல் உடலில் ஏற்படும் குறைகளை நீக்க உதவும்.

718. அப்படி அடைந்த பயன் இம்மையின்பம், மறுமையின்பம், வீடு என்ற மூன்றாம். உள நாடியான சுழுமுனை நோக்கிச் சென்ற ஜீவன் ஆயிரம் இதழ் தாமரையில் பொருந்த அந்த சோதி மூலமான சிவத்துடன் பெருந்தும்.

719. தனக்கு என எந்த ஆதாரமும் இல்லமல் தான் மற்றவற்றிற்கு ஆதாரமாய் இருக்கும் பராசக்தி உடலில் வழி செய்து எனக்குள்ளே இருப்பாள். தேவர் உலகிற்கும் தாயான சக்தி விருப்பமுடன் இன்பம் தரும் ஒளியில் ஆழ்ந்து திளைக்கும் சிவயோகியின் உடல் சிவாலயம் ஆகும்.

720. நிறைந்து இருக்கும் பிராண வாயு ஒடுங்கும் தன்மையை யாரும் அறிவதில்லை. அது ஒடுங்கும் நிலையை அறிந்த பின்பு காற்று கலந்த வான் மண்டலத்தில் இருந்து சிவபேரொளியில் கலந்து ஒன்றாகலாம்.

721. உயிர் ஒட்டமுள்ள காற்று என்ற சிவன் குண்டலினியை விட்டுப் பிரிந்து மேற் சென்றால் சிவ யோக சமாதி உண்டாகும் என்பதை சோதனை செய்து உண்மையை மாசு இன்றி தெரிந்து கொள்ளலாம்,. சிவகுருநாதனை வணங்கிப் பெரும் செல்வத்தை அடைந்ததைப் போல் பாது காப்பீர்,

722. இடைகலை, பிங்கலை என்ற இருநாடிகள் வழி மேலெழுந்த பிராணனை உச்சியில் அசையாது நிறுத்தி அமுதத்தை புசித்தால், நீரிலும் ஐலத்திலும் தலா ஆயிரம் ஆண்டுகள் சமாதியில் இருந்தாலும் உடலுக்கு அழிவு இல்லை.. இது சிவபெருமானின் மீது ஆணை.

723. சுழுமுனையில் பொருந்தியவர்க்கு பேரொளியான சிவன் குண்டலினியும் பிராணனும் தன்னை விட்டுப் பிரியும் காலத்தில் ஓசை என்ற வான் பூத தன்மாத்திரையில் வெளிப்படும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம், எரித்தல், சேர்த்தல் என்ற ஏழும், ஒளியில் ஏற்படும் சுவை, ஒளி, நாற்றம், வெம்மை, எரித்தல் என்ற ஐந்தையும், மூக்கிடம் பொருந்திய நாற்றம், உயிர்ப்பு, உணர்தல் ஆகிய மூன்றையும் நாவில் பொருந்திய உணவை எடுத்தல், சுவைத்தல் என்ற இரண்டையும் ஒடுக்கி சுவை உண்டாகாமல் செய்வான்.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:39

அட்டமாசித்தி!

Written by


ஓம்நமசிவய!

உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யுறுதியாகத்
தள்ளரிய அன்பென்னுந் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுக்ட்பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்
வெள்ள மதம்பொழிச் சித்தி வேழத்தை நினைந்து வருவினைகள் தீர்ப்பாம்.

#####

அட்டமாசித்தி!

640. ஒருமித்த மனத்துடன் எட்டு திசைகளிலும் மேலான பொருளாய் விளங்கும் சிவனை அவனே பரம்பொருள் என்று ஆராய்ந்து அந்த எட்டு திசைகளிலும் அச்சிவத்தை வணங்கி எட்டு சித்திகள் அடைந்து அட்டமா சித்திகளை தம்முள் நிலைப் பெறச் செய்யுங்கள்..

641 தேவர்களின் பண்பிற்கு ஏற்றவாறு வழங்கும் பண்புடைய சிவன் திருவடிகளை அடைக்கலம் என்ற குற்ற மில்லா தூய்மையான பரவெளியைக் கண்டதால் எனக்கு அதைவிட அரிய பொருள் இல்லை. எட்டு பெருஞ்சக்திகளை அருளி எனக்கு பிறவியை நீக்கி அருள் செய்தான்.

642 .குருவின் அருளினால் மூலாதாரத்தில் உள்ள குண்டலி சக்தி சிவசக்தியுடன் பொருந்தி குறீவழியாக வெளியே போவதைத் தடுத்து நல்ல சமய்த்தில் தியான முறையின் சாம்பவி, கேசரி முத்திரைகளில் ஒன்றைக் கொண்டு அரிய சிவசக்தியை அடைந்து அதன் பேறாக எட்டு சக்திகளை அடையலாம்.

643. ஆகாசம் முதலிய ஐந்து பூதங்கள் கலை, காலம், மாயை ஆகிய தத்துவங்களில் சேராமல் அகன்ற ஆன்ம அறிவை பொருந்தி நீங்காத சக்தியுடன் சேர்ந்தால் மேன்மையான உடலை பெறலாம்.

644. இருபதினாயிரத்து எண்ணூறு பேதங்களை உடைய கன்ம யோகக் உடல் உழைப்பிற்கானது.. அரிய இவற்றை அட்டாங்க யோகத்தினுள் அடக்கினால் எட்டுப் பெருஞ் சித்திகளை அளிக்க வல்லவை.

645. சந்திர நாடி இடைகலையில் பன்னிரண்டு அங்குலம் அளவு இழுக்கப்பெரும் மூச்சு பிங்கலை வழி வெளிப்படுதல் நான்கு அங்குல அளவு போக மீதம் எட்டு அங்குல அளவு உள்ளே தங்கும். இதை பன்னிரண்டு ஆண்டுகள் உலகப் பற்றின்றி கவனித்தால் உறுதியான எட்டு பெருஞ் சித்திகளை அடையலாம்.

646. உயிர்களுடைய உறவினர்கள் சூழ்ந்து இருந்தால் அது பந்தமாகும். மிக்க கலை அறிவு, நுட்ப அறிவு, நிறைந்த அறிவு இவற்றினால் எண் பெருஞ் சித்திகளை அடைய முடியாது. பேதமாய் பெருகும் ஒலியை பன்னிரண்டு ஆண்டுகள் கேட்பதே சித்தியை அளிக்க வல்லது.

647. நாத தரிசனம் கிட்டப்பெற்றவர் ஏழு ஆண்டுகளில் சண்டமாருதம்போல் செல்லும் வேகத்தை அடைவர். நடை தளராமல் பல மைல்கள் செல்லும் வலிமையை அடைவர். எட்டாம் ஆண்டில் நரை மூப்பு தோன்றாது. அடுத்த ஆண்டில் அயல் உடல் புகுதல் நிகழ்த்தலாம்.

648. பத்து ஆண்டுகள் கீழே போகும் சக்தியை மேலே நிரப்பியிருந்தால் உருத்திரன் போல் விளங்கலாம். பதினீராண்டில் எட்டு சித்திகளும் ஏற்படும்.மேல் கீழ் உலகங்களில் சஞ்சரிக்கும் வல்லமை படைத்தவராக பன்னிரண்டாண்டில் விளங்குவர்.

649. தானே அணிமாவும், பெரிய மகிமாவும், கனமான கரிமாவும், இலேசான இலகிமாவும், அழியாத உடலைப் பெறுதலான பிராத்தியும் அயல் உடலை அடையும் ஆற்றலான பிராகாமியமும் உண்மையான ஈசாத்துவமும். தன் வயம் செல்லும் தத்துவமும் ஆகியன எட்டு சித்திகள்.

650. சிவயோகியானவன் அணுவின் தன்மையை அடைந்து பல உயிர்களைத் தாங்கிய காலத்தும் அவற்றை ஒடுக்கிய காலத்தும் மாற்றம் ஏதுமில்லை. சித்திகளை உடைய அவற்றுள் அப்போது மேல் எழுந்த ஓம் என்ற நாதம் சகசிர தளத்தை அடைந்து மேலே எழுந்து சென்ற விதமே முக்தி அடைந்தாகும்.

651. கதிரன் தோற்றம் முதல் முந்நூற்று அறுபது என்பது பகல் முப்பது நாழிகை ஆகும். பகற் காலத்தில் படைப்புக் கிராமம் ஆகாசம், காற்று, தீ, நீர், நிலம் எனவும் இரவுக் காலத்தில் நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம் எனவும் அறிந்து விடியலில் கதிரவன் தோற்றத்திற்குமுன் ஆறு நாழிகையும், பின் ஆறு நாழிகையும் பிரணவ யோகத்திற்கு பயன்படுத்தி கொப்பூழ் தாமரையில் உள்ள கதிரவனைத் தலைக்கு கொண்டு போனால் விந்துவும், நாதமும் அமைவதை அறிவர்.

652 மனம் வெளியில் செல்லாமல் மாறுபட்டு சிவமாகி முக்தியை ஆராய்ந்து அடைந்த பிரணவ வழிபாட்டால் சிவனுடன் கூடிய முத்தர் ஆவர். ஐம்பொறிகளுக்கும் தொடர்பில்லாதவர்கள் ஆதலால் மனத்தூய்மை பெற்று. அறிவு என்ற வானத்தில் தத்துவம் யாவற்றையும் விட்டு சிவத்துடன் பொருந்தியிருப்பர்.

653. ஒன்றை ஒன்று மிகாமலும் குறையாமலும் ஒன்பது (பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன்) வாயுக்களும் இயங்க வேண்டும்.. இந்த ஒன்பதைத் தவிர பத்தாவதான தனஞ்சயன் என்ற காற்று ஒத்து இயங்கும் தன்மையிடையது. ஆதலால் இந்த ஒன்பது வாயுக்களுடன் தனஞ்சயன் கூடியிருந்தால் உடலும் உயிரும் நீங்காது இருக்கும்.

654. தனஞ்சயன் வாயு மற்ற வாயுக்கள் உள்ள ஒன்பது நாடிகளில் (இடைகலை, பிங்கலை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புசை, சங்கினி, குரு) பொருந்தியிருக்கும்.. அது இருநூற்று இருபத்து மூன்றாவது புவனமான அகந்தை மண்டலத்தில் பொருந்தியிருக்கும். அது இல்லாவிடில் உடல் வெடித்துச் சிதறிவிடும்.

655. உடலில் வீங்கும் கட்டி, புண், குட்டம், வீக்க நோய்கள் ஆன சோகை, காலில் வாதம், கூன், முடம், கண்ணில் பொருந்தி வீங்கும் நோய்கள் ஆகியவை தனஞ்சயன் மாற்றத்தால் ஏற்படுபவன

656. கண்களில் உண்டாகும் ஆணிகள் என்ற பூக்க்கள், காச நோய் ஆகியவை தன்ஞ்சயன் வாயுவால் ஏற்படுவதில்லை. கூர்மன் என்ற வாயு பொருந்தியிருக்காவிடில் கண் நோய் உண்டாகும்.

657. கண்கள், இருதயம் ஆகியவற்றில் நாடியின் ஓசை விளங்கும். சிறு துடி அளவிற்கு ஒலியை உண்டாக்கும் சுடரான பேரொளியை தேவர்கள் தலைவர்களாகிய உருத்திரன், திருமால், நான்முகன் ஆகியோர் இடைவிடாமல் அங்கே பொருந்தி உணர்ந்திருப்பர்.

658. இருகண் துளைகள், இரு காது துளைகள், இரு நாசித்துளைகள், ஒரு வாய்த்துளை ஒரு குதம், ஒரு குய்யம் ஆகிய ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் இடைகலை முதலிய ஒன்பது நாடிகள் ஒடுங்குவதற்குரிய இடம் சுழுமுனையாகும், அவை அங்கு தங்கியிருக்க தவம் செய்ய வல்லவர்க்கு உடல் நன்மை அடையும்.

659. சிறந்த குண்டலியான தீயின்கீழ் சுழுமுனை நாடியை செல்லும்படி செய்து கதிரவன் –இடதுகலையில் இயங்கும் பிராணனை சந்திரன் வலதுகலையில் செல்லும்படி செய்து ஏழு உலகங்களையும் தாங்கும் வையில் யோக நெறிய்யை அடைவர்.

660. பிரமந்திரத்தால் விளங்கும் சிவசக்தியை நாடி வலையில் அகப்பட்ட மானைப் போல் சந்திரகலை சூரியகலையில் செல்லாது மூச்சுக் காற்றை சுழுமுனையில் செலுத்தினால் விலைக்கும் உண்பதற்க்கும் சேர்த்து வைத்த விதைபோல் பயன்படுவர்.

661. மூலாதரத்திலிருந்து மேலே சென்று சகசரத/ளத்தில் சிவமான பொருளைக் கண்டு வணங்கியவர் அங்குள்ள நாடியில் உள்ளே நாதத்தை எழுப்புவர். அங்கே உண்டாகும் அமுதத்தை உண்டு உடலில் உள்ள காம குரோதம் முதலிய பகைவர்களைச் சிறைப்படுத்துவர்.

662. சகசிரதளத்துடன் கட்டப்பட்ட சுழுமுனை நாடியில் உயிர்களை உலகில் பிறவிக்கு ஆட்படுத்தி தொழில் செய்யும் ஒன்பது (வாமை, சேட்டை, காளி, ரௌத்திரி, கலவிகராணி, பலவிகராணி, பலப்பிரமதனி, சர்பூததமனி, மனோன்மணி) சக்திகள், உயிர்கள் பக்குவப் பட்டால் தன் செயல் அற்று சக்தியுடன் பொருந்துவர். அச்சமயத்தில் மூலாதரத்தில் இயங்கிக்கொண்டிருந்த குண்டலினி தொண்டைச் சக்கரம் வழி ஆக்ஞை சக்கரத்தை அடையும்போது முழு சக்தியாய் விளங்கும்.

663. பராசக்தியே ஏழு கண்னியராய் இச்சா, ஞானம், கிரியை ஆகிய சக்திகளால் இருபத்தொருவர் ஆகி அவர்கள் ஐந்து தொழிலுக்கும் நூற்றுஐந்து கன்னியர் ஆயினர், திருமால், நான்முகன், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்ற ஐவருக்கும்தொழிலாற்றக் காரணமாகி இருப்பாள் பராசக்தி.

664. vவிரிந்து நின்ற பராசக்தி ஒடுங்குயபோது பலவித போகங்களை விளையும்படி செய்வாள். மறைந்து சிவத்துடன் நின்று பின் ஒடுங்கியிருந்தால் பூமி முதலிய பூதங்களும் ப்ரவி பின் ஒடுங்கி விடும். தீ மேல் எழும் நாதத்தால் ஓங்கி விளங்குவாயாக.

665. நாதத்தில் ஒடுங்கியவர்க்கு இடைகலை, பிங்கலை அடைபட்டு சுழுமுனை திறக்கும்,. மூச்சு மெல்ல இயங்கும். ஆறு ஆதாரங்களும் ஏழு சக்திகளும் நீங்கிச் சந்திர மண்டலத்தில் புருவத்தின் நடுவில் விந்துத் தானத்தில் அடங்கும்.

666. மனது ஒருமை அடைந்து ஒடுங்கி புருவத்தின் நடுவில் இருந்தால் மூச்சுக்காற்று கட்டுப்பட்டு நிற்கும். வெளி நோக்கம் இல்லாது அக நோக்கம் கொண்ட உயிர்க்கு கடமை செய்ய பெருமான் தன்னையே அறியச் செய்வான்.

667. சுழுமுனை பாயும் இடத்தில் நாத ஒலியுடன் சென்று அங்கு நிலை பெற்றுள்ள சிவசக்தியை சேர்ந்து மனதில் உள்ள இருள் என்ற பகைவனைக் காட்டும், சுழுமுனையே தூண்டா விளக்காக அமையும்.

668. அணுவில் அணுவாதல், பெரியதில் பெரியது ஆதல், அசைக்கமுடியாத கனம் ஆகுதல், புகைபோல் இலேசாகுதல், மேல் உள்ள வானைத் தொடுதல், எல்லா பூதங்களிலும் கலந்து எழுதல், உயிர்களுக்கு கருத்தா ஆகுதல், எல்லாவற்றையும் வசியம் செய்து தானாக இருத்தல் ஆகிய எட்டுமே அணிமா முதலான சக்திகளாகும்.

669. அட்டாங்க யோகத்தால் மூச்சுக்காற்றை அடக்கி ஆண்டால் எண்பெரும் சித்திகளும் சித்தியாகும். மூலாதாரத்தில் உள்ள குண்டலியானது சுழுமுனை வழி போய் அக்னி, சந்திர மண்டலம் கடந்து மேல் உள்ள சந்திர மண்டலத்தில் அமுதத்தை உண்ணலாம்.

670. அட்டாஙக யோகத்தால் பெருஞ்சித்திகள் எட்டு மட்டுமின்றி ஞானங்கள் எல்லாம் வெளிப்படும். எண் வகையான சித்திகளும் தானேயான திரிபுரைச் சக்தி அருளினால் இயல்பாகவே சித்தியும் புத்தியும் உண்டாகும்.

671. எட்டி சித்திகளுடன் எல்லாம் வல்ல பரஞானம் கைவரப்பெற்றால் அவர் சித்தர் ஆகலாம். அவர்கள் சிவலோகத்தை அடைந்தால் அவர்களின் விரும்பும் பொருளான சிவத்தை கண்டு அவருடன் சேர்ந்திருப்பர்

672. சிரசில் சந்திர சூரிய கலைகளை மாற்றி அடித்த தளையைப் போன்று சுழுமுனையை ஆக்கி, விந்துவின் நிக்கம் இல்லாது இருப்பவர்க்கு நரம்பில்லாத பிரணவ உடல் பெற்று விரும்பிய நல்ல உலகத்தை அடைவர். அந்த உலகத்தில் அணிமா முதலிய எட்டு சித்திகளை அடைவர்.

673. விந்து சேர்த்து வைத்து ஓர் ஆண்டு யோக முயற்சியில் இருந்தால் புக்ழ்மிக்க அணிமா என்ற சித்தி கிட்டப்பெறும். அது கைவரப்பெற்ற சித்தனும் நுட்பமான பஞ்சைவிட நுட்பமாய் மெலிந்து இருப்பவனை வெல்ல முடியாது.

674. ஆக்கத்தை தரும் பராசக்தியுடன் மூலாதாரத்தினின்று மேலே போகும் எல்லாத் தத்துவங்களும் அந்த சக்தியே ஆதாரமாய் இருந்து செல்லும் காலத்தில் தனது வயப்பட்டு இருந்தால் ஐந்து ஆண்டுகளில் ‘இலகிமா’ வசப்படும்.

675. இலகிமா என்ற சித்தியைப் பெற்று இறைவனைக் கண்டபின் தானே ஒளியாய் விளங்கி அந்த ஒளியுடன் திகழ்ந்திருப்பான். பால் ஒளியாக பரவி நின்ற ஆன்மா எல்லாவற்றிற்கு மேலான சிவபரம் பொருளைத் தரிசிக்கும்..

676. மெய்ஞானம் உணர்த்திய அருட்சக்தியோடு தத் எனப்படும் சிவம் கூட மறைந்த பொருளாகிய மகிமா ஓர் ஆண்டில் உள்ளங்கையில் உள்ள பொருள் போன்று கிட்டும்.

677. இடகலை பிங்கலை என்ற நாடிகளுடன் சேர்ந்த சுழுமுனை தலையில் மேலே சென்று அங்குள்ள ஒளியைக் கண்டபின் ஆகின்ற காலங்கள் அழியாது. இனி வரப்போகும் காலத்திற்கு வெளியே நின்று மற்ற தத்துவங்களை தன் வ்ழியாக்கும்.

678. மகிமா சித்தி பெற்றவனால் ஞானம் தழைத்திடும். உலகம் துயர் நீங்கிச் செழுமை அடையும். தன் வாயிலாக செழுமையுற்ற பொருள் எல்லாம் தன் வயப்பட்டு நிற்க அவன் சிவனருள் வசப்பட்டு நிற்பான்.

679. பராசக்தியுடன் தூலமாய் காணப்படும் பொருள்கள் யாவும் நுண்மையாய் ஒடுங்கி நிற்கும். அந்த நுண்ணிய ஒளிப் பொருள்களை கண்டு ஓர் ஆண்டு தாரணை செய்தால் அதன்மூலம் சித்தி ஏற்பட்டு வேண்டியதை அடையச் செய்யும்.

680. மின் ஒளியைக் கண்டபின் விரிந்த ஆயிரம் இதழ் தாமரையில் உலகப் பொருள்களின் விரிவைக் காணலாம். அப்போது பொருந்தும் கால தத்துவம் புரம்பாக நிற்கும். கழிகின்ற காலங்கள் கழிந்து போகாது.

681. மின்னொளியைக் கண்டபின் எங்கும் போக வேண்டியதில்லை. வருவதும் இல்லை. இறப்பும் இல்லை. ஆதலால் பிறப்பும் இல்லை. தாமதம், இராசதம், சாத்துவிகம் ஆகிய மூன்று குணங்கள் இல்லை. உண்மை உணர்வதற்கு பிரமந்திரத்தின் உள் தொளையான சுழுமுனையில் விளங்கும் பலவகை ஒளிகளையும் அறியலாம்.

682. பராசக்தியுடன் ஆன்மா பொருந்தியிருந்தால் தத்துவக் கூட்டங்களை அமைக்கும். பூதக் கூட்டங்கள் நீங்கும். உள்ளம் ஒருமையுடன் பராசக்தியைச் சேர்ந்து இருந்தால் பரந்த அயல் உடல் புகுதல் யோகிர்க்கு அமையும்.

683. ஆன்மாவிடம் தன்னை விளக்கிக் கூறும் ஒளி இருப்பதை அறியாதவர்கள் மூலாதாரத்தில் மூலக்கனலை உடையவர் ஆவார். அதனை ஒலி ஒளியாக தரிசித்திருப்பவர்க்கு சிரசிற்குமேல் விளங்கும் சிவ ஒளியும் அதனால் வீடு பேறும் எளிதில் கிட்டும்.

684. உயிர்களிடம் நிலை பெற்றிருக்கும் சிவ சக்தியுடன் நுண்ணியமாக புலப்படும் ஒளி அணுக்கள் எல்லாம் தலைக்குமேல் உள்ள விந்து மண்டலத்தில் வெவ்வேறு வகை ஒளியாக பாய்வதை ஓராண்டு செய்தால் பழைய உடலில் பொருந்தி உள்ள சதாசிவ தத்துவம் அடையப் பெறுவர்.

685. வளரும் சக்தியின் ஒளியை நடு நெற்றியில் அமையப் பெற்றவன் சந்திரன் போல் தன்மையுடையவன் ஆவான். வளரும் சந்திர கலை முழுவதும் பெற்று விட்டால் சந்திரகலை விளங்கப் பெற்ற சிவன் சதாசிவ நிலையைப் பெற்றவன் ஆவான்.

686. ஈசத்துவம் பெற்றவர் படைப்புத் தொழிலைச் செய்ய வல்லோர் ஆவர். அவரே காத்தலைச் செய்பவர். அவரே அழித்தலையும் செய்யும் வல்லவர். அவரே தமக்குத் தாமே நிகரான தன்மையுடையவர் ஆவர்.

687. குளிந்த கதிர்களுடன் கூடிய சந்திர கலையில் விளங்கும் பலவகை பஞ்ச பூத அணுக்களை ஓர் ஆண்டு காலம் வேறு வேறாக காணாமல் பால் வண்ணனின் நீல ஒளியைக் கண்டால் ஆன்மா சிரசின் மேல் ஒளியாய் விளங்கும்.

688. உண்மைப் பொருளாய் தாரணை முதலியவற்றால் உண்டாவது நல்லது என்று பாராட்டப்படும் கவர்ந்திடும் தனமையாகும். தன் விருப்பின்படி நடக்கும் உயிர் இனத்திற்கு எல்லாம் சிவமான தன்மையுடையவன் ஆவான்.

689. சிறப்பாகச் சிவத்தனமை பெற்ற சித்தன் நுண்மையானதாகிய தன் ஆன்மாவை அறிந்து பொன்னொளியுடன் கூடிய உடலைப் புலன்களின் குறும்புகளின்று விடுபட உலகிற்கு நன்மை செய்யும் சதாசிவ நாயகியைக் காண்பான்.

690. நல்ல கொடியைப் போன்ற நன்மையைச் செய்யும் சதாசிவ நாயகியுடன் அக்கொடி போன்ற சக்தி தன்னிடம் ஓராண்டு நிலை பெறுவதற்கு தியானம் செய்பவன் பொன்னொளி என்ற உலகங்களில் நினைத்த போது சென்றுவருகின்ற காமேசுவர தன்மையை அடைவான்.

691. யாவற்றையும் தன்வயப்படுத்தும் தன்மை வந்தபின் ஆயிரம் இதழ் தாமரையில் தங்கியுள்ள உருவான ஒளிகள் அதனதன் தன்மைக்கு ஏற்ப புவனங்களாய் ஆகிவிடும். அருட்சக்தியானது வாசித்துவம் கைவரப் பெற்றவரிடம் விளங்கும் சக்தியுடன் வேறுபாடின்றி வாக்கு ரூபமான ஒளித்தனமை பெற்று நாயகானாய் விளங்கும்.

692. நாயகன் தன்மையுடைய சிவப்பேரொளியைத் தரிசித்தபின் அந்த ஒளியை தாய் வீடாக நினைத்து மகிழ்ச்சியுடன் இருப்பான். எல்லா உலகங்களையும் போய்க் கண்டவன் உடலுள் பேய்கள் போன்ற காமம் குரோதம் ஆகியவற்றுடன் வாழும் மற்ற உலகங்களுக்கு சித்தி அடைந்தவன் செல்ல விரும்பமாட்டான்.

693. பேரொளியான இறைவனை உலக ஒளியைக் காண்பது போல நடுக்கம் இல்லாது கண்டவன் ஆன்ம ஒளியுடன் பூமண்டலம் முழுவதும் விஷ்வ வியாபியாக ஒரே ஒளியாக பிராண ஒளியைக் காண்பான்.

694. சுழு முனையில் மின் ஒளிபோன்று விளங்கும் பராசக்தியின் ஒளியுடன் நின்று அதற்கு தொடர்புள்ள ஐநூற்றுப்பதி மூன்றிலும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை. ஆகியவற்றில் சுழுமுனை இடைகலை பிங்கலையுடன் அனுசரித்து நிற்கும். இடைகலை, பிங்கலை, காந்தாரி, அத்தி, புடை, சிங்குவை, சங்கினி, பூடா, குரு, சரஸ்வதி ஆகிய பத்து நாடிகளும் இந்த பத்து நாடிகள் வேறு ஐநூறு நாடிகளுடன் கலந்து ஆகமொத்தம் ஐநூற்றுப் பதிமூன்று) கலந்து நிற்கும். அதாவது சுழுமுனையின் ஆளுமை ஐநூற்றுப் பதிமூன்று நாடிகளிலும் உள்ளது.

695. அமிர்தத்தைப் பெருக்கும் தலையில் நிரோதினி கலை உள்ளது. அமுதத்தைப் பெருக்கி மாற்றம் செய்வதற்கென உள்ள ஆயிரத்து முந்நூற்று ஐந்து நரம்புகள் வழியே மேல் நிலையில் உள்ள ஆயிரம் இதழ் தாமரைக்குச் செல்ல வழியாகும். இந்த வழியைக் கொண்டு உயிரை வளர்ப்பது சிவசக்தி இர்ண்டாகும்.

696. சிவ தத்துவத்தில் சுத்தவித்தை மகேசுவர தத்துவத்திற்குமேல் சதாக்கியத்தில் இருக்கும் மனோன்மணியான சதாசிவ நாயகி இடைகலை பிங்கலை என்ற இரண்டு நாடிகளின் வழி தலைக்குச் சென்று விளங்கும். இரு நாடிகளும் ஆயிரம் இதழ் தாமரையை அடைந்து விரியுமுன் ஐம்பத்தொரு எழுத்துக்களாய் உணர்த்தப்பட்டு ஆதாரங்களை கடந்து உருவாகி இருக்கும். யோகியின் காலத்தைக் கடக்கச் செய்வது ஐந்து முகம் கொண்ட சதாசிவநாயகி ஆகும்.

697. பத்து திசைகளும் பத்து முகங்களும் உடைய சதாசிவ நாயகிக்கு பிராணன் முதலிய பத்து காற்றுகளும் பத்துக் கருவிகளாகும். ஐந்து முகச் சக்திக்கு இவைகளின்றி கவிழ்ந்த ஆயிரம் இதழ் தாமரை நிமிர்ந்த ஆயிரம் இதழ் தாமரை என்ற இரண்டும் கருவிகளாகும். இந்த சதாசிவ நாயகியின் ஆற்றலானது விரிந்த ஆயிரம் இதழ் தாமரையில் விளங்கி திக்குகளையும் காற்றுகளையும் கடக்கத் துணை செய்யும்.

698. எங்கும் பரந்துள்ள பராசக்தி சுழுமுனை நாடியில் பொருந்தி செல்லும் வகை யாதெனில் கவிழ்ந்த தாமரையை விரிந்த தாமரையாக மாற்றி அமைத்துக் காலத்தில் விளங்குபவளாகவும் காலத்தைக் கடந்தவளாகவும் விளங்குவாள்.

699. தலையின் முன் பக்கத்தில் இருக்கும் நிமிர்ந்த ஆயிரம் இதழ் தாமரையில் உள்ள பராசக்தியுடன் முன் செல்லும் வாயுவானது, ஐம்பதொரு எழுத்துக்களுடன் ஆறு ஆதாரங்களை இயக்கிக் கொண்டிருந்த ஐமுகச் சக்தி பராசக்தியாகி முன்னர் இருந்த காற்று அடங்கும் நிலயை அடையும்

700. ஆராய்ந்து அளவிடமுடியாத ஒப்பில்லா பராசக்தியுடன் காற்றின் அளவை ஆராய்ந்து அறிந்தால் அந்தக்காற்று ஒரு நாளைக்கு ஐநூற்று முப்பதொன்றாய் குறைந்து ப்ராசக்தியுடன் ஒன்றாய் கலப்பதால் மூச்சு நீண்டு மெல்ல விடுவதால் ஆயுள் நீடிக்கும்.

701. செல்வமாக விளங்கும் ஒளிமண்டலத்தை தாண்டி இருக்கும் சிவனிடத்து செல்வமாய் இருக்கும் மூச்சுக் காற்று இயங்கும் தன்மையில் இருநூற்று முப்பத்ட்டாகக் குறைந்து பிரணவத்தை நடத்தும்.

702. மூலாதாரத்திலின்று எழுகின்ற பேரொளியுடன் இருக்கும் பராசக்தியிடம் சுழுமுனை வழி பாயும் மூச்சுக் காற்று நான்கு இதழ்களையுடைய மூலாதாரத்தில் இருக்கும் தீயே பேரொளியாய் மாறி எழுநூற்று இருபத்து ஒன்பது நாடிகளிலும் கலந்து இருக்கும்

703. ஆறாம் கலையான நிரோதினி சக்தியை நெற்றியின்மேல் பாகத்தில் தியானித்தால் புகை போன்ற நிறம் தோன்றத் தொடங்கி ஏழாம் சந்திரகலையைப் பெருக்கி யோகியை இரண்டு மடங்கு ஆனந்தத்தில் மூழ்கச் செய்து எட்டாம் இடமான நாதாந்தத்தில். மனம் எண்ணுவதை விட்டு உணர்தல் என்ற நிலையில் ஒன்றி ஒன்பதாம் நிலையான சக்தி கலையில் உடலை இய்க்கிவந்த மூச்சுக் காற்று அடங்கும்.

704. சந்திரன், சூரியன், ஆன்மா மூன்றும் விளங்கும் நிமிர்ந்த ஆயிர இதழ் கமலத்தில் சந்திரகலை இருப்பதை உணர்ந்து உலகில் உயிர்வாழும்போதே சிவ ஒளியுடன் சீவ ஒளியைச் சேர்த்து சமாதி நிலையில் இருக்கும் யோகி சுழுமுனை உச்சியில் உணர்ந்து உணர்ந்து சிவம் என்ற நிலையை அடைவான்.

705. ஆசை அழிதல், சுற்றத்தவாரிடமிருந்து விலகியிருத்தல். பணிவைத்தரும் சிவஞானம், பதிஞானம் மிகுதல், சுருங்குதலைஉடைய வாயினர் ஆதல், பேச்சு அடங்குதல், சித்தி பெறுதல், தொலைவில் நடப்பதைக் கேட்டல், நுண்மையாக மறைந்திருத்தல், காற்றை மேலே செலுத்துதல் ஆகியவற்றை யோகியர் அறிவர்.

706. இறப்பு மூப்பு ஆகியவற்றைக் கடத்தல், அயல் உடலில் புகும் ஆற்றலைப் பெறுதல். பாதுகாப்பான பிரணவ உடலைப் பெறுதல், மூண்டு எழுகின்ற சிவ சூரியனை பற்றிய கேள்விஞானம் அடைதல் ஆகியவற்றையும் யோகியர் அறிவர்.

707. கடலால் சூழ்ப்பட்ட உலகத்தை வலமாய் சுற்றி வந்து கால் வருத்தம் அடைய தல யாத்திரை செய்வதால் பயன் ஏதுமில்லை. அன்புடன் இறைவனைக் கண்டு ஆனந்தம் அடைபவர் தலைவன் எங்கும் இருக்கின்றான் என நினைத்து வழிபட்டு பயன் அடைவார்.

708. மூலாதாரத்திற்கு மேல் உள்ள சுவாதிட்டானத்தில் நான்முகனும், மணிபூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் உருத்திரனும், இருக்க அதற்குமேல் நெற்றிமுதல் தலை உச்சிவரை பரந்துள்ள சிவ அம்சமான சதாசிவனும் சதாசிவ நிலைக்கு மேல் உள்ள பரநாத நாதாந்தமும் கடந்து அருள் வழங்குவது சிவசக்தி.

709. ஆறு ஆதரங்களுக்குரிய தேவதைகளுடன் பொருந்தி பரை பொருந்தும் பரனோடு மேதை முதலான பதினாறு கலைகளின் பிரசாத நெறியின்மேல் விளங்கும் ஒளியில் வாக்கும் மனமும் இறந்து எண்ணம் அற்று நிற்கின்ற நிலையே ஆனந்த யோகம்.

710. சந்திரகலை, சூர்யகலை பொருந்தியுள்ள சுழுமுனையின் உச்சியில் சிவனைத் துதித்து வணங்கினால் தேவர் ஆகலாம். பிரசாத நெறியில் முறைப்படி உண்மைப் பொருளை நாடிப் போகின்ற அடியார்க்கு நிலைத்த முக்தியை அளிக்கும் இறைவனும் அருள் செய்வான்.

711. உயிர்ப்பு நிலைக் கட்ட வல்லார்கள் எங்கும் மறைந்து நின்று இருக்க வல்லவர்கள். தேன் மிக்க தாமரை சுவாதிட்டானம் மூலாதாரத்தில் சேர்க்கையை ஏற்படுத்தி உச்சித்துளையில் மோதும்படி செய்து ஐம்பொறியறிவு நீங்கி சுழுமுனையிலே நின்று அங்கு நடம் புரியும் சிவனை அறிந்தவற்கு யமன் இல்லை.

#####

செவ்வாய்க்கிழமை, 21 April 2020 09:37

அட்டாஙக யோகப்பேறு!

Written by

ஓம்நமசிவய!

அகரமென அறிவாகி உலகம் எங்கும் அமர்ந்து
அகர உகர மகரங்கள் தம்மால்
பகருமொரு முதலாகி வேறும் ஆகிப்பல
வேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகாரில்பொருள் நான்கினையும் இடர்தீர்ந்
தெய்தப் போற்றுநருக்கறக் கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்!

#####

அட்டாஙக யோகப்பேறு!

632. சகஸ்ர தளத்தில் விருப்புடன் இருக்கும் சிவன் திருவடியை விரும்பியவர் விண்ணுலகை அடைவர். உமையம்மையார் மகிழ நடனம் செய்யும் காளையூர்த்தியானவர் இவன் என்ன வேண்டி வந்தனன் என்று கருதி அவன் விரும்பியதை அருள் செய்வார்.

633. சிவன் திருவடியைப் பற்றி அதன் மீது அன்பு கொண்டு நின்று சிவத்தின் புகழை கற்றும் கேட்டிருந்தும் அதைப்பற்ரிச் சிந்தித்திருப்பவர்க்கு முனிவர்கள் எல்லோரும் எழுந்து நின்று எதிர்கொண்டழைத்து சிவபதம் சேர்வர்.

634. சிவத்தை நோக்கி தன்னை வருத்தி தவஞ்செய்து தேவர் உலகிற்கு தலைவானாக தேவர் உலகம் செல்லக்கூடிய தகுதி உடையவன் இவன் எனக்கூறும்படி முரசும் குழலும் ஒலிக்க இறைவன் அருளால் இந்த உலகத்திலேயே இன்பம் அடைவான்.

635. செம்பொன் போன்ற ஒளியுடைய சிவகதியை அடைந்த காலத்தில் தேவர் கூட்டம் பூரண கும்பத்துடன் வந்து எதிர் கொண்டழைத்து எங்களுடைய பொன் மண்டலத் தலைவன் இவனே என்று பாராட்டுவதால் இன்பச் சேர்க்கையில் கூடியிருக்கலாம்.

636. சிவகதியை அடையும்போது திக்குப்பாலகர்கள் யார் இவன் என வினவ சிவன் நாமே இவன் எனக்கூற அழகுடன் கூடிய தேவர்கள் எதிர்கொண்டழைக்க கருநிறம் வாய்ந்த கழுத்தை உடைய சிவபெருமானை நேரில் கணட பெருமை உடையவர் ஆவர்.

637. நல்வழியை நாடி எமன் வழியை மாற்றிடும் பிரணவ உபாசகரும் யோகியருமான இவருக்கு தேவர் உலகத்தில் உள்ள் எட்டுத் திசையில் எங்குச் சென்றாலும் தேவலோகம் பூலோகம் போன்றே தெரிந்த வழியாக இருக்கும்.

638. அறி துயில் கொண்ட திருமாலும், ஏழு உலகங்களையும் படைத்த பிரம்மனும், வன்மையால் அழித்து அடையாது இருக்கும் உருத்திரனும், அமுதம் உண்டு மகிழ்ந்த தேவர்களும் சிவகதியை பெற்றவர்களே.

639. ஆன்மாவிற்கு ஆன்வ மலத்தின் மறைப்பால் துன்பங்கள் ஏழையும் கடந்து ஆரியன் சிவத்தின் உபாதி ஏழையும் பொருத்தி தொடர்ந்து வரும் சுத்த மாயை கெட்டுவிட தவத்தை மேற்க்கொண்டு தவத்தில் இயங்கும் பொருளை அடைதலே சமாதியின் பயன்.

#####

திங்கட்கிழமை, 20 April 2020 16:20

சமாதி!

Written by

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

#####

சமாதி!

618. இமயம் முதலியவற்றைக் கடைபிடித்து சமாதிவரை செல்லும் முறையைக் கேட்டால் இமயம் முதல் சமாதிக்கு முன் உள்ள சங்கங்கள் கடைபிடிக்கப்பட்டால் எட்டாவதான சமாதி கைகூடும்.. எட்டு உறுப்புகளையும் முறையாய் செய்பவர்க்கு அட்டாங்க் அயோகத்தின் கடைசி அங்கமான சமாதியும் கைகூடும்.

619. விந்துவும் நாதமும் தலையில் உள்ள ஆயிரம் இதழ் தாமரையில் சிறப்பாக விளங்கினால் யோகமான சமதியில் சிவன் பொருந்தி ஞானவடிவான சிவன் பேரொளியாய் புலப்படுவார்.

620. நினைவை கொண்டிருக்கும் மனம் இருக்குமிடத்தில் பிராண வாயுவும் இருக்கும். மனம் நினைக்க வில்லையாயின் பிராணவாயு அசையாது. அம்மனம் நினைப்பதை விட்டு மகிழ்ந்திருக்கும். எண்ணும் மனம் எண்ணாத மனமாகி விடும்.

621. பிளந்து வெளிப்பட்ட ஒளி நீர் ஊற்றையும் அறிவுக் காட்டையும் கண்டு உணர்வு மயமாய் இருப்பவர் செழுமையான சிரசில் பிராணான் என்ற குதிரையைச் செலுத்தி மனம் என்ற கயிற்றால் கட்டுவார்,

622. சிவனை நாடி சிரசின் உச்சியுள் உள்ள சகசர தளத்தில் கண்ணறீவு, காதறிவு, மூக்கறிவு, நாக்கறிவு ஆகியவற்றை பொருத்தி இருப்பவர் பரந்த சகசர தளத்தில்மேல் அகண்டத்தை கண்டதால் யமன் என்ற சொல் கனவிலும் இல்லை.

623. பிருத்வி முதல் உள்ள ஐந்து மண்டலங்களும் அகரம் முதல் உன்மனி இறுதியாக உள்ள பன்னிரண்டு கலைகளும் ஆதாரச் சக்கரங்களில் உள்ள அட்சரங்களை இடமாகக் கொண்ட தேவதைகள் நாற்பத்தெட்டு ஆகியவற்றை நிராதரத்தில் கண்டு சிவயோகி எங்கும் பரந்துள்ள திருவடியைப் பொருந்தி யிருப்பர்.

624. கிணற்றுச் சகடை உதயால் கயிறு மீழும் மேலும் செல்வது போல் செல்லும் வாயுவை பிரமரந்திரத்தால் பொருத்தி தேடி அலைவதை விட்டு விழித்த நிலையில் இருந்தால் சிவக்கனியுடன் அசைவற்று இருக்கலாம்.

625. ஆன்ம வடிவத்தை அறிந்து கொள்ளும் சிறப்பான முறையில் பயன் உண்டு. தேவர்கள் கடலைக் கடைந்து அமுதம் உண்டனர். அதனால் சிரசின் உச்சியில் அமுத பானம் செய்யாதவர் ஆகினர். மனம் அடங்க சிரசின் மேலிடத்தில் பொருந்துவதே சொரூபத்தை அறிவதாகும்.

626. நம்பிக்கைக்கு உரியவனும், முதற் பொருளாக விளங்குபவரும், நான்கு வேதங்களை ஓதியவனும், செம்பொன்னாக விளங்கும் சோதியை போன்றவனும் ஆன சிவபெருமான்மேல் அன்பு கொண்டு ஆசையை அடக்கிச் சகசரதளாத்தில் கலந்து நிட்டையில் இருப்பர்.

627. குண்டலி நான்கு இதகளுடன் கூடிய மூலாதரத்தில் உள்ள முக்கோண் வடிவுடன் அபானன் சக்தி கெட்டு குண்டலினியோடு மேல் எழும்பி உயிருடன் பொருந்தி மூக்குத் துளையின் வழி புகுந்து பிரமரந்திரத்தை நோக்கிச் சென்றால் பெருமை மிக்க அர்த்த சந்திரனில் நெற்றியின் நடுவே உள்ள வடிவில் அர்த்த சந்திரன் முதல் உன்மனி வரை உள்ள கலைகளாய் விளங்கும்.

628. வீணான கற்பனையான எண்ணங்ளையெல்லாம் விட்டு மூல்க்கனலுடன் மேலே போய் சிற்பத்திறனுடைய இப்புவனங்களையெல்லாம் படைத்துக் கொடுத்தருளிய பேரொளி அழகனான சிவத்தைத் நாடி மதி மண்டலத்துடன் பொருந்தி தான் என்றும் சிவன் என்றும் பேதம் இன்றி சாந்தம் பொருந்தியது சமாதி.

629. வாழ்க்கையை மாற்றியவரிடம் ஆன்மா நன்கு விளங்கும். ஆன்மா சிவத்தை சார்ந்திருப்பதால் அதன் சக்தியால் அங்கு கூடியிருக்கும் காமக் குரோதங்கள் அகன்று சமாதி நிலை சேர்ந்தவர்க்கு நடு நிலையானது தானே வந்து சேரும்.

630. ஒளியுடன் ஒப்பிலா சுடராய் விளங்கும் சிவனும் சக்தியும் உள்ளே இருக்கும் மலம் அற்ற ஆன்மாவும் சமாதியில் ஒன்றே. படைப்பிற்கு முதல்வனான நான்முகனும் திருமாலும் ஆதியான சிவத்திடம் அடிபணிந்து என்றும் நீங்கா அன்பைக் காட்டுவர்.

631. சமாதியில் இருப்பவர்க்கு பல் யோகங்கள் கைகூடும். எப்போதும் இறைவனிடம் கூடியிருக்கின்ற சமாதி வேண்டியதில்லை. ஆன்மாவே சிவம் ஆனால் சமாதி வேண்டியதில்லை. சமாதியினால் அறுபத்திநான்கு கலைகளும் வந்து சேரப்பெறுவர்.

#####

திங்கட்கிழமை, 20 April 2020 16:18

தியானம்!

Written by

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.

#####

தியானம்!

598. முன்பு தாரணையில் இரண்டும் எட்டும் கூடிய பத்தாம் மந்திரத்தில் புத்திய்ம் புலனும் நீங்கியிருக்கும் தியானம் சொல்லப்பட்டது. அது வடிவுடன் கூடிய சக்தியை மேலாக எண்ணுதலான சக்தி பரத்தியானம். ஒளியை உடைய சிவனை நினைப்பது சிவத்தியானம். இவ்வண்ணம் யோகத்தில் இரண்டுள்ளது..

599. மெய், கண், நாக்கு, மூக்கு, செவி என்ற ஞானேந்திரியங்கள் கூடுமிடத்தில் நாதத்தை எழுப்பும் அண்ணாக்குப் பகுதியில் எல்லையில்லா பேரொளியைக் காட்டி மனம் வெளியில் செல்லாது தடுத்து பிழக்கச் செய்வது இந்த அண்ணம்.

600. ஞானக்கண்ணில் பொருந்திய சோதியில் கண்களைப் பொருத்திப் பார்த்து சலனம் இல்லாமலிருந்தால் வான் கங்கை புலப்பட்டு சிதகாயப் பெருவெளியில் பெருந்தியுள்ள சுயம்பு மூர்த்தியைப் பார்க்கலாம்.

601. உடலுடன் பொருந்தியுள்ள உயிரை நினையாமலும், உயிருக்கு உயிராக விளங்கும் சிவனை நினையாமலும், சிவன் வீற்றிருக்கின்ற சிந்தயையும் நினைக்காமல், சந்திர மண்டலத்தில் விளங்குகின்ற நாதமயமான சக்தியை எண்ணாமலும் இருப்பவர்களின் அறியாமையை என்னவென்பது.

602. உள்ளத்தில் விளங்கும் சிவ சோதியை மேலேச் செலுத்தி சினம் என்ற தீயை நீங்குமாறு செய்து எல்லாவற்றிலும் நிற்கும் சிவ ஒளியை சுழுமுனையில் தூண்டி இருக்கும் மனத்தில் சிவன் மங்காத ஒளியாக இருக்கும்.

603. எண்ணாயிரத்தாண்டு யோகத்தில் இருந்தாலும் கண்ணுள் மணியும் அதனுள் அமிழ்தும் போன்ற சிவனைக் கண்டறிய முடியாது. மனதில் ஒளி பொருந்தும்படி காண்பவர்க்கு கண்ணாடியில் உருவத்தைப் பார்பது போல மனத்தில் காணலாம்.

604. இரு கண்களின் பார்வையை நடு மூக்கின்மேல் பொருத்தி வைத்திடின் சோர்வு இல்லை. உடலுக்கு அழிவில்லை. மனதின் ஓட்டமும் அடங்கும். அறியும் இயல்பான தன்மையும் நான் என்ற முனைப்பும் இல்லாதுபோம். வெளியே செல்லும் அறிவு இல்லாது அவனே சிவன் ஆகலாம்.

605. இரு கண்களின் பார்வையை நாசியின்மேல் வைத்து உய்ர்வினின்று தாழாத பிராணனை உள்ளே அடக்கத் துன்பம் தரும் மனம் முதலியவற்றை நீக்கி யோக நித்திரை செய்பவர்க்கு பிறந்த உடல் பய்னைத் தரும். கூற்றுவனால் ஏற்படும் அச்சம் இல்லை.

606. மணி, கடல், யானை, புல்லாங்குழல், மேகம், வண்டு, தும்பி, சங்கு, பேரிகை, யாழ் ஆகியவற்றின் நுட்பமான ஒலிகளை தியானத்தை மேற்கொள்பவரால் மட்டுமே அறிய முடியும்.

607. கடல், மேகம், யானை ஆகிய வற்றின் ஓசையும் கம்பியின் இறுக்கத்தால் வீணையில் உண்டாகும் நாதமும் வானத்தில் ஏற்படும் மறையொலி சுருங்கிய் வாயை வுடைய சங்கு என்பதன் ஓசையும் திடமாய் அரிய வல்ல யோகியர் தவிர மற்றவருக்கு தெரியாது..

608. இறைவனின் இயல்பும் தேவர்களின் சேர்க்கையும் பாசத்தின் இய்க்கமும் பாசத்தை விட்ட உயிராய் நிற்பதும் நாதமே. இதை உணரும் வல்லமை உடையவர்க்கு பூவில் வெளிப்படும் நறுமணம்போல் நாதத்தில் இறைவன் இருப்பான் என்பது புரியும்.

609. நாத தத்துவம் குடியும் இடத்தில் பராசக்தி. அங்கேதான் யோகத்தின் முடிவு உள்ளது.. நாதம் முடியும் இடத்தில் நம் மனம் பதியும். அங்குதான் நீலகணடர் இருப்பார்.

610. மூலாக்கினி, வடவாக்கினி, மின்னல் அக்னி, கதிரவன் அக்னி, திங்கள் அக்னி ஆகிய ஐந்து அக்னியையும் பயிலுபவர் இந்த ஐந்து தீயையும் ஆறு ஆதாரங்களில் அறிந்து தியானம் செய்து துதிக்கக்கூடிய நீலஒளியை இய்க்குகின்ற சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் ஆகிய தன் மாத்திரைகளில் ஒடுங்க பொன்னொளியில் விளங்கும் சிவன் திருவடியைச் சேரலாம்.

611. ஐம்பொறிகள் ஒய்வு எடுக்கும் பள்ளி அறையில் பகல் இரவு இல்லை. ஒளிமட்டும் விலங்கும். ஒளிமட்டுமே இருப்பதால் வேறு அக்னி கொளுத்தாமல் காக்கலம். இந்நிலையை அறியின் அது நான்கு காத தொலைவுடையது. நியமனத்தால் அடையப் பெறுவது. இருள் என்பதே இல்லை என்பதால் விடிவு என்பதில்லை.

612. சந்திரமண்டலம் அமைக்க வேண்டும் என்பதற்கு குந்தகம் ஏற்படாமல் ஒன்றுபட்டு சுழுமுனை நாடிவழி மேல் நோக்கிச் சென்ற யோகிக்கு அக்னி மண்டலம், கதிரவன் மண்டலம், திங்கள் மண்டலம் மூன்றும் ஒத்த வகையில் வளர்ந்து பின் எடுத்த உடல் உலகம் இருக்கும்வரை சீவனை விட்டகலாது.

613. அந்த மண்டலங்களின் தனமை என்ன வென்றால் அக்கினி, கதிரவன், திங்கள் என்ற மண்டலங்களின் அதிபதிகள் நான்முகன், திருமால், உருத்திரர் ஆகியோரின் ஆட்சி அம்மண்டலத்தில் இருப்பின் அது மற்ற மண்டலத்தார்க்கு உதவி செய்யும் தன்மையாகும்.

614. இயங்கும் உலகில் மயங்கித் தவிக்கின்ற உள்ளம் என்ற இருட்டறை தோன்றும் மூன்று மண்டலங்களில் பொருந்தி உச்சித்துளை வழியாக அதிக அன்பு கொண்டு ஆராய்ந்து மேலே சென்றால் துன்பம் நீங்கி சிரசில் மார்கழி விடியல் போல் வெளிச்சத்தைக் காணலாம்.

615. தாமத, இராச, சாத்துவிக ஆகிய முக்குணங்களின் இருள் நீங்க மூலாதாரத்தில் உள்ள அபானன் என்ற வாயுவை மேல் எழுப்ப வல்ப்புறக் கதிரவன் கலையை இடப்பக்கம் உள்ள திங்கள் கலையுடன் பொருந்தும் வண்ணம் தினம் காலை ஒரு நாழிகை செய்தால் உடம்பில் உயிர் அழியாது வைப்பான் சிவன்

616. அசைவை ஏற்படுத்தும் கொப்பூழ் சக்கரத்திற்கு நான்கு விரல்மேல் மேல் செல்லும் வாக்கு வெளிப்படும் தொண்டைக்கு இரண்டு விரல் அளவு கீழே இருக்கும் அநாகதச் சக்கரத்தின் கட்ல் ஒலிபோல் பொங்கி எழும் ஒலியைத் தியானம் செய்ய வல்லவர் உடலின் ஆன்மாவை அறிவர்.

617. அறிவு எனும் ஆன்மா அழிவற்ற முப்பத்தாறு தத்துவங்களும் நீங்கி மாயையை அருளால் கொடுத்துச் சிவனுடன் நீங்காமல் இருக்கும் அருள் சக்தி. என்பதை சிவநெறியில் பொருந்திய அன்பரே அறிவர்.

#####

திங்கட்கிழமை, 20 April 2020 16:16

தாரணை!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.

#####

தாரணை!

588. வெளியில் செல்லாமல் தடுக்கப்பட்ட மனதைக் கட்டுப்படுத்தி கீழ் நோக்காமல் தடுத்து நடு நாடியின் வழி போகும் மூச்சுடன் பொருத்தி வானத்தில் பார்வையை செலுத்தி எதையும் காணாத கண்ணுமாய் கேளாத செவியுமாய் இருந்தால் வாழ்நாள் அழியாது அடைக்கும் வழியாகும்.

589. மலை போன்ற தலையில் வான் கங்கை நீர் எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கும். சுழுமுனை நாடி வழியாகப் போய் நாத ஒலியுடைய சபையில் கூத்தாடிக் கொண்டிருக்கும் நீங்கா ஆனந்தத்தை அளிக்கும் பேரொளியை காண்பீர்.

590. தலையின்மேல் எழுந்தருளியுள்ள சக்தி மாற்றத்தை செய்யும் தேவியாகும், மூலாதாரத்தில் பொருந்தியிருக்கும் மூர்த்தியைத் தாரனை செய்து தலையில் எழுந்தருளி சக்தியுடன் சேருமாறு செய்தால் வயது முதிர்ந்தவனும் இளவயதுடையவன் ஆவான். நந்தி சிவபெருமானின் ஆனை இதுவாகும்.

591. மூலாதாரத்தில் உள்ள காம வாயுவை மேலே செல்லும்படி செய்துவிட்டு மைய வழியான சுழுமுனைமேல் மனதை இருத்தி நீர் ஓடும் கால்வாயில் மீனுக்காக காத்திருக்கும் கொக்கைப்போல் நாட்டமுடன் இருப்பவர்க்கு உடல் சிதையாமல் ஊழி காலம் வரை இருக்கும்.

592. உயிர் உடம்பில் பொருந்தியிருக்கும் காலத்தை கணக்கிட்டு அறிந்து கொண்டால் அக்காலஎல்லை பிராணனின் இயக்கத்தால் அமைந்திருப்பது புரியும்.
அத்தகைய உயிரில் பிராணனது இயக்கத்தை கட்டிச் சேர்த்து விட்டால் உயிருடன் கூடிய காலம் அழிவில்லாது நிற்கும்.

593. வாய் திறவாமல் மௌனத்தை மேற்கொள்பவரின் மன மண்டலத்தில் பிராணன் எனப்படும் சக்தி உள்ளது. அப்படியின்றி வாய் திறந்து பேசிக் கொண்டிருப்பவர் பிராணனை வெளியே விட்டு வீணாக்குகின்றார். வாய் பேசாதவர் பிராணனைச் செலுத்தி சோதியை அறிவார். சகசரதளத்தை திறந்து பார்க்க ஆற்றல் இல்லாதவர்கள் கோழைத்தனம் கொண்டவர் ஆவார்.

594. மனத்திலிருந்து இறங்கி பிரிந்து செல்கின்ற வாயிவை வெளியே போகாதபடி நடுநாடியில் செலுத்தினால் கண், காது, நாசி, வாய் ஆகிய ஏழு சாளரங்களையும் கருவாய் எருவாய் என்ற இரண்டு பெரிய வாயில்களையும் கொண்ட கோயிலான உடல் பெரும்பள்ளி அறையிலே பலகாலம் வாழலாம்.

595. புலன்கள் துய்த்து நிரம்பிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்து வாக்கு, கை, கால், குதம், கருவாய் ஆகிய கன்மேந்திரியங்கள் ஐந்து ஆகிய பத்தில் ஞானேந்திரியம் ஐந்தும் நீங்கினால் அறிவற்றவனாகி வருந்தி ஒரு பயனுமில்லை.. பொறிக்ளின் எல்லையைத் தாண்டி நிற்பவர்க்கு மனம் என்ற குரங்கை உடலில் குறும்பு செய்யாமல் இருக்கச் செய்ய முடியும்.

596. முன்னர் வந்து பிறந்தவர் எல்லாம் தாரணை இல்லாததால் அழிந்தனர். பின்னால் தோன்றுபவர் அழியமாட்டார் என்பதற்கு என்ன ஆதாரம். அவ்வாறு அழிகின்றவர் நிலையைப் பற்றி பேசி என்ன பயன் இது என்ன மாயம். ஆற்றில் இடிந்து கரையும் கரை போன்று நாளுக்கு நாள் அழியும் உடம்பு அழியாமல் இருக்குமோ!

597. ஐந்து பொறிகளால் அரிக்கப்பட்ட உடலை ஐம்பூதங்களில் வைத்து அப்பூதங்களின் ரசம், ரூபம், ஸ்பரிசம், சப்தம், கந்தம் ஆகிய் தன் மாத்திரைகளில் போகும்படி செய்து மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய அந்த காரண நாதத்தில் ஒடுங்கி இருக்க ஆன்மா சிவத்துடன் பொருந்தியிருந்தால் அதுவே தாரணை,

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

22287874
All
22287874
Your IP: 3.236.253.192
2021-10-20 18:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg