gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
புதன்கிழமை, 15 March 2023 08:58

ஆடிச்சீர் ஏன்!

Written by

ஓம்நமசிவய!


யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!


#*#*#*#*#

 

17.ஆடிச்சீர் ஏன்!


ஒரு பெண் ஆடி மாதம் கருத்தரித்தால் அப்பெண்னிற்கு குழந்தை சித்திரையில் பிறக்கும். அது சித்திரை அக்னி நட்சத்திர காலம் என்பதால் வெயிலின் தாக்கம், பிறக்கும் குழந்தையை பாதித்து, வெப்ப சம்பந்தமான நோய்கள் அப்பெண்ணையும் பாதிக்கும் என்பதாலேயே பெண்கள் ஆடியில் கரு தரிப்பதை தவிர்க்க ஆடி சீர் என்று நம் முன்னோர்கள் ஏற்படுத்தி பெண்ணை பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைக்க செய்தனர்.

எனவே சித்திரையில் சீமந்தம் செய்தல், பெண் பார்த்து பேசி வைத்தல், நிச்சயதார்த்தம், உபநயனம் செய்தல், திருமண ஏற்பாடுகளைச் செய்தல், பேச்சு வார்த்தை நடத்துதல் பொன்றவற்றைச் செய்யலாம்.

#*#*#*#*#

ஓம்நமசிவய!

தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமமாதலால்
கணபதி என்றிடக் கருமமில்லையே!


#*#*#*#*#

 

16.அக்னி நட்சத்திரத்தில் தவிர்க்க வேண்டியவை!

 

பஞ்ச பூதங்களில் நெருப்பு மட்டுமே தன்னிடம் சேரும் பொருளை அதன் உருவை மாற்றி தானாக மாற்றிக் கொள்ளும் சிறப்பான தன்மையுடையது. இதனால் யாகம் மற்றும் ஹோமங்களில் அக்னி முதன்மையாக கருதப்படுகின்றது. மேலும் அக்னி யாகத்தில் இடப்படும் அவிர் பாகத்தை உரியவர்களிடம் (பித்ரு தேவர்கள், அதி தேவதைகள்) சேர்க்கும் பிரதி நிதியாகவும் செயல் படுகின்றது.

அவிர்பாகத்தை அதிகமாக உண்டு அவதிப்பட்ட அக்னி நட்சத்திரகாலத்தில் அந்த அகினிக்கு உதவியாக இருக்க வேண்டி சில காரியங்களைச் செய்யாமல் இருக்க நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

இக்காலத்தில் செடி கொடி மரங்களை வெட்டுதல், மட்டை நார் உரித்தல், கிணறு குளம் தோண்டுதல், விதை விதைத்தல், விவசாய நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு பணிகள் செய்தல் கூடாது. பூமி பூஜை செய்தல், விவசாயப் பணிகள் ஆரபித்தல், கிரகஹப் பிரவேசம் செய்தல், புது வீட்டிற்கு பால் காய்ச்சுவது, முடி காணிக்கை செலுத்துதல், காது குத்தல், ஆகியவற்றை தவிர்க்கவும். குருவிடம் தீட்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.

#*#*#*#*#

புதன்கிழமை, 15 March 2023 08:48

திருமண இணைப்பு!

Written by

ஓம்நமசிவய!

ஆணிலே அன்றி ஆரூயிர்ப் பெண்ணிலே அலியிலே இவ்வடியனைப் போலவே
காணிலே ஒரு பாவியை இப்பெருங் கள்ள நெஞ்சக்கடையானை ஆளையா
ஏணிலே இடர் எய்த விடுத்தியேல் என்செய்கேன் இனி இவ்வுலகத்திலே
வீணிலே உழைப்பே அருள் ஐயனே விளங்கு சித்தி விநாயக வள்ளலே.


#*#*#*#*#

 

15.திருமண இணைப்பு!

 

12 வயதிற்குட்பட்ட பெண்களை கன்யகா என்பர். அதற்குமேல் பூப்பெய்திய பெண்ணை ரஜஸ்வலா என்பர். பூப்பெய்திய பெண்ணை தந்தையானவர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு தன் விருப்பம்போல் சுதந்திரமாக கணவனைத் தெரிந்தெடுக்கும் உரிமை உண்டு.

இருபக்க பெற்றோரும் தேர்தெடுத்து, உற்றோர் ஆசிகூற தந்தை மகளை ஆபரணங்களால் அலங்கரித்து சீலமுள்ள வரனுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது-பிரம்ம விவாஹம்

தந்தை மகளை ஆபரணங்களால் அலங்கரித்து யாகம் நடந்து கொண்டிருக்கும்போது ருத்விக்கு யாகதட்சனையாக கொடுப்பது-தைவம்

மணக்கப்போகிறவன் நேரில் வந்தோ அல்லது உறவினர் மூலம் பெண் கேட்கப்பட்டால், மணமகனை பூஜித்து நீங்களிருவரும் தர்மத்தை குறைவில்லாமல் அணுஷ்டிக்க ஆசீர்வதித்து தன் பெண்ணைக் கொடுப்பது –ப்ராஜாபத்யம்.

மணமகனிடமிருந்து ஒரு காளையையும், பசுக்களையும் மற்றப் பரிசுப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு தன் பெண்ணை முறைப்படி மணம் செய்து கொடுப்பது –ஆர்ஷம்.

மணமகன் மணப்பெண்ணுக்கும் அவளது முக்கிய உறவினர்களுக்கும் தன்னால் இயன்ற தனத்தை கொடுத்து அல்லது தந்தை பணம் பொருளுக்கு பெண்ணை விற்று விடுவது- விவாஹம் செய்வது- ஆசுரம்.

மணப்பெண்ணும் மணமகனும் ஒருவரையொருவர் விரும்பி தாங்களே கணவனும் மனைவியுமாக வாழ்வது - மணம் புரிவது- காந்தர்வ விவாகம்
போட்டியில் வெற்றி பெற்று அல்லது பலவந்தப் படுத்தி பெண்ணை அவளது உறவினர்களிடமிருந்து கவர்ந்து சென்று அவள் விருப்பமின்றி மணம் புரிவது-ராக்ஷஸ விவாகம்.

பெண்ணை ஏமாற்றியோ, உறங்கும்போதோ, மயங்கி கிடக்கும்போதோ அவள் அறியாமல் திருட்டுத்தனமாக மனைவியாக்கிக் கொள்வது –பைசாசம்

தர்மம் நான்கு கிளைகளாகப் பரவி, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் அறிஞர் பெருமக்கள் மதிக்கப்படும் உத்தமமான தேசத்திலிருந்து நல்ல குணவதியான பெண்ணை அடைய வேண்டும்.

திருமணம் நல்ல நாட்களில் நல்ல நேரத்தில் மங்கல வாத்தியம் முழங்க நடைபெற வேண்டும்.

திருமணம் என்றதும் உள்ளம் குதூகலிக்கும். எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடும்போது அதன் ருசிமட்டுமே தெரியும். பின்னர் வயிற்று வலி ஏற்படும்போதுதான் அதன் தன்மை புரியும். திருமண உற்சாகம் எதிர்கால சிந்தனைகளைத் தோற்று விக்காது. பொறுப்பற்ற நிலையில் நடந்த திருமணத்தின் எதிர்காலம் பொறுப்பைச் சுமக்கும் குடும்ப வாழ்க்கையாகும். கண்முன்னே தோன்றும் பெண்ணின் அழகு, சீர் வரிசைகள், நண்பர்களின் பரிகாசம், உறவினர்களின் மகிழ்ச்சி, மற்றவர்களின் வாழ்த்துக்கள் எல்லாம் கொண்ட திருமணகால சந்தோஷம் என்றும் தொடராது. குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் பிறந்து அவர்களின் வளர்ச்சிக்காக நினைவு கொள்ளும்போதுதான் அப்போதைய நேரமும் சூழலும் தெரியவரும். அந்த நேரம் கர்மவினைகளின் நிர்ணயமாகும்.

வசிஷ்டர்- அருந்ததி, அகத்தியர்- லோபாமுத்ரை, யாக்ஞவல்யர்- மைத்ரேயி, கச்யபர்- அதிதி ஆகிய ரிஷி தம்பதியினரும், துஷ்யந்தன் –சகுந்தலை, நளன்- தமயந்தி, அஜன்-இந்துமதி போன்ற அரச தம்பதியினரும் தாம்பாத்திய இணைப்பின் செழிப்பில் மகிழ்ச்சி கொண்டவர்கள். அக்னி ஸ்வாஹாவை தன்னுடன் ஐக்கியப்படுத்தியும், பெருமாள் தன் மனைவி இலட்சுமிக்கு மார்பில் இடம் கொடுத்தும், சிவனோ தன்னில் பாதி கொடுத்தும் அர்த்தநாரீஸ்வராக புகழ் பெற்றார். தம்பதியரின் மன ஒற்றுமைக்கு அவர்களின் உடல் நெருக்கத்தை சிறப்பாக சொல்கின்றது புராணங்கள். அறம் ஆற்ற திருமணத்தில் ஒன்றாகும் தம்பதியினர் பிரிவு கொண்டால் அங்கு அறம் அல்லல் படுவதை அனுபவ வாயிலாக கண்டிருக்கின்றோம்.

திருமணத்தை அறம் என்ற நோக்கில் வரவேற்று ஏற்றுக்கொள்ளவேண்டும் திருமணம் ‘இல்லறமே நல்லறம்’ என்ற பொருள் கொண்டது. பொதுவாக அழகு, மற்றும் திறமையுடன் கூடிய அழகு கொண்ட ஆண் அல்லது பெண் ஆகியோரிடம் ஆணவம் தோன்றுவது இயல்பு. அந்த ஆணவம் மேலோங்கினால் அகங்காரமாகி திருமண இணைப்பைத் துண்டிக்கும். எனவே திருமண இணைப்பை பாதுகாக்க அறமும் அடக்கமும் இரு பாலரிடையே வேண்டும். பிறவி என ஒன்றிருந்தால் வரும் பிறவிகளில் இவரே என் கணவன் என்று ஓர் பெண்ணுக்கும், இவளே என் துணைவி என்று ஓர் ஆணுக்கும் தோன்றும் வகையில் இல்லறம் பரிமளிக்க வேண்டும். திருமண இணைப்பு மகிழ்வான வாழ்க்கைக்கு தேவையான ஒன்று என்பதால் அதன் பெருமைகளைப் பேணிக் காத்து அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தினர் முன்னோர்.

பிரிக்க கூடாத ஒன்றைப் பிரிக்கும் துணிவுடன் தங்களது செயல்பாடுகள் இருக்கும் வண்ணம் ஒரு ஆணோ / பெண்ணோ தன் செயல்களில் செயலாக்கம் கொள்ளக்கூடாது. தொடர் வண்டியான ஆண் பெண் உறவு துண்டிக்கப்பட்டால் அந்த வாழ்க்கைக்கு தீமைகளே அதிகம். திருமணத்தில் ஆணும் பெண்னும் இணைவது சேர்ந்து வாழ்வதற்காக. வாழ்நாள் பூராவும் இணந்திருப்பதற்காக சேர்ந்தவர்கள் இடையில் பிரிவதென்றால் அது சரியன்று. அதற்கு ஆரம்பத்தில் சற்று யோசித்து இணையாமலே இருந்திருக்கலாம். இணைந்தபின் எக்காராணத்தை முன்னிட்டும் பிரிதல் கூடாது. பிரிதல் என்ற நினைவே தவறானது. பிரிவு ஏற்படும் எண்ணங்களைத் தவிர்த்து வாழ்க்கையை சீர்படுத்த பெரியோர்களின் ஆலோசனைகளை நாடவேண்டும்.

குறைகளை மறக்கும் மனோபாவம் வளர்க்க வேண்டும். எதையும் மன்னிக்கும் மனப்பக்குவம் வேண்டும். விட்டுக் கொடுக்கும் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இரு கூறுகளான ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் முழுமை என்பதை உணரவேண்டும். இணைவது இயற்கையின் தூண்டுதல் மட்டுமல்ல, இயற்கையோடு இணைந்து வாழப் பழகுவதே வாழ்க்கையின் தத்துவம் என்பதை புரிதல் வேண்டும். கணவனோடு இணைந்து வாழ்வது நமது நாட்டின் உயர்ந்த பண்பாட்டின் அடையாளம். வாழ்வில் ஏற்படும் துயரங்களை சந்திக்க இருமனங்களின் சங்கமத்தின் தோன்றும் மகிழ்வே உதவும். அந்த மகிழ்விற்கு மனங்களின் சங்கமத்திற்கு தாம்பத்திய இணைப்பு வலுவாக இருத்தல் அவசியம்.

திருமண இணைப்பு என்பது சிற்றின்பத்திற்காக மட்டுமல்ல அதற்கு மேலான அலாதியான வாழ்க்கைப் பாதையின் இன்ப உணர்வுகளுக்கு என்பதை ஆத்மாக்களே புரிந்து செயல் படுங்கள்.

ஆணின் குறையை மறைத்தும், ஏற்கனவே திருமணமான பெண் என்ற உண்மையை மறைத்தும் திருமணம் செய்வித்தல் கூடாது.

அக்னியை வலம் வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் ஏன்!

மணமகளின் வலது காலை அம்மி மீது வைத்து மணமகன் மெட்டி அணிவிப்பார். இல்லற வாழ்வின் இருகண்களில் ஒன்றான கற்பில் நான் இந்தக் கல்லைப் போல் உறுதியாக இருப்பேன் என்று மணமகளும், மற்றதான ஒழுக்கத்தில் என் மனம் காற்றில் ஆடும் இலைபோலில்லாமல் இந்தக் கல் போன்று நிலையாக இருக்கும் என மணமகனும் உறுதி கூறுவது ஆகும். இதுவே அம்மி மிதித்தல் நிகழ்வு.

சப்த ரிஷி மண்டலத்தில் இருக்கும் வசிஷ்டரின் பத்தினி அருந்ததி. அவரை விட்டுப் பிரியாமல் வானத்தில் கூட அவருடன் இருக்கும் பேறு பெற்றவள் அருந்ததி. அவளைப் போன்றே கற்பிலும், பெருமையிலும் சிறந்து விளங்க வேண்டும், கணவனை ஒருநாளும் பிரியக்கூடாது என்பதை உணர்த்தவே அருந்ததி பார்த்தல் நிகழ்வு.

மேலும் வாழ்க்கையில் 1. உணவுக்கு எந்த விதமான குறைவும் வராமல் இருக்கவும், 2. உடல் ஆரோக்கியமும் வலிமையும் கிடைக்கவும், 3. விரத காலங்களில் மன உறுதியும் கட்டுப்பாட்டையும் அருளவும், 4. சுகமும், மன அமைதியும் இல்வாழ்வில் நிறைந்திருக்கவும், 5. இல்லத்தில் பசுக்கூட்டமும், தானியங்களும் மிகுந்திருக்கவும், 6. தங்களது இல்லம் பல நல்ல உயிர்களுக்கு புகலிடமாக விளங்கி இல்லற தர்மத்தை கடைபிடித்து விருந்தோம்பி வாழவும், 7.இதுவரை இணைந்து நடந்த நாம் இனி இனிய நண்பர்கள், நம் வாழ்வில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை இணைந்து அனுபவித்து எந்த கணத்திலும் நாம் பிரியாமல் இருக்கவும் இறைவனை பிரார்த்தித்து வேண்டுதலே அக்னியை வலம் வருதல் நிகழ்வு.

#*#*#*#*#

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!


#*#*#*#*#

 

14.திருமணம்-அறுபதாம் கல்யாணம்!

 

20 வயது- ஒரு உயிர் தன்னை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை

20-40 வயது வாழ்வின் உச்சத்தை தொடத் துடிக்கும் துடிப்பான வாழ்க்கை

40-60 வயது பெறுப்பான குடும்ப வாழ்க்கை

60 வயதிற்குமேல் உயிர்கள் மனதிற்கு பிடித்தமான தெளிவான வாழ்க்கை

அறுபதிற்கு மேலான வாழ்வில் ஒவ்வொரு ஆரோக்கிய நாளும் உயிர்களுக்கு அளிக்கப்பட்ட வரங்கள்.

ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம் என்கிற இயற்கை, தெய்வ குற்றம், தன் செயல்களால் ஏற்பட்ட பாவகாரிய பலன்கள் ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும் அதிலிருந்து தன்னை காத்துக் கொள்ளவும், 59, 60, 61, 70 வயது துவக்கம், 78துவக்கம், 80நிறைவு, 100 ஆண்டு நிறைவு ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளைச் செய்து கொள்ள புராணங்கள் வலியுறுத்துகின்றன. அதாவது இதுவரையில் வாழந்த கட்டாயங்களினால் வாழ்க்கையில் நடைபெற்ற தவறுகளுக்கு வருந்தி குடும்ப பாரத்தை இறக்கிவைத்து ஒரு நல்ல ஆத்மாவாக மாற உறுதி எடுத்துக்கொள்ளுதலே இதன் சிறப்பு.

கலியுகத்தில் உயிர்கள் 120வயது வரை வாழ இயற்கை வழிவகுத்துள்ளது. அதன் படி முதல் அறுபதில் லௌமீக-கர்ம வாழ்க்கை வாழ்ந்து கடமைகள் முடிந்து அடுத்த அறுபதிற்குள் அடிஎடுத்து வைத்து தர்ம வாழ்க்கையை ஆரம்பிக்க முயலவேண்டும்.

இதை உறுதி செய்யவே அறுபதாம் கல்யாணம் நடைபெறுகின்றது. அதனால் ஒரு உயிர் தான் நிறைவான கர்ம வாழ்க்கை வாழ்ந்ததை அறிவிக்கின்றது. கர்மத்தின் காரணமாக தான் செய்த பாவங்களுக்கு வருந்தி பரிகாரம் செய்து மனதை சுத்தமாக்கிக் கொள்கின்றது.. இனிமேல் தர்ம வாழ்க்கை வாழ உறுதி பூண்டு தன் கூட இருந்த மனைவியை மீண்டும் மணந்து இவ்வளவு காலம் கடமைகளினால் தரமுடியாத சூழ்நிலையில் மனைவியின் தியாகங்களை நினைந்து இனிமேல் நல்ல வாழ்வை தருவதற்கு உறுதி கொள்கின்றனர்.

பிடிப்பு-பற்றுதல்!

ஒவ்வொரு திருமணத்தின் முடிவில் மணமகன் கையில் மணமகள் கையை வைத்து அல்லது சுண்டு விரலை கோர்த்துவிட்டு துண்டில் கட்டி திருமண மேடையைச் சுற்றி வரச் செய்வார்கள். இந்த நிகழ்வு ஏனென்றால் நீ சிறியவள். உன்னால் வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல், விவேகம் ஆகியன இல்லை. நீ என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தால் எந்தச் சந்தர்பத்திலும் அதிர்ச்சியில் கையை விட்டு விடுவாய். நீ தடுமாறும் போது உடனடியாக என்னால் உன்னை தாங்கி பிடிக்க முடியாது. ஆனால் நீ என் கையைப் பிடித்துக் கொண்டால் நீ தடுமாறினாலும் நான் உன்னைப் பிடித்திருப்பதால் உனக்கு எந்த துன்பமும் ஏற்படாது. எல்லா நிலையிலும் உன்னை நான் பாதுகாப்பேன் என்று அர்த்தமாகும். மேலும் இது சிவனுள் சக்தி அடக்கம் என்கின்ற தத்துவத்தை உணர்த்துவதாகும்.

உயிர்களாகிய நாம் இறைவனைப் பற்ற வேண்டியதில்லை. இறைவன் நம்மை எப்போதும் பற்றிக் கொண்டிருக்கின்றான் என்று நம்புங்கள். அந்த பிடிப்பே உங்கள் வழ்க்கை முழுவதற்கும் பயன்படும். அதைவிடுத்து சிறு குழந்தைபோல் என்னால் முடியும் என நினைத்து இறைவன் உங்களைப் பற்றியிருப்பதை தவிர்த்து நீங்கள் இறைவனை பற்ற ஆசைப்பட வேண்டாம்!

#*#*#*#*#

 

புதன்கிழமை, 15 March 2023 08:43

உயிரினங்கள்மீது!

Written by

ஓம்நமசிவய!

ஓம் எனும் பொருளாய் உள்ளாய் பூமெனும் பொருள்
தொறும் பொலிவாய் அகரம் முதலென ஆனாய்
அகர உகர ஆதி மகரமாய் நின்ற
வனவ பகர்முன்னவாம் பரமே போற்றி!


#*#*#*#*#

 

13.உயிரினங்கள்மீது!

 

இயற்கையின் பிறப்பில் உயிருள்ள புல் பூண்டுகளைத் தேவையின்றி வெட்டித் தள்ளுதல், பிடுங்குதல் ஆகியன உயிர்க் கொலைக்குச் சமம்.

பறவைகள், விலங்குகள், மீன், பாம்பு ஆகியவற்றைப் பிடித்து அடைத்து வைத்திருப்பது, எளியவர்களின் செல்வத்தைக் கவர்ந்து தன் முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துவது, தெய்வ காரியத்திற்காக வைத்திருந்த பொருட்களை கவர்வது, பொய் பேசுவது, சிறு ஜந்துகள். பறவைகள், பூச்சிகள் ஆகியவற்றைக் கொல்வது ஆகிய செயல்கள் ஒருவனைத் தன்னைத்தானே அசுத்தப்படுத்தி அவனின் புண்ணியத்தைக் கெடுக்கும் செயல்கள்.

மற்ற உயிர்களைத் துன்புறுத்தாமலும், கொல்லாமலும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்தால் அந்த உயிருக்கு அளவற்ற சுகங்களை இப்பூவுலகிலும் தேவர்கள் உலகிலும் அனுபவிப்பான். மாறாக துன்பம் விளைவிப்பவன் பலபிறவிகளில் கொடிய நோய்களினாலும், வறுமையினாலும், உற்றார், உறவினர்களால் இகழப்பட்டும் பலவித துன்பங்களை அனுபவிப்பான்.

பிறருக்கு தீங்கு விளைவிக்காத பசு, காளை, மான், யாணை, பறவை போன்றவைகளை வதை செய்பவன் அடுத்த பிறவியில் பார்வையற்ற குருடர்களாகவும் பிறர்காண விரும்பாத குஷ்டநோயினால் பீடிக்கப்பட்டும், அற்ப ஆயுளில் மரணமெய்தும் குழைந்தைகளைப் பெற்றும், காம வெறியினால் பிற ஆடவர்களிடம் செல்லும் பெண்களை மனைவியாகவும் அடையும் பாவிகளாக பிறவி எடுத்து துன்புறுவர். வேம்பு, வில்வம், அரசு, ஆலம், நாகலிங்கம், துளசி மற்றும் செழித்து வளர்ந்த மரங்கள் ஆகியவற்றை வெட்டுபவர்கள் உடல் குறைபாடுகளுடன் சரீரத்தில் துர்நாற்றத்துடன் பிறவி எடுத்து துன்புற்றும், இளம் வயதில் விபத்தில் சிக்கி அவயவயங்களை இழந்தும், துன்புறுவர்-கருட புராணம்.

#*#*#*#*#

ஓம்நமசிவய!

பண்ணியம், ஏந்தும் கரந்தனைக்காக்கிப் பால்நிலா மருப்பமர் திருக்கை
விண்ணவர்க்காக்கி அரதனக் கலச வியன்கரம் தந்தைதாய்காக்கி
கண்ணில் ஆணவ வெங்கரி பிணித்தடக்கிக் கரிசினேற் கிருகையும் ஆக்கும்
அண்ணலைத் தணிகை வரைவளர் ஆபத்ச் சகாயனை அகந்தழீஇக்களிப்பாம்.


#*#*#*#*#

 

12.ஆசாரியர்,உபாத்தியாயர்,குரு/ரிஷி,மகாகுரு/மகரிஷி!

 

உயர்ந்த நிலை யக்ஞம், வித்தை, உபநிஷதம் ஆகியவற்றின் உள்ளார்ந்த ரகசியங்களைக் கற்பிப்பவர் ஆசாரியர் எனப்படுவார்.

வாழ்க்கையில் வேத விதிப்படி தொழில் செய்ய கற்றுத் தருகிறவர் உபாத்தியாயர்.

மாணவனைத் தன்னுடன் தங்கவைத்து அன்னமளித்து போஷிப்பவர் குரு/ ரிஷி ஆவார்.

அக்னி ஹோத்ரம், யாக சம்ரட்சனம் ஆகியன சொல்லிக் கொடுப்பவர் மகாகுரு/ மகரிஷி எனப்படுவார். எல்லா சாஸ்திரங்களையும் கற்றறிந்தவர். வேதங்கள், தர்மங்கள், நியாயம், தர்மம் எல்லாம் தெளிந்து புரிந்தவர்.

ஆச்சாரியார்- பிரம்மாவிற்கு சமமானவர், பிதா-பிரஜாபதி, மாதா-பிருத்வி-மண்மாதா, அண்ணன்- ஆத்ம மூர்த்தி, ஆகிய இவர்களை அனாதையாய் விடக்கூடாது. பிதாவைப்போல் பிதாவின் பெறிய சிரிய சகோதர்களையும் உயர்வானவர்களாக கருத வேண்டும்.

கற்றுத் தேர்ந்தபின் தன் சொந்த முயற்சியால் தனத்தைச் சேகரிக்க வேண்டும் எப்படி வேண்டுமானாலும் சேமிக்கலாம் என்றில்லாமல் தர்ம வழிகளில் சேமிக்க வேண்டும். சொந்தமாகத் தனம் பெற்று குருவிற்கு தட்சினை கொடுக்க வேண்டும். குரு தட்சணை கொடுத்தால்தான் தான் கற்றது முழுமையான பலனைத் தரும். தனம் இல்லையென்றால் இல்லறம் கேள்விக்குறியாகி விடும்.

எந்த மனிதனும் அவன் நடத்தையின் மூலம்தான் உயர்வாகக் கருதப்படவேண்டும் என்கிறது புராணங்கள். வேதங்கள் படித்தால் மட்டும் போதாது அதன்வழி நின்று செயலாக்கம் வேண்டும்.

#*#*#*#*#

ஓம்நமசிவய!

தேவர் தொழுங் கருணைச் செல்வனே சிறந்தொளிரும்
மங்கள சொரூபனே ஓவறு சித்திகளனைத்தும்
உதவுவோய் ஒலிகெழுகிண்கிணி பாத சாலநூபுரங்கள்
மேவியொளிர் சரணே மததாரை விரவியதிண் கபோலனே
நினதருளால் பாவமொடு பலபிணியும் பம்பு வறுமைகளும்
பலவான இடர்களையும் பாற்றுக இன்புறவே!


#*#*#*#*#

 

11.பெண்களிடம் நிலைப்பாடு!

 

அம்மா, அக்கா, பெண் ஆகியோருடன் ஒரே ஆசனத்தில் அமரக்கூடாது.

பிறர் மனைவி பிறபெண்கள் ஆகியோரை தன்னைப் பெற்ற தாயாகவும் உடன் பிறந்த சகோதரியாகவும் நினைக்கும் தூய மனமுடையவனுக்கு மறு பிறவியில் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வணங்கும் கற்புக்கரசி மனைவியாக வாய்த்து மனைவி தரக்கூடிய அனைத்து இன்பங்களையும் தடையில்லாமல் அளித்து மகிழ்ந்திருப்பாள்.

மாதா, பிதா, குரு இவர்களை மகிழ்ச்சியாய் வைத்திருக்க எல்ல பலன்களும் கிட்டும். இவர்களின் அனுமதியுடன்தான் தவம், விரதம் முக்கிய காரியங்களை மேற்கொள்ள வேண்டும் இவர்களே 3 உலகங்கள், 3 ஆஸ்ரமங்கள், 3 அக்னிகள். (கர்ப்பத்தீ-அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே, தட்சிணாக்கினி- பிதா-பின்னை இட்டத்தீ தென் இலங்கையிலே, ஹோமத்தீ-ஆச்சார்யர் கடவுள் அழைக்கும்போது சொல்லும் ஹோமத்தீ.) முழு மனதுடன் இம்மூவரையும் ஆராதிப்பவன் தனது செயல்களில் வெற்றி அடைவான்.

தாயிடம் கொண்ட பக்தியினால் பிறவி இன்பத்தையும், தந்தையிடம் வைக்கும் பக்தியினால் மறுமையில் சொர்க்கமும் குருவிற்கு சேவை செய்தால் பிரம்மலோக பேரானந்தத்தையும், பசுவை பூஜிப்பதால் ஐச்வர்யங்களையும், துன்பப்படும் பிறருக்கு உதவுவதால் நீண்ட ஆயுளும் ஒருவன் அடைகின்றான் –மனுதர்ம சாஸ்திரம்.

ஒரு பெண்ணை ஒரு முறைதான் திருமணம் செய்து கொடுக்க முடியும். மணமான பெண்ணைக் கவர்ந்து செல்பவன் கொள்ளையனாகக் கருதப்படுவான்.

பெண்களையும் குழந்தைகளையும் விற்பவனுக்கு விமோசனம் என்ற நற்கதி கிட்டாது.

தன் மனைவி மக்களை நிராதரவாக தவிக்க விட்டு சந்நியாசி ஆனவனுக்கு இறையருள் கிட்டாது. அப்படிப்பட்டவன் அடுத்து வரும் பல பிறவிகளில் மனித பிறவி அல்லாத மற்ற பிறவிகளை எடுத்து அந்த பாவத்தை போக்க வேண்டும்.

சுந்தரமான குணவதியான பெண்ணை மணந்து கொள்ள வேண்டும். முப்பேறுகளான தனம், தர்மம், காமம் இவற்றை நடத்த மனைவியும் தர்மமும் இருந்தால்தான் வாழ்க்கையின் அர்த்தம் முழுமையாகும். ஒருவனிடம் வித்தை வரலாம். மற்றவை வராது. பூர்வ ஜன்ம புண்ணியத்தினால் தானம் கிடைக்கும். இந்த ஜன்மத்தில் புண்ணியம் செய்ய முடியும்.

தர்மமும் புண்ணியமும் இரண்டற கலந்து வாழ்வில் நிற்கும். பறவை பறக்க இரு சிறகுகள் கட்டாயம் தேவை என்பது போல மனைவி இல்லாமல் ஒருவன் செய்யும் தர்ம காரியங்கள் பலனைத் தராது.

மனைவி கணவனின் பாதி. புருஷன் அவளைக் கண்மணிபோல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

குடும்பம் ஒரு தெய்வீக விருட்சத்திற்கு ஆதாரம். அதனால்தான் திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்பர். அந்த ஆதார சக்தி மனைவியே! விருட்சத்தின் ஆணிவேரும் அவளே. குடுபத்தில் உள்ள அனைவரும் வாழ்வில் குறையில்லாமல் இருக்க தன் வாழ்க்கை சுகங்களைத் தியாகம் செய்பவள் மனைவியே. விருட்சத்தில் விளையும் கனிகளான குழந்தைகளைத் தருவதும் மனைவியே. பராசக்தியின் அம்சமான அவள் தாய் எனப் போற்றப்படுவாள். எனவே குடும்பத்தில் பெண்களை மரியாதையுடனும் அன்புடனும் நடத்த வேண்டும்.

#*#*#*#*#

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!


$^$^$^$^$

 

10.உத்தமர்கள் யார்! நற்குணங்கள்! ஒழுக்கம்!

 

கணவனின் கட்டளைக்கு பணிந்து நடக்கும் மனைவி,
தாய் தந்தையின் உள்ளத்தை மகிழ்விக்கும் மகன்,
தன்னுடைய சுகதுக்கம்போல் அடுத்தவன் சுகதுக்கத்தை நினைக்கும் நண்பன்.

நற்குணங்கள்.

பிராணிகளைக் கொல்லாமை,
உண்மையே பேசுவது,
எளியோரிடம் இரக்கப்படுதல்,
பிராணிகளிடம் அன்பு,
இறைவனிடம் பக்தியுடன் தளரா நம்பிக்கை
பெறியோர், மூத்தோரிடம் பணிவு,
பெற்றவர்களை ஆதரித்தல்,
அனைவரிடமும் நட்புடன் இருத்தல்,
மூதாதையர்களை வணங்குதல்,
அரசின்மேல் பக்தி,
கஷ்டங்களில் மனம் தளராமை,
கற்க வேண்டியதை தெளிவாக நுட்பமாக கற்றல்,
தூஷனை சொல்லாமலிருப்பது
வம்பு பேசாமலிருத்தல்
காம, குரோத, லோபங்களைத் தவிர்த்தல்.

ஆகியன ஒவ்வொரு ஆத்மாவும் கடை பிடிக்க வேண்டிய நற்குணங்களாகும்.

ஒழுக்கம்

நேரம் அறிந்து மகிழ்ச்சி அடைதல், நேர்மையாக லாபம் ஈட்டல், அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் ஆகியன 3வகை ஒழுக்கங்களாகும்

வீட்டிற்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்று நீர்கொடுத்து உபசரித்தல் நன்மை. பெண்களாயிருந்தால் அவர்கள் திரும்பிச் செல்லும்போது பெண்கள் மஞ்சள், குங்குமம் கொடுப்பது சிறப்பு.

வீட்டில் தூசி, ஒட்டடை சேரவிடக்கூடாது. அடைசல்கள் இன்றி வீடு சுத்தமாக இருக்க வேண்டும். பகலில் குப்பைகளை வீட்டில் குவித்து வைப்பது கூடாது. இரவில் குப்பைகளை வெளியில் கொட்டக்கூடாது.

வீட்டு வாசல் படியில் இருந்து கொண்டு யாருக்கும் எதுவும் தரக்கூடாது. கொடுப்பவரும் வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே அல்லது கீழே இறங்கி வாங்குதல் / கொடுத்தல் வேண்டும்.

இறைவன் கொடுத்ததே போதும் என்ற மனத்திருப்தியுடன் வழ்ந்தால் சுகமும், நிம்மதியும் தேடிவரும். நமக்கு என்ன வேண்டும் எதை, எப்போது கொடுக்க வேண்டும் என்பதை இறைவன் அறிவான். இந்த உண்மைதனை உணர்ந்து அனைத்து ஆசைகளையும் தவிர்த்து தன் வருமானத்திற்குள் வாழ்க்கையை நடத்திச் செல்லும் மனிதன் அதிக சோதனைகளுக்கு ஆட்படாமல் பிறவி என்ற வாழ்க்கைப் பயணத்தை எளிதில் பயணித்துவிடுவான்.

$^$^$^$^$

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:44

சாமுத்ரிகா ராஜலட்சணம்!

Written by

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!


#^#^#^#^#

 

9.சாமுத்ரிகா ராஜலட்சணம்!

சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒரு ஆணுக்கு இருக்கும் முப்பத்திரண்டு லட்சணங்களாகும். அப்படி இருந்தால் அது ராஜ லட்சணம் எனப்படும். அரசர் குலத்தில் இவைகளைப் பார்ப்பதுண்டு.

1. தாமரை போன்ற திருவடி
2. திரண்ட நீண்ட சங்கினைப் போன்ற கணைக்கால்
3. எலும்பு தெரியாத சதைப்பற்றிள்ள முழங்கால்
4. யாணையின் துதிக்கை போன்ற தொடை
5. சிறுத்த வயிறு
6. ஆழ்ந்த உந்தி
7. கண்ணாடி போன்ற பரந்த மார்பு
8. வீணையைப் போன்ற முழந்தாள்-முழங்கால்முட்டி
9. முட்டியைத்தொடும் அளவிற்கு நீண்ட கைகள்
10. மேரு மலையையொத்த இரு தோள்கள்
11. வலம்புரிச்சங்கைப் போன்ற கண்டம்
12. செந்தாமரையை நிகர்த்த முகம்
13. வயிறு, தோள், நெற்றி, மூக்கினடி, மார்பு, கையடி உயர்ந்திருந்தல் சிறந்த செல்வம்
14. கண், கபாலம், மூக்கின்முனை, கை, மார்பு நீண்டிருத்தல் நன்மை
15. குடுமி, தோல், விரலின் கணு, நகம், பல் சிறுத்திருந்தால் ஆயுள் மிகும்
16. கோசம், கணைக்கால், நாக்கு, முதுகு குறுகி இருத்தல் செல்வப் பயன்
17. தலை நெற்றி அகன்று இருத்தல் நன்று
18. உள்ளங்கால், உள்ளங்கை, உதடு, கடைக்கண், நா மேல்வாய், நகம் சிவந்திருப்பது
நன்மையுடன் இன்பம் தரவல்லது
19. மார்பு, கழுத்து, கொப்பூழ் வலிமை
20. மார்பு, கழுத்து, கொப்பூழ் ஓசை ஏற்படுத்துதல்
21. மார்பு, கழுத்து, கொப்பூழ் ஆழம் பெற்றிருத்தல்
22. நீண்ட ஆயுள்
23. அழியாப் புகழ்
24. நீதி தவறாமை
25. நற்குணங்கள் நிறைந்து இருத்தல்
26. அன்புடைமை
27. பண்புடைமை
28. அமைதியுடைமை
29. அருள் பார்வை
30. ஈகை குணம்
31. கல்வி அறிவு
32. வெல்வதற்கு அரியவன்

#^#^#^#^#

செவ்வாய்க்கிழமை, 14 March 2023 10:42

பெண்களுக்கு நன்மை!

Written by

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!


#^#^#^#^#

 

8.பெண்களுக்கு நன்மை!


குலப்பெண்ணுக்குத் துணை புருஷன். புருஷன் தர்மாத்மாவாக நற்குலத்திலிருந்து வந்தவனாக, நீதிமானாக, புத்திமானாக, சத்யவானாக, விநயமுள்ளவனாக, திடவிரதமுள்ளவனாக இருக்க வேண்டும். புருஷன் வசிக்கும் இடத்தில் மனைவி வசிக்க வேண்டும். சான்றோர்கள், ஒத்த கருத்துடையவர்கள் வசிக்குமிடத்தில் மூத்தவர்களின் அனுமதியுடன் வசிக்க வேண்டும் அண்டை அயலாருக்கு கஷ்டங்களைத் தரக்கூடாது.

கணவன் வெளியில் சென்றிருக்கும்போது அலங்கார அணிகலன்கள் அணிந்து கொள்ளக்கூடாது. தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது. சென்றாலும் விரைவில் வீடு திரும்ப வேண்டும். கணவனை மதிக்க வேண்டும்.

பெண்கள் சோம்பியிருத்தல் கூடாது. சாப்பிடக்கூடாததை சாப்பிடுவது, மயக்கம் தரும் பெருட்களை உபயோகிப்பது, பிறர் வீட்டு நிகழ்வில் தலையிடுவது, மந்திர தந்திரங்களில் ஆர்வம் கொள்ளுதல், வேண்டாதவர்களுடன் யாத்திரை செல்லுதல், சாமியார்களுடன் சகவாசம், கணவனை விட்டு நீண்ட நாள் பிரிந்து இருப்பது, கோபம் கொள்வது, பொறுமையின்மை, பயமின்மை, பொறாமை கொள்வது, கருமித்தனம் ஆகியன பெண்களுக்கு நன்மை பயக்காது.

கருச் சிதைவு செய்தல் பிரம்ம ஹத்தி தோஷமாகும்.


#^#^#^#^#

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27183910
All
27183910
Your IP: 44.211.117.197
2024-05-24 09:50

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg