gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

சுயநலம்! என்குழந்தை!

Written by

    ஒரு சேரிப் பகுதில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடும்போது இருவர் அருகில் இருந்த சாக்கடையில் விழுந்துவிட்டனர். அவர்களை எட்டிப்பார்த்த மற்றக் குழந்தைகளும் சாக்கடையில் வீழ்ந்தன, எல்லா குழந்தைகள் மேலும் சாக்கடையின் சகதிகள். சப்தம் கேட்டு வந்த பெண் ஒவ்வொரு குழந்தையாகக் அருகில் இருந்த குழாயின் நீரினால் கழிவி விட்டாள்.
     அதற்குள் மற்ற குழந்தைகளின் தாய்மார்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அனைவரின் குழந்தைகளும் நீரில் கழுவியிருப்பதைப் பார்த்து, அந்த பெண்ணுக்கு நன்றி சொன்னார்கள். அதற்கு அந்தப் பெண் எல்ல குழந்தைகளும் சகதியினால் அடையாளம் தெரியாமல் இருந்தனர். எது என் குழந்தை எனத் தெரிந்து கொள்ளவே நான் நீரில் கழுவி விட்டேன் என்றாள்.
     தன் குழந்தையை கண்டுபிடிக்க எல்லா குழந்தையின் முக அழுக்கையும் நீக்கினாள் தாய். அதுபோன்றே நாம் யார் எனத்தெரிந்து கொள்ள, நம் உண்மையான முகத்தின் அடையாளம் காண அதை மூடியுள்ள ஆணவம், கர்வம், பொறாமை, பேராசை போன்ற திரைகளை நீக்கவேண்டும்.

முயலுக்கு 3கால்!

Written by

    ஒரு சிற்பி நிறைய சிலைகள் செய்து பார்வைக்கு வைத்திருந்தார். அவரின் நண்பர் அவைகளைப் பார்வையிட வந்திருந்தார். பார்த்தார். ரசித்தார். எல்லாம் நன்றாயிருந்தது. இருந்தலும் தனக்கும் சிலைகள் பற்றி தெரியும் எனக் காண்பித்துக் கொள்ள நினைத்தார். ஓர் சிலையின் முன் நின்று இந்த சிலையின் மூக்கு நீளம் என்றார்.
    நண்பனின் போக்கை புரிந்த சிற்பி, ஒர் உளியை எடுத்துக் கொண்டு நண்பர்முன் ஏணியில் ஏறி அந்த சிலையின் மூக்கின் அருகில் சென்றார். சிலையை சீர் திருத்துவது போல பாவனை செய்தார். சிலை சேதமடையாவண்ணம் அதன் மூக்குப் பகுதியில் தட்டினார். சிலைமேல் இருந்த துகள்கள் கீழே விழுந்தன. ஏற்கனவே மேலேறும்போது தன் கையில் கொண்டுவந்த துகள்களை கீழே போட்டுவிட்டு, கீழ் இறங்கி வந்தார் சிற்பி.
    நண்பரிடம் உங்கள் ரசனை பிரமாதம். நீங்கள் சொன்ன பின்புதான் அந்தக் குறை எனக்கும் தெரிந்தது. இப்போது எப்படி இருக்கின்றது என்றார். ஒன்றும் புரியாவிட்டலும் எல்லாம் தெரிந்தமாதிரி, ஆகா சிலை அற்புதமாக இறுக்கின்றது என்றார் தான் பிடித்ததற்கு 3கால் என்னும் நண்பர்.

தங்கத்தில் திருப்தி இல்லை!

Written by

    ஏழை ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் நண்பன் ஒருவர் தெய்வ வரம் பெற்று விட்டதாகவும், எல்லோர் கஷ்டங்களையும் தீர்த்து வைப்பதாக் கேள்விப்பட்டு அவரிடம் சென்றான். இவன் நிலை அறிந்த நண்பர் அருகில் கிடந்த செங்கல் கட்டியை எடுத்து அதை நோக்கி தன் சுட்டு விரலை நீட்ட அது தங்கமாக மாறியது.
    அந்த தங்க கட்டியை வைத்து உன் துயரங்களையும் கஷ்டங்களையும் போக்கிக் கொள் என்றார். இப்போது திருப்தியா என்றவருக்கு, ஏழையின் முகத்தில் சந்தோஷத்திற்குப் பதில் முகச்சுழிப்பைக் கண்டார். அவன் திருப்தியடையவில்லை என உணர்ந்தார்
    வேறு என்ன வேண்டும் என அன்புடன் கேட்டார். ஏழை, உங்களின் சுட்டு விரல் வேண்டும் என்று தன் பேராசையை வெளிப்படுத்தினான். கிடைத்த தங்கத்தைக் கொண்டு தன் வாழ்வை சீர்படுத்தத் தெரியாதவனுக்கு, அந்த தங்கமும் நல்ல பயனைத்தராது என்று மௌனமாக சென்றுவிட்டார் நண்பர்.

போனமுறை விழுந்த இடம்!

Written by

    வேட்டையாடுவதில் விருப்பம் உள்ள இருவர் வேட்டையாடச் சென்றனர். இவர்கள் வலையில் இரண்டு குட்டி யாணைகள் கிடைத்தது. மகிழ்வுற்ற இருவரும் இரண்டு யாணைகளையும் கூட்டி வந்தனர். காட்டிலிருந்து நகருக்குவர ஓர் விமானத்தை ஏற்பாடு செய்தனர். விமானி இரண்டு யணைக் குட்டிகளை கொண்டு செல்லமுடியாது. பாரம் அதிகம் ஒன்றை ஏற்றிச் செல்லலாம் என்றான். அவர்கள் சென்றமுறை இரண்டு யாணைக்குட்டிகளை ஏற்றிக் கொண்டுச் செல்ல அப்போதிருந்த விமானி ஒத்துக் கொண்டார் என்றனர். மேலும் உங்களுக்கு அதைவிட கூடுதல் பணம் தருகின்றோம் என்றனர். விமானி சம்மதித்தான்
     வண்டியில் பாரம் ஏற்றப்பட்டது. சிறிது தடுமாற்றத்துடன் புறப்பட்ட அந்த சிறிய விமானம் சிறிது தூரம் சென்றதும் மிகவும் தடுமாறி கீழே வயல் பகுதியில் விழுந்தது. அப்போது வேட்டைக்காரரில் ஒருவன் கேட்டான், நாம் இப்போது எங்கே விழுந்து இருக்கின்றோம் என்று. அடுத்தவன், போனவாரம் விழுந்தோமே அதற்குப் பக்கத்தில்தான் என்றான். என்ன புத்திசாலித்தனம் இது.
    தண்டனை என்பது தவறுக்கு. ஒருமுறை தவறு செய்து அதிக பாரம் ஏற்றி அதனால் கீழே விழுந்தவர்கள் அதை அனுபவமாக வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தபடி செயல்பட வேண்டும். அப்படி அனுபவங்களை பாடமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் இப்படி ஒவ்வொரு முறையும் கீழே விழவேண்டியதுதான்.

திருடனுக்கு தெரிந்த மரியாதை!

Written by

    ஓரு கதை ஆசிரியருக்கு, அவர் கதை எழுதும் போது யாரவது குறுக்கீடு செய்தால் கோபம் வரும். ஒரு நாள் அவர் எழுதிக் கொண்டிருக்கும்போது திருடன் வந்தான். அவர் எதையும் கவனிக்காமல் எழுதுவதில் கருத்தாக செயல் பட்டதால், திருடனுக்கு அவன் வந்தவேலை சுலபமாக முடிந்தது. தன்னால் முடிந்த அளவுக்கு பொருள்களை அள்ளிச் சென்றுவிட்டான். அவர் தனது எழுத்துப் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்
    வெளியில் சென்றிருந்த அவர் மனைவி வீட்டிற்கு வந்தார். கணவர் எழுதிக் கொண்டிருப்பதால் தொந்தரவு செய்யக்கூடாது என்று அமைதியாக உள்ளே சென்றார். உள்ளே சென்றவர் பதட்டத்துடன் கூச்சலுட்டுக் கொண்டு வந்தார். பெட்டி திறந்திருக்கின்றது, யாரோ எனது நகைகளை எல்லாம் திருடிக்கொண்டு சென்று விட்டனர் என்றார்.
    மனைவியின் அலறலின் காரணத்தை சரியாக அறியாமல், தன் எழுதுவதற்கு இடைஞ்சல் செய்வதாக நினைத்து, ‘ஒரு திருடன் எனது வேலைக்குக் காட்டும் மரியாதைகூட, உனக்குத் தெரியவில்லையே’ எனச் சப்தம் போட்டார். குடும்பத்தின் இழப்புகூடத் தெரியாமல் அப்படி என்ன செய்யும் தொழிலில் ஈடுபாடு. இதுபோன்ற கண்மூடித்தனமான பற்றுதல்கள் பெரிய இழப்புகளை உண்டுபண்ணும்.

அலட்சியம் நஷ்டம்!

Written by

    கரடு முரடான பாதையில் ஐவர் பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த ஏகாந்தமான பகுதியில் ஜன நடமாட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. திடீரென்று வானிலிருந்து ஓர் அசரீரை போன்ற சப்தம் வந்தது. அனைவரும் நின்று உற்றுக் கேட்டனர். அந்தக் குரல் அனைவரையும் கீழே இருக்கும் கற்களை பொறுக்கச் சொல்லியது. குரலை வேதவாக்காக கருதியவன் உடனே கற்களைப் பொறுக்கினான். கற்களையா பொறுக்குவது என நினைத்த இருவர் சிறிது யோசனையுடன் சில கற்களை எடுத்தனர். மற்ற இருவர் யாரோ சொன்னார் என்பதற்காக நான் ஏன் கல்லைப் பொறுக்கவேண்டும் என்ற அலட்சியத்துடன் நின்றனர்.
    கண்களை மூடுங்கள் என்று மீண்டும் குரல். ஏனோத் தெரியவில்லை அனைவரும் ஒன்றும் யோசிக்காமல் கண்களை மூடினர். சிறிது நேரத்தில் மீண்டும் அந்தக் குரல் கண்களைத் திறங்கள் என்று. அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் யார் யார், அங்கு கற்களை சேகரித்து இருந்தனரோ அவை எல்லாம் ரத்தினங்களாக மாறியிருந்தது.
     எதிர்பாரா இடத்தில் ஒலித்த அசரீரையை கேட்டு செயல் பட்டவர்களுக்கு அதன் பலன் கிடைத்தது. வெறும் கற்களை எடுப்பதில் என்ன. எடுத்துதான் பார்ப்போமே என்று அதிக கற்களை எடுத்தவன் ஆனந்தம் அடைந்தான். குறைந்த கற்களை எடுத்தவன் மனம் வருந்தினான். அலட்சியம் செய்தவன் வேதனையுடன் சந்தர்ப்பத்தை நழுவ விட்டோமே என்று அழுதனர்.

விலகிவந்தால் புரியும்! ஆபத்து!

Written by

     கடலில் வசிக்கும் ஒர் மீனுக்கு ஒரு சந்தேகம். தான் இருப்பது எங்கே! கடல் எங்கே இருக்கின்றது! அந்தக் கடலை நாம் எப்படிப் பார்ப்பது! தான் சந்திக்கும் எல்லா மீன்களையும் இதைப்பற்றிக் கேட்டது. அவைகள் நாங்களும் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் அது எங்கிருக்கின்றது என்றுதான் தெரியவில்லை என்று கூறியது.
    மிகுந்த ஏமாற்றத்துடன் அலைந்து திரிந்தமீன் ஒரு பெரிய மீனைச் சந்தித்தது. அந்த மீனிடம் தன் கேள்வியைக் கேட்டது. அந்த பெரியமீன் நீ எங்கே பிறந்தாயோ, எங்கே வளர்கிறாயோ, எங்கே இறக்கப்போகின்றாயோ அந்த இடம்தான் என்றது. ஒன்றும் புரியவில்லை. பதில் திருப்தியாகவும் இல்லை. எனவே அது எங்கே! என்று மீண்டும் கேட்டது. தெரியாது எனச் சொல்லிவிட்டு பெரியமீன் சென்றது.
    யாரிடம் கேட்கலாம் என்ற யோசனையில் வழிதவறி கரைக்கு அருகில் வந்தது. அலகளின் வேகத்தில் கரையில் வந்து விழுந்தது. உடன் அதன் கண்ணுக்கு கடல் தென்பட்டது. கடலிலிருந்து கொண்டு கடலைத்தேடினல் கடல் எப்படித் தெரியும். கடலைவிட்டுக் கரைக்கு வந்ததால் தெரிந்தது.
கடலிலிருந்து வெளியே வந்தால் தன்னுயிருக்கு ஆபத்து என்ற ஓர் உண்மையும் புலப்பட்டது.  துள்ளியது கடலில் மீண்டும் சேர்ந்தது.

போலி!

Written by

    அந்த மருத்துவ மணையின் கதவுகளைச் சாத்தப்போகும் இரவு நேரம். உள்ளே சென்றுகொண்டிருந்த நோயாளி, அவன் படுக்கைக்கு அடுத்த படுகையில் இருந்த நோயாளி அவசரமாக வெளியில் சென்று கொண்டிருக்கக் கண்டான். என்ன விபரம் எனக் கேட்டான்.
   நாளைக்கு காலையில் எனக்கு அறுவை சிகிச்சை. அதுதான் ஓடுகிறேன் என்றான். அறுவை சிகிச்சையெல்லாம் இந்தக் காலத்தில் சாதாரணம், சிகிச்சைக்கு வந்துவிட்டு இப்படி பயந்து ஓடுகின்றயே என்றான் இவன்.
    நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் டாக்டரின் உதவியாளர் பேசியதைக் கேட்டபின் பயம் வந்திடுச்சு, என்றான்.
    அப்படி என்ன சொன்னார் எனக் கேட்டபோது, ‘இது ஒரு சின்ன ஆபரேஷன்தான், இதற்கெல்லாம் பயப்படக்கூடாது, தைரியமா இருக்கனும் சொன்னாங்க.’
     ‘சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார்கள்’ இதற்கு ஏன் பயப்படுகிறாய் என்றான்.
    ‘ஐயோ. அந்த உதவியாளர், எங்கிட்ட இதைச் சொல்லலே. அறுவை சிகிச்சை செய்யப்போற டாக்டர்கிட்டே சொன்னாங்க! அதைக் கேட்டவுடன்தான் நான் ஓடியாறேன் என்றான். இருவரும் ஓட்ட மெடுத்தனர்.
     பின்னர்தான் தெரிந்தது அந்த டாக்டர் ஒரு போலி என்று. நிச்சயமாக காலத்தின் போக்கில் ஒரு சமயத்தில் போலிகளின் உருவம் வெளிப்படும்.

தீயவை கேட்கின் தீமை!

Written by

    ஒரு கோவில் யாணை இயல்பாகவே சாதுவான குணமுடையது. யாணைப் பாகனின் சொல்லுக்கு கீழ்படிந்து இருந்தது. கயவர்கள் பலர் யாணக்கூடத்தின் அருகே இரவில் சந்தித்து தங்களின் செயல்கள் பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர். இரக்கம் அற்றவர்களாகவும், தயவு தாட்சண்யம் அற்றவர்களாகவும் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப்பற்றி அடிக்கடி கேட்ட யாணையின் செயல்களில் மாறுபாடு தெரிந்தது. ஒருநாள் திடிரென்று அது யாணைப்பாகனைத் தாக்கியது. பலத்த காயம் அடந்தான்.
   அதிகாரி மேலதிகாரியின் ஆலோசனையைக் கேட்டார். விசாரனை நடந்தது. முடிவில் நல்ல இயல்பான சாது குணமுடைய யாணை தொடர்ந்து தீவினைச் சொற்களை கேட்டதால் ஏற்பட்ட மாற்றம் என அறிந்து, இரவில் காவல் பலப்படுத்தப்பட்டது. யாணை தொடர்ந்து தீச்சொற்களை கேட்காததாலும், கோவிலில் நடந்த ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் பஜனை போன்றவைகளையே கேட்டதாலும் அதன் போக்கில் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. எனெவே எந்த ஆன்மாவாயிருந்தாலும் தொடர்ந்து துர்போதனைகளையும் கடுஞ்சொற்களையும் கேட்டுக்கொண்டிருந்தால் அந்த ஆத்மாவின் செயல்பாடுகளில் வக்ரம் தென்படும். இன்சொற்களே நல்ல பலன் தரும்.

எதிரியின் சக்தி!

Written by

    ஒரு தீவிர பக்தரின் கனவில் ஆஞ்சநேயர் தரிசனம் தந்தார். பக்தன், அவருடன் தான் தாயம் விளயாட விருப்பம் தெரிவித்தார். நான் விளையாட்டில் விட்டு கொடுக்க மாட்டேன், நீ வருத்தமடையக் கூடாது என்று அனுமான் ஒரு நிபந்தனையைச் சொன்னார். சம்மதத்துடன் இருவரும் விளையாட ஆரம்பித்தனர். ஒவ்வொருமுறையும் ‘ஜெய் அனுமான்’, அல்லது ‘ஜெய் ஆஞ்சநேயா’ எனக்கூறி காய்களை உருட்டினார் பக்தர். ஆஞ்சநேயர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உருட்டினார். பலமுறை விளையாடியும் பக்தனே வெற்றி பெற்றான்.
   தோல்வியுற்றால் வருத்தப்படக்கூடது எனக்கூறிய ஆஞ்சநேயர் வருத்தமுற்றார். ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தும் எனக்குத் தோல்வியா! என ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராமர் அவர்முன் தோன்றி, ஆஞ்சநேயா. நீ என் பக்தன். எனவே என் சக்தி உன்னிடம் இனைந்துள்ளது. அவன் உன் பக்தன். உன் சக்தி அவனிடம் இனைந்துள்ளது. ஆனால் நான் உன்னுள் இருப்பதால் உன்சக்தி இனையுமிடத்தில் என்சக்தியும் சேர்ந்துவிடும். நம் இருவரது சக்தி சேர்ந்திருப்பதுவே அவனது தொடர் வெற்றிக்கு காரணம் என்றார். எண்ண அதிர்வுகளால் ஒருவரின் மனதை நீங்கள் கவர்ந்து விட்டால் அவரிடமுள்ள அனைத்து சக்திகளும் உங்களுக்கு உதவும்.

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26942493
All
26942493
Your IP: 3.232.108.171
2024-03-29 11:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg