gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 01 May 2020 10:13

சத்திபேதம்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#####

சத்திபேதம்!

1045. திரிபுரை சுத்த மாயையாக, அசுத்த மாயையாக, விந்துவாக, வைகரி வாக்காக, ஓம் என்ற பிரணவமாக, உள் ஒளியாக, ஓர் ஆறு நிலையில் மந்திரமாக, சத்தியினது மூர்த்தியாகவும் அவற்றை கடந்தும் விளங்குவாள்.

1046. திரிபுரை அக்கினி, சூரியன், சந்திரன் என்ற மூன்றாய் விளங்குபவள். பேரழகுடன் வான் வடிவினள். உலகை காக்கும் செவ்வொளியாக உள்ளவள். நாராயணி பலநிறங்களை உடையவள். மகேசன் சத்தியாக கருநிறத்தில் இருப்பவன். நினைப்பவர் மனத்தில் உறைபவன். திரிபுரையே இப்படி பல சத்திகளாக இருக்கின்றாள்.

1047. சுயமாய் அமைந்த முப்புரங்களில் தானே மூன்று வடிவம் ஓர் உருவம் என்ற தனமை உடையவள். தானே செம்மை வெண்மை நிறம் கொண்டவள். இன்பத்தையும் வீடுபேற்றையும் கல்வியையும் அளிப்பவளாய் இருப்பவள்.

1048. திரிபுரை நாதத்தையும் நாதம் கடந்த நாதாந்த நிலையையும் அருள்பவள். பரவிந்துவாக இருந்து பெரிகிய உலகம் முதலான அண்டங்களை அளிப்பாள். பரையும், அபிராமியும், அகோசரியும் ஆன அன்னை அன்புகொண்டு தழுவி அறிவை வழங்குவாள்.

1049.. அழகான காலணிச் சிலம்பு ச்வந்த பட்டுடை கச்சணியும் கொங்கை, மலர் அம்பு, கரும்பு வில், எழுச்சி தரும் அங்குசபாசம் அழகியமுடி கரிய நீலநிறக் குண்டலம் ஆகியவற்றிற்கு உரியவள்.

1050. குண்டலத்தைக் காதில் அணிந்தவள், கொல்லும் தன்மையுடைய வில்போல் வளைந்த புருவத்தை உடையவள். செந்நிறத் திருமேனி கொண்டிருப்பவள். தோளணி, கழுத்தணி ஒளிவிடும் முடி சந்திரன் ஆகியவற்றை உடைய சண்டிகை. நான்கு திசைகளை உடைய உலகைக் காப்பவள்.

1051. உயிர்கள் உய்யும் பொருட்டு உயிர்களுடன் கலந்து நிற்கும் அன்னை திரிபுரையாவாள்.. மிகவும் பழமையானவள். குறைவற்ற அழகு உள்ளவள். சீவர்களின் தலைமேல் உள்ள சிகையில் விளங்குபவள். அறியும் கண்களை உடைய்வள். நான்கு திசை பொருள்களை தன்பால் இழுக்கும் தன்மை உடையவள். தூய சகசிரதளத் தாமரையில் இருக்கும் சுத்த வித்யா தேவி அவள்.

1052. தூய்மையான கச்சினையும் மாலையையும் கூடிய மார்பை உடையவள். இன்பத்தின் உற்றாகும் இயல்பை உடையவள். சீவர்களை ஆட்கொள்ளும் பெரிய சத்தி, பராபரி, மனமான காட்டில் வாழ்பவள்.. தானே படைத்துக் கொண்ட வடிவம் உடைய ஞான வடிவானவள். தானே சந்திர மண்டலமாக திகழ்பவள்.

1053. சந்திரமண்டலத்தில் இருக்கும் அச்சத்தியை ஒளி மண்டலத்தில் வாழும் தேவர்கள் உணராமல் இல்லை. ஒளி மண்டலமான தேவியை அறியாது செய்யக்கூடிய தவம் வேறு ஒன்று இல்லை. சந்திரமண்டலத்திலிருந்து நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஐவரும் சீவர்களை தொழிற்படுத்துகின்றனர். அவளை அறியாது செய்யும் வீடு பேறு நெறியை நான் அ/ற்றியேன்.

1054. ஞானியர் பராசத்தி ஆனந்த வடிவுடையவள் என்பர். அறிவு வடிவினள் என்பர். உயிர்கள் செய்யும் செயல் அனைத்தும் அவள் விருப்பின் வழி நடப்பது என்பர். சிவனும் அவளிடம் வீற்றிருப்பவரே என்பர்.

1055. சிவம் எங்கு உள்ளாரோ அங்கு இருப்பவள் தையலான நாயகி. உடல் எங்கு உள்ளதோ அங்கு உயிருக்கு உயிராய் காவலாய் இருப்பவள். வான் எங்கு உள்ளதோ அங்கும் அதற்கு அப்பாலா பரவெளியிலும் விளங்கும் தேவி இருப்பாள். இவைகளை ஆராய்ந்து அறிக.

1056. பலவகையாலும் பராசத்தி,யே மேன்மையானவள். எல்லாவற்றையும் தாங்கும் ஆதார சத்தியாய் நிற்பவள். அவள் தன்மையை உணர்க. எல்லா ஊழிகளிலும் உயிர்களைக் காக்கும் ஆற்றல் பெற்றவளும் அவளே. புண்ணியத்தின் பயனைத் தருபவளும் அவளே.

1057. உயிர்களுக்கு இன்பத்தை ஊட்டி குண்டலி சத்தியுடன் பொருந்தி சீவர்களுக்கு பரிபாகத்தை செய்யும் பராசக்தி அவள். அவள் அடியார்களுக்கு நாளும் ஒளியுடலை அளித்து பரிபக்குவம் ஏற்படச் செய்யும் கொழு கொம்பானவள்.

1058. உயிர்களுக்கு கொழு கொம்பாய் இருப்பவளை குவிந்த முலையை உடைய மங்கையை தேன் சிந்தும் மலர்களை அணிந்த முடியை உடைய திரிபுரையை வானோர் விரும்பும் அவளை சிவந்த பவளம் போன்ற திருமேனி உடையவளை நான் நம்பி எனது மனதில் விருப்பத்துடன் வ்ளர்த்துக் கொண்டேன்.

1059. .உல்கில் வைத்த பொருளும். அவற்றுடன் பொருந்திய உயிர்க் கூட்டமும் பத்து திசைகளில் நிறையுடன் காக்கும். பத்து முகங்களை உடையவளும் நடப்பாற்றலான பரையும், வளப்பாற்றலான பராபரையும் அந்தக் காரணம் நான்கையும் செயல்படச் செய்பவள் ஆகிய அவள் ஸ்ரீவித்தைக்கு தலைவி ஆவாள்.

1060. தூய வித்தைக்குத் தலைவி அகன்ற மார்பிடத்திற்குமேல்சூழ இருக்கும் சந்திரமண்டலத்தில் இருப்பவள். அழியாத தவத்தைச் செய்யும் தூய நெறிகளை அருளிய தோகைமயில் போன்றவள். எல்லா கலைகளையும் வென்ற இளமை குன்ராத கன்னி என் மனத்தினுள் முழுமையாய் நிற்பாள்.

1061. இப்படி இருக்கும் பராசக்தி முழுக்கலையுடன் என் உள்ளத்தில் பொருந்தி ஏழு உலகத்தினரும் தொழச் சகசிரதளத்தில் ஒன்றுபட்டு மனோன்மணியாக மங்க பொருளாய் நான் வேறு அவள் வேறாய் பிரித்து அறியதபடி நின்றாள்.

1062. ஒத்து அடங்கியிருக்கும் சசிகரதளத்தில் இருக்கும் பராசத்தி, பெருந்தலைவனான சிவனை மகிழ்ந்து சேரும் மனோன்மணியாக மங்களமாய் திகழும் சிவசத்தியை உள்ளத்தில் நிறத்தும் வழியை தெளிவுபெற்று சிலர் அறியாமல் இருக்கின்றனர்.

1063. சிவ ஒளியில் பொருந்தி எல்லாவற்றையும் உணர்ந்து உடனாய் நிற்கும் இயல்பாகவே மணம் பொருந்திய மலருடன் கூடிய கூந்தலை உடைய சத்தியும் தானுமாகக் கூடி நிற்கும் அந்நிலையில் எழுந்தருளியிருக்கும்போது நினைப்பவர்க்கு நல்ல நிலைதனை அளிப்பவள்.

1064. எல்லோரிடமும் ஏற்புடையவளாய் விளங்கும் பராசத்தி ஆனந்த வடிவான அழகி. ஓட்டுடன் பொருந்திய புளியம் பழத்தைப் போல் விளங்கும் எனது இயலபை பக்குவம் உண்டாக்கிச் சிவகதியை காட்டினாள். தன் ஒளியில் என்னை ஒன்றாக்கிக் கொண்டாள்.

1065. உலகினர் உண்டு எனவும் இல்லை எனவும் சொன்ன சத்தியே நுண்ணுடலைப் பருவுடலாய் செய்தாள். வளமையான தில்லையம்பலம் என்ப்படும் சசிகரதளத்தில் நிலை பெற்று நிறபாள். ஆன்மாவின் பந்த மோட்சங்களுக்கு காரணம் அறிவு வடிவான சிவத்திடமும் அதைச் செயலுக்கு விடுவது சத்தி என்பதையும் உலகத்தார் உணர்வதில்லை. ஆன்மாவின் அக்கினி, சூரிய், சந்திர என்ற மூன்றிலும் பராசத்தி நிலையாக இருக்கின்றாள்.

1066. சத்தி சீவர்களின் உயிரும் உடலுமாய் இருப்பவள். சிவகதியில் உயிரைச் சேர்க்க விரும்பிய பராசத்தி சந்திரமண்டலத்தை நோக்க ஊர்த்துவ முகம் கொண்டு இருந்தாள். உடலில் அவள் இருந்தபோது என் உணர்வில் புகுந்து ஒன்றி நிற்பாள். வேதமான வாக்கை ஏந்தி நிற்கும் ஒளியாவாள்.

1067. சொல் வடிவில் இய்க்கம் கொள்பவள் இறைவி. அவள் மூன்று கண்களை உடையவள். படிகம் போன்ற தூய வெண்ணிறமுடையவள். வெண் தாமரையான சசிகரதளத்தில் விரும்பி இருப்பவள். நாதமயமானவள். உங்களது தலையில் அவளின் திருவடிகளை சூடி வாயினால் துதி செய்யுங்கள்.

1068. அவளைத் துதித்து அவளது இரு திருவடிகளான சூரியன் சந்திரர்களை ஒன்று சேர்த்துக் வணங்கி ஒலியும் ஒளியும் அமையும்படி இருங்கள். உள்ளத்து தியானத்தில் அங்குசம் பாசம் கரும்பு ஆகியவற்றுடன் பொருந்திய மெல்லியலை ஆதித் தலைவியாக போற்றுங்கள்.

1069 .படைப்பு நிக்ழ்வு பெருகச் செய்த குளிர்சியான் நீர்- பாற்கடலில் இருக்கும் திருமாலின் தங்கை நாராயணி, சசிகரத்தளத்தில் வீற்றிருப்பவளும் ஆன இறைவியின் மந்திரத்தை சிவசத்தியாய் எண்ணிப் பல்முறை செபித்தால் நுண்மையான் உடல் ஒளிமயமாக மாறி இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலமும் தோன்றும்.

1070. சத்தி அ கார முதல் உன்மனி வரை உள்ள பதினாறு கலைகளையும் உருவமாய்க் கொண்டவள். வேதங்களில் பரமாகவும் அபரமாகவும் துதித்துப் பாடப்படுபவள். உயிர்களின் இருப்பிற்கு ஆதாரம்.. நாதம் நாதாந்தத்தில் இருக்கும் சிவத்திற்கு அருட் சத்தி ஆவாள்.

1071. உண்மைப் பொருளைத் தனக்கு உரிமையாய் பெற்று அருள் வழங்கும் தன்மையுடைய எல்ல புவனத்திற்கும் தலைவியான திரிபுரை மய்க்கம் தரும் பிரபஞ்சத்தை பற்றி சீவர்களின் சித்தத்தை மாற்றி நிலையான பந்தம் இல்லாத உலகங்களைப் பொருந்திய திருவடியை நான் வணங்குவேன். அனுபவத்தில் கண்ட இவ்வுண்மையை மற்றவர்க்கு எடுத்துச் சொவீர்களாக.

1072. தேவியைச் சுற்றியுள்ள ஏழு மங்கையரில் ஒருத்தியான வராஹி பன்றி முகத்துடன் கூடிய அடையாளமாக இருப்பவள், இழிவான உடம்பை இடித்துத் துன்புறுத்தும் உலக்கையுடன் கலப்பையும் உடையவள் குற்றம் இல்லாத ஊன் உடலை கடந்து தியானிப்பவர் மனத்தில் சிறப்புடன் இருப்பாள்.

1073. ஓம் என்ற பிரணவ வடிவான தேவியே ஐந்தொழில் நிலைக்கு வரும்போது ஐந்தொழிலுக்கும் அவள் தலைவி. பச்சை நிறம் உடையவள். அகங்காரத் தத்துவத்துடன் பொருந்தி இருக்கும்போது சதாசிவம், மகேசுவரர், உருத்திரன், திருமால், நான்முகன் ஆகியவர்களைத் தன் அம்சமாக உருவாக்கினாள். ஹரீம் என்ற மந்திர பீஜத்துள் இருக்கின்றாள்.

1074. எல்லாவற்றிற்கும் பரசத்தியே தலைவி. தானே வாக்கு வடிவமாக விளங்கி பதினாறு வித்தைகளுக்கும் தேவ உலகங்களுக்கும் மன மண்டலத்திற்கும் நுண்ணறிவைக் கடந்த நாதாந்தமும் ஆகி தானே சிவகதியை அளிப்பவள் ஆவாள்.

#####

Read 1669 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932356
All
26932356
Your IP: 3.91.19.28
2024-03-29 01:56

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg