gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60
புதன்கிழமை, 15 March 2023 09:06

உணவு: எவற்றை உண்ணக்கூடாது!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!


மொழியின் மறைமுதலே, முந்நயனத் தேறே
கழியவரும் பொருளே, கண்ணே - செழிய
கலாலயனே, எங்கள் கணபதியே, நின்னை
அலாலயனே, சூழாதென் அன்பு!


#*#*#*#*#

 

20.உணவு: எவற்றை உண்ணக்கூடாது!

 

நோய் வந்தால் உடன் மருத்துவரை அணுகி தக்க வைத்தியம் செய்தல் வேண்டும். அத்துடன் மீண்டும் நோய் வராமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

பொதுவாக சாப்பிடும்போது பாதியில் எழுந்திருக்கக்கூடாது. அப்படி எழுந்திருந்தால் திரும்பி வந்து விட்டுப்போன அன்னத்தை சப்பிடக்கூடாது. அளவுக்கு அதிகமாக உண்ணுவதே உடல் நலிவுற்று நிறைய நோய்கள் உண்டாக காராணமாகிறது. அஜீர்ணம் ஏற்பட்டால் அது பூஜைகள், ஹோமம், தர்ப்பணம், தானம், தவம், குளியல் முதலியவற்றை சரிவர செய்வதில் தடைகள் ஏற்பட்டு தினசரி வேலைகளையும் பாதிக்கும். இதனால் அந்த ஆத்மாவின் பவித்ரம் அதாவது தூய்மை கெட்டுவிடும்.

நிலையில்லாத உடலையும் காசு பணத்தையும் நிலையாக எண்ணி தீயதை செய்யும் உணவுகளை உண்ணாதீர்கள். கண்டதை உண்டு கெட்டுப் போகதீர்கள். எண்சான் உடம்பிற்கு வயிறே பிரதானம். அந்த ஒரு சாண் கெட்டு விட்டால் அதிலிருந்து தோன்றும் நோய்களின் உபாதைகள் தாங்க முடியாதவை. உடம்பிற்கு ஊண் கொடுக்கும் அந்த கேந்திரத்தை பேணிக் காப்பது உயிருள்ளவரை அவசியமான ஒன்றாகும். அதை மனதில் கொண்டு கிண்டல் கேலியின்றி ஏன் சொல்லப்பட்டது என்பதைப் புரிந்து தெரிந்து உடல் நலம் காண முயலுங்கள் ஆத்மாக்களே!

ஒரு குழந்தைக்கு நீங்கள் சொல்வது போல் இதைப் படிக்கும்போது நீங்களும் குழந்தை மனப்பான்மையுடனிருந்து படித்து மனதில் பதியவைத்து செயல்பட்டால் அது உங்கள் வாழ்நாள் முழுவதிற்கும் மிகுந்த பயனைத் தருபவையாக அமையும். கூடுமானவரை சாத்வீகமான உணவையே உண்ணுங்கள்.

சிறிதுநாள் உங்கள் விருப்பப்படி நினைத்தபோது கண்டவையெல்லாம் சாப்பிட்டு வயிற்றையும் குடலையும் கெடுத்துக் கொண்டபின் மருத்துவர் சொன்னார், இதை விட்டு விட்டேன் என்று உங்களை நீங்களே புகழ்ந்து கொள்வதில் என்ன பிரயோஜனம்.

உடம்பின் ஆரோக்கியம் உங்கள் வயிறு மற்றும் குடலைப் பொறுத்தது ஆகும் என்பதை உணர்வீர். எப்போதும் சாத்வீக உணவை உண்ணுவதையே வழக்கமாக கொள்ளுங்கள். மணம், வாசம் கண்டு ஏமாறாதீர்கள். அவைகள் தீமை பயக்கக்கூடியவை.

ஆறுமாதம் கட்டாயமாக மருத்துவ மணையில் படுக்க வேண்டிய நிலை வந்தபின் தன்னுடைய பழக்க வழக்கங்களை சீர்படுத்திக் கொள்ளாததன் நிலைமை புரிகின்றது. சில பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்களால் அப்போதுகூட அவைகளை விட்டுவிட முடியாமல் கஷ்டப்படுகின்றனர். போகிற உயிர் போகட்டும். அனுபவித்துவிட்டு இறக்கிறேன் எனப் புலம்புவர். எதை அனுபவித்து விட்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். துன்பத்தையா! அதை நீக்கி இன்பத்தை அனுபவிக்க முயலுங்கள்.

மனத்தின் துன்பத்தை நீங்களாகவே நீக்கிக் கொள்ள முடியும். உடல் துன்பத்தை நீக்க மருத்துவரின் உதவி வேண்டும். அவர் சிறந்தவரா. இவரிடம் போய் பார்த்தால் என்ன என மருத்துவர்களை நாடி உங்கள் பயணம் தொடர்கதையாக இருக்க வேண்டுமா!

நீங்கள் செய்த தவறுகளுக்கு அனுபவிக்கின்றீர்கள்! சரி என விட்டு விட முடியுமா!. உங்களைச் சார்ந்தவர்களின் உடலை வருத்தி முகத்தில் சோகத்தின் நிழல் படர வைத்து உங்களுக்காக கஷ்டப்படும் உங்கள் உறவுகளை நினையுங்கள். சொந்தங்களை சோகத்தில் ஆழ்த்தும் உங்களின் செயல்பாடுகள் எவ்வாறு சரியாயிருக்கும்.

பிற்கால உடல் துன்பங்களிருந்து விடுபட சிறுவயது முதலே உடலைப் பேணுவது முறையாக இருக்க வேண்டும். இளம் பருவத்தில் வரும் மனக்கவலை ஒன்றுமில்லை. பெற்றவர்கள் பெரியவர்கள் அவர்கள் தேவைகளை கவனிப்பர். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’, ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’, என்றும் மொழிக் கூற்றுகள் உண்டு. முதுமையில் ஏற்படும் சிக்கல்களிலிருந்து தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பேணிப் பாதுகாத்து ஆனந்தமான சூழலை தன்னைச் சுற்றி உருவாக்க வேண்டிய பொருப்பில் இருப்பதால் ஒவ்வொரு ஆன்மாவும் தனது இளம் பருவத்தேயிருந்து உடலை பேணுதல் அவசியமாகின்றது.

உரோமம், பூச்சி, புழுதி, அசுத்த மனிதன், கொடியவர்கள் கண் பட்ட உணவு, தீய்ந்துபோன உணவு, உடை, எச்சில், தும்மல் ஆகின பட்ட உணவு, நாய் போன்ற விலங்கினங்கள் வாய் வைத்த சோறு ஆகியவற்ற உண்ணக்கூடாது. மிகுந்த கோபமும் மூர்கத்தனம் கொண்டவர்கள், நோயால் பீடிக்கப் பட்டவர்கள், திருடர்கள், செய்நன்றி மறந்தவர்கள் ஆகியோர் சமைத்த உணவையும் சாப்பிடக்கூடாது.

மனிதர்கள், பசுக்கள் முகர்ந்த உணவு, ரோகிகள் தொட்டது, ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை இருந்த உணவு அன்போடு பறிமாறப்படாத உணவு, சந்நியாசியிடம் பெற்றது, சந்நியாசி பாத்திரத்தில் பட்டது, மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியவற்றின் வாய் பட்டது ஆகிய உணவுகளையும் உண்ணக்கூடாது.
பிறரின் பித்ருக்களுக்கு படைத்த உணவை சாப்பிடக்கூடாது. அமாவாசையன்று மது, மாமிச உணவை சாப்பிடக்கூடாது.

கடவுளுக்காக சமைக்கப்பட்ட உணவை படைக்குமுன் சாப்பிடக்கூடாது.

அனுமதியின்றி உரியவரின் தோட்டத்திலிருந்து பறித்தவைகளை உண்ணக்கூடாது. கடையில் வாங்கிவந்த காய்கறிகளை முதலில் கழுவி பின்னரே சமையலுக்கு என உபயோகிக்க வேண்டும். அப்படியில்லாமல் கழுவாமல் சமைத்த காய்கறிகளை உண்ணக்கூடாது.

முறைகேடாக, தீய வழியில் சம்பாதித்த உணவு, நா பொறுக்க முடியாத சூடு மற்றும் காரம் உள்ளவை அழுக்கான உப்பு சேர்த்த பண்டங்கள் ஆகியவற்றை உண்ணக்கூடாது.

எள் கலந்த பண்டங்களையும், நல்லெண்ணெயும் தயிரும் கலந்த உணவை இரவில் உண்ணக்கூடாது.

அந்தி சாயும் நேரத்திலும், நள்ளிரவிலும் உண்ணக்கூடாது. குதவாய்யைக் கழுவும் இடது கையால் உண்ணக்கூடாது. உண்ணத் தொடங்கிய பிறகு எச்சில் பட்ட இலையில் நெய்யை ஊற்றியும், இரண்டுமுறை பக்குவம் செய்த உணவையும் உண்ணக்கூடாது.

பக்குவம் செய்யாத பச்சையான உணவு வகைகளான பழம் முதலியனவற்றை மட்டுமே கையினால் சாப்பிடவேண்டும்.

விருந்தினருக்கு வேறு தனக்கு வேறு என்று பிரித்து பாகம் செய்த உணவை உண்ணக்கூடாது. அதாவது உணவை பங்கு போடக்கூடாது.

சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.

இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாட்சம் காணாமல் போய்விடும்.

தினமும் மாலை 0430 முதல் 0600 மணிவரை தீய சக்திகளின் ஆதிக்கம் பெருகி இருக்கும் தினப்பிரதோஷ காலத்தில் கண்டிப்பாய் உணவு உட்கொள்ளக்கூடாது.

திரிசந்தி காலத்தில் சாப்பிடவோ, தூங்கவோ கூடாது. தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது சிறப்பு.

நம் உணவில் முக்கிய பங்கு வகிப்பது அரிசி எனப்படும். உணவு உண்ணும் முன் அன்றைய பொழுதில் அந்த உணவு நமக்கு கிடைத்தமைக்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த உணவின் பெயரிலே - அரி+சி அரியும் சிவனும் இருக்கின்றார்கள். மேலும் அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்திற்கு பொருத்தமான அரிசி பக்குவமானால்தான் அது நமக்கு உணவு. அது போன்றே அரி, சிவா என்பது மனதை நிரப்பி பக்குவப் படுத்தும். ஒரு உயிர் பிறந்ததும் அதற்கான உணவும் உடையும் அதன் கர்மப்படி இயற்கையின் விதிப்படி இறையின் நியதிப்படி தயாராக இருப்பதால் அதைத் தேடி அடைய வேண்டியதே அந்த ஆத்மாவின் செயலாகும். அந்த இறைவனை உணவு உண்ணும்போது நினைப்பதே சாலச் சிறந்தது.

நம் முன்னோர்கள் நாம் உண்ணும் உணவில் சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். உணவில் ஐந்து வகை தோஷங்கள் உள்ளதாக நம்பினார்கள் இந்த ஐந்து தோஷங்களும் அவைதரும் தீமைகளாவன.

அர்த்ததோஷம்!

தன் நெருங்கிய நண்பனின் வீட்டிற்கு உணவருந்தச் சென்றான். உணவருந்திக் கொண்டிரும்போது வேறு ஒருவர் வந்து நண்பனிடம் நிறைய பணம் கொடுப்பதைப் பார்த்தான். உணவு அருந்தி முடித்ததும் நண்பன் தன்னுடைய அறையில் ஓய்வு எடுக்கச் சொல்லி இருந்தான். அந்த அறையில் தன் நண்பன் பெற்ற பணத்தை வைத்திருப்பது தெரிந்ததும் அவன் மனம் சஞ்சலப் பட்டது. ஆசைமிகுதியால் அப்பணத்திலிருந்து கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டான். பின் தன் இடத்திற்கு திரும்பினான். மறுநாள் காலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து குளித்துவிட்டு பூஜை செய்யும்போது முந்தைய நாளில் அவன் நண்பனிடமிருந்து அவனுக்குத் தெரியாமல் பணம் எடுத்து வந்தது நினைவிற்கு வந்தது. இப்படி ஒரு செயலை செய்து விட்டோமே என வருத்தப்பட்டான் நமக்கு ஏன் அந்த எண்ணம் உண்டானது என எண்ணியபோது மதிய உணவு நண்பன் வீட்டில் உண்டபின்னர்தான் அந்த எண்ணம் வந்தது என முடிவுசெய்து, பூஜை முடிந்ததும் நண்பனிடம் சென்று நேற்று தான் செய்த காரியத்தைச் சொல்லி பணத்தை திருப்பிக் கொடுத்தான். பணத்தைக் கொடுக்கும்போது நீ எப்படி சம்பாதிகின்றாய் எனக் கேட்டதற்கு நண்பன் நான் தீய வழிகளில்தான் சம்பாதிக்கின்றேன் என ஒப்புக்கொண்டான்.

வேதங்கள் என்ன சொல்கிறது என்றால் இப்படி நேர்மையற்ற முறையில் சம்பாதித்து வரும் பணத்தினால் வாங்கும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் வருவதே அர்த்த தோஷம் என்கிறது நாம் சமைக்கும் உணவு நியாமான சம்பாத்தியத்தில் வாங்கிய பொருட்களாக இருப்பது அவசியம்.

நிமித்த தோஷம்!

நாம் உண்ணும் உணவைச் சமைப்பவர் நல்ல மனதுடன், நேர்மையானவராகவும் அன்புடையவராகவும் இருக்க வேண்டும். நல்ல சுபாவம் உள்ளவரால்தான் அந்த உணவை பல்லி, எறும்பு, பூச்சிகள், நாய் இவைகள் தீண்டாமல் பாதுகாக்க முடியும். தாயாரிக்கும் உணவில் தூசி, தலைமுடி, புழுக்கள் போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும். அசுத்தமான உணவை உண்பவர்களுக்கு மனதில் பலவித அசுத்தமான தீய எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.
பீஷ்மர் மிகவும் நல்லவர். நியா தர்மங்களை பின்பற்றுபவர். ஆனால் அவரால் பாஞ்சாலியை துகிலுரிக்கும்போதும் மற்றும்பல நிகழ்வுகளிலும் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்ததற்கு காரணம் அவர் தீய எண்ணங்கள் நிரம்பி வழியும் மன்னன் துரியோதனின் உணவை உண்டுவருவதுதான் காரணமானது. கெட்ட மனமுடையவர் கொடுத்து அதை உண்ணுவதால் நல்ல எண்ணங்கள் அழிந்து நிமித்த தோஷம் ஏற்படும் என்கிறது வேதங்கள்.

ஸ்தான தோஷம்!

நல்ல அதிர்வுகள் உள்ள இடத்தில் சமைக்கப்படவேண்டும். அதாவது சமையல் செய்யும் இடம் அக்னி மூலையில் இருக்க வேண்டும். மேலும் சமைக்கும்போது தேவையற்ற விவாதங்கள் செய்துகொண்டு சமைக்கக்கூடாது. அதனால் அந்த உணவு அசுத்தமாகிவிடும். யுத்தகளம், வழக்காடு மன்றம் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவு சாப்பிட ஏற்றதல்ல.

பாண்டவர்களுக்காக துது சென்ற கிருஷ்ணனை வரவேற்று உபசரிக்க 56வகை உணவுகளுடன் விருந்து தயாரித்தான் துரியோதணன். ஆனால் கிருஷ்ணர் அதை தவிர்த்து விதுரர் வீட்டிற்குச் சென்று தங்கினார். அப்போது விதுரரின் மனைவி கிருஷ்ணரின் திடீர் வரவால் முதலில் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாமல் ஒரு வாழைப் பழம் எடுத்து தோலை உரித்து கொடுக்க நினைத்தவர் தோலை உரித்துவிட்டு கவனக் குறைவாக தோலை கிருஷ்ணரிடம் கொடுத்துவிட்டார். அன்பின் மிகுதியால் கிருஷ்ணரும் அதைச் சாப்பிட்டார். இதை கண்ட விதுரர் மனைவியை கோபித்தார். அப்போது கிருஷ்ணன் அன்புடன் எது கொடுத்தாலும் அதுவே சிறப்பு என்றார். சுத்தமான இடத்தில் தாயரிக்கப்டும் உணவே ஸ்தான தோஷமில்லாது. அது அன்புடன் பரிமாறப்படவேண்டும் என்கிறது வேதம்.

குணதோஷம்!

உணவுப் பொருட்களில் உள்ள மூலப்பொருட்கள் எந்தவித குணதோஷமின்றி சாத்வீக தன்மை யுடையதாக இருக்க வேண்டும். சாத்வீக உணவுதான் ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கவல்லது. பால், நெய், அரிசி, மாவு, பருப்புகள் சாத்வீக உணவு வகைகள். புளிப்பு, உறைப்பு, உப்பு ஆகியனவாகும்
ரஜோ உணவுவகைகள் உலக மாயையில் சிக்க வைக்கும். உணர்வுகளைத் தூண்டிவிட்டு சுயநலத்தில் மூழ்கடிக்கும்.

பூண்டு, மாமிசம், வெங்காயம், முட்டை ஆகிய தாமஸ உணவு வகைகள் தீய எண்ணங்கள் வளர வழிவகுக்கும்.

உணவு வகைகளில் குணதோஷம் பார்த்து உண்பதுதான் சிறப்பு என்கிறது வேதம்.

சம்ஸ்காரதோஷம்!

உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு தரக்கூடிய உணவு வகைகளை உண்ணக்கூடாது. அது சம்ஸ்கார தோஷம் எனப்படும். அதிகமாக வேகவைத்தல், அதிக எண்ணெய்யில் வறுத்தல் பழைய உணவு ஆகியவை சம்ஸ்கார தோஷதிற்கான உணவாகும்.

ஒவ்வொரு உயிரும் இந்த ஐந்துவித தோஷங்களை நீக்கி உணவு உண்டு வந்தால் அவர்கள் ஆரோக்கிய நலனுடன் நல்ல எண்ணங்கள் கொண்டவராக நல்ல செயல்களைச் செய்து நலமுடன் வாழ்வர் என்கிறது வேதம்.

அருந்தும் பால்!

குதிரை, கழுதை ஆகியவற்றின் பாலை அருந்தக்கூடாது. இரட்டைக் கன்றுள்ள பசுவின் பால், ஒட்டகத்தின் பால், உப்பு கலந்த பால், மோர் கலந்த பால், கருவுற்ற பசுவின் பால், கன்றை இழந்த பசுவின் பால், வெறொரு கன்றால் கறந்த பால், திரிந்துபோன பால், செப்பு பாத்திரத்தில் வைத்த பால், காய்ச்சும்போது திரிந்த பால் ஆகியவற்றை குடிக்கக்கூடாது.

குடிக்கும் நீர்!

கங்கை நீரைத் தவிர முதல் நாள் பிடித்து வைத்த நீர் எதையும் அருந்தக்கூடாது. கால் கழுவிய பின் மீதி உள்ள நீர், கலங்கிய நீர், தீயில் காய்ச்சிய நீர், சிறு குழியில் தேங்கிய நீர் ஆகியவற்றை குடிக்கக் கூடாது.

#*#*#*#*#

 

 

Read 47 times
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

25108406
All
25108406
Your IP: 35.172.111.47
2023-06-08 04:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg