gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கவலையில்லா மனிதன் காசினியில் இல்லை! பாவம் செய்யா மனிதன் பாரினில் பிறப்பதில்லை! பாவங்களே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்! பாவங்கள் தீர்ந்தால் கவலைகள் தீரும்!

பிற மாநில கோயில்கள்

PADHERWA-NAK/பதேர்வா-நாகம்/வாசுகி

செல்லும் வழி: காஷ்மீர்-தோடா-33
தகவல்கள்:

ஊர்: பதேர்வா
மூலவர்: வாசுகி நாகம், ஜீமுத் வாகனன் - ஒன்பது தலை நாகம் குடைபிடிக்க 6'உயர சிலைகள்,
இறைவன்:
இறைவி:
தி.நே-காலை சூரிய உதயமுதல் அஸ்தமனம் வரை

சிறப்புகள்:

அஷ்டநாகங்களுக்கு தலைமை நாகம் வாசுகி. இந்த வாசுகியை கயிராகக் கொண்டு மந்தாரமலையை மத்தாகப் பயன்படுத்தி அசுரர்கள், தேவர்கள் பால் கடலைக் கடைந்து அமுதம் எடுத்தனர். சிவபக்தனான வாசுகி அவர் கழுத்தை அலங்கரிக்கும் ஆபரணமாக திகழ்கிறார். வாசுகியின் சகோதரன் ஆதிசேஷன் பரமபதத்தில் நித்ய சூரியாக திகழ்வதோடு விஷ்ணுவின் படுக்கையாகவும் உள்ளார். நாக தேவதையாக வழிபடும் மானஸதேவி வாசுகியின் சகோதரி. அர்ச்சுனனின் பேரன் அபிமன்யு உத்தரையின் மகன் பரிட்சீத் தர்மருக்குப் பிறகு ஹஸ்தினாபுரத்தை ஆண்டுவந்தபோது தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவரின் கழுத்தில் இறந்த பாமபை போட்டதின் விளைவான சாபத்தால் அஷ்ட நாகங்களில் ஒன்றான தட்சகனால் தீண்டப்பட்டு இறந்தான். பரிட்சீத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த அவன் மகன் ஜன்மேஜயன் தன் தந்தையை பாம்பு தீண்டி இறந்ததால் பாம்பு இனத்தை அழிக்க சர்ப்ப யாகம் செய்த போது எண்ணற்ற பாம்புகள் இறந்தன. சில நாகங்கள் தப்பிப் பிழைத்து காஷ்மீர் மாநிலம் பதேர்வாவில் தஞ்சமடைந்தன. ஆகவே இது நாகங்களின் பூமி என்றானது.

கச்யப முனிவரின் மனைவி விநதைக்கு கருடனும், கத்ருவுக்கு பாம்புகளும் பிறந்தன. நடந்த போட்டியில் விநதை கத்ருவுக்கு அடிமையானாள். கருடன் இந்திரலோகம் சென்று அமிர்தம் கொண்டுவந்து கத்ருவிடம் அளித்து தன் தாயின் அடிமைத்தளையை நீக்கினான். அன்றிலிருந்து பாம்புகளின் மீது பகைகொண்டு கொன்று புசித்த கருடனிடம் வாசுகி நியாயம் கேட்க தொடர்ச்சியாக கொல்லவில்லை, ஆனால் தினமும் ஒரு பாம்பு தனக்கு இறையாக வர ஒப்புக்கொண்டான் கருடன். அதன்படி தினமும் ஒவ்வொன்றாக பாம்புகள் கருடன் குறிப்பிட்ட பாறைமீது சென்று கருடனுக்கு இறையாகின. 

அப்பகுதியை ஆண்ட மன்னன் ஜீமூதவாகனன் பதேர்வாவுக்கு வந்து வாசுகியுடன் நண்பரானார். ஜீமூதவாகனன் செல்வம் துறந்து காட்டிற்குச் சென்றபோது நாக கன்னிகையின் அழுகுரல் கேட்டு அவளை விசாரிக்க ஒவ்வொரு நாளும் பட்சி ராஜாவுக்கு ஒரு பாம்பு இறையாக கட்டளை உள்ளது. அதன்படி இன்று என் மகன் சங்க சூடன் முறை என்பதால் துயரம் தாங்க முடியவில்லை என்றதைக் கேட்ட ஜீமூதவாகனன் அந்த பாம்பிறகுப் பதிலாக தானே சென்று பாறை மீது படுக்க, மன்னனின் தியாக உணர்வைப் பாராட்டி கருடன் அன்றிலிருந்து பாம்புகளை கொல்வதை கைவிடுவதாகக்கூறி இதுவரை தனக்கு இறையான பாம்புகளின் எழும்புக் கூட்டிலிருந்து அந்த பாம்புகளை உயிர்பித்துக் கொடுத்தான்.  எனவே பாம்புகள் தொடர்ந்து அழிக்கப்படுவதை தடுத்த வாசுகி மற்றும் ஜீமூதவாகனன் இருவரும் இங்கு கருவரையில் மூலவர்களாக அருள்.

மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும்வாசுகி கையில் சங்கு சக்கரத்துடன் காட்சி. பனிக்காலத்தில் மூடப்பட்டு பைசாகியன்று திறக்கப்படும்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

map 67

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

18461078
All
18461078
Your IP: 172.69.63.17
2020-08-11 09:44

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg