ஊர்:பாலப்பேடு,ராமப்பாகோயில்
இறைவன்:ராமலிங்கேஸ்வரர்.ருத்ரேஸ்வரர்-9'
இறைவி:
பிறசன்னதிகள்:நந்தி-9'
தி.நே
காகதீய கணபதி தேவா அறநெறிதவராது ஆட்சி புரிந்த மன்னனுக்கு அரனுக்கு ஓர் கோவில் எழுப்ப ஆசை. தளபதி ருத்ரசமானி சிற்பி ராமப்பாவை தேர்ந்தெடுத்தான். சிவனை சிந்தையில் நிறுத்தி சிற்பி துவங்கி ஆண்டுகள் பல ஆயின. கோவில் முடிவுறும் தருணம் கோவிலைப் பார்த்த மன்னன் மனம் குளிர்ந்தான். இந்த அழகு மிக்க கோவில் கட்டிய சிற்பிக்கு என்ன சன்மானம் தருவது. சிற்பியின் பெயரால் கோவில். ராமப்பா கோவில் எனப் பெயர் வைத்தான். ஆறடி உயர பீடத்தில் முகப்பு கோபுரம். அழகிய வேலைப் பாடுகள் மிக்க தூண்கள். நந்தியும் ஈசன் ருத்ரேஸ்வரரும் 9' உயரம். ராம- இனியவர், பக்தர்களுக்கு அருளும் இனியவர்-ராமலிங்கேஸ்வரர். தளபதி ருத்ரசமானி முன்னின்றதால் -ருத்திரேஸ்வரர். நுரைகற்களால் கட்டப்பட்டது. அழகிய வேலைப்பாடுகள், எழில்மிகு சிற்பங்களுடன். நவராத்திரி விழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
