ஊர்:காலேஸ்வரம்,மந்திரகூடம்
இறைவன்: காலேஸ்வரர்+முத்தீஸ்வரசுவாமி-இரட்டைலிங்கம்
இறைவி: சுபானந்தாதேவி,ஸ்ரீசக்ரநிவாசினி
பிறசன்னதிகள்: தஜபுஜ சிந்தாமணி கணபதி, விஜயகணபதி, மகாகணபதி, மகாவிஷ்ணு, துர்க்கா, அன்னபூர்ணா, சொர்ணாஆகர்ஷ்ண பைரவர், காலபைரவர், வீரபத்ரர், சுப்ரமண்யர், காசிவிஸ்வேஸ்வரர், பாலராஜேஸ்வரர், ஜ்யேஷ்டாதேவி, அனுமன், நவக்கிரகம். சரஸ்வதி,
தீர்-கோதாவரி-3நதிகள்சங்கமம்(ப்ரணாஹிதா,அந்தர்வாஹினி சரஸ்வதி உள்பட), யமகுண்டம்(குளம்)
5நிலை ராஜகோபுரம்.கிழக்கு. தி.நே-0430-1300,1530-2000
காசியில் இறந்தால் மோட்சம். இந்த தட்சிணகாசியில் இரண்டு லிங்கங்களையும் தரிசித்தால் மோட்சம். இதனால் யமனின் செயல் குறைய, சிவனை வேண்ட யமனை அருகில் லிங்கவடிவில் இருக்க செய்தார். ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள். இந்த தலத்தில் உள்ள ஆதி முத்தேஸ்வரரை தரிசித்து பின் காலேஸ்வரம் முக்தேஸ்வரரை தரிசிக்க வேண்டும். முக்தேஸ்வரர் லிங்கத்தின் மேற்புறம் இரு துவாரங்கள். தாரா பாத்திரங்களிலிருந்து வீழும் நீர் துவாரங்கள் வழியே கோதாவரி நதியில் கலக்கின்றது. லிங்கத்துடன் யமனையும் பூஜிக்காதவர்கள் நரகம் செல்வர். நான்கு திசையிலும் வாயில்கள் 4மண்டபங்கள் 4நந்திகள். கிழக்குவாயிலில் சிவதுவாரக பாலகர்கள் சிருங்கு பிருங்கி. சாளுக்கிய மன்னர்கள் நிர்மாணிக்கப்பட்டு 800 ஆண்டுகளுக்கு முன் காகதீய மன்னர்களால் புணரமைப்பு. யமகுண்ட தீர்த்தத்தில் நீராடி தரிசனம் முடிந்தபின் யமகோணம் என்ற நான்கு வாயில்களுடன்கூடிய சிறிய தாழ்வான மண்டபத்தில் குனிந்து நுழைந்து வலம் வருவது யமகூட பிரதட்சணம். மகாசிவராத்திரி பெருவிழா-திரிவேணி சங்கமம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புஷ்கரமேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
