gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: திருப்பதி-500. நந்தியால்-ர.நி.-104 ஹைதராபாத்-240, டோர்னாலா-49(காட்டு மலைப்பாதை)
தகவல்கள்:

ஊர்:திருப்பருப்பதம்.தி.த-268+மு+ஜோ-2/12. ஸ்ரீசைலம்.# பூகைலாயம். கிருஷ்ணாதென்கரையில்,ஸ்ரீபர்வதம், ஸ்ரீகிரி, ஸ்ரீநகரம்
இறைவன்: மல்லிகார்ச்சுனர்,(சு) ஸ்ரீசைலநாதர்,ஸ்ரீபர்ப்பதநாதர்
இறைவி: பிரம்ராம்பிகை. பருப்பநாயகி
பிறசன்னதிகள்: சித்திவிநாயகர்அன்னபூர்ணி, ராஜராஜேஸ்வரி , வடகிழக்கில் சப்த மாத்ருக்கள், வலப்புறம் மனோகர குண்டம்(ஆழ்கிணறு), பளிங்கு கல்லால் ஆன சன்முகர்உமாமஹேஸ்வரர்,(பஞ்சநதீச்வரர்.) ராமர்பிரதிஷ்ட சஹஸ்வரலிங்கேஸ்வரர்முருகன்-ஆறுமுகம்-12கரங்கள் . நவபிரம்மா ஆலயங்கள். ஹேமாரெட்டி, அக்கமஹாதேவி, கண்ணாடி மாளிகை, ஸ்ரீராஜராஸேஸ்வரர், ஸ்ரீராஜராஜேஸ்வரி, அர்த்தநாரீஸ்வரர். பாண்டவர் பிரதிஷ்டை செய்த 5லிங்கங்கள்.வீரபத்ர சுவாமி, விருத்த மல்லிகார்ஜுனர்.
4புறகோபுரவாயில்
தீர்-பாலாழி,கிருஷ்ணா-பாதாளகங்கை, பிரம்ம குண்டம், விஷ்ணுகுண்டம். 
மரம்-மருத,திரிபலா(மேதி,ரவி,ஜீவி-3ன்சேர்க்கை)
தி.நே-0500-1500,1730-2200 காலை நேரத்தில் மட்டும் கட்டணம் செலுத்தி நாமே பூஜை செய்யலாம்.

சிறப்புகள்:

#-04-02-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது

தொலைபேசி: 91 8524 288881, 887, 888

ஜோதிர்லிங்கத் தலம்-2/12. 1000 ஆண்டுகள் பழமை. கோபித்துக்கொண்டு சென்ற குமரனைத்தேடி சிவ பார்வதி வந்து இருந்த தலம். அர்ஜுனம்- மாயை- பந்த பாசத்தில் சிக்கி உழலும் உயிர்களின் மயக்கத்தினை நீக்குபவர். சக்தி பீடம்- பிரமராம்பாள்  பீடம்/ சைல பீடம். சிவன் வேடனாக வந்து அர்ஜுனனுடன் போரிட்டு அருள் புரிந்த தலம். மல்லிகார்ஜுனம்- அர்ஜுனத் தலம்-1/3. சிலாத முனி தவம்- ஸ்ரீசைலம்.  நந்தி தவம் -இறைவனை சுமக்கும் ஆற்றல்- இங்கு அவரே மலையாக. ஜோதிர்லிங்கத் தலங்களில் தேவார திருமுறை பதிகங்கள் பெற்ற தலம்-1/3. 8சிகரங்கள் (வைடூரிய, மாணிக்க, பரவாளி, பிரம்ம, ரௌப்ய, ஷேமா, மரகத, வஜ்ர) , 9நந்திகள் (பிரதம, நாக, விநாயக, கருட, சிவ, மகா, சூரிய, விஷ்னு, சோம), 9கோவில்கள் (பிரமேச் வரம், வருணேச் வரம், இந்திரேச் வரம், ஜனார்த்தனேஸ் வரம், சப்தகோடீச் வரம், குக்குடேஸ் வரம், ஹேமேஸ் வரம், அக்ணேஸ் வரம், மோஷேசு வரம்). மஹாசிவராத்திரி- பாதாள கங்கையில் நீராடி தரிசனம் சிறப்பு. சூரியன் வழிபாடு, 280000 ச.அடிகள் பிரமாண்ட ஆலய வளாகம். 2121 அடிகள் கொண்ட கோட்டைச் சுவர் போன்ற பிரகாரம் பிரகாரச் சுவர்களில் பொறுத்தப்பட்ட அனைத்து 3153 கற்களிலும் சிற்பங்கள்.. பாஸ்கரத்தலம். தட்சிணகைலாயம்.  அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.  பக்தர்கள் அபிஷேகம் செய்யலாம். தொட்டு வணங்கலாம்.

ஸ்ரீசைலத்திலிருந்து 3மணிநேர மலைப் பயணம். இரவில் தனியார் வாகனங்கள் மலைமேல் செல்ல அனுமதியில்லை. ஸ்ரீ சைல கோவிலிருந்து 2கி.மீ தூரத்தில் சாட்சி கணபதி கோவில். பக்தர்களில் யார் மோட்சத்திற்கு செல்லும் அருகதை உள்ளவர்கள் என்பதை ஸ்ரீ சைலநாதருக்கு பட்டியலிட்டுக் கொடுப்பவர் என்பதால் சாட்சி கணபதி. மல்லிகாபுரியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள் சந்திரரேகா இங்கு கிடைக்கும் மல்லிகைப் பூவாலும் அர்ஜீனா மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்ததால் -இறைவன் மல்லிகார்ஜினர். நந்தி அவதரித்த தலம். நந்தி மலையாக அமைந்திருக்கின்றது. சிலாதர் என்ற மகரிஷியின் மகனான நந்தி க்கு குறந்த ஆயுள் என சனகாதி முனிவர்கள் கூறியதால், சிவனைக் குறித்து கடுந்தவமிருந்து சிவனுக்கு வாகனமாகவும் அவரது அனுமதியின்றி சிவனை யாரும் காணமுடியாது என்ற வரத்தினை பெற்றார். நந்தி தவம் செய்த இடம் நந்தியால் மலையின் கீழ் உள்ளது. அவர் சகோதரர் பர்வதன் தவமிருந்து பர்வத மலையாக மாற வரம் பெற்றான். அந்த மலைமீது சிவன் மலை லிங்கமாக அருள். காலப் போக்கில் மலை ஸ்ரீ சைலமாக மாற மலை லிங்கம் மல்லிகார்ஜுனரானார். பஞ்சபாண்டவர்கள் தங்கிய இடம். சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் -மூலவர் விமானத்தின்மேல் சூலம் வைக்கப்பட்டுள்ளது. கிருதாயுகத்தில்- இரண்யன், திரேதாயுகத்தில்- ஸ்ரீராமர், துவாபரா யுகத்தில்- பாண்டவர்கள், கலியில்- சத்ரபதி சிவாஜி, ஆதிசங்கரர் பூஜித்தது. 

வசுமதி என்ற பெண சிறு வயது முதல் சிவபூஜை செய்து தவமிருந்து ஸ்ரீ என்ற பெயர் பெற்று அதை இந்த சேத்திரத்தோடு சேர்த்து சொல்ல அருள் பெற்றதால் ஸ்ரீபர்வதம், ஸ்ரீகிரி, ஸ்ரீசைலம் எனப்பட்டது.  அக்கமஹாதேவி என்பவர் சிறுவய்து முதல் சிவன்மேல் பக்தி கொண்டு சிவ பூஜை செய்து வந்தார். சிவதீஷை ஏற்று ஸ்ரீ சிலம்  வந்து சமஸ்கிருத மொழியில் தேர்ச்சியடைந்து உபந்நியாசங்கள் செய்து பக்தியை வளர்த்து வந்தாள்..ஜைன அரசன் கௌசிகன் நந்தவனத்தில் அக்கமாஹாதேவியைக் கண்டு அவள் அழகில் மயங்கி அவளை பட்டத்து ராணியாக்க விரும்பி துது அனுப்பினார். ஒரு ஜைனனுக்கு வீரசைவ பெண்ணை மணமுடிக்க விரும்பாத பெற்றோர்கள் மறுத்துவிட்டனர். அவளாஇ எப்படியும் அடைந்துவிட ஜைனன அர்சன் தீர்மானிக்க வேதனைப்பட்ட பெற்றோர்களுக்கு ஆறுதல் சொல்லி அரசனை வீரசைவனாக்கி மணம்புரிவேன் எனக்கூறி அரண்மணை சென்றவள் நீ வீர சைவனாக மாறினால் மட்டுமே உன்னை நான் மணப்பேன் எனக்கூறி பூஜை அறைக்கு சென்றாள். நாட்கள் பல கடந்தன. காம வேட்கை கொண்ட அரசன் பூஜை அறையில் அவளை வாரி அணக்க முற்ப்பட்டான். அப்போது அக்கமா தன் ஆடைகளை அகற்றி அவன்மேல் வீசிவிட்டு தன் கூந்தலால் உடலை மறைத்துக் காட்சியளித்தது ஜைன அரசனுக்கு தீர்த்தங்கரைப் போல இருக்கவே மண்டியிட்டு வணங்கினான். பின் அங்கிருந்து கிழம்பி மீண்டும் ஸ்ரீசைலம் வந்து ஆலயத்தின் அருகில் உள்ள குகையில் அமர்ந்து தியானம் செய்து மல்லிகார்ஜுனருடன் கலந்தாள்.

முத்தண்ணகௌட் சுகுலாதேவிக்கு ரேவண சித்தர் அருளால் குழந்தை பாக்கியம்-சித்தராமப்பா எனப் பெயரிட்டனர்.குழந்தைக்கு 8 வயதுவரை பேச்சு வரவில்லை.தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு வயோதிகர் வந்து தான் பசியோடு இருப்பதாக கூற சித்தராமப்பா தன் பெற்றோர்களிடம் சென்று விபரம் சொல்லி அங்கிருந்ததை எடுத்து வந்தான். தன் மகன் இதுகாறும்  பேசாதிருந்து பேசியது கண்டு ஆனந்தமடைந்தனர். சித்தராமப்பா மல்லய்யா மல்லய்யா என்று பெரியவரை அழைத்துக் கொண்டு ஊர் முழுவதும் தேடி ஒரு காவடி கூட்டத்தில் கலந்து ஸ்ரீசைலம் சேர்ந்தான். அங்கும் மல்லய்யாவை தேட பக்தர்கள் லிங்கமே மல்லய்யா என்றனர். நான் தேடியது லிங்கத்தை அல்ல. மல்லய்யா என்றமுதியவரை எனக்கூறி அங்கிருந்த பள்ளத்தில் விழப்போக இறைவன் அருள் புரிந்தார். அந்த பள்ளமே இன்று சித்தராமப்ப குளம்.

சிவனை மணக்க விரும்பிய ராஜகுமாரியின்  கனவில் நீ பார்க்கும் வண்டை தொடர்ந்து சென்று அது தங்குமிடத்தில்  எனக்காக காத்திரு நான் உன்னை மணம் புரிவேன் என்றார். அதன்படி  கண் விழித்த ராஜமுமாரி தன்கண்ட  வண்டைத் தொடர்ந்து செல்ல அது ஸ்ரீசைலத்தின் வனப்பகுதியை அடைந்தது.அங்கு தங்கியிருந்த ராஜகுமாரியைக் கண்ட சிவன் பர்வதியிடம் அவள் எனக்காக காத்திருக்கின்றாள் எனக்கூறி ஒரு வயோதிக உருவம் கொண்டு அருகில் சென்று நான் உன்னை தேடிக்கண்டு பிடிப்பதற்குள் என் இளமை போய்விட்டது என்னை மணந்து கொள்வாயா எனக் கேட்க அவள் இதுகாறும் அவளுக்கு பாதுகாப்பாக இருந்த காட்டுவாசிகள் ஒரு கிழவனை மணக்க வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் மணந்துகொண்டாள்.. காட்டு வாசிகள் வழக்கப்படி திருமண விருந்து நடக்க அது வேண்டாம் எனக்கூறி எழுந்து சென்றவரை மல்லய்யா செவிட்டு மல்லய்யா லிங்க ஸ்ரூபியன் உன்னை மணந்து கொண்டது தவறு நீ அப்படியே லிங்கமாக மாறவது எனச் சாபமிட்டாள். அப்படியே லிங்கமானார்-மல்லிகார்ஜுனர். அப்போது பார்வதி வண்டை தொடர்ந்து வந்த நீ வண்டாக மார சபித்தாள் /சிவனின் மனைவி ப்ரமாரி-வண்டு ப்ரம்ப்ராம்பளாக நிலைத்து அருள்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-55

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26805191
All
26805191
Your IP: 34.236.134.129
2024-03-05 03:20

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg