ஊர்:சுருட்டப்பள்ளி#
இறைவன்:1.ஸ்ரீபள்ளீகொண்டீஸ்வரர்.ஸ்ரீவிஷாபகரணமூர்த்தி,2.வால்மீகீஸ்வரர்
இறைவி: 1சர்வமங்களேஸ்வரி ,2.மரகதாம்பிகை
பிறசன்னதிகள்: ஸ்ரீதாம்பத்யதட்சிணாமூர்த்தி ,சாளக்கிராம கணபதி, முருகன் வள்ளி, தேவசேனா(சிவகுருசாமி), ஸ்ரீராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, அன்னபூர்ணேஸ்வரி, கையில் கிளியுடன் ஞானதுர்க்கை.
தி.நே:0600-1230,பிரதோஷ நாளில் இரவு எட்டுமணிவரை.
#28092014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
தொலைபேசி: 73820 05038
குருத்தலம். ஆலகால விஷம் உண்டு அதன் தாக்கத்தால் மயக்கமாய் அன்னை மடியில் தலை வைத்து படுத்த தலம். அமிர்தம் கடையும்போது வாசுகி வலிபெருக்கமுடியாமல் விஷத்தை கக்க அது உலக மக்களுக்கு அபத்து என உணர்ந்த சிவன் ஆணைப்படி சுந்தரர் அதைச் சுருட்டி எடுத்து சிவனிடம் கொடுக்க அதை அவர் விழுங்க பார்வதி அது உடம்பினுள் போகமல் கண்டத்தை பிடித்து தடுத்தாலும் அந்த விஷத்தின் வேகம் அவரை சிறிது சயனிக்க வைக்க அன்னை மங்களாம்பிகையின் மடியில் தலையை வைத்து படுத்தார். கைலாயத்தில்கூட காணமுடியாத இந்தக் காட்சியைக் காண தேவர்களும் ரிஷிகளும் ஒவ்வொரு பிரதோஷக் காலத்திலும் இறங்கி வருவதாக ஐதீகம். ஸ்ரீதாம்பத்ய தட்சிணாமூர்த்தி-கணவன் மனைவிக்குள் அன்யோன்யம். ஸ்ரீபள்ளிகொண்டீசுவரர் -16'நீளம். மூலவருக்கு சாம்பிராணி தலக் காப்பு மட்டும். பெருமாள் கோவில் போன்று சடாரியும் தீர்த்தமும். வால்மீகிமுனி தவன்மேற்கொண்டு வழிபட்டது வால்மீகீஸ்வரர். ஏகாந்தமாய் இருக்கும் தட்சிணாமூர்த்தி தாம்பாத்ய தட்சிணாமூர்த்தியாக. ஞானமயமான மூர்த்தியாக பரமேஸ்வரன் தட்சிணாமுர்த்தி ரூபத்தில் அமர பக்தர்களின்துயர் துடைக்க அன்னை காமேசுவரியாக மாறி சின் முத்திரை தாங்கிய வரை தாம்பாத்திய தட்சிணாமூர்த்தியாய் மாற்றினாள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
