ஊர்:திருக்கடித்தானம்.தி.தே-70
இறைவன்:அற்புதநாராயணன்-நின்றகோலம்-நான்கு கரங்கள்-கிழக்கு நோக்கி
இறைவி:கற்பகவல்லித் தாயார்
பிறசன்னதிகள்:ஸ்ரீநரசிம்மன்,கிருஷ்னன்,சந்திரன்,விநாயகர், தட்சினாமூர்த்தி,ஸ்ரீசுப்ரமண்யர், நகப்பிரதிஷ்டை, தசாவதார சிற்பங்கள்.
தீர்-பூமி(குளம்).
வி-புண்ணியகோடி.
ஐந்து காலபூஜை. தி.நே-0500-1130,1700-2000
1கடிகை/ நாழிகை/ 24நிமிடம்- தூய்மையான கடுந்தவம் இந்த தலத்தில் இருந்தால் காரியசித்தி, மோட்சம் கிட்டும். பஞ்சபாண்டவர்கள்- சகாதேவன் அக்னி வளர்த்து கடும் தவமிருந்து அக்னியில் தோன்றிய சிலைக்கு ஸ்ரீஅற்புதநாரயனர் என்று பெயரிட்டு பிரதிஷ்டை. மோட்சம் அளிக்கக்கூடிய கிருஷ்ணசேத்திரம். 60ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் சக்திகளை புப்பித்துக்கொள்பவர் அற்புத நாராயாணன். ருக்மாங்கதன் ஆட்சியில் தேவர்கள் நந்தவனத்தில் உள்ள அரிய மலர்களை தினமும் களவாட ஒருநாள் காவலர்கள் கண்டுபிடிக்க தேவர்கள் என்பதால் மன்னித்து விடுதலை. மனிதர்களால் சிறை செய்யப்பட்டதால் தேவர் உலகம் செல்லும் வாய்ப்பில்லை. ருக்மாங்கதன் தன் ஏகாதசி விரத பலனை கொடுத்து அவர்களை தேவருலகம் அனுப்பி வைத்தான். அதனால் விஷ்ணு காட்சி கொடுத்து அருள். ஸ்ரீ நரசிம்மர் உக்ரம் தணிக்க பால்பாயசம் நிவேதனம். ஒருபக்கம் 102 மீட்டர் நீளத்துடன் 12 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மதில் சுவர்கள் நன்கு புறமும் -பூதகணங்களால் ஒரே நாளில் கட்டப்பட்டது. கழுமரத்தில் படுத்த வாக்கில் சிலை-லஞ்சம் ஊழல் ஏய்த்தல் ஆகியன கழுமரத்தண்டனைக்கு உரியன என்பதை உணர்த்தும். கார்த்திகை-10நாள் விழா- 9ம் நாள் 1008 தீபம்- சங்கேதம் தீபத்திருவிழா.
நம் பெருமாள் இரவு பகல் என்கிற வேறுபாடின்றி எல்லாக் காலத்தும் தன்னை நினைக்கிற நாம் உய்வு பெறும் படியாக நமக்கே அருள்செய்து நம்மை வாழ வைக்கிறார். அவர் தன் திருமுடியில் அல்லி மலரும் குளிர்ந்த திருத்துழாயும் சேர்த்துத் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடியுள்ளார். இறைவனுக்குக் கைங்கரியம் செய்யும் அரிய பேறான செல்வத்தைப் பெற்றுள்ள வைணவ அடியார்கள் வாழும் ஊரான திருக்கடித்தானத்தில் என் தந்தையான பெருமாள் எழுந்தருளிருக்கிறார்.-நம்மாழ்வார்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
