gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: சென்னை-1260,சென்னை-கொல்கத்தாரயில் பாதை,குர்தாரோடு-54.கட்டாக்-97,புவனேஸ்வர்-52
தகவல்கள்:

ஊர்:பூரி,புரி,புருஷோத்தம்புரி#மஹாவேதி.ஸ்ரீசேத்திரம்.பார்கவிநதி,சர்வதீர்த்த மஹோததி(கடல்)சூழ்ந்தது.
இறைவன்:ஜெகநாதர்/புருஷோத்தமர்.பாலபத்திரர்,சுபத்ரா,சுதுர்ஷன்-4ம் மரத்தாலவிக்ரகங்கள்
இறைவி:
பிறசன்னதிகள்:பட்டாகணபதிமதன்கோபால், சாட்சிகோபால், சதுர்த்தமூர்த்திகள்-வேதங்களின் பகுதி நீலமாதவர்ஸ்ரீதேவி, பூதேவி. பிமலாதேவி-ஆதிசக்தியின்பாதம். மகாலட்சுமி, துர்க்கை, சரஸ்வதி, புவனேஸ்வரி. நிலாமத்-சூரியநாராயணமூர்த்தி. சோமேஸ்வரர்.  நரசிம்மர். ஸ்னானவேதி, கெய்லிவைகுந்தம். சத்தியநாராயணன். உச்சிஷ்டகணபதி, சூரியன், என 120 சன்னதிகள்
214'உயரகோபுரம்
தீர்-இந்திரத்யும்ன,ஸ்வேதகங்கா,மார்கண்ட்,மணிகார்னிக,மஹோததி(கடல்),நரேந்திர, ஸ்வர்க்கத்வார்,சக்ர,சித்தபகுளா..
தேர்திருவிழா-ஜூன்,ஜூலை-45',44',43'உயர-உலகபுகழ்பெற்ற3தேர்கள்
தி.நே-06-21

சிறப்புகள்:

# 02-03-2010-குருஸ்ரீ பகோரா பயணித்தது.

800 ஆண்டுகள் பழமை. கயாசூரனை கொன்ற விஷ்னுவின் 4திவ்ய அஸ்திரங்களில்-சங்கு விழுந்த இடம். சங்கு சேத்ரம், இறைவன் தோன்றுமிடம்-தாமா. உறையுமிடம்-சேத்திரம். ஸ்ரீசேத்திரம். தாமாக்கள்- 1/4 (இராமேஸ்வரம், துவாரகை, பத்ரிநாத், பூரி). பூரி ஆலயத்தைச்சுற்றி சமார்- 35கோவில்கள். பூரி கடலில் குளித்து ரோஹினி குளத்தில் நீராடி கல்ப பாதா ஆலமரம் அருகில் கடவுளை தரிசனம் செய்தால் உலக பந்தங்களிலிருந்து உடன் விடுபடல். ஜாரா வேடன் மான் என நினைத்து விட்ட அம்பு உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணரை கொல்கின்றது. உடல் எரிக்கும்போது எரியாதபகுதி பழங்குடி மக்களுக்கு கிடைக்கின்றது. அது நாளடைவில் நீலமணியாகி வணங்கப் படுகின்றது- நீலமாதவர். 

மாளவ தேசத்து மன்னன் இந்திரத்யும்னன் கனவில் நீலமேக சியாமளனாகத் தோன்றி நீலமாதவன் கோவில் எழுப்பச் சொல்ல, நீலாசலத்தில் கோவில் எழுப்பினான. கனவில் கண்டபடி நீல நிற சிலை எங்கேயும் கிடைக்கவில்லை. மந்திரி வித்யாபதி அந்தனனை விஷ்னு எழுந்தருளியுள்ள இடங்களை அரிந்துவர அனுப்பி விஸ்வாசுவிடம் இருப்பது கண்டு மந்திரி விஸ்வாசுவின் மகளை மணந்து விஸ்வாசு வழிபடும் இறைவனை காண ஆவல் கொள்ள, தன் மருமகனைக் கண்களைக் கட்டி கூட்டிச் செல்லும் போது கடுகு விதைகளை தூவ மீண்டும் தனியே சென்று நீலமாதவனைத் தரிசித்து மன்னனிடம் கூற அவர்கள் வருமுன் இறைவன் அந்த இடத்தை துறக்க வருந்திய மன்னன் கனவில் தோன்றி அசுவமேதயாகம் செய்ய சொல்ல முடிவில் 4கிளைகளுடன் ஒரு மரம் கடலில் கிடைக்க யாராலும் அதை செதுக்க முயலாமல் போக விஷ்னு தச்சர் வேடத்தில் வந்து மூடப்பட்ட அறையில் உளியால் செதுக்க சத்தம் நின்றுவிட அவசரப்பட்ட குண்டிஸா கதவை திறக்க தச்சர் மறைய பாதி முடிந்த நிலையில் 4மரச்சிலைகள். குண்டிஸா வருந்த வருடத்தில் 10 நாட்கள் காட்சி அருள்.

அன்ன பிரம்மன்- தாரு பிரம்மம். மரத்தாலன விக்ரகங்கள்- மகா பிரசாதம். புரி-சங்கு சேத்திரம், புவனேஸ்வர்-சக்கர சேத்திரம், ஜாஜ்புரை- கதாசேத்திரம், கோனார்க்- பத்ம சேத்திரம். யயாதி மன்னன் ஆலயத்தைப் புதுப்பித்துள்ளான். 12ம் நூற்றாண்டில் பீமதேவன் கோவிலைப் புதுப்பித்து புதிய சன்னதிகளை உருவாக்கினான். 4புறமும் வாயிலகள். கிழக்கு சிம்ம த்வார். வடக்கு ஹஸ்தி(யானை) த்வார். தெற்கு அஸ்வத்(குதிரை) த்வார். மேற்கு கஞ்சன் த்வார். 34' உயர அருணா ஸ்தம்பம் சிறப்பு. 1.பிராத்தனை-போக மண்டபம், 2.நடன மண்டப்- கலை நிகழ்ச்சிகள், 3.ஜகன்மோகன மண்டபம்- யாத்திரிகள் கூடுமிடம். 4.கர்ப்பகிருகம்-ஜகந்நாதர், தங்கை சுபத்திரா, அண்ணன் பலராமனுடன் காட்சி. கருவறையைக் காக்கும் சக்திகள் எட்டு.- இந்திராணி, வனபைரவி, க்ஷேத்திர காளி, காத்யாயினி, படாகாளி,  புவனேஸ்வரி, யக்ஞேஸ்வரி, சீதளா. சிவன் அக்னேஸ்வரர், க்ஷேத்திரபாலர், முக்தேஸ்வரர், மார்கண்டேஸ்வரர், கோபேஸ்வரர், பாதாளேஸ்வரர், வைகுந்தேஸ்வரர், ஈசானேஸ்வரர் என எட்டு ரூபங்களில். தாட்சாயணினின் அங்கம் விழுந்த 26வது சக்தி பீடம்-பகவதி விமலா. இரண்டாம் பிரஹாரத்தில் ஜகந்நாதர் கருவறைக்கு மேற்கே தனி சன்னதி. ஜகந்நாதருக்கு ஒரு நாளில் பன்முறை உடை மாற்றப்படும். காலை-மங்கள ஆரத்திவேஷம், ஓய்வின்போது-அவகாச வேஷம், பகலில்- பிரபவேஷம், தர்பாரில்- படாசிருங்கார், தாமோதர் வேஷம்- குழந்தை உடை, வாமன் வேஷம்-குரு உடை. திருவிழாக்கள்-67 அதில் பெரும் திருவிழா-10. முக்கியமானது உலகப் புகழ் தேர்த்திருவிழா-3 ரதங்களும் 3கி.மீ துரத்தில் உள்ள குண்டிஸாவில் 10நாள் தரிசனத்திற்காக. 

கலிங்க தேசத்தை இன்றைய ஒடிஸா- புருஷோத்தம் தேவ் என்ற மன்னர் கஜபதி என்ற பட்டப் பெயருடன் ஆண்டு வந்தார். அவருக்கு காஞ்சி-விஜயநகர் மன்னரின் மகள் பத்மாவதியை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. பூரி ரத யாத்திரையின் போது ஓர் சம்பிரதாயமாக அரசர் கஜபதி தங்கப் பிடி போட்ட துடைப்பத்தால் அந்த தெருவை பெருக்குவார். இந்தச் செய்தி விஜயநகரத்திற்கு செல்ல அந்த மன்னர் ஓர் அரசர் வீதியைப் பெருக்குவதா எனக்கூறி திருமணத்தை நிறுத்தி விட்டார். மகேசன் முன் மன்னரும் ஓர் சாதாரண தொண்டன் என்றும், எந்த வேலையும் கீழானது அல்ல என்று சொல்லும்படியாக அமைந்தது இந்தச் சடங்கு.
மனம் முறிந்த புருஷோத்தமன் காஞ்சி மன்னர் மீது போர்தொடுத்து அந்த வேகத்திலேயே தோற்று திரும்பினான். மனம் தளராமல் வலிமைமிக்க படையைத் திரட்டி ஜகந்நாதரிடம் வெற்றி கிட்ட அருள் புரியக் கேட்டுக்கொண்டான். கஜபதியின் கனவில் தோன்றிய ஜெகந்நாதர் அவனுக்கு உதவுவதாகக் கூறினார். சொல்லியபடி கருமை நிற ஜெகந்நாதர் வெள்ளை நிறக் குதிரையிலும், வெளுத்த நிறமுடைய அவரது சகோதரர் பாலபத்ரர் கருமை நிறக் குதிரைமீதேறி போர்க்களம் நோக்கிப் புறப்பட்டனர். வழியில் தாகம் எடுக்க மாணிக்ககவுதிணி என்ற பெண் தயிர் விற்க அவளிடம் தாகம்தீர தயிர் குடித்தபின் அவளுக்குத் தர தங்களிடம் காசு இல்லாததால் பாலபத்ரர் தன்னிடமிருந்த மோதிரத்தை கழற்றிக் கொடுத்துவிட்டு பின்னால் படையுடன் வரும் கஜபதியிடம் இதைக் கொடுத்துவிட்டு காசு வாங்கிக் கொள் எனக்கூறிச் சென்றனர். அந்தப் பெண் பின்னால் படையுடன் வந்த கஜபதியிடம் மோதிரத்தை தந்தவுடன் முன்னால் செல்வது யாரென்று அவருக்குப் புரிந்தது. தமக்கு வாக்களித்தபடி ஜெகந்நாதரே தலைமை யேற்று முன்னால் செல்கின்றார் என நினைக்க எல்லையில்லா ஆனந்தம் உண்டாயிற்று. இறைவனை நேரில் கண்டும் அவரது தாகத்தை தணிக்கும் வாய்ப்பும் பெற்ற அந்தப் பெண் மிகவும் பாக்கியசாலி என்று. அவளுக்கு ஒர் கிராமம் பரிசளித்து அதற்கு மாணிக்கப்பட்டணா எனப் பெயரிட்டார்.(இன்றும் பால், தயிர், வெண்ணெய்க்கு புகழ் பெற்றது)
போரில் கஜபதி வென்றார். பத்மாவதியை சிறை பிடித்துவந்தார். காஞ்சி மன்னனை மேலும் பழிவாங்க எண்ணி பத்மாவதியை தெருக்கூட்டி பிழைக்கும் ஒருவனுக்கே திருமணம் செய்ய முடிவு செய்தார். இறைவன் என்ன நினைத்தார்.! அடுத்த தேர் திருவிழா நாள் வந்தது. சம்பிரதாயப்படி அரசர் கஜபதி தங்கக் கைபிடி போட்ட துடைப்பத்தால் தெருவை சுத்தம் செய்து கொண்டிருக்க மதியூகியான மந்திரி அச்சமயத்தில் பத்மாவதியை அவரின் கையில் ஒப்படைத்தார். புருஷோத்தமர் மனம் மாறி திருமணத்திற்கு இசைவு தர, இது பூரி ஜெகந்நாதர் பக்தனுக்கு உதவிய நிகழ்வாகும். பாலபத்ரர் மாணிக்க கவுதினிக்கு மோதிரம் வழங்கும் நிகழ்வு ஒடிஸா பாட்ட சித்திரங்களில் அதிகம் காணப்படுகிறது. உச்சிஷ்டகணபதி சிலை காஞ்சியிலிருந்து கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை.-காஞ்சி கணபதி.

இங்கு கோவர்த்தன மடம் நிறுவிய சங்கரர், விமலா பீடத்தை தோற்றுவித்து முதல் ஆசாரியராக ஹஸ்தமலகரை  நியமித்தார்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-54

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27042291
All
27042291
Your IP: 13.58.247.31
2024-04-19 19:12

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg