gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

மனித நேயம் உங்களுள் மலரட்டும்!. மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது! இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்!

தமிழ் மாநில கோயில்கள்

VAALAADI-SIVAN/வாளாடி-சிவன்/கைலாசநாதர்

செல்லும் வழி: லால்குடி-7, திருச்சி-10
தகவல்கள்:

ஊர்: வாளாடி 
மூலவர்:
இறைவன்:ஸ்ரீ விஸ்வநாதர் , ஸ்ரீமாத்ரு பூதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீ விசாலாட்சி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ,முருகன்ஒருமுகம்-4கரங்கள்-வள்ளி,தெய்வானை. ஸ்ரீபாலதண்டபாணி, ஸ்ரீதட்சிண துர்க்கை. ஸ்ரீநடராஜர்
மரம்: வில்வம்
தீர்:
தி.நே-0700-0900,1700-1900

 

சிறப்புகள்:

நவகிரகங்கள் சூரியனை பார்த்தவண்ணம் சுற்றியுள்ளது.

எப்பிறவியில் பாவங்கள் செய்திருந்தாலும் சிவபூஜை க்கு பலன் உண்டு. 

மகிஷாசவர்த்தினி சிவத்தலங்களில் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருபவள் இதை வடவாயுதேவி என்பர். இத்தலத்தில் வித்தியாசமாக தெற்கு நோக்கி அருள்.

வெள்ளி ராகு காலத்தில் துர்கை வழிபாடு சிறப்பு.

திருமுருகன் மூலவரைப் பார்ப்பதுபோல் சாளர அமைப்பு சிறப்பு.

தலவரலாறு: சத்தியாதரன் விதர்ப்ப நாட்டு அரசன். ஆட்சியில் மக்கள் அமைதியுடன் ஆனந்தமாக வாழ்ந்தனர். இது பொருக்காத பொறாமை கொண்ட துன்பரோசன் படையெடுத்தான். சில நாட்களுக்குமேல் தாங்க முடியாமல் படைகள் தோற்க துன்பராசன் சத்தியாதரனை கழுத்தை அறுத்துக் கொன்றான். இதைக் கேள்விப்பட்ட அவன் மனைவி சதி தானும் உயிர் துறக்க நினைத்தவள் தன் வயிற்றில் உள்ள சிசுவைக் காப்பாற்ற ஆடை ஆபரணங்களைத் துறந்து காட்டில் ஒளிந்து வாழ்ந்தாள். சில நாட்களில் ஓர் ஆண்மகவைப் பெற்றாள். பிரசவத்தின் துயரைத் தாங்கியவள் தாகம் எடுக்க மெல்ல ஊர்ந்து அருகில் இருந்த ஆற்றின் கரையில் நீர் பருகும்போது முதலை அவள் காலைக் கவ்வி இழுத்து இறந்தாள். குழந்தையின் அழுகுரல் கேட்ட அப்பக்கம் வந்த உமா என்பவள் யாரும் இல்லாதது கண்டு குழந்தையை எடுத்து சென்று தர்மதத்தன் எனப் பெயரிட்டு வளர்த்தாள். அவளின் முதல் பையனின் பெயர் சுசீலன். மிகவும் சிரமத்துடன் வாழ்க்கையை நகர்த்தியவள் ஒருநாள் ஒரு முனிவரைக் கண்டாள். அவரிடம் தன் துயரங்களுக்கு வழி கேட்டாள். சிறிது கண்ணை மூடிய அவர் உன் வளார்ப்பு பிள்ளை ஓர் அரச குமரன். அவன் தந்தை முன் ஜென்மத்தில் பாண்டியன். சோழமன்னனை வெட்டிக் கொன்ற பாவத்தால் தானும் இப்பிறவியில் வெட்டிக் கொல்லப்பட்டான். அவன் தாய் சதி முற்பிறவியில் சதி செய்து  ஓர் பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொன்றதால் இப்பிறவியில் முதலை கடித்து துன்புற்று இறந்தாள் என்றார். உமா தன் குழந்தை பற்றிக் கேட்டபோது இவன் முற்பிறவியில் கஞ்சன் .வாங்கியே பழக்கப்பட்டதால் இப்பிறவியில் வறுமை. இவைகள் தீர சிவ வழிபாட்டினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவ்வண்ணமே இத்தல சிவ வழிபாட்டில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டனர். சில நாட்களில் புதையலாக பொன்னும் பொருளும் கிடைக்க வாழ்வில் உயர் நிலை அடைந்தனர். தர்ம தத்தன் தன் தந்தை இழ்ந்த நாட்டை திரும்ப பெற்றான் சிவபூஜையின் பலன்களே அவர்களுக்கு உதவியது.  

வரை படம்: விரிவாக்கு(enlarge)

map 9

 

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17761770
All
17761770
Your IP: 162.158.78.206
2020-07-05 22:53

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg