
ஊர்:கோவிந்தவாடி.அகரம்.#
மூலவர்:தட்சிணாமூர்த்தி
இறைவன்: ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:கோவிந்தராஜபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி
காமிகஆகமம்
2காலபூஜை
மரம்:
தீர்:
தி.நே.0800-1200,1500-2000
#30062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
1000 ஆண்டுகள் பழமை. மூலவர் யோகதட்சிணாமூர்த்தி அழகு சிறப்பு- திருமாலுக்கு சிவபெருமான் குருவாக வீற்றிருந்து உபதேசம் செய்ததலம், ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜபெருமாள் தங்கி குருவை பூஜித்ததலம்-குரு பரிகாரத்தலம்- குரு கோவில். கும்பஞ்சாரா அழகு மிகுந்த கல் வேலைப்பாடுகள்- சிறப்பு. சுமங்கலி பூஜை செய்து அம்பாள் வழிபாடு. தேங்காயில் நெய் தீபமேற்றி நாகதேவதையை வழிபட கஷ்டங்கள் தீரும்.
குபன் என்ற அரசனுக்கும் ததீசி முனிவருக்கும் பகை ஏற்பட குபன் திருமாலிடம் முறையிட தன் பக்தனைக் காக்க ததீசி முனிவர்மீது சக்ராயுதத்தை ஏவ அது முனிவரைத் தாக்க முடியாமல் மடிந்தது. இதனால் திருமால் ஸ்ரீதேவி பூதேவியுடன் பூலோகம் வந்து ஓர் தீர்த்தம் ஏற்படுத்தி சிவபெருமானை நோக்கி தவமிருந்த திருமாலுக்கு காட்சி கொடுத்து குருவாகி உபதேசித்தார். பின்னர் திருமால் அருகிலுள்ள திருமால்பூரில் 1000 தாமரை மலர்களால் ஈசனைப் பூஜித்து சக்ராயுதம் பெற்றார். திருமாலுக்கு தனித்து காட்சி என்பதால் கல்லால மரமில்லை. கயிலாயம் அமைப்பில் மண்டபம். கூர்மம், எட்டு யானைகள், எட்டு சிம்மங்கள், எட்டு நாகங்கள் அஷ்ட திக் பாலகர்கள் வீர ஆசனங்களாக இருக்க அதன்மேல் அமர்ந்து ஞானம் அளிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. சிவ தீட்சை பெற்றதால் பெருமாளுக்கு சந்தனம் குங்குமம் கலந்து நாமம் இடுகின்றனர்,- சந்தன குங்கும கோவிந்தன்,
வரை படம்: விரிவாக்கு(enlarge)
