ஊர்: எட்டியதளி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅகத்தீசுவரர்
இறைவி: ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தொண்டை மண்டல காளிங்கராய மன்னரால் கட்டப்பட்டது. அகத்தியர் ராமேஸ்வரம் செல்லும் வழியில் இங்குள்ள குளத்தில் குளித்து ஈசனை வழிபட்டு இங்கு தங்கினார். அப்போது அஷ்டமத்து சனியால் பீடிக்கப்பட்ட காளிங்கராய மன்னன் இராமேஸ்வரம் செல்லும் வழியில் இங்கு வந்து தங்க எதிர்பாராமல் அகத்தியரைச் சந்தித்து தன் நிலைபற்றிச் சொன்னார். அகத்தியர் தான் பூஜித்த சுயம்பு லிங்கத்தை மூலஸ்தனமாக வைத்து இறைவனுக்கும் இறைவிக்கும் பெயர் சூட்டி வழிபட்டு மன்னனை அங்கு கோவில் எழுப்பி வழிபடச் சொன்னார். சனி பகவான் சிறப்பு. மற்ற ஆலயங்களில் சனிக்கு இடது ராகு, வலது கேதுவும் இருப்பதற்குப் பதிலாக இங்கு வலது-ராகு, இடது- கேதுமாக இருக்கின்றனர். ராகுவின் பார்வை சனிமீது சிறப்பு. நவகிரகங்கள் பத்மபீடத்தில். திருமணத்தடை, சனி பரிகாரத்தலம். இரண்டு அம்மன் சன்னதிகள். களத்திர தோஷம் நீங்கும்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
