
ஊர்:தீர்த்தமலை,இராமேஷ்டம்.பவவிநாசகம்,துக்கஹரம்+மு,அரிமலை, தவசிகிரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதீர்த்தகிரீஸ்வரன்(சு) அடிவாரத்தில்.ஸ்ரீதீர்த்தகிரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீவடிவாம்பிகை அடிவாரத்தில் ஸ்ரீவடிவாம்பிகை
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீராமலிங்கர். ஸ்ரீஞானபண்டிதன். ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீஇரட்டை விநாயகர், ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீகயிலைநாதர்-விசாலாட்சி,ஸ்ரீஅகத்தீஸ்வரர் அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீகபாலபைரவர். ஸ்ரீஆதிதுர்க்கை, ஸ்ரீகோதண்டராமர், ஸ்ரீகஜலட்சுமி
மரம்: பவளமல்லி.
தீர்-மலைஉச்சியைசுற்றி11தீர்த்தங்கள். ராம, அக்னி, கௌரி, குமார, அகத்திய, மலைபின்புறம். வசிஷ்ட-தீர்-2கி.மீ. யம-தீர்-வேப்பம்பட்டியிலிருந்து-6கி.மீ. வருண,வாயு தீர்-அரூர் பே.நி.அருகில். அனுமன்தீர்-ஊத்தங்கரைசாலை-6கி.மீ. இந்திர-தீர்-மொண்டுகுழி. தி.நே-0600-1800,அடிவாரக்கோவில் காலை0730-1100,1730-2030
இராவணவத முடிந்து இராமர் அயோத்திக்கு திரும்பும்போது அரிக்காடு எனும் அரூரில் ரதம் நின்றுவிட இதை உணர்ந்த தீர்த்தமலையில் தவமேற்கொண்டிருந்த அகத்தியர் ராமரை சந்தித்து தீர்த்தமலையின் சிறப்பைக்கூறி இங்கு கூட்டிவருகின்றார். இராமேஸ்வரத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்ததால் உன் பிரமஹத்தி தோஷம் முழுவதும் தீரவில்லை. அது பின் தொடர்ந்ததால்தான் ரதம் நின்றது. சிவனை இங்கு ஒரு மண்டலம் பூஜைசெய்ய அறிவுரை. அனுமன் தினமும் காசியிலிருந்து தீர்த்தம் கொண்டுவர பூஜை நடந்தது. மண்டல பூஜை முடியும் நாள் காசிக்குச் சென்ற அனுமன் சப்தகன்னியர்கள் குளிக்கும்வரை காத்திருந்து தீர்த்தம் எடுத்துவர காலமானது. உச்சிக்கால பூஜை நேரம் நெருங்கியதால் தவித்த ராமனுக்கு உதவும் பொருட்டு சிவன் அம்பெய்த இராமர் தீர்த்தம் உருவாக பூஜை முடிந்தது. அதைத்தொடர்ந்து கௌரி, குமார, அக்னி, அகத்திய, வசிஷ்ட, இந்திர, எம, வருண, வாயு தீர்த்தங்கள் தோன்ற அவற்றைக் கொண்டு சிவபூஜை செய்து முடிக்க அனுமன் தான் கொண்டுவந்த தீர்த்தத்தை கோபத்தால் வீச அது அனுமன் தீர்த்தமாகியது. இராமரின் பிரம்ம ஹத்தி முற்றிலும் தீர்ந்தது.
அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றதலம். ராவண பிரமஹத்தி தோஷம் நீங்கிட ராமபிரான் வழிபட்ட தலம். லிங்கம் நந்தியின் தோற்றம். '
இஷ்ட சித்தி அருளும் மலை'.அரைமணி நேர பயணம் படிகளில். அடிவாரத்திலும் இறைவன் இறைவி அதே பெயரில் திகழ்கின்றனர்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
