ஊர்:முறப்பநாடு.#தாமிரபரணியாற்றங்கரையில்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகைலாசநாதர்
இறைவி: ஸ்ரீசிவகாமியம்மை
தாயார்
உர்சவர்::
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளி, தெய்வானை, ஸ்ரீபைரவர், ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீபஞ்சலிங்கம்,
மரம்:
தீர்:
தி.நே-0700-1000,1700-2000
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி-அர்ச்சகர் -98425 16789
பருக்கை கற்கள் நிரம்பிய மேட்டு நிலம்-முரம்பு நிலம்-முறப்பநாடு. முக்தி வேண்டி குரோம ரிஷி வழிகேட்க தாமரபரணியில் நீராடி வழிபட மலர்கள் வழிகாட்ட பின்தொடர்ந்து கரை சேர்ந்த ஒன்பது இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு. 1.பாவவிநாசி-சூரியன் ஆட்சி, 2.சேரன்மாகாதேவி- சந்திரன் ஆட்சி, 3.கோடக நல்லூர்- செவ்வாய் ஆட்சி- மூன்றும் மேல் கைலாயம். 4.குன்னத்தூர்- ராகு ஆட்சி, 5.முரப்பநாடு- குரு ஆட்சி, 6.ஸ்ரீவைகுண்டம்- சனி ஆட்சி- மூன்றும் நடுகைலாயம், 6.தென்திருப்பேறை- புதன் ஆட்சி, 8.இராஜபதி- கேது ஆட்சி, 9.சேர்ந்தபூமங்களம்- சுக்ரன் ஆட்சி மூன்றும் கீழ்கைலாயம் என்றாகியது. நவகைலாயம்5/9 .குருபகவான் பரிகாரத்தலம். தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி- தட்சிண கங்கை- நீராடல் காசிக்குச் சமம். தசாவதார 10 தீர்த்தக் கட்டடம்- ஒரே கல்லில்பத்து உருவங்கள் பொறிக்கப்பட்டது. முனிவர்கள் முறைப்படி நின்று முறையிட்ட இடம்- முறப்பநாடு. தசாவதாரத் தீர்த்தக்கட்டம் சிறப்பு. புத்திர பாக்யம் கிட்ட ,திருமணத்தடை நீங்க வழிபாடு.
சோழமன்னனின் மகள் குதிரை முகத்துடன் பிறக்க மன்னன் இங்கு தவம். சிவன் அருள். மகளின் முகம் மாறியது. கோவில் கட்டினான்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாம்ரபரணி மஹா புஷ்கரம் நிகழ்வு-புரட்டாசி 25-ம்நாள் வியாழன் 11/10/2018 தொடங்கி ஐப்பசி 5-ம்நாள் திங்கள் 22-10-2018 வரை. புனிதநீராடலில் பங்கேற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்-குருஸ்ரீ
வரை படம்: விரிவாக்கு(enlarge)
