
ஊர்:திருக்கார்வானம்#தி.தே-53ர்:
மூலவர்:ஸ்ரீகள்வர்-நின்றகோலம். நவநீத சோரன், வெண்ணெய் உண்ட கள்வன்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகமலவல்லி, தாமரையாள்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்-கௌரி,தராதர.
வி-புஷ்கல. வைகாஸன ஆகமம்.
தி.நே.0600-1200,1600-2000
#30052002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
கார்மேகம் சூழ்ந்த வானுலகின் மாயவனான கள்வன் எழுந்தருளியதால்-கார்வானம். பாதாள உலகத்திற்குப் போன மகாபலி பகவானின் விஸ்வரூப காட்சியைக் காண வேண்டுகோள் விடுத்தான். காஞ்சிவந்து யாகத்தை செய்தால் காட்சி என அருளினார். காஞ்சியில் அஸ்வமேத யாகத்தை ஆரம்பித்தான். அந்த யாகத்தை தடுக்க நினைத்த தேவர்கள் யாகத்திற்கு முக்கியமான நீர் இல்லாமல் செய்ய முடிவெடுத்து காஞ்சி நீர் நிலைகளை வரண்டுபோக செய்தனர். மகாபலி இது என்ன தெய்வ குத்தமோ என அஞ்சிய மகாபலி இறைவனிடம் என் பிழையை மன்னித்தருளுங்கள். ஹரியைத்தவிர வேறொன்றும் அறியாத என்னைக் காத்து நீர் பஞ்சத்தைப் போக்கி யாகம் நன்றாக நடக்க உதவ வேண்டுகோள் விடுத்தான். வாமனராக வந்த பெருமாள் கவலை வேண்டாம். நீ எந்த தவறும் புரிய வில்லை அதோ பார் என ஒர் மேகக் கூட்டத்தைக் காண்பித்தார். கடலிருந்து வந்து கொண்டிருக்கும் கருமேகக் கூட்டத்தின் நடுவில் கார்மேக வண்ணன் குளிர்ச்சி பொருந்தியவனாக காஞ்சி நோக்கி தன் பொருட்டு வருவதை அறிந்து அளவிலா ஆனந்தம் அடைந்தான். உள்ளம் குளிர்ந்தான். உருகினான் மகாபலி. யாகம் நடந்தது. அப்போது யாருக்கும் காணக் கிடைக்காத திரிவிக்ரம கோலத்தை மாகாபலிக்கு காட்டி அருளினான். பரமபதத்திற்குசமம்
திருநீரகம் திருப்பதியில் நிலைத்து நிற்பவனே! சொர்க்க லோகத்தில் இருப்பவர்களும் வழிபடும் திருப்பதி திருமாலே, நிலாத்திங்கள் துண்டத்தில் ஒளி வீசுபவனே, எல்லா வளமும் நிறைந்த காஞ்சிபுரத்தில் திரு ஊரகத்தில் எழுந்தருளியிருப்பவனே, திருவெஃகா ஆலயத்தில் இருப்பவனே, நினைத்தவர்கள் உள்ளத்தில் உறைபவனே, எல்லா உலகங்களும் புகழ்ந்து துதிக்கும் திருக்காரகம் என்னும் திருப்பதியில் வாழ்பவனே, திருக் கள்வனூரைச் சேர்ந்தவனே, அழகிய காவிரியின் தெற்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பேர்நகர் தெய்வமே என்னுடைய நெஞ்சத்தில் நீங்காது இருக்கும் பகவானே உன்னுடைய திருவடிகளை என் உள்ளத்தில் வைத்து வணங்குகிறேன்.-- திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம்
.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
