ஊர்:மாங்காடு,சூதவனம்#ச1/9ஆம்ராரண்யம்.
மூலவர்:ஸ்ரீஆதிகாமாட்சியம்மன்.தபசுகாமாட்சி
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்: பிறசன்னதிகள்: ஸ்ரீவரசித்திவிநாயகர் ஸ்ரீ சக்கரம், தபஸ்கமாட்சி., ஆதி காமாட்சி ஆதிசங்கர்ர், வரசித்தி விநாயகர், நவகன்னிகைகள் (கௌமாரி, திரிபுரா, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, சுபத்ரா, துர்க்கா),
7நிலைராஜகோபுரம்
தீர்-குளம்.
மரம்-மா.
தங்கத்தேர்-ஸ்ரீகாமாட்சி,ஸ்ரீலட்சுமி,ஸ்ரீசரஸ்வதி.
தி.நே.0600-1300,1500-2100, ஞாயிறு,செவ்வாய்,வெள்ளி-05-22
#15052001-குருஸ்ரீ பகோரா பயணித்தது(8)
தொலைபேசி-044-26272053
சென்னை-9சக்தி-1.
குறும்புத்தனம் மிகுந்து விளையாட்டாய் உமை ஈசனின் இரண்டு கண்களையும் தன் கரத்தால் பொத்த சூரியனும், சந்திரனும் தங்கள் ஒளியை பூமியை நோக்கி பாய்ச்ச முடியாமல் போக வும் பூமி தன் சுழற்சியை நிறுத்தவும் உலக உயிர்கள் தடுமாற அடுத்த கணம் உண்மை அறிந்த உமை தன் கரங்களை விலக்க எல்லாம் மீண்டும் தங்கள் நிலையை அடைந்தன. இந்த தவறான செயலுக்காக ஈசன் உமையை பூமியில் சென்று தவம் இருக்கச் சொல்லித் பின்னர் தானே வந்து மணம் புரிவதாக அருளினார். உமை மாமரங்கள் நிறைந்த மாங்காடு பகுதியில் ஓரிடத்தை தேர்வு செய்து தீயின் நடுவில் இடது கால் பெருவிரலை ஊன்றி வலக்காலை மடக்கி வலதுகரத்தில் ருத்திரமாலையைப் பிடித்தவண்ணம் இடது கரத்தில் சின் முத்திரை காட்டி இறைவனை நினைத்து தவத்தில் ஆழ்ந்தார். இது தேவியின் தபஸ்கோலம். தபஸ்கமாட்சி.
ஒரு சுப தினத்தில் அன்னைக்கு காட்சியளித்த ஈசன் அவரை காஞ்சி கம்பா நதிக்கரையில் தவத்தை தொடர அருளினார். அன்னை காஞ்சிக்கு சென்றதால் அவரால் மூட்டிய யாகத்தீ அணையாமல் எரிந்து கொண்டிருக்க பயிர்கள் வாடின. மக்கள் அல்லலுற்றனர். அப்பக்கம் வந்த ஜகத்குரு ஆதிசங்கரர் அன்னை பராசக்தியின் ஆற்றலை அஷ்டகந்தம் என்ற எட்டு மூலிகைகளாலான ஸ்ரீசக்கரத்தில் தேக்கி அர்த்தமேருவாக உருவாக்க தீயின் வெம்மை மறைந்து பூமி குளிர்ந்தது. அபிஷேகம் கிடையாது, குங்கும அர்ச்சனைதான்.ஜவ்வாது, புணுகு, சந்தனம் சாத்தப்பட்டு வழிபாடு.
ஸ்ரீசக்ரமே பிரதானம். அபிஷேகம் இல்லை. குங்கும அர்ச்சனை சிறப்பு. 6வாரம் வழிபடின் பிரார்த்தனை பலிக்கும்.
சோழர் காலத்தில் கட்டப்பட்டு விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது.
அபிஷேகம், அலங்காரம் எல்லாம் கருவறையில் இருக்கும் ஆதி காமட்சிக்கு.
விஜயநகர கல்வெட்டு ஒன்றில் இங்குள்ள மக்கள் இந்த ஊரைச் சாராத ஒருவருக்கு தங்கள் நிலங்களை விற்கக்கூடாது என்றும்
வரதட்சணையாகயாக கூட பிற ஊர்காரர்களுக்கு நிலங்களை கொடுக்கக்கூடாது என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் ஒரு தினத்தில் இரண்டு எழுமிச்சை வாங்கி வைத்து வழிபடவேண்டும் அதேபோல் அதே தினத்தில் ஆறுமுறை வழிபட்டால் நினைத்த நற்காரியம், திருமணப்பேறு, மாங்கல்யபலம், மக்கட்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
