ஊர்: செட்டிபுண்ணியம்#
மூலவர்: ஸ்ரீவரதராஜப்பெருமாள்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஹேமப்ஜநாயகிதாயார்
உ: ஸ்ரீதேவநாதர்,
பிறசன்னதிகள்: ஸ்ரீயேகஹயக்கிரீவர், ஸ்ரீராமர்-சீதை,ஸ்ரீ அனுமன்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1600-2000
#31122005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
சிறந்த கல்விக்கு ஹயக்கீரீவர் பூஜை சிறப்பு. தன்னை எப்போதும் கேலி செய்து கொண்டிருக்கும் திருமாலின் தலை ஒருநாள் கடலில் போய்விழ எனத் திருமகள் சொன்னது சாபமாக மாறியது. திருமால் ஒருசமயம் களைப்பால் தன்னிடமிருந்த வில்லை தன் மேவாய்க்கு முட்டுக் கொடுத்தபடி உறங்கினார். அப்போது குதிரைமுகம் கொண்ட அரக்கன் ஹயக்கிரீவனுடைய தொல்லைகள் தாளாமல் இந்திரன் பெருமாளிடம் முறையிட வந்தான். வந்தவன் திருமால் அயர்ந்து உறங்குவதைப் பார்த்து எழுப்ப மனமில்லாமல் அங்கேயே காத்திருந்தான். அப்போதும் திருமால் கண் திறக்க வில்லையாதலால் என்ன செய்வது என்று புரியாமல் முக்கண்ணனிடம் சென்று சொன்னான். அவர் ஆலோசனைப்படி கரையான் உருவெடுத்து வில்லின் நானை அறுக்க அறுபட்ட நான் வேகத்துடன் சென்று திருமாலின் கழுத்தை அறுக்க அவர் தலை திருமகள் கொடுத்த சாபத்தினால் கடலில் போய் விழுந்தது. திருமால் தலையில்லாமல் இருப்பதைப் பார்த்த இந்திரன் முதலான தேவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிரம்மா மற்றும் தேவர்கள் ஆதி சக்தியை வணங்க அன்னை தோன்றி குதிரை முகம் கொண்ட அரக்கன் தன் இனமான ஹயக்கிரீவனே தன்னைக் கொல்ல வேண்டும் என அரிய வரம் பெற்றுள்ளான். அந்த இனத்தில் அவன் ஒருவனே இப்போது உயிருடன் இருக்கின்றான். அதனால் அவனின் அட்டூழியங்கள் அளவிட முடியததாகிவிட்டது. அவன் அழியும் காலம் கூடிவந்துள்ளது. ஓர் அசுவத்தின் தலையை திருமாலுக்குப் பொருத்துங்கள் எனக் கூறினார். பிரம்மா அப்படியே செய்தார். ஹயக்கிரிவர் அசுர ஹயக்கிரிவனை வதம் செய்தார். ஆதி மகாலட்சுமி ஹயக்கிரிவருடன் இனைந்து வழிபடும் மக்களுக்கு அனைத்து செல்வத்தையும் வழங்குகின்றார்.
உலகம் உழிக்காலத்தில் அழிந்து எங்கும் நீர் நிலைகளாக இருக்க இரு உயிர்கள் தோன்றின. உயிர்களே இல்லாமல் தாங்கள் மட்டும் எப்படி உயிருடன் இருக்கின்றோம் என அதிசயப்பட்ட மது, கைடபர்கள் தங்களை உருவாக்கிய சக்தியை நோக்கித் தவம் இருந்தனர். சக்தி காட்சிதர தாங்கள் இருவரும் விரும்பினால் மட்டுக் மரணம் என வரம் பெற்றனர். பெற்ற வரத்தால் தங்களது திறமைகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. தோள்கள் திணவெடுத்தன. பிரம்மா அந்தப் பக்கம் வர அவரிடம் சண்டையிட்டு அவரிடமிருந்த நான்கு வேதங்களையும் அபகரித்து பாதாள லோகத்தில் பதுக்கி வைத்தனர். பிரம்மா ஹயக்கிரிவரிடம் தஞ்சமடைந்தார். ஹயக்கிரிவர் அரக்கர்களிடம் போர் புரிந்தார். போர் 5000 ஆண்டுகள் ஆகியும் முடிவிற்கு வரவில்லை. ஹயக்கிரிவர் ஞானதிருஷ்டியில் அவர்கள் பெற்ற வரத்தை அறிந்தார். ஆதிசக்தியை நினைத்தார். ஆதிசக்தி அழகிய பெண்ணாக மோகினியாக அங்கு தோன்ற இரு அரக்கர்களின் கவனமும் சிதறியது. சித்தம் குழம்பியது. அழகியைக் கண்ட மயக்கத்தில் இருந்த இருவரையும் நோக்கி நீங்கள் வேண்டும் வரம் என்ன எனக் கோட்டார் திருமால். செருக்கு கொண்ட அரக்கர்கள் உன் வரம் எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள் வேண்டுமானால் தருகின்றோம் நீ வேண்டுவ்வது கேள் என்றனர். திருமால் புன்னகையுடன் உங்களின் இருவரின் உயிர்தான் எனக்கு வரமாக வேண்டும் என்றார். மயக்கத்தில் தாங்கள் செய்த பிழையை உணர்ந்தனர். இருப்பினும் ஹயக்கிரிவருடன் போரிட அவர்கள் இருவரையும் வதம் செய்தார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
