
ஊர்:திருமீயச்சூர்.#தி.த-173
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமேகநாதர், ஸ்ரீமுயற்சிநாதர், ஸ்ரீஅருணேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசௌந்தரநாயகி, ஸ்ரீலலிதாம்பாள்(சாந்த நாயகி)-தனிசன்னதி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீரத விநாயகர், ஸ்ரீ நர்த்தன விநாயகர், அஷ்டபுஜதுர்க்கை, ஸ்ரீ கல்யாணசுந்தரர். ஸ்ரீ நாகபிரதிஷ்டை, ஸ்ரீ சேக்கிழார், ஸ்ரீசப்த மாதாக்கள் பூஜித்த லிங்கங்கள். அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள், ஸ்ரீ சுப்ரமண்யர்-வள்ளி,தேவசேனா, நிருதி, வருணன், குபேரன்,அகத்தியர், ஈசான லிங்கங்கள்,, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீகேஷேத்ர புராணேஸ்வரர். ஸ்ரீ தேயு லிங்கம்,, ஸ்ரீ அருணாசலேசுவரர். ஸ்ரீ பைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீ ஆகாசலிங்கம், ஸ்ரீபஞ்சமூர்த்திகள், ஸ்ரீ பிருதிவி லிங்கம், ஸ்ரீசதுர்முகசண்டிகேஸ்வரர், ஸ்ரீ சண்டிகேஸ்வரி
5நிலைராஜகோபுரம் +3நிலை இராண்டாவது கோபுரம்
தீர்-சூரிய புஷ்கரணி.
மரம்-வில்வம்.
வி-கஜப்பிரஷ்ட
தி.நே-0600-1200,1700-2000
# 12-06-2019-குருஸ்ரீ பயணித்தது(3)
தொலைபெசி: 9443113025, 9840053289
சூரியன், வழிபட்டது. விநதையும் கத்ருவும் சகோதரிகள். காஸ்யப முனிவரின் மனைவியாகி, கத்ரு உலகமே பயப்படும்படியான 1000 புத்திரர்கள் வேண்டும் என்றும், வினதை கத்ருவின் புதல்வர்களைவிட பலசாலியான இரு புதல்வர்கள் வேண்டும் என்றும் சிவனிடம் வரம் பெற்றனர். இதனால் கத்ருவிற்கு வினதைமேல் கோபம் ஏற்பட்டது. இருவரும் கர்ப்பமுற்றனர். சிறப்பான மகன்களை இருவரும் கேட்டதால் முனிவர் இருவரது கருவையும் குடத்திலிட்டு நீர்சூழ அமைத்து மந்திரத்தால் ஆற்றல் ஏற்படச் செய்தார். காலம் கழிந்து கத்ருவின் கரு இருந்த குடத்திலிருந்து வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்ரன், ஐராவதன், த்ருதராஷ்ட்ரன், கார்க்கோடன், அனந்தன், தனஞ்செயன் உள்பட 1000 பாம்புகள் தோன்றின.
வினதை கரு இருந்த இரு குடத்திலிருந்தும் ஒன்றும் பிறக்கவில்லை. வருத்தம் அடைந்த வினதை அவசரப்பட்டு கரு இருந்த ஒரு குடத்தை திறக்க அரைகுறையான அருணன் தோன்றினான்.சரியான வளர்ச்சியடையாத ஊனத்துடன் இருந்த குழந்தைக்காக சிவனிடம் பிரார்த்தனை செய்ய சூரியனுக்கு சாரதியாய் வருவான் என ஆசி கூறினார். கருவில் குறைபாடு ஏற்பட்டதால் ஊனமான அருணன் அதற்கு தன் தாயே காரணம் என நினைத்து பல ஆண்டு காலம் கத்ருவின் அடிமையாக இருக்க தாய்க்குச் சாபமிட்டு இரண்டாவது முழுமையான கருவினால் இந்த சாபம் நீங்கும் என விமோசனம் அளித்தான். பல ஆண்டுகள் கழித்து இரண்டாவது குடத்திலிருந்து தங்கநிறத்தில் ஓர் அழகான பறவை வானை நோக்கி சிறகை விரித்து பறந்தது. அவர்தான் கருடன்.அருணன் சிவனை தரிசிக்க சூரியனிடம் அனுமதி கேட்டான். சூரியன் ஊனமுற்ற அருணனை பரிகசித்தான்.
வாலி சுக்ரீவன் பிறப்பு!- தீவிர தவம் மேற்கொண்ட அருணன் தான் அங்கஹீனன் என்பதால் கைலாயத்திற்குள் நுழைய முடியாது என நினைத்து தன் தவ வலிமையால் மோகினியாக உருக்கொண்டு சென்றான். கைலாயம் செல்லும் வழியில் மோகினியைப் பார்த்த தேவேந்திரன் ஆசைகொண்டு அவளை தன் வசப்படுத்தினான். அதனால் வாலி பிறந்தான். பெருமானை தரிசித்தாயா என சூரியன் கேட்க நடந்ததை சொன்னான் அருணன். அப்படிப்பட்ட அழகு என்றால் அந்த உருவை நான் பார்க்க வேண்டும். மறுபடியும் அந்த உருவை எடு எனக் கேட்க மீண்டும் மோகினி உரு எடுக்க அந்த உருவத்தை சூரியனும் மோகித்ததால் மோகினி சுக்ரீவனைப் பெற்றாள்.
தன் நிலை இப்படியாயிற்றே என வருந்திய அருணன் பெருமானை நோக்கி புலம்ப காட்சி கொடுத்த ஈசன். தவறு புரிந்த தேவேந்திரன் துன்புறுத்தப் படுவான் என்றும் சூரியன் தன் ஒளி வண்ணத்திலிருந்து மாறி கிருஷ்ண வர்ணமாய் கருமையடையுமாறு சபித்தார். சூரியன் சிவனால் சாபமடைந்து ஒளிகுன்ற, அருணனின் தவ வலிமையால் உலகம் பிரகாசமடையவும் சூரியன் 7மாதம் பூஜை செய்து நிவாரணமடைய அருள். சூரியன் இங்கு பூஜை செய்த காலத்தில் அவருக்கு எமன் பிறக்க எமனும் மேகநாதரை பூஜித்து பல வரங்கள் பெற்றான். எமலோக ஸ்தல விருட்சங்களில் ஒன்றான பிரண்டை சாதம் பிரசாதமாக சதய நட்சத்திரத்தன்று தரப்படுகின்றது. பூஜைக்குப்பின் தன் பொலிவு கிடைக்க கயிலை செல்ல, ஏகாந்தத்தில் குறுக்கீடு செய்த சூரியனை பார்வதி சபிக்கமுயல சிவன் சாந்தப்படுத்தி சாந்தநாயகியாக அருள். அம்மன் வாயிலிருந்து தோன்றிய வசினி- வாக் தேவதைகள் லலிதா சகஸ்ரநாமம்.
சூரியன் சாபம் நீங்கும்வரை அருணன் பிரகாசித்ததால் முதலில் அருணேதயம். பிறகுதான் சூரியோதயம். அருணனும் ,சூரியனும் வழிபட்டது. அகத்தியரும் அவர் மனைவி லோபமுத்திரையும் நவரத்தின மாலை பாடி லலிதாம்பிகை அருள் பெற்றனர். மேகத்தில் வைத்து பூஜை செய்து வழி[அட்டதால் மேகநாதர்.
ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம்-கல்வி, ஆயுள், உடல்நலம், மாங்கல்யபலம், செய்வினை பாதிப்புகள் தீரவழிபாடு. மரணபயம் அகலும். ஆயுள் நீடிக்க தினசரி பிரண்டை சாதம் நெய்வேத்தியம். சதய நட்சத்திரத்தின் அதிதேவதையான எமன் 1008 சங்காபிஷேகம் செய்து எமலோக ஸ்தல் விருட்சங்களில் ஒன்றான பிரண்டை சாதம் நைவேத்யம் செய்து பெருமானை வழிபட்டார்.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். ரதசப்தமி- பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணியில் ரிஷப வாகனராய் எழுந்தருளி தீர்த்தம்-
எருக்கமிலை, அருகம்புல், பசுஞ்சானம் சிரசில் வைத்து ஸங்கல்ப ஸ்நானம் செய்து தரிசனம் செய்தால் 7பிறவி பாவங்கள் நீங்கும்.
சூரியன் பெருமானைச் சந்திக்கச் சென்றபோது பொருமையில்லாதவன் என சூரியன் மீது உமை கோபம் கொள்ள க்ஷேத்திர புராணேஸ்வரர் அம்பாளை அமைதியாய் சாந்தமாய் இருக்கச் சொல்லும் வகையில் திருவுருவம். அம்பாளையும் ஈஸ்வரனையும் ஒரு புறத்திலிருந்து பார்க்கும்போது சிரித்த முகமாகவும் மறுபுறத்திலிருந்து பார்த்தால் கோபமாகவும் தோன்றும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது சிறப்பு.
பிரகாஹத்தைச் சுற்றிவரும்போது ஐந்து கோபுர தரிசனம் சிறப்பு.அன்னை லலிதாம்பிகையின் இருபுறமும் 27 தீபங்கள்- இவை 27 நட்சத்திரங்களை குறிக்கும். இங்கு பூஜை செய்து தன் கருமை நிறத்திலிருந்து சூரியன் மீண்டதால் மீயச்சூர்.-திருமீயச்சூர் என்றானது. மொத்தம் 25 சிவலிங்கங்கள். நவகிரகங்கள் இல்லை. அதற்கு முந்தைய கோவில். 12நாகர்கள் வழிபாடு.
சித்திரை 21தேதி முதல் 27ம் தேதி வரை சூரியன் உதிக்கும் நேரத்தில் சிவலிங்கத்தின்மேல் சூரியகதிர்கள். லலிதாம்பிகையிடமிருந்து நேரடியாக உபதேசம் பெற்றவர் ஹயக்கிரீவர். இராஜேந்திரசோழன், செம்பியன்மாதேவி திருப்பணி.
கொலுசு கேட்ட வரலாறு: பெங்களூர் மைதிலி தினமும் சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து பின் தன் பணிகளைத் தொடர்வார். ஒருநாள் அவர் கனவில் ஒரு உருவம் தோன்றி எனக்கு எல்லா நகைகளும் உள்ளது .கொலுசு மட்டும் இல்லை என்றது. தன்னிடம் அவ்வாறு கொலுசு கேட்டவர் யார் என்று தெரிய விசாரனை மேற்கொள்ல் ஒரு மாதப் பத்திரிக்கையின் அட்டையில் தன் கனவில் வந்த அந்த முகம் தெரிய் அதை ஆவலுடன் பார்க்க அது ஸ்ரீ லலிதாம்பிகை என தெரிய வந்தது. மீயச்சூர் அர்ச்சகரிடம் கனவு விபரம் சொல்லி கேட்க அவர் பரம்பரையாக நாங்கள் பூஜை செய்து வருகின்றோம் கொலுசு அணிவிக்க வசதி இல்லை என்று மறுத்து விட்டார். மைதிலி அவர்கள் கட்டாயப்படுத்த அம்மன் சிலையை நன்கு கவனித்த அர்ச்சகர் ஆச்சரியப்படும் வகையில் கொலுசு அணிய துவாரம் இருக்கக் கண்டு ஆனந்தப் பட்டார். தகவல் அறிந்து மைதிலி கொலுசு கொண்டுவந்து அளிக்க வெள்ளி கொலுசு அணிவிக்கப்பட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)