
ஊர்:திருப்பாம்புரம்.தி.த-176+அ-62. # பாம்புரம், சேஷபுரி, உரகபுரம்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபாம்புரீஸ்வரர், ஸ்ரீசேஷபுரீஸ்வரர், ஸ்ரீபாம்பீசர், ஸ்ரீபாம்புரநாதர், ஸ்ரீபாம்புரேசர்
இறைவி: ஸ்ரீபிரமராம்பிகை, ஸ்ரீவண்டார்குழலி, ஸ்ரீவண்டுசேர்குழலி, ஸ்ரீமாமலையாட்டி. ஸ்ரீவண்டார்பூங்குழலியம்மை.
தாயார்
உ: பிறசன்னதிகள்: ஸ்ரீராஜவிநாயகர், ஸ்ரீசட்டநாதர். ஸ்ரீராகு-கேது ஏகசன்னதி. ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை, வன்னிமரத்தடியில் ஸ்ரீஆதி பாம்புரேசர்-ஸ்ரீவன்னீஸ்வரர் சன்னதி. ஸ்ரீதிருமால், ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீபிரமன், ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீநடராஜர்,
த.வி.ராஜராஜவிநாயகர்.
3நிலைராஜகோபுரம்.
தீர்-ஆதிசேஷ.
மரம்-வன்னி.
தி.நே-0600-1200,1700-2000
# 23-10-2018-குருஸ்ரீ பயணித்தது(2)
பாம்பு+ புரம்- ஆதிஷேசன். வாயு, ஆதிசேஷன் போட்டியினால் சினந்த சிவன் சாபம் பெற்ற ஆதிசேஷன் 12 ஆண்டுகள் வழிபட்டு சாபம் நீங்கிய தலம். பிரம்மா, இந்திரன், பார்வதி, அக்னி, தட்சன், அகத்தியர், ஆதிசேடன், சுனிதன், கங்காதேவி, சந்திரன், சூரியன் ஆகியோர் வழிபாடு.
வடமொழிக்கு ஈடானது தமிழ் என தேவர்கள் முனிவர்களுக்கெதிராக வாதிட்ட அகத்தியர் ஊமையாக சாபம் பெற்று இங்கு சிவராத்திரி 1ம் சாமத்தில் வழிபட்டு சாபம் நீங்கினார்.
பிரம்மா தன்னால் படைக்கப்பட்ட திலோத்தமையின் அழகில் மயங்கி சாபமடைந்து இங்கு ஓராண்டு வழிபட்டு சாபம் நீங்கியது.
தட்சன் வேள்வியில் கலந்து கொண்ட அக்னி சாபமடைந்து இங்கு சிவராத்திரி 2ம் சாமத்தில் வழிபட்டு பேறு.
சிவனின் கண்களை மூடிய பார்வதி 12 ஆண்டுகள் இங்கு தவமிருந்து சிவராத்திரி 4ம் சாமத்தில் வழிபட்டு பேறு.
தட்சனின் யாகசாலை சிதைத்து தலையை வீரபாகு வெட்ட தேவர்கள் சிவனை சாந்தப்படுத்தி தட்சனின் உடலில் ஆட்டுத்தலையை ஒட்டி உயிர்பிக்க கர்வம் அடங்கி 12 ஆண்டுகள் பூஜை செய்து சிவராத்திரி 4ம் சாமத்தில் பேறு.
கங்கை தன்னிடம் சேர்ந்த பாவங்களைத் தொலைக்க இங்கு பூஜை செய்து சிவராத்திரி 2ம் சாமத்தில் பேறு.
சூரியன் கங்கையில் நீராடி மயூரநாதரை வழிபட்டு பாம்புரத்தில் 1000 பூக்களால் 12 ஆண்டுகள் அர்சித்து தன்னுடன் ஒளியை கூட்ட அருள் பெற்றான்.
சுனிதன் தன்னுடைய முயலகன் நோய் தீர வழிபட்டான். கோச்செங்கட் சோழன் குட்ட நோய் தீர வழிபாடு.
விநாயகர் இறைவனை தொழுதபோது அவர் கழுத்தில் இருந்தபாம்பு விநாயகர் தன்னையும் தொழுவதாக கர்வம் கொண்டதால் சினமுற்ற சிவன் நாக இனம் தம் சக்தியை இழக்க சாபம். தங்கள் பிழை பொறுக்க வேண்டியதால் விமோசனம் அருள அதன்படி மகா சிவராத்திரியில் அஷ்ட மகாநாகங்களும் ராகுவும் கேதுவும் திருபாம்புரநாதரை வணங்கி சாப விமோசனம் பெற்றனர்.
ஆதிசேஷன் சிவராத்திரி 1-ம் காலம் குடந்தை நாகேஸ் வரனையும், 2-ம் காலம் திரு நாகேஸ்வரம் நாகநாதனையும், 3-ம் காலம் திரு பாம்புரேஸ் வரையும் 4-ம் காலம் நாகூர் நாகேஸ்வரரையும் வழிபட்டு பேறு.
இங்கு பாம்பு கடித்து இறப்ப தில்லை. நாகதோஷம், ராகுகேது, மகப்பேறு பரிகாரத்தலம். காலை-குடந்தை கீழ்கோட்டம், பகல்-திருநாகேசுவரம், மாலை-திருபாம்புரம் வழி படுதல் சிறப்பு. மாசிமகம், மகாசிவராத்திரி சிறப்பு. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
