
ஊர்:திருவீழிமழழை. தி.த-178+மு , பூகைலாசம், கலயாணபுரம், பஞ்சாக்காபுரம், தக்ஷிணகாசி, சணமங்களஸ்தலம், சுவேதகானனம், ஆகாசநகரம், பனசாரண்யம், நேத்திரார்பணபுரம், தேஜீநீவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநேத்திரார்ப்பணேசுவரர்(சு) ஸ்ரீவிழியழகீசர். ஸ்ரீவிழியழகர், ஸ்ரீவீழிநாதசுவாமி, ஸ்ரீகல்யாணசுந்தரர், ஸ்ரீமாப்பிள்ளைசாமி
இறைவி: ஸ்ரீசுந்தரகுஜாம்பிகை, ஸ்ரீஅழகுமுலையம்மை,
தாயார்
உற்சவர்: ஸ்ரீநடராஜர், ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசக்கரதானர், ஸ்ரீபிட்சாடனார், ஸ்ரீகாலசம்ஹாரர், ஸ்ரீசுவர்க்காவதாநேசர்,
பிறசன்னதிகள்: ஸ்ரீகல்யாணசுந்தரர். ஸ்ரீதேஜினவனநாதர், ஸ்ரீககர்த்யாயினி ஸ்ரீகாலசம்ஹாரமூர்த்தி, ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானை.
த.வி.படிக்காசுவிநாயகர்.
5நிலைராஜகோபுரம்.
தீர்-விஷ்னு,பத்ம,புஷ்கரணி,வருண,திரிவேணிசங்கமம்,குபேர,இந்திர,இலக்குமி,வசிட்ட முதலான 25தீர்த்தங்கள்
மரம்-வீழிச்செடி,பலா.
வி-விண்ணிழி16சிங்கங்கள்தாங்கும்
தி.நே-06-1230,16-20000
வீழிச்செடிகள் எனும் பலா மரம் நிறைந்த தலம். பிட்சாடனார், ரதிதேவி, வசிஷ்டர், மனு காமதேனு வழிபட்டது. திருமால் 1000வது மலருக்குப் பதில்தம் கண்ணையே சாத்தி சக்கரம் பெற்ற தலம். ஞானசமபந்தருக்கும், அப்பருக்கும் படிக்காசு தந்து அடியார்களுக்கு அமுதூட்டிய தலம். படிக்காசு பிள்ளையார், வாவல் நெற்றி மண்டபம், நடராசர் சன்னதி சிறப்பு. உமையை மணந்ததலம்-என்ற நிலைக்கேற்ப அரசாணிக்கால், பந்தக்கால் தூண்கள். கல்யாணசபையில் பெருமான் மாப்பிள்ளைசுவாமியாக எழுந்தருளி அருள். அவர் பாதத்தில் திருமாலின் கண்ணாகிய மலர். வீழிநாதர் சன்னதி-12படிகள் (ராசிகள்/ மாதங்கள்) தெற்கில்- 7படிகள்- வாரநாட்கள். மூலவரின் பின் திருமணக்கோலம். கண்கோளாறு நீங்கும் தலம். திருமணமாகாத ஆண்களுக்கு சிறந்த தலம். செப்புத் தகடுகள் வேயப்பெற்றுத் தங்ககலசத்துடன் விளாங்கும் விண்ணிழி விமானம். சித்திரை பெருவிழா. திருமணவழிபாடு. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(148)- பெற்ற தலம்.
விஷ்ணு 1000 தாமரை மலர்களால் சிவனை அர்சிக்க இறுதியில் ஒரு மலர் குறைய தன் கண் மலரை பரித்து பூஜித்து சிவனிடமிருந்து வலிமை பொருந்திய சக்ராயுதத்தை பெற்றத் தலம்- சிவபெருமானின் பாதத்தில் திருக்கண்ணை தரிசிக்கலாம். காத்யாயன முனிவரும் அவர்மனைவி சுமங்கலையும் நெடுநாட்களாகியும் புத்திரப்பேறு கிட்டாததால் யாகம் வளர்க்க அதில் தோன்றிய அன்னபூரணியையே தங்களுக்கு மகளாகப் பிறக்க வேண்டினர். அவ்வாறு நீலோற்பல மலரில் தோன்றிய குழந்தைக்கு காத்யாயனி எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பருவம் வந்ததும் சிவனுக்கு முடிக்க முனிவர் கடுந்தவம் மேற்கொள்ள தோன்றிய சிவனார் ஒரு சித்திரை மகநாளில் கணங்கள் சூழ வந்து மகளை மணப்போம் என உறுதியளித்தார். அந்நன்னாளில் மணம் நடைபெற்றது. அனைவருக்கும் மணமகனாக வந்தவர் சிவபெருமான்தானா என்ற சந்தேகம் வர திருமால் முன்பு தன்னை பூஜித்த கண்மலரையும் மிழலைக் குறும்பர் என்ற அனபர் நிவேதித்த விளாங்கனியையும் காட்டி அருளினார்.-சித்திரை ஆறாம் நாள் மகநட்சத்திரத்தில் திருமணவிழா
வரை படம்: விரிவாக்கு(enlarge)
