
ஊர்:கருவிழிக்கொட்டடை.தித-180+அ-64.# கருவேலி, கருஇலி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசற்குணநாதேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசர்வாங்கநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீபாலசுப்ரமண்யர், ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்.ஸ்ரீபைரவர், ஸ்ரீதுர்க்கை,
3நிலைராஜகோபுரம்
தலமரம்-வில்வம் தீர்-எமதீர்த்தம்.
தி.நே-0600-1200,1700-2000
# 25-10-2018-குருஸ்ரீ பயணித்தது
தொடர்புக்கு-94429 32942
1000 ஆண்டுகள் பழமை.
தலவரலாறு-சற்குண சோழனுக்கு மகப்பேறு இல்லாததால் ஈசன் பார்வதி அம்சத்துடன் ஓர் பெண் குழந்தையை மன்னன் வழக்கமாக நீராடும் தாமரைத் தடாகத்தில் ஓர் சங்காக மிதக்க அதை எடுத்துக் கொண்டு கரையேறயபின் குழந்தையாக மாற சர்வாங்கநாயகி எனப் பெயரிட்டு வளர்த்தான். சொக்கட்டான் போட்டியில் தன் மகளை வெல்பவருக்கு அவளை மணமுடிப்பதாக அறிவித்தான். எல்லா இளவரசர்களும் தோற்க சிதம்பர நடராசரிடம் முறையிட மகளுடன் சென்றான். வழியில் கொட்டிடை என்ற ஊரில் நதியில் நீராடி இறைவனை வழிபட்டு கூடாரம் செல்கையில் ஒரு முதியவர் தோன்ற அவரை அழைத்துக் கொண்டு சென்றவர் தன் மகள் தோழிகளுடன் சொக்கட்டன் ஆடிக்கொண்டிருக்க கண்டார். முதியவருடன் விளையாட்டாக ஆரம்பித்த சொக்கட்டான் முடிவில் அர்சகுமாரிக்கு தோல்வியில் முடிய இந்த கிழவனுக்கா என்பெண் என மன்னன் வேதனையுற கிழவன் உருமாறி மணமகன் கோலத்தில் இறைவன் காட்சி அருள். பார்வதி அம்சத்தை மணந்து பார்வதியுடன் சேர்த்தார்- கருவிழிக்கொட்டிடை
சிம்மவாகினி- பளிங்குகல். அம்பாள் தனிகோயில். மரணபயம் நீங்கும். கருவிலி என்றால் மீண்டும் கருவில் உருவாகாமல் மோட்சம் அடைய வழிபாடு-
இந்திரன், தேவர்கள், உருத்திரகணத்தார் வழிபட்டது. சற்குணம் என்ற அரசன் வழிபட்டு நற்கதி அடைந்த தலம்.சற்குணனுக்கு அருளியதால்- சற்குணேசுவரர்.
கருஇலி மருவி கருவேலி. நவகிரகங்கள் இல்லை. கருவிலி என்பது ஊர்ப்பெயர். கொட்டிடை என்பது கோவில் பெயர்.
அப்பர் -பாடல் பெற்ற தலம். 2008,2017 குப்பாபிஷேகம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
