gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: திருவையாறு-8,,திருமானூர்-4,அரியலூர்-
படம்: Sri Vaidyanathaswami temple_thirumazhapadi
தகவல்கள்:

ஊர்:திருமழபாடி#.தி.த-108 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவைத்யநாதர்,  ஸ்ரீமழுவாடீசுவரர்,  ஸ்ரீவைரத்தூண்நாதர்,  ஸ்ரீவச்சிரதம்பேஸ்வரர் 
இறைவி:  ஸ்ரீசுந்தராம்பிகை,  ஸ்ரீஅழகம்மை,  ஸ்ரீபாலம்மை. :
தாயார்
உற்சவர்:                                                                                                                                                                                                                                     பிறசன்னதிகள்: ஸ்ரீதலவிநாயகர், ஸ்ரீகாளி, ஸ்ரீஅதிகாரநந்தி, ஸ்ரீசோமாஸ் ஸ்கந்தர், ஸ்ரீஐயாரப்பன், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீகாலவேதநந்தி, ஸ்ரீநடராஜர்-சிவகாமி,   ஸ்ரீசப்த கன்னியர்கள்(முனி,தேவ, தாமரை, நீர்,மழை,வன,சுமதி) , ஸ்ரீசப்த மாதர்கள், ஸ்ரீசுப்ரமண்யர் -வள்ளி,தெய்வானைஸ்ரீகாசி விஸ்வநாதர்ர்-விசாலாட்சி, ஸ்ரீகைலாயநாதர், ஸ்ரீமகாவிஷ்ணு-மகாலட்சுமி, ஸ்ரீபறவை நாச்சியார்,,ஸ்ரீ சுந்தரர், ஸ்ரீசொக்கநாதர்-மினாட்சி, ஸ்ரீ நந்தியம்பெருமான் -சுயசாம்பிகை,
த.வி.சுந்தரவிநாயகர். 
7நிலைராஜகோபுரம். 
தீர்-இலக்குமி,கொள்ளிடம்.
மரம்-பனை. 
4காலபூஜை 
தி.நே-0600-1200,1600-2000

சிறப்புகள்:

# 25-04-2019-குருஸ்ரீ பயணித்தது

மார்கணட முனிக்காக இறைவன் மழுஏந்தி நடனமாடி காட்சி-மழுவாடி. திருமால், இந்திரன் வழிபாடு. சந்திரன் களங்கம் நீக்கிய வைத்திய நாதர்-ஜ்வரஹரேஸ்வர்- புருஷா மிருகத்தால் பிரதிஷ்டை. வஷிஷ்ட முனியின் புதல்வி ஸுயம்பிரபாதேவி- சிலாத முனியின் புதல்வன்- நந்திதேவர் திருமணம் கொண்ட தலம். ஒரே கல்லில் சோமாஸ்கந்தர். 2-அம்பாள் சன்னதிகள். மாசிமகம்-விழா. கொள்ளிடம் உத்ரவாகினியாக வடக்கு முகமாக பாய்தல் சிறப்பு. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

திருவையாறு அருகில் உள்ள அந்தணக்குறிச்சி எனும் ஊரில் இருந்த சிவனடியார் சிலாதர் சிவபக்தி மிகுந்த சித்ராவதி என்பவரை மணந்தார். இருவரும் சிவன்பால் சித்தத்தை வைத்திருந்தும் ஈசன் கருணை காட்டவில்லை. புத்திரப்பேறு இல்லை. சித்ராதி ஆலோசனைப்படிசிலாதர் ஒற்றைக் காலில் நின்று பஞ்சாட்சரம் ஓதி தவமிருந்தார். மகிழ்வுற்ற சிவன் நேரில் தோன்ற இறவாத் தன்மையுடைய மகன் வேண்டும் என விண்ணப்பித்தார். 16 வயது அருள்கொண்ட புத்திசாலியா! 100 வயதுகொண்ட அறிவிலியா எனக் கேட்டு பிறந்து என்றும் 16வயதான பக்த மார்க்கண்டேயன் சரித்திரத்தை அறிந்து கேட்டாரோ என்னவோ! ஈசன் அப்படி ஓர் மகன் வேண்டுமென்றால் புத்திரகாமஷ்டி யாகம் செய் என்று அருளினார். சிலாதர் அந்த ஊரில் உள்ள அந்தணர்கள் மற்றும் முனிவர்களுடன் அந்த யாகத்தைக் குறைவின்றி செய்து அசரீரிப்படி அந்த யாகம் நடந்த இடத்தை ஏர்கலப்பைக் கொண்டு உழ பொன்னிறமான ஓர் பெட்டி தோன்ற அதைத் திறந்து பார்த்தபோது ஒளி மயமான ஓர் வாலிபன் இருந்தான். எல்லோரும் அகமகிழ்ந்தனர். பிறந்தவுடன் எல்லோருக்கும் ஆனந்த்தை அருளியதால் அக்குமர்னுக்கு நந்திதேவர் எனப் பெயரிட்டனர்.
எல்லோருக்கும் ஆனந்தத்தை அருளிய நத்திதேவர் தனக்கு ஆனந்தத்தை அருள்பவர் சிவன் என்பதை உணர்ந்து 100 ஆண்டுகள் தவம் செய்ய, தோன்றிய ஈசனார், கணாதிபதி பட்டம் அளித்து தன் அதிகாரம்போல் நந்திதேவரும் அதிகாரம் பெற்றவர் என கணாதிபதிகளுக்கு தலைமையாக இருக்க அருள். சிவன்மீது கொண்ட அளவிடா அன்பால் பாசத்தால் மேலும் 100 ஆண்டுகள் தவம் செய்தார். தம்மைப்பற்றி கருதாமல் அன்பை ஒன்றையே கருதி தவமிருந்த நந்தி தன்னைப்போல் நித்தியனாக இருக்கவும் யாவராலும் வணங்கப்படவும் ஈசன் அருள். மேலும் தேவர்களை நோக்கி விநாயகர், முருகன் போல் நந்தியும் எனக்கு ஓர் மகனே! எல்லாவற்றையும் விடசிவஞானத்தைப் போதிக்கவல்ல நல்லாசிரியன் நந்திதேவர். எல்லோரும் பூஜிக்கத் தக்கவர் என்றாலும் நமக்கு நந்தியே திருமேனி என்று கூறி அவருக்கு திவ்வியமுடி, சந்திரகலை, சடைமுடி, நீலகண்டம், 3கண்கள், 4தோள்கள், வாள், மழு ஆதியன தந்து வாழ்த்தினார்.
இவ்வளவு பெருமைகள் பெற்ற நந்திதேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. எல்லோரும் அங்கு குழுமினர். சடங்குகள் நடைபெற்றன. திருப்பழனத்திலிருந்து பழங்கள், திருச்சோற்றுத்துறையிலிருந்து திருவமுது, திருவேதிகுடியிலிருந்து வேதியர்கள், திருக்கண்டியூரிலிருந்து மகரகண்டிகை, திருப்பூந்துருத்தியிலிருந்து மலர்கள், திருநெய்த்தானத்திலிருந்து நெய் என்று திருமணத்திற்கு வேண்டிய பொருட்கள் வந்து சேர்ந்தன. நந்திதேவர் மருத்துவ முனிவரின் மகள் சுயசாம்பிகை என்பவரை மணந்தார். அப்போது ஈசனும் உமையும் தோன்றி அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்து ஆசி கூறி அருளினர். திருமணமான நந்திதேவர் அம்மையப்பர் வழிகாட்டலில் திருப்பழனம், திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை, திருநெய்த்தானம் ஆகிய ஆறு தலங்களுக்கும் சென்று வழிபட்டு இறுதியில் திருவையாறை அடைந்தார். இந்த நிகழ்வானது ஜீவாத்மாவான நந்தி ஆறு ஆதாரங்களான ஜாக்ரத், சொப்பனம், சுசுப்தி, துரியம், துரியாதீதம், அதீதாந்தம் ஆகியவற்றை அடைந்து இறுதியில் சிவனோடு ஐக்கியம் ஆவதைக் குறிக்கும். இந்த நிகழ்வே திருவையாறு சப்தஸ்தான விழாவாக கொண்டாடப்படுகின்றது. இன்று வரை திருவையாற்றிலிருந்து ஐயாரப்பர் வந்து நந்திதேவர் திருமண நிகழ்வில் கலந்து கொள்வது சிறப்பான நிகழ்வாகும். இந்த நிகழ்வுதனை- நந்தி கல்யாணத்தைப் பார்த்தால் முந்திக்கல்யாணம் நன்று நடக்கும் என்பது மரபாகும்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-42

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26739863
All
26739863
Your IP: 44.210.77.73
2024-02-24 17:35

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg