
ஊர்:திருநின்றவூர்#பாலாஜி3/9.தி.தே-58, துளசிவனம், திண்ணனூர்
மூலவர்:ஸ்ரீ:பக்தவத்சலபெருமாள்-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஎன்னைபெற்றதாயார், தனிக்கோவில் நாச்சியார்.
உற்சவர்:ஸ்ரீபத்தராவிபெருமாள்-ஸ்ரீசுதாவல்லி ,
பிறசன்னதிகள்: ஸ்ரீசக்ரத்தாழ்வார். ஸ்ரீஆதிசேஷன்,
5நிலைராஜகோபுரம் மரம்:
தீர்-வருணபுஷ்கரணி.:
வி-உத்பல.
ஆறுகாலபூஜை
தி.நே.0700-1200,1600-2000
#07062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தொலைபேசி: 2639 0434, 98401 92735, 72000 131191
திருமால் யோக நித்திரையில் இருக்கும்போது தந்தை சமுத்திரராஜனிடம் சண்டையிட்டு பூலோகம் வந்து இந்த துளசி வனத்தில் இருந்தார். திருமகள் தனித்து நின்றதலம். திரு வந்து நின்றதால் திருநின்றவூர். கோபம்கொண்ட பிராட்டியை சமாதானம்செய்ய சமுத்திரராஜன் வர வருணனும் வந்த தலம். அவர் தந்தை 'என்னைப் பெற்ற தாயே' நீ வந்துவிடு என அன்புடன் கெஞ்சியதலம்-"என்னைப் பெற்ற தாயார். பின் பெருமாள் வந்து திருமகளை சமாதானம் செய்த தலம். நிலத்தில் முதன் முதலாக லட்சுமியுடன் காட்சி-பக்தவத்ஸவன். திருமங்கை ஆழ்வார் ஒவ்வொருத் தலமாக சென்று பாசுரம் பாடி மகிழ்ந்து சென்று கொண்டிருந்தார். அவர் திருநின்றவூர் வந்தபோது திருமால் அவர் வந்ததை கவனியாமல் இருப்பதுபோல் மகாலட்சுமியிடம் பேசிக்கொண்டிருந்தார், கோபித்த ஆழ்வார் பாசுரம் பாடாமலே அடுத்த ஊருக்குச் சென்றுவிட திருமகள் இந்த ஊரில் உங்களைப் பாடாமல் அவர் செல்லலாமா? உடன் சென்று பாடல் வாங்கி வாருங்கள் என பெருமாளை அனுப்பிவைக்க திருக்கடன்மல்லை வந்த பெருமாள் ஆழ்வாரிடம் பாடல் கேட்டு நிற்பதக் கண்ட ஆழ்வார் மனம் மகிழ்ந்து பாட அப்பாசுரத்தைக் திருமகளிடம் சேர்க்க அவர் ஒரு பாசுரம் போதாது எனக்கூறி மீண்டும் பெருமாளை திருப்பி அனுப்பினார். திருக்கண்ணமங்கையில் ஆழ்வாரைக் கண்டு பாசுரங்களைப் பெற்றார். சூர்ய வம்ச மன்னன் தர்மத்வஜன் போரில் தோற்று நாட்டை இழந்தான். மார்கண்டேய மகரிஷியின் ஆலோசனைப்படி திருநின்றவூர் தீர்த்தத்தில் நீராடி வழிபட குளக்கரையில் வராகராக காட்சி அருள்--வராக க்ஷேத்திரம். சென்னை-9பாலாஜி-3 கோவிலுக்குபின் பொய்கைக் கரையில் ஏரிகாத்த ராமர் கோவில்- ராமர் ஆசியில் தாசரதி பின்னாளில் முதலியாண்டான்- ராமரின் அவதாரம், லட்சுமணின் அவதாரமான ராமானுஜரின் பிரதம சீடர்.
மங்களாசாசனம்: பயனற்ற சில செயல்களைச் செய்யத் துவங்கி தகுதியற்றவரைச் சார்ந்து வணங்கி, பயனற்ற நூல்களை உண்மை நூல் என்று கற்று, பயனற்ற முறையில் மரணத்தை அடைபவர்களே! வாருங்கள். என் தந்தையாக நினைத்து என்னால் வணங்கத் தக்கவனும், அடியார்களால் கூட்டமாக வணங்கப்படும் அழியாத பொருளும், கருமேகம் போல் விளங்குபவனும், காண்டவ வனத்தை தீயினால் எரித்தவனும், திருநின்றவூரில் குளிர்ந்த முத்துபோல் விளங்குபவனும் ஆகிய எம்பெருமானை நான் திருக்கடல்மல்லையில் கண்டு சேவித்தேன்.-திருமங்கை ஆழ்வார்
மங்களாசாசனம்: ரிஷபம் போல் மிடுக்குடையானை, திருப்பிரிதி என்னும் பத்ரிகாஸ்ரமத்தில் எழுந்தருளியிருக்கும் என் இறைவனை, இப்பிறவியில் வேண்டிய பலன்களை அளிப்பவனை, மறுமையில் துக்கங்கள் இல்லாமல் காப்பவனை ஆற்றல் மிக்கவனை, தன்னைச் சரணடைந்தவர்களை உய்வித்து பரமபதத்திற்கு நடத்தவல்ல பெருமை படைத்தவனை, கையில் ஒப்பற்ற சக்கரத்தை ஏந்தியிருப்பவனை, தீமை புரிபவர்களுக்கு எமன் போல் தோன்றி அவர்களை அச்சுறுத்துபவனை, மிகச் சிறந்த நீலமணி மயமான குன்று போன்ற அதி சுந்தரனை, கொத்துக் கொத்தாக முத்து மாலைகளை குளிர்ச்சியாக அணிந்திருக்கும் திருநின்றவூர் பெருமாளை, தென்றல் காற்றைப்போல் இன்பம் அளிப்பவனை, தண்ணீரைப் போல் ஜீவாதாரமாய் இருப்பவனைத் திருக் கண்ணமங்கையில் கண்டு கொண்டேன்- திருமங்கை ஆழ்வார்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
