ஊர்:திருகண்ணபுரம்.தி.தே-17#
மூலவர்: ஸ்ரீநீலமேகப்பெருமாள்,நின்றகோலம்,ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்: இறைவி: தாயார்:ஸ்ரீகண்ணபுரநாயகி.4தேவியர்சன்னதி-ஸ்ரீதேவி,பூதேவி,ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீபத்மினி
உற்சவர்: ஸ்ரீசௌரிராஜப்பெருமாள்
பிறசன்னதிகள்: ஸ்ரீகருடன், ஸ்ரீபஷிராஜா, ஸ்ரீசக்ரவர்த்தி மகன்(ராமன்), ரீசீதா, லட்சுமணன்.
7நிலைராஜகோபுரம்
மூன்றுபிரகாரங்கள்
தீர்-நித்யபுஷ்கரணி,அனந்தசரஸ்,பூதவடம்
வி-உத்பாலவதாக
தி.நே-0600-1200,1700-2000
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
தொலைபேசி-04366-270718, 270557 (தங்கும் அறைகள் உண்டு.)
உபரிசரவசு போரில் தேவர்களுக்கு உதவியபின் தாகம் தீர்க்க வந்தபோது அவன் வீரர்கள் முனிவர்களைக் கொல்ல பெருமாள் 16வயது பாலகனாய் வந்துபோரிட வசு என அறிந்து மன்னிக்க வேண்ட- அருள். உபரிசரவசுவின் மகள் பத்மினி தவமிருந்து பெருமாளை மணந்தார்.-மாப்பிள்ளைசாமி. ஆண்டிற்கு ஒருமுறை மாமனார் வீட்டிற்கு வருகை. மாசி மகத்தன்ரு சமுத்திரத்தில் தீர்த்தவாரி.
அஷ்டாச மந்திரத்தின் மொத்த சொரூபம். பெருமாள் 3 மூர்த்திகளாய்- 1.வைகாசி பிரமோற்சவத்தில் 7ம் நாள் ஸ்திதி காத்தருளும்-மகாவிஷ்னுவாக, 2.இரவு சிருஷ்டி நிலையில் பிரம்மாவாக, 3.விடியற்காலை ஸம்ஹாரம் செய்யும் ருத்திரனாகவும் காட்சி. முனைய தரையன் பொங்கல்-அர்த்தசாம பிரசாதம்-சிறப்பு.
பஞ்ச கிருஷ்ண சேத்திரம்-4/5.(திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருகண்ணமங்கை, திருக்கவித்தலம், திருக்கோவிலூர்)
சௌரி- யுகங்கள் தோறும் அவதாரம். சோழ மன்னனுக்கு கொடுப்பதற்கு பூமாலையில்லாததால் அன்று காலை தேவதாசிக்கு அனுப்பியிருந்த பூமாலையை தருவித்து கொடுக்க அதில்கருநிற கேசம் சிக்கியிருக்க கோபம் கொண்ட மன்னன் அர்ச்சகர் கூரியபடி இறைவனுக்கு சூட்டிய மாலைதானா என அடுத்தநாள் வந்து கேட்க தினமும் பூஜை செய்யும் அர்ச்சகருக்கு உதவும் வகையில் பெருமாள் கருத்த நிறக்கேசத்துடன் சேவை சாதித்தருளியதால் -சௌரி ராஜன்.
பிப்ரவரி மாசிமகப் பெருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
