gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருக்கருப்பறியலூர்-1,திருவாளப்புத்தூர்-8,திருப்பனந்தாள் சாலை,இளந்தோப்பு-3
படம்: Sri Kundaleswarar temple_thirukurakkaa
தகவல்கள்:

ஊர்:திருகுரக்குக்கா.தி.த-82+அ-39.திருக்குரக்காவல். :
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகுந்தளேஸ்வரர்(சு).,ஸ்ரீகுண்டலகர்ணேஸ்வரர். 
இறைவி:ஸ்ரீகுந்தளாம்பிகை. ஸ்ரீகுந்தளநாயகி  ஸ்ரீஏலாசௌந்தரி அம்மன்,
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீசெங்கழனி விநாயகர், ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீசூரியர்,ஸ்ரீ பைரவர்
முகப்புவாயில்.
2காலவழிபாடு. 
தீர்-கணபதிநதி. 
தி.நே-0730-1230,1600-2000

#15.07.2023-குருஸ்ரீ பயணித்தது

சிறப்புகள்:

அனுமன் வழிபட்டது. குரங்கு இனமான ஆஞ்சநேயர் காவல் புரிந்ததால் குரங்குக்கா என்று அழைக்கப்பட்டு திருக்குரக்கா என்று அழைக்கப்படுகின்றது. திருவோண நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயரால் லிங்கம் பிரதிஷ்டை- திருவோண நட்சத்திரக்காரர்கள் வழிபடுதல் சிறப்பு. அமாவாசையன்று அம்பாளுக்கு ஓமம். அப்பர் -பாடல் பெற்ற தலம்.

சிவபக்தன் இராவணனை கொன்ற தோஷம் ராமரைப் பற்ற அங்குவந்த அகத்தியரிடம் இத்துன்பம் நீங்க வழிகேட்க இரண்டரை நாழிகைக்குள் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்றார். லிங்கம் கொண்டுவர அனுமன் கைலாயம் விரைய அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் சூரியனை அனுப்ப சூரியனின் வெப்பத்தால் தகித்த அனுமன் சூரியனை விழுங்க முயற்சித்தார். இந்த முயற்சியை கைவிட்டு விடு என்று சொன்ன ராகு பகவானுடன் போர் புரிய, போரில் தோற்ற ராகு ‘உன்னை வழிபடுபவர்களை ஒருபோதும் துன்புருத்தமாட்டேன், என் தோஷம் அவர்களைவிட்டு நீங்கும் என்று வரம் அளித்தார்.

பின் கைலாயம் சென்று லிங்கத்தை எடுத்துக் கொண்டு வரும்போது சனிபகவான் உன்னை நான் பீடிக்கப் போகின்றேன் அந்த லிங்கத்தை என்னிடம் கொடு என்று அனுமனின் வாலைப் பிடித்து இழுத்தார். சினம் கொண்ட அனுமன் தன் வாலால் சனியை சுற்றி கீழெ தள்ள பூமியில் விழுந்த சனி உன் வால் அறுந்து போகட்டும் என சாபம் கொடுதார். சிவபெருமான் என்பக்தனான அனுமனின் செயலுக்கு தேவையில்லாமல் இடையூறு தந்த நீ உன் பதவியை இழப்பாய் என்றார். சாபவிமோசனம் கேட்ட சனிக்கு திருக்குரங்குக்கா சென்று வழிபட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிவாய் என்றார்.

அந்தணர் வேடத்தில் வந்த காலபைரவர் இதைவிட சக்தி வாய்ந்த லிங்கம் சுருட்டப்பள்ளியில் உள்ளது என்றதும் கையிலிருந்த ;இங்கத்தை அவரிடம் கொடுத்துவிட்டு சுருட்டப்பள்ளி சென்று லிங்கத்தை பெயர்தெடுக்க முயன்றார். முடியவில்லை. நேரம் கழியவே அந்தணரிடம் கொடுத்த லிங்கத்தையாவது திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சென்றபோது அந்தணர் அங்கு இல்லை. தான் அவரிடம் கொடுத்த லிங்கம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தது கண்டு வருத்தப்பட்டார். உடனே காசிக்கு சென்று லிங்கம் எடுத்துவரச் சென்றார்.

சேதுக்கரையில் இறைவனை நினைத்து சீதை மணற் லிங்கம் செய்ய அனுமன் வர காலதாமதம் ஆனதால் ராமர் சீதை செய்த லிங்கத்தை வைத்து வழிபட்டு தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டார்.

காசியிலிருந்து லிங்கத்தை எடுத்து வரும் போது காசியின் காவல் தெய்வமான பைரவர் என்னுடைய எல்லைப் பகுதியிலிருந்து நீ லிங்கத்தை என் அனுமதியின்று எடுத்துச் செல்லக்கூடாது என தடுக்க இருவருக்கும் போர் மூண்டது. காலபைரவர் தோற்க லிங்கத்தை எடுத்துக் கொண்டு சேதுக் கரைக்கு விரைந்த அனுமனிடம் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் சீதை செய்த மணல் லிங்கத்தை வைத்து வழிபட்டு ராமரின் தோஷம்  நீங்கியது என்றார். மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இத்தனை கஷ்டப்பட்டு கொண்டு வந்த லிங்கம் உபயோகமில்லயே என  அனுமன் முகம் வாடியது.

அனுமனிடம் நீ கொண்டுவந்த லிங்கத்தையும் இங்கு பிரதிஷ்டை செய்து வழிபடுவோம் என்றார். ராமர். சீதை செய்த மணல் லிங்கத்தை தன் ஊரான சித்திரக்கூடத்திற்கு எடுத்துச் சென்று வழிபட்டால் தன் பாவம் தீரும் என்று நினைத்த அனுமன் மணல் லிங்கத்தை தன் வாலல் கட்டி இழுக்க முயற்சித்தார். எவ்வளவு முயற்சித்தும் முடிய வில்லை. வால் அறுந்தது. நீ செய்த அபச்சாரத்தால் உன் வால் அறுந்தது. அது தீர நீ தல யாத்திரை செல் என்றார் ராமர்.

யாத்திரையின்போது பழவாறு என்ற கணபதி நதிக்கரையோரம் மரத்தின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டார். இங்கேயே ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடு மேலும் இத் தலம் உன் பெயரால் விளங்கும் என அசரீரி ஒலித்தது. அப்போது பார்வதி வயதான பெண் உருவெடுத்து அந்த நதியோரம் லிங்கம் வைத்து பூஜை செய்தார். அங்கு வந்த அனுமன் அவரை வணங்கி தன் சாபத்தை சொல்ல பார்வதி பூஜித்த அந்த லிங்கத்தை அனுமனுக்கு கொடுத்துவிட்டு நீ பூஜை செய் என்றார். அனுமனை சோதிக்க எண்ணிய பெருமான் அந்தனர் வேடம் கொண்டு அனுமனிடம் யாசகம் கேட்டார். தன்னிடம் கொடுப்பதற்கு ஏதுமில்லை என்ற அனுமனிடம் உன் இரு காதிலும் உள்ள குண்டலங்களை கொடு என்றார். அதிர்ந்த போன அனுமன் யார் கண்களுக்கும் தெரியாத அந்த குண்டலங்கள் அந்தணருக்கு தெரிகின்றது என்றால் வந்திருப்பது ஈசன் என்றுணர்ந்து வணங்கி தன் இரு குண்டலங்களையும் அறுத்துக் கொடுத்தார்.

மகிழ்வுற்ற ஈசன் சிவசக்தி சமேதராய் காட்சி கொடுத்து அனுமனின் சாபம் தீரவும் வால் பழையபடி வளரவும் இழந்தசக்தி திரும்ப கிடைக்கவும் அருள் புரிந்தார்.. சிவபெருமான் அனுமனின்  காதிலுள்ள குண்டலங்களைப் பெற்றதால் இறைவன் குண்டலகர்ணேஸ்வரர். சிவபக்த ஆஞ்சநேய பீடம். சனி, ராகு கிரக தோஷம், பில்லி, சூன்யம் பாதிப்புகள் நீங்கும் தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-11

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27081130
All
27081130
Your IP: 18.226.96.61
2024-04-26 02:33

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg