ஊர்:திருத்துறைப்பூண்டி,நவகிரகபுரம்,வில்வாரண்யம்,பிரம்மபுரி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீபிறவிமருந்தீஸ்வரர்(சு), ஸ்ரீபவஔஷதீசுவரர்,ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்,2. ஸ்ரீவேதாரண்யேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி. ஸ்ரீமங்களநாயகி
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீதீர்த்தவிடங்கர்-தியாகராஜர். ஸ்ரீவேதாரண்யேசுவரர், ஸ்ரீகல்யாணசுந்தரர். ஸ்ரீகஜசம்ஹாரர்-5முகங்கள், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, முருகன் வள்ளி தெய்வானை, கஜலட்சுமி, துர்க்கை, பைரவர், சூரியன், பஞ்சலிங்கங்கள்.
3நிலைராஜகோபுரம்-
2பிரகாரங்கள்
தீர்-16கட்ட-பிரம்ம,மாங்கல்ய புஷ்கரணி, அமிர்த புஷ்கரணி,
மரம்-வில்வம்.
தி.நே-0700-1200,1700-2000
#07.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது.
தொலைபேசி-04369-222392
மரகதலிங்கம். அகஸ்தியர், வாமதேவர், அத்ரி, காஸ்யபர், பரத்வாஜர், கௌதமர், விசுவாமித்திரர், ஜமதக்னி, வஷிஷ்டர் ஆகிய 9முனிக்கு நடனமாடிய சந்திரசூடாமணித் தாண்டவர். மங்கையர் தீர்த்தத்தில் நீராடி தீர்க்க சுமங்கலி வழிபாடு. பஞ்சமுகவாத்தியம்.
விருபாஷன் அசுரன் தன் மனைவி ஜல்லிகையுடன் வசித்து வந்தான். வழிபோக்கர்களை கொன்று நரமாமிசம் உண்பது அவன் வழக்கம். அவன்மனைவி இதை எதிர்த்து வந்தாள். தந்தையின் சிரார்த்திற்காக காசியிலிருந்து தீர்த்தம் எடுத்துவந்த சிறுவனை விருபாக்ஷன் விழுங்கிவிட்டான். அதனால் அவன் இறந்தான். கதறி அழுத ஜல்லிகை அவ்வழி வந்த கன்வ மகரிஷியிடம் கூற அவர் விருபாஷன் வயிற்றில் இருந்த சிறுவனை பிழைக்கவைத்து அவன் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய அனுப்பினார். ஜல்லிகையை இங்கு அம்மனை நீராடி வழிப்படச் சொன்னார். அம்பாள் அருள் பாலிக்க விருபாக்ஷன் உயிர்பிழைத்தான். மாங்கல்யத்தை காத்த புஷ்கரணி மாங்கல்ய புஷ்கரணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
