gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

நவகிரகங்கள்! (9)

வெள்ளிக்கிழமை, 08 June 2018 05:15

கேது!

Written by

ஓம்நமசிவய!

வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்துவரும்!
வெற்றி முகத்து விநாயகனைத் தொழ புத்தி மிகுந்துவரும்!
வெள்ளைக்கொம்பன் விநாயகனைத்தொழ துள்ளியோடும் தொடர்ந்த வினைகளே!
அப்பமும் பழம் அமுதும் செய்தருளிய தொப்பையப்பனை தொழ வினையறுமே!

$$$$$

கேது!

ஸ்வர்னபானு -பாற்கடலில் கிடைத்த எல்லாவற்றையும் தேவர்களே பெறுவது கண்ட அசுரர்கள் தகராறு செய்ய ஆரம்பிக்க பிரம்மா நீங்கள் அமிர்தம் பெற்றுக் கொள்வீர்களாக என்றார். அதன் படி அமுதம் முழுவதும் தங்களுக்கே வேண்டும் என்று அசுரர்கள் தகராறு செய்ய தேவேந்திரன் அமுதத்தை எப்படியும் தேவர்கள் வசம் சேர்க்க எண்ணம் கொண்டு திருமால் உதவியை நாட அவர் மோகினியாகி அனைவரையும் தன் அழகால் கட்டுப்படுத்தி அசுரர்களை நீராடி வரச்சொல்லிவிட்டு இடைப்பட்ட நேரத்தில் அமுதத்தை தேவர்களுக்கு வழங்கும்போது நிகழ்வை அறிந்த அசுரன் ஸ்வர்னபானு தேவன்போல் உருமாறி அமுதம்பெற்று அருந்திவிட்டதைக் கண்டுபிடித்த சூரியன், சந்திரர் திருமாலிடம் கூற தன் கையில் இருந்த கரண்டியால் அந்த அசுரனின் தலையை துண்டிக்க, அமிர்தம் அருந்தியதால் ஸ்வர்பானுவின் உயிர் போகாமல் இருக்க தலையை பைடினஸன் தம்பதியினரும் உடலை மினி என்ற அந்தனரும் இருவேறு இடத்தில் இருவராலும் வளர்க்கப்பட்டு பின் அவர்கள் விஷ்ணுவை வழிபட்டு வேண்டி பாம்பு உடல் பெற்று ராகு எனவும் பாம்புத் தலை பெற்று கேது எனவும் கிரக பதவிதனை திருமாலால் அடைந்தனர்.

ராகு கேது இரண்டும் ஒரே உருவாக இருந்த அசுரனின் இருகூறான உடல் பகுதிகள் என்பதால் இரண்டில் எந்த அமைப்பு சரியாக இல்லாவிட்டாலும் அதை சர்ப்ப தோஷம் என்றே சொல்லப்படும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஏழம் இடமான சமசப்த ஸ்தானம் என்ற அமைப்பிலேயே இருக்கும். ராகுவிற்கும் கேதுவிற்குமிடையே மற்ற கிரகங்கள் கடிகாரச் சுற்றிற்கு எதிர் சுற்றிலிருந்தால் அதை காலசர்ப்ப தோஷம் என்பர். ராகுவும் கேதுவும் சாயா-நிழல் கிரகங்கள். நேரடியான தாக்கமின்றி மற்ற கிரகங்களின் தாக்கத்தை இந்த கிரகங்களின் அமைப்பு அதிகரிக்கச் செய்யும். கேது மனைவி -சித்ரலேகா.கேதுவின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-மா மரம்

கௌரவக் குறைபாடு, தொழிலில் நஷ்டங்கள், ஞாபக சக்தி குறைபாடு, வீண்பழி, மனவருத்தம், பிற மொழியினரால் பிரச்சனை, கல்வி, கலையில் நாட்டம் குறைதல், ஆன்மீகத்தில் வெறுப்பு, செல்வாக்கு குறைதல் ஆகியவற்றிற்கு கேது தோஷம் காரணம். விநாயகர் வழிபாடு -பிள்ளயார்பட்டி, கீழ்பெரும்பள்ளம், காளஹஸ்தி பரிகாரத்தலம்.

கிரகத்தின் பெயர்: கேது
உரிய மலர்: செவ்வல்லி
உரிய மரம்: மா மரம்.
தானியம்: கொள்ளு
வாகனம்: சிங்கம்
ரத்தினம்: வைடூரியம்
கிழமை: ஞாயிற்றுக் கிழமை
திசை: வடமேற்கு
உலோகம்: கருங்கல்
நிறம்: சிகப்பு
சமித்து: தர்ப்பை
வழிபடும் பலன்கள்: தரித்திரம், வியாதிகள், பீடைகள் நிவர்த்தி.

நவகிரக கேது பகவான் காயத்திரீ-(ஞானமும் வீடு பேறும் அடைய)

”ஓம் அச்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேதுவே பிரசோதயாத்”
(பரியினைக் கொடியில் கொண்ட கேதுவே கீர்த்தித் திருவே. பாபம் தீர்ப்பாய். வாதம் வம்பு வழக்குகளின்றி ரக்ஷிப்பாய் கேதுவே சரணம்.)

#####

வெள்ளிக்கிழமை, 08 June 2018 05:09

ராகு!

Written by

ஓம்நமசிவய!

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டது குறையென்றெண்ணிப்
புழைநெடுங்கரத்தாற் பற்றிப் பொற்புற இனைந்து நோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

$$$$$

ராகு!

ஸ்வர்னபானு -பாற்கடலில் கிடைத்த எல்லாவற்றையும் தேவர்களே பெறுவது கண்ட அசுரர்கள் தகராறு செய்ய ஆரம்பிக்க பிரம்மா நீங்கள் அமிர்தம் பெற்றுக் கொள்வீர்களாக என்றார். அதன் படி அமுதம் முழுவதும் தங்களுக்கே வேண்டும் என்று அசுரர்கள் தகராறு செய்ய தேவேந்திரன் அமுதத்தை எப்படியும் தேவர்கள் வசம் சேர்க்க எண்ணம் கொண்டு திருமால் உதவியை நாட அவர் மோகினியாகி அனைவரையும் தன் அழகால் கட்டுப்படுத்தி அசுரர்களை நீராடி வரச்சொல்லிவிட்டு இடைப்பட்ட நேரத்தில் அமுதத்தை தேவர்களுக்கு வழங்கும்போது நிகழ்வை அறிந்த அசுரன் ஸ்வர்னபானு தேவன்போல் உருமாறி அமுதம்பெற்று அருந்திவிட்டதைக் கண்டுபிடித்த சூரியன், சந்திரர் திருமாலிடம் கூற தன் கையில் இருந்த கரண்டியால் அந்த அசுரனின் தலையை துண்டிக்க, அமிர்தம் அருந்தியதால் ஸ்வர்பானுவின் உயிர் போகாமல் இருக்க தலையை பைடினஸன் தம்பதியினரும் உடலை மினி என்ற அந்தனரும் இருவேறு இடத்தில் இருவராலும் வளர்க்கப்பட்டு பின் அவர்கள் விஷ்ணுவை வழிபட்டு வேண்டி பாம்பு உடல் பெற்று ராகு எனவும் பாம்புத் தலை பெற்று கேது எனவும் கிரக பதவிதனை திருமாலால் அடைந்தனர்.

ராகு கேது இரண்டும் ஒரே உருவாக இருந்த அசுரனின் இருகூறான உடல் பகுதிகள் என்பதால் இரண்டில் எந்த அமைப்பு சரியாக இல்லாவிட்டாலும் அதை சர்ப்ப தோஷம் என்றே சொல்லப்படும். இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஏழம் இடமான சம சப்த ஸ்தானம் என்ற அமைப்பிலேயே இருக்கும். ராகுவிற்கும் கேதுவிற்குமிடையே மற்ற கிரகங்கள் கடிகாரச் சுற்றிற்கு எதிர் சுற்றிலிருந்தால் அதை காலசர்ப்ப தோஷம் என்பர். ராகுவும் கேதுவும் சாயா-நிழல் கிரகங்கள். நேரடியான தாக்கமின்றி மற்ற கிரகங்களின் தாக்கத்தை இந்த கிரகங்களின் அமைப்பு அதிகரிக்கச் செய்யும். ராகு மனைவி -சிம்ஹிதேவி, ராகுவின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-மருத மரம்

சட்டப்புறம்பான செயல்கள், அரசினால் சங்கடம், கூடா நட்பினால் சங்கடம், உணவும் மருந்தும் நஞ்சாதல், விஷ ஜந்து தொல்லை, அலர்ஜி, தம்பதியருள் மனஸ்தாபங்கள், புது நோய்கள், மனிதில் வெறுப்பு ஆகியவற்றிற்கு ராகு தோஷம் காரணம். துர்க்கையை வழிபடல் சிறப்பு. திருநாகேஸ்வரம், காளஹஸ்தி வழிபாடு சிறப்பு.

கிரகத்தின் பெயர்: ராகு
உரிய மலர்: மந்தாரை
உரிய மரம்: மருத மரம்
தானியம்: உளுந்து
வாகனம்: ஆடு
ரத்தினம்: கோமேதகம்
கிழமை: ஞாயிற்றுக் கிழமை
திசை: தென் மேற்கு
உலோகம்: கருங்கல்
நிறம்: நீலம்
சமித்து: அருகு
வழிபடும் பலன்கள்: எல்லா காரியத்திலும் வெற்றி

நவகிரக இராகு பகவான் காயத்திரீ-(காலசர்ப்ப தோஷம் நீங்க)

”ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராஹூ பிரசோதயாத்”
(அரவக்கொடியுடைய ராகு அய்யனே. கஷ்டங்கள் நீக்கித் தொடர் அருள்புரிவாய், அனைத்திலும் வெற்றி பெற அருள் தருவாய் ராகுவே சரணம்.)

$$$$$

வெள்ளிக்கிழமை, 08 June 2018 04:53

சனீஸ்வரன்!

Written by

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

$$$$$


சனீஸ்வரன்!

சூரியன் தேவ சிற்பி விஸ்வகர்மாவின் மகள் சம்க்ஞா- ஸுர்வர்சலாவை திருமணம் செய்தார்- வைவஸ்தாமனு (ஞான வடிவம்), யமன் (தர்ம வடிவம்) என 2 புதல்வர்கள், யமி/யமுனா (நீர் வடிவம்)- என்ற ஒரு புதல்வி. கணவனின் சூடு தாங்க முடியாமல் சம்க்ஞா தன் நிழலிருந்து பிரதி சாயா-உஷாவை உருவாக்கி கணவனுக்கு மணமுடிக்க சனி, சாவர்ணுமனு, தபதி, விஷ்டி என்று 4 குழந்தைகள். ஒரு தகறாரில் யமன் சனியை உதைக்க சனியின் கால் முறிந்ததால் சனியால் மெல்லத்தான் நடக்க முடியுமாதலால் மந்தன் என்ற பெயர் ஏற்பட்டது. சிவனை வணங்கி நவக்கிர பட்டம் பெற்றார். உயிர்களின் ஆணவத்திற்கேற்பவும் தவறுக்கேற்பவும் பலன்கள் கொடுக்கும் அதிகாரம் பெற்றார். சனியின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-வன்னி மரம்

சனீஸ்வரன்-தன் கடமையைச் சரிவர செய்துவந்த சனி கைலாயம் சென்று அம்மையப்பரை வணங்கி, இறைவா உங்களை ஏழரை நாழிகை நான் பற்ற வேண்டும் என்றார். பூ உலகில் பிறவி எடுக்காத எனக்கு எப்படி வந்தது கர்மா என்றார். ஐயனே, அன்னையை மணக்கவும் பக்தர்களுக்கு திருவருள் புரியவும் நீங்கள் பூமிக்கு சென்று வந்ததால், நீங்கள் வகுத்துக் கொடுத்த நியதிப்படி உங்களையும் நான் பீடிக்கும் காலம் வந்தது என்றார். சனியுடன் விளையாட நினைத்த சிவன் அந்தர்மயமாகி உமையின் கழுத்தில் உள்ள மணியில் ஒளிந்தார். சனி அங்கேயே அம்மையின் எதிரில் அமர்ந்து விட்டார். ஏழரை நாழிகை கழிந்து சிவன் வெளிப்பட்டு, உன்னால் என்னை பீடிக்க முடியவில்லையெ என்றார். ஐயனே என்னை மன்னிக்க வேண்டும். என் பார்வையிலிருந்து தப்பிக்க ஏழரை நாழிகை தாங்கள் ஒரு சிறு மணியில் ஒளிந்திருந்தீர்களே அதுவே நான் பீடித்த காலம் என்றான் சனி. கடமையினைச் செய்வதில் சிறந்தவனே எனப் பாராட்டி ஈசுவரப் பட்டமளித்து இன்று முதல் நீ சனீஸ்வரன் என அழைக்கப்படுவாய் என்றார் இறைவன்.

தசரதரின் குரு வியாசர் இனி வரும் 12 வருடங்கள் சனிபகவானால் நாட்டிற்கும் மக்களுக்கும் கெடுதல் எனக் கேள்விப்பட்ட தசரதர் சனியை எதிர்த்து சண்டையிட வந்தார் . அங்கு வந்த நாரதர் சண்டையை விட சரணாகதி சிறப்பு என அறிவுருத்த சனீஸ்வரரை வலம்வந்து வணங்கி இனிவரும் 12 வருடங்களுக்கு உங்களால் என் குடிமக்கள் துன்பக்கூடாது அதற்கு உரிய வழிமுறைகளைச் சொல்லக் கேட்டார். அவர் சொல்லியபடி கலைவாணியை நாவில் நிறுத்தி சனீஸ்வரக் கவசத்தை நம்பிக்கையுடன்பாடி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி எள் சாதத்தை நிவேதனம் செய்தார். அப்படியே நாட்டு மக்களுக்கும் பறை அறிவித்து வழிபாடு செய்ய வைத்து சனியின் ஆதிக்க துன்பங்களை குறைய வைத்தார்.

சனீஸ்வரனால் பீடிக்கப்பட்டு பல துயரங்களுக்கு ஆளான நளன் சனீஸ்வரரை வழிபட்டு தவமிருந்து தான் இழந்ததை மீண்டும் பெற்றார். தான் பெற்ற துன்பங்களை தன் நாட்டு மக்கள் பெறக்கூடாது என்பதற்காக நளன் மீண்டும் சனிஸ்வரர் நோக்கி தவமிருக்க காட்சி கொடுத்தவரிடம் தனகென்று இல்லாமல் நாட்டு மக்கள் பொது நலம்கொண்டு கேட்டதால், நல்லெண்ணெய் தீபமேற்றி சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து கருங்குவளை மலர்களால் அர்ச்சித்து எள்ளுருண்டை அல்லது எள்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் கெடு பலன்கள் குறையும் என்றார்.

அனுமனைப் பீடிக்க சென்ற சனி அனுமனின் வாலில் அமர முயற்சிக்க ஒய்வு இல்லாமல் இராமர் லட்சுமணருக்கு உபசாரங்கள் செய்வதிலும் பாலம் கட்ட வானர சேனைகளுக்கு உதவி புரிவதிலும் இருந்ததால் அவரது வால் அங்கும் இங்கும் மோதவே சனியால் அவரைப் பற்ற முடியாமல் அனுமன் முன்வந்து உன்னைப் பற்ற வேண்டும் என்றார். ஐயா உங்கள் கடமையைச் செய்யுங்கள் அதே சமயம் என் கடமையையும் செய்ய விடுங்கள் என்றார். எனது கரங்களுக்கு அதிக வேலை இருக்கின்றது. கால்களில் இடம் தருவது அபசாரம். எனவே சிரசில் ஏறிக்கொள்ளுங்கள் என்றதால் அங்கு அமர்ந்தார் சனி. ஆனால் அனுமன் தன் தலைமீது பாறாங்கற்களை ஏற்றி சென்றதால் அங்கே அமர்ந்திருந்த சனியால் அந்த பாரத்தை தாங்க முடியவில்லை. ஏழரை ஆண்டுகள் பீடிக்கலாம் என வந்தவர் அந்த நிலைமாறி ஏழரை விநாடிகள் பீடிக்க முடிவெடுத்தார். இறுதியில் அதுவும் முடியாமல் ஏழரை நொடிகள் பீடித்து கீழிறங்கினார். ஏன் அதற்குள் இறங்கி விட்டீர்கள் என்றுக் கேட்ட அனுமனிடம் உன்னைப்போல் சுயநலமின்றி பக்தியுடன் இறை பணி செய்பவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நீ தொடர்ந்து உன் பணியைச் செய் என்றார். மேலும் ராமரை தியானித்து சரணாகதி அடைந்தவருக்கு என்னால் எந்தக் கெடுதலும் வராது என்றார்.

சனியின் பார்வை வக்ரம் ஏன்! சூரியன்-ஸம்க்ஞாதேவி மகன் யமன். ஸம்க்ஞாதேவி சூரியனின் வெப்பம் தாங்காமல் தன் நிழல் சாயாதேவியை சிருஷ்டித்து தன் தந்தை வீடு சென்றாள். சாயாதேவியின் முதல் மகன் ஸாவர்ணிமனு, 2வது மகன் சனி. மூன்றாவது மகள் பத்ரா. அண்ணன் யமன் தன் சிறுதாயின்மேல் உள்ள கோபத்தால் சனியை அடிக்க கால் ஒடிந்தது. தட்சன் யாகத்தில் கலந்துகொண்டதால் தன் ஒரு கண்ணை இழந்தார். சித்திரதர் என்பவரின் மகள் ஜ்யேஷ்டாவை சனிக்கு மணம் செய்வித்தார் சூரியன். ஒருநாள் கணவனின் பார்வைக்காக ஜ்யேஷ்டா ஏங்கி நிற்க அது கவனியாமல் தியானத்தில் சனி இருக்க அவள் ஒரு பெண்ணின் மனத்தை கணவர் என்ற முறையில் புரிந்து கொள்ளாத உங்களுக்கு இப்போது கண்டு களிக்கும் ஆனந்தம் இல்லாமல் போகட்டும் எனச் சபித்தாள். தியானம் கலைந்து எழுந்த சனி தவறை உணர்ந்தார். வருத்தத்தை தெரிவித்தார். ஆறுதல் அடைந்த அவள் தன் சாபத்தை நீக்க வழி தெரியாமல் தவித்தாள். இந்தச் சாபமே சனியின் பார்வை எப்போதும் வக்கிரமாக இருந்து தீமை தருவதாக அமைந்தது. சனி தோஷமுள்ளவர்கள் எள் முடிச்சு தீபம் பிரார்த்தனை. –திருநள்ளாறு

சனியின் பார்வைகளின் விளைவு!- கயிலையில் அனைவரும் அமர்ந்து சிவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். சனிபகவான் மட்டும் சிவனுக்கு முதுகை காட்டியபடி அமர்ந்திருப்பதை அங்கு வந்த நாரதர் கண்டார். நாரதர் ஆயிற்றே! அதை யாரிடமாவது சொல்லாமல் இருக்க முடியவில்லை. அங்கு வந்த அம்மையிடம் இதைக் கூற அவர் சிவனிடம் இது பற்றிக் கூறினார். அவருக்கு காரணம் தெரியுமாதலால் அமைதியாக இருக்க கோபம் கொண்ட உமை சிவனிடம் அவரும் மற்றவரைப்போல் இந்தப் பக்கம் பார்த்து அமருட்டும் என்றார். சிவன் சம்மதிக்க சனி திரும்பி அமர்ந்தார். உமையும் சனி திரும்பியவுடன் பார்க்க சனியும் அம்மையைப் பார்த்தான். உமை திருப்தியுடன் தன் ஆசனத்தில் அமர்ந்தாள். அருகே சிவனும் பிரம்மனும் ஐந்து தலைகளுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த உமையால் யார் சிவன் என்று அறிய முடியவில்லை. சிவனை நினைத்து தியானத்தில் அமர சிவன் சனியை திரும்பி அமரச் சொன்னார். பார்வதி கண் விழித்து பார்க்க ஒரே இருக்கையில் சிவன் மட்டும் அமர்ந்திருக்கக் கண்டு சிவனை நோக்கிப் புன்னகைப் புரிந்தாள். சிவன் சொன்னார் உமையே உனக்கே இந்த நிலை என்றால் சனியின் பார்வைபட்டால் மற்றவர்களின் நிலை என்னாகும்! ஆகவேதான் சனியை திரும்பி அமரச்சொன்னேன் என்றார். நாரதரைக் கண்ட உமை அவரிடம் சனியின் பார்வை இவ்வளவு பொல்லாதுதாய் இருக்கும் என நான் எண்ணவே இல்லை என்றார். என்னால்தானே இந்தக் குழப்பம் என்னை மன்னியுங்கள் என்றார் நாரதர்.

கைடபனின் மகன்கள் அஸ்வத்தன் அரசமரத்தில மறைந்தும் பிப்பிலன் அந்தணனாக வடிவம் கொண்டும் யாகம் நிறைவு பெரும்போது அந்தணர்களை வதை செய்து யாகத்தை அழிக்க, அந்தனர்கள் அங்கு தவம் செய்த சனி பகவானிடம் முறையிட சனி பகவான் அந்தணர் வேடம் கொண்டு அவர்களிடம் செல்ல அவர்கள் அவரை விழுங்க தன் சக்தியால் அவர்கள் வயிற்றை கிழித்து வெளி வந்தார். அவரை பிரமஹத்தி தோஷம் பிடித்து கொள்ள லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு-சனீஸ்வரர். சனியின் மற்றொரு பெயர் மந்தன் அதனால் இந்த ஈசன் பெயர் மந்தேஸ்வரர், தலம் மந்தப்பள்ளி. பிரம்மா, கார்க்கோடன் பிரதிஷ்டை லிங்கங்கள்- பிரமேஸ்வரா, நாகேஸ்வரா(படிக லிங்கம்). சனிக்கு எதிரில் மந்தேஸ்வரர். கருவறைக்கு வெளியில் வடிகால் போன்ற அமைப்பில் எண்ணெய் விட்டால் அது மந்தேஸ்வரர் சிரசில் அபிஷேகமாக விழும் சிறப்பு. சனிவாரத்தில் அரசமரத்தை வலம் வந்து ஈஸ்வரனை எள் எண்ணெய்யால் (திலதைல) அபிஷேகம் செய்தால் சனிதோஷம் அண்டாது அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறும். சப்த ரிஷிகளும் அவர்களது மனைவியரும் பிரதிஷ்டை-பார்வதி. சேத்ரபாலகர் வேணுகோபாலமூர்த்தம் அழகானவர். அவர் முன்னால் உற்சவவிக்ரகம். இது கௌதம மகரிஷியால் பிரதிஷ்டை. கார்த்திகை-லட்சபத்ரி பூஜை சிறப்பு

சனி பகவானின் ஆட்சிக்காலத்தில் அவர் கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கி விடுவதாலும் ஈஸ்வரனையே பீடித்தார் என்பதாலும் இவரைக் கண்டு அச்சப்படுதல் உண்டு. சனியைப் போல் கொடுப்பாருமில்லை கெடுப்பாருமில்லை என்பது பழமொழி. அதாவது ஒருவரது முன்வினையால் ஏற்பட வேண்டிய சங்கடங்களை குறுகிய காலத்தில் அனுபவிக்க வைத்து பின் தோஷம் நீக்கி சகல நன்மைகளும் கிடைக்க அருள்பவர் சனிபகவான். ஒரே ராசியில் நீண்ட காலம் இருப்பவர். சனி மனைவி -நீளாதேவி,

கிரகத்தின் பெயர்: சனி
உரிய மலர்: கருங்குவளை
உரிய மரம்: வன்னி மரம்
தானியம்: எள்
வாகனம்: காகம்
ரத்தினம்: நீலம்
கிழமை: சனிக்கிழமை
திசை: மேற்கு
உலோகம்: இரும்பு
நிறம்: கருப்பு
சமித்து: வன்னி
வழிபடும் பலன்கள்: வியாதி, கடன், பேய் மற்றும் பிசாசு பயம் நீக்கம்

நவகிரக சனி பகவான் காயத்திரீ-(நோய்கள் நீங்க, தொழிலில் முன்னேற்றம் அடைய)

”ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த பிரசோதயாத்”
(காகத்தை வாகனமாக கொண்ட சனி பகவானே கட்க ஆயுதத்தால் மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் குறையின்றி வாழ இன்னருள் தா சனீபகவானே.)

சோம்பல், பணிகளில் தடை, முன்னேற்றத்தில் முடக்கம், இனம்புரியாத பயம், உறுப்புகளில் காயம், விபத்துகள், உறவை பிரிதல், தொழில் நஷ்டம், சங்கடங்கள், வழக்குகளில் சிக்கல் ஆகியவற்றிற்கு சனிதோஷம் காரணமாம். திருக்கொள்ளிக்காடு, திருநள்ளாறு வழிபாடு சிறப்பு.

$$$$$

வெள்ளிக்கிழமை, 08 June 2018 04:48

வெள்ளி!

Written by

ஓம்நமசிவய!

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

$$$$$


வெள்ளி!

சுக்ராச்சாரியார்- சுக்கிரபகவான் வெண்ணிறமுடையவர்- அசுரர் குரு- மகாபலி மூன்று அடியை வாமனருக்குத் தானம் செய்யும்போது வந்திருப்பது வாமனர் உருவில் மகாவிஷ்ணு என்ற உண்மை அறிந்து வண்டு ரூபத்தில் தாரை வார்க்கும் நீரை தடுக்கும் போது வாமனர் ஒரு தர்பையினால் குத்த ஒருகண்ணை இழந்தார். திருமயிலையில் வழிபட்டு மீண்டும் கண் பெற்றார். தாமரை ஆசனம். வெள்ளைக் குதிரை பூட்டிய தேர். வெள்ளிக் கிழமை வழிபடின் நல்ல மனைவி, மக்கள், வீடு, சங்கீத் திறமை, அழகு, இளமை, செல்வம் கிட்டும். சனியும், புதனும் நண்பர்கள். குருவும் செவ்வாயும் சமமானவர்கள். மற்றவர் பகைவர். அதிதேவதை-இந்திராணி. பிரத்யதிதேவதை- இந்திரன், வாகனம் -கருடன். சுக்கிரன் மனைவி -சுகீர்த்தி, சுக்கிரனின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-அத்தி மரம்

சுக்கிரன், வெள்ளி, பார்க்கவன், சுக்ராச்சாரி, அசுர குரு என்று சொல்லப்படும் சுக்கிர பகவானின் அமைப்பை பொறுத்தே ஒருவரது குடும்ப வாழ்க்கை அமையும். என்பதால் இல்லற அமைப்புக்கான கிரகம் சுக்கிரன். தம்பதியரிடையே ஒற்றுமை யின்மை, கழிவு உறுப்புகளில் உபாதை, நல்ல சூழல் நழுவுதல், பெரிய மனிதர்களால் பிரச்சனை, வாகனம் பழுது சங்கடங்கள் ஆகியவற்றிற்கு சுக்கிர தோஷம் காரணமாகும். வழிபடவேண்டிய தலம் மாங்காடு வெள்ளீஸ்வரர், கஞ்சனூர்-அக்னீஸ்வரர்.

கிரகத்தின் பெயர்: சுக்கிரன்
உரிய மலர்: வெண்தாமரை
உரிய மரம்: அத்தி
தானியம்: மொச்சை
வாகனம்: கருடன்
ரத்தினம்: வைரம்
கிழமை: வெள்ளிக் கிழமை
திசை: கிழக்கு
உலோகம்: வெள்ளி
நிறம்: வெள்ளை
சமித்து: அத்தி
வழிபடும் பலன்கள்: விவாகப் பிராப்பதம், சௌபாக்யம், மற்றும் மலட்டுத் தன்மை நீக்கம்.

நவகிரக சுக்கிர பகவான் காயத்திரீ-(கல்யாணத் தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமையாக வாழ)

”ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர பிரசோதயாத்”
(அசுவக் கொடியுடைய அசுர குருவே, சுபமிகு தருவாய், வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே வக்கிரமின்றி வரமிகு அள்ளிக் கொடுப்பாய் அருளே.)

$$$$$

வெள்ளிக்கிழமை, 08 June 2018 04:42

வியாழன்!

Written by

ஓம்நமசிவய!

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!

$$$$$

வியாழன்!

வியாழன், ப்ரஹஸ்பதி, பொன்னன் எனப்படும் குரு மற்ற கிரகங்களின் தோஷங்களை தன் பார்வையின் வலிமையால் குறைக்கும் வல்லமை பெற்றவர். அதனால்தான் குரு பார்க்கின் கோடி நன்மை என்பர். மேலும் கடுமையான பாதிப்புகளை எற்படுத்துவதில்லை. ஒரு ராசியில் ஒருவருடம் இருக்கும் குரு 12 இராசிகளிலும் சஞ்சரித்து ஒவ்வொருவர் வாழ்விலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவார். குரு மனைவி -தாராதேவி, வியாழனின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-சந்தன மரம்

குருபார்வை கோடி நன்மை! -.குரு பிரகஸ்பதியின் மகள் எல்லோரையும் போல் க்ஷத்ரிய குலத்தில் ஒருவன்மேல் காதல் வயப்பட்டாள். குரு பகவான் அவனுக்கு ஆயுள் பலமில்லை என எதிர்ப்பு தெரிவித்தார். நல்லதே சொல்லினும் யார் பெற்றவர் பேச்சை கேட்கின்றார்கள்! மகள் பிடிவாதமாக இருந்தாள். குரு, நாரதரிடம் இதைப் பற்றி சிலாகித்தார். நாரதர் அந்த ஜாதகத்தை வாங்கிப் பார்த்துவிட்டு பிரகஸ்பதியே உங்கள் மகள் விருப்பப்படி திருமணம் செய்து வையுங்கள். ஆனால் முதல் நாள் இரவின்போது நீங்கள் அருகில் இருந்து ஒர் காரியம் செய்ய வேண்டும் என்றார். அவர் அது எப்படி சாத்தியம். அதுவும் பெற்ற தந்தை முதல்நாள் இரவின்போது என மனம் கலங்கினார். அப்போது நாரதர், அந்த நாள் இரவில் கர்ப்பகிரகத்திற்குள் இருக்கும் அம்பாளை உங்கள் மகளும் மருமகனும் விடிய விடிய வேறு சிந்தனை வயப்படாமல் வணங்க வேண்டும். இடையே தூங்கக்கூடாது. அவர்கள் தூங்காமல் பூஜை செய்ய உறுதுணையாக நீங்கள் அங்கேயே இருந்து உங்கள் மகளைக் கண்காணிக்க வேண்டும் அதுபோதும் என்றார். அவ்வாறே வியாழ பகவான் செய்து தன் மகளின் மாங்கல்யத்தை தக்க வைத்தார். இதற்காக நாரதருக்கு குரு நன்றி சொன்னார். அப்போது நாரதர் குருநாதரே, கர்ப்பகிரகம், அம்பாள் பூஜை, விடியவிடிய பூஜை, தூங்கக் கூடாது என்பதெல்லாம் வெறும் பொய். ஜாதகக் கட்டப்படி உங்கள் பெண்ணுக்கு குருவின் பார்வை இல்லாதுதான் குறை! அது கிடைக்கத்தான் நான் இப்படி ஒரு ஏற்பாடு செய்தேன் என்றார். குருவின் பார்வை விடிய விடிய இருந்ததால் அவர்களின் கோடி சாபங்களும் தீர்ந்தன. உங்கள் பலம் உங்களுக்கே தெரியவில்லை என்றார்!

குரு பார்க்க கோடி நன்மை! இது நமக்குமட்டுமல்ல! தேவர்களுக்கும் பொருந்தும். சிவபெருமான் பிரஹஸ்பதிக்கு தேவகுரு பதவியையும் இந்திர தர்பாரில் எப்போதும் வீற்றிருக்கும் பேற்றையும் அளித்தார். மேலும் நவகிரக பதவி, மக்களின் ஜீவன் ஆகி மற்ற கிரகங்களின் தீய பலனகளைக் குறைக்கும் ஆற்றல் கொண்ட சுப கிரகமாகவும் விளங்க அருள் புரிந்தார்.

ஒருமுறை இந்திரன் துர்வாசர் கோபத்திற்கு ஆளாகி பதவி செல்வம் அழிய சாபம் பெற்றான். அதனால் இந்திரன் நிலை மிகவும் தாழ்ந்தது. யாகங்கள், ஹோமங்கள் செய்தும் எந்த பலனுமில்லை. நாரத முனியைச் சந்தித்தபோது, இந்திரா உன் அவையில் குருபகவான் இருக்க அவர் பார்வை உன்மீது எப்போது பட்டுக் கொண்டே இருந்ததால் உன் செல்வத்திற்கும் பதவிக்கும் ஆபத்தில்லாமல் இருந்தது. இப்போது அவர் தவம் செய்ய சென்றதால் அவர் பார்வை இல்லாததும் முனிவரின் சாபமும் ஒன்று சேர்ந்ததால் உன் நிலை இப்படியாயிற்று. தேவகுருவை சந்திக்கச் சொல்ல அவரிடம் தன் நிலைப் பற்றிச் சொல்ல அவர் இந்திர பதவியில் இருந்தால் மட்டும் போதாது தான தர்மங்களும் செய்ய வேண்டும். கர்வமும் தடுமாற்றமும் பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு கூடாது என உபதேசித்து இழந்தவைகளைத் திரும்ப பெற வழிவகைகளைச் சொன்னார். குரு பார்வை பட்டு இழந்ததை மீண்டும் இந்திரன் பெற்றான்.

வழக்குகளில் இழுபறி, திருமணத் தடை, புத்திரபாகியம், அஜீரணம், வயிறு உபாதைகள், சலிப்பு ஏற்படுதல், திறமை மங்குதல் ஆகியவற்றிற்கு குருதோஷம் காரணமாகும். குருவாக நினைத்து தட்சிணா மூர்த்தியை சிலர் வணங்குவது தவறு. சிவன் சொல்லாமல் சொல்லியவர் குருவிற்கெல்லாம் குரு. சிவகுரு அவர். அவரை வணங்குவது தவறில்லை. ஆனால் கிரக தோஷ பரிகாரங்களுக்கு பிரகஸ்பதி-வியாழபகவான் குருவையே வணங்க வேண்டும். தென் குடித்திட்டையில் அம்மையப்பனை வணங்கி ராஜ குருவை வணங்குதல் சிறப்பு.

கிரகத்தின் பெயர்: குரு
உரிய மலர்: வெண்முல்லை
உரிய மரம்: சந்தன மரம்
தானியம்: கொண்ட கடலை
வாகனம்: அன்னம்
ரத்தினம்: புஷ்பராகம்
கிழமை: வியாழக் கிழமை
திசை: வடக்கு
உலோகம்: பொன்
நிறம்: மஞ்சள்
சமித்து: அரசு
வழிபடும் பலன்கள்: சகல சம்பத்துகள் மற்றும் வித்தைகள் தேர்ச்சி

நவகிரக ஸ்ரீ குரு/வியாழன் பகவான் காயத்திரீ-(கோடி நன்மைகள் பெற்றிட)

’ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத”
(இடபக்கொடி கொண்டவனே, தடங்கல் தடைகள் தகர்ப்பவனே, ப்ருஹஸ்பதி வியாழப் பரமகுரு நேசா க்ரஹதோஷ மின்றி கடாட்சித் தருள்வாய்.)

$$$$$

வெள்ளிக்கிழமை, 08 June 2018 04:37

புதன்!

Written by

ஓம்நமசிவய!

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக் கணபதியே போற்றியென போற்றுகின்றேன்!

$$$$$


புதன்!

சந்திரன் செய்த யாகத்திற்கு பிரகஸ்பதி தன் மனைவி தாராவை அனுப்பிவைத்தார். யாகத்தின் போது சந்திரனின் தேஜஸைக் கண்ட தாரா அவனுடன் இருந்து விட்டாள். சந்திரனும் அவள் விருப்பிற்கு உடந்தையானான்.. பிரம்மா சந்திரன், தாராவுடன் பேசி தாராவை பிரகஸ்பதியிடம் சேர்க்கும்போது தாரா கருவுற்றிருக்க பிரகஸ்பதி அந்த கருவை விட்டுவரச் சொல்ல தாரா அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டுச் சென்றாள். அந்தக் கரு வளர்ந்து சந்திரனைப் போல அழகுடன் விளங்க அதற்கு புதன் என்று பெயரிடப்பட்டு தவம் செய்து கிரகங்களுள் ஒன்றாக பதவி பெற்றான்.

குருவின் அருளால் கோடி கிடைத்தாலும் அதனை அனுபவிக்க புதனின் அருள் தேவை. கல்வி, கலை என அனைதையும் கற்ற அறிவாளி அதை முறையாகப் பயன்படுத்த புத்திசாலித்தனம் தருபவர் புதன். சந்திரனின் மகன் ஆவார். புதன் மனைவி -ஞானசக்தி, புதனின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-ஆல மரம்

மனநிம்மதியின்மை, தீர்க்க முடிவு எடுப்பதில் குழப்பம், சேமிப்பதில் ஆர்வமில்லாமை, பணத்துடன் செலவும் வருதல், மற்றவர்களிடம் பேசுவதில் தயக்கம், தன்னம்பிக்கை இல்லாதிருத்தல், போதுவான பயம், தயக்கம் ஆகியன இருத்தலுக்கு புதனின் அமைப்பே காரணமாகும். புதனின் அமைப்பினால் ஏற்படும் தன்மைகளை குறைக்க பெருமாள் வழிபாடு சிறந்தது. திருப்பதி மற்றும். புதன் வணங்கிய திருவெண்காடு தலம் சிறப்பு.

கிரகத்தின் பெயர்: புதன்
உரிய மலர்: வெண்காந்தான்
உரிய மரம்: ஆலமரம்
தானியம்: பச்சைப் பயறு
வாகனம்: குதிரை
ரத்தினம்: மரகதம்
கிழமை: புதன் கிழமை
திசை: வடகிழக்கு
உலோகம்: பித்தளை
நிறம்: பச்சை
சமித்து: நாயுருவி
வழிபடும் பலன்கள்: சகல சாஸ்திர ஞானம்

நவகிரக புதன் பகவான் காயத்திரீ-(ஞாபக சக்தி அதிகரித்து படிப்பில் உயர்வு அடைய)

”ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்”
(இதமுற வாழ இன்னல்கள் நீக்கி சுகம் தரும் புதபகவானே, யானையை கொடியில் கொண்டவனே பதம் தந்தருளவாய் உதவி அருளும் உத்தமனே.)

$$$$$

வெள்ளிக்கிழமை, 08 June 2018 04:29

செவ்வாய்!

Written by

ஓம்நமசிவய!

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றேன்
உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

$$$$$

செவ்வாய்!

மகரிஷி வசிஷ்டர் பரம்பரையில் வந்த பரத்வாஜர் நர்மதை நதியோரம் தவம் செய்து வந்தார். அங்கு வந்த தேவமங்கை நீராடிக் கொண்டிருக்க அம்மங்கையை மோகித்து விவாகம் செய்து ஒராண்டு அவந்தி நகரத்தில் வாழ்ந்திருந்தார். ஒரு குழந்தை பிறந்ததும் அந்த தேவலோக மங்கை தேவலோகம் சென்றுவிட்டாள். பரத்வாஜரும் அக்குழந்தையை விட்டு மீண்டும் தவமேற்கொண்டார். தனியே விடப்பட்ட செக்கர்வானம் போன்ற நிறத்துடன் இருந்த குழந்தையை பூதேவி அங்காரகன் எனப் பெயரிட்டு வளர்த்துவர எழு வயது அடைந்ததும் தன் தந்தை பற்றி விபரங்களைக் கேட்க பூமாதேவி அக்குழந்தையை அவன் தந்தை பரத்வாஜரிடம் சேர்க்க அவரிடம் கல்வி பயின்று சகலகலா வல்லவனாக விளங்கிய அவன் சர்வ வல்லமை பெற வெண்டும் என விரும்பியதால் பரத்வாஜர் அவனை கணபதியை நோக்கித் தவமிருக்கச் சொன்னார். அவன் தவத்தைக் கண்டு காட்சி கொடுத்த விநாயகரிடம். சர்வ மங்களமான உருவத்துடன் தங்களை தரிசித்த என்னை மங்களன் என்றும், நான் அமிர்தம் அருந்தி அமரனாக வேண்டும், சதுர்த்தியில் தங்களின் தரிசனம் கிட்டியதால் இந்த நாளை விசேடமாக கொண்டாட வேண்டும், என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வத்தை அளிக்கும் கிரகமாக மிளிர வேண்டும் என்ற வரங்களைப் பெற்றார்.

மங்களன் என்ற செவ்வாய் உஜ்ஜயினி மங்களநாதரைத் தரிசித்து மங்கள கிரகம் என்ற கிரகப்பதவியை அடைந்த தலம். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் சிப்ரா நதியில் நீராடி மங்களநாதரை தரிசித்து செவ்வாய் தோஷம் நீங்கப் பெறலாம்.

அங்காரக சதுர்த்தி. செவ்வாய்க் கிழமை வரும் அங்காரக சதுர்த்தியே சங்கடஹர சதுர்த்தி ஆனது. நாளடைவில் கிருஷபட்ச சதுர்த்தியை ஏற்று விரதம் மேற்கொள்கின்றனர். அவந்தி நகரில் தனக்கு தரிசனம் கிடைத்த தென்மேற்கில் ஜவாஸியா கிராமம் என்ற இடத்தில் கணேசரை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்-- சிந்தாமணி விநாயகர். விநாயகர் உதவியால் விண்ணுலகம் அடைந்து அமிர்தம் உண்டு அமரனாகி கிரகப் பதவி அடைந்தார். உஜ்ஜயினில் உள்ள ஆறு விநாயகர் தலங்களில் இந்த சிந்தாமணி விநாயகர் தலமே பெரியது. சிறப்புடையது. இது அங்காரக சேத்திரம். முதன் முதலில் சங்கடஹர சதுர்த்தி துவக்கப்பட தலம்.

மேனி செவ்வண்ணமாக இருப்பதால் லோகிதாங்கன், ரக்தாயதேஷணன், ரக்தவர்ணன், நிலமகளின் சேயாக வளர்ந்ததால் குஜன், பௌமன். கரத்தில் வேல் இருப்பதால் சக்திதரன். அழகிய திருவுருவம் கொண்டதால் குமரன். பெரிய திருமேனியாக இருப்பதால் மகாகாயன். செல்வத்தை வழங்குவதால் தனப்ரதன். செவிகளில் பொற்குண்டலம் அமைந்திருப்பதால் ஹேமகுண்டலி. மேலும் பூமிபத்ரன், ஆரன், குவாலன், குதிரன், யூமன், குணஹர்த்தா, ரோகக்ருத், ரோகநாசனன். வித்யுப்ரமன். வரணகரன், காமதன். தனஹ்ருத், ஸாமகானப்ப்ரியன், ரக்தஉத்ஸான், க்ரகநாயகன், ஸர்வகர்மா, வபோதகன், ரக்தமால்யாதரன் ஆகிய பெயர்களும் கொண்டவன். அங்காரன் தோன்றிய உஜ்ஜெய்னில் கோவில்-மங்கள்நாத்-பிண்டி என கூறப்படும் சிவலிங்கம் போன்ற அரூருவமே கருவறையில்.
அங்காரகன் மனைவி –மாலினி, சுசீலினி, சிவந்த திருமேனியில் செம்மலர் மாலை .அழகிய திருமுடியுடன் நான்கு திருக்கரங்கள். வலது அபயமும், அக்தியாயுதமும் இடதில் கதையும் சூலமும். மேஷவாகனம். செவ்வாயின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-வில்வ மரம்

ஒருவர் மீளமுடியாத கடன், சகோதரர் வழியில் ஒற்றுமை இன்மை, சகோதரர் உடல் நலம் பாதிப்பு, விபத்துகள் ஏற்படுதல், வீடு மனை சார்ந்த பிரச்சனைகள் செவ்வாய் தோஷத்திற்கு காரணமாகும். வைத்தீஸ்வர கோவில் சிவன் மற்றும் முத்துக்குமாரசாமி வழிபாடு நலம் தரும்.

கிரகத்தின் பெயர்: செவ்வாய்
உரிய மலர்: செண்பகம்
உரிய மரம்: வில்வ மரம்
தானியம்: துவரை
வாகனம்: ஆட்டுக்கடா
ரத்தினம்: பவளம்
கிழமை: செவ்வாய்க் கிழமை
திசை: தெற்கு
உலோகம்: செம்பு
நிறம்: சிகப்பு
சமித்து: கருங்காலி
வழிபடும் பலன்கள்: பகைவரை வெற்றி கொள்ளல்,சகல சாஸ்திர ஞானம்

நவகிரக செவ்வாய் பகவான் காயத்திரீ-(வீடு மனை பிரச்சனைகள், சகோதர வேற்றுமைகள் தீர)

”ஓம் வீரவத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம பிரசோதயாத்”
(சிறப்புறுமணியே செவ்வாய்த் தேவே குணமுடன் வாழ குறையிலாது அருள்வாய் மங்களச் செவ்வாய் மலரடிபோற்றி, அங்காரகனே அவதிகளை நீக்குவாய்.)

”ஓம் பூமி புத்ராய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம பிரசோதயாத்”
(புவித்தாயின் புதல்வனே, தவிப்போர் துயர் நீக்கும் தீரனே, அங்காரகனே, கரம் குவித்து உன்னைப் பணிந்தேன் போற்றிப் போற்றியே.)

$$$$$

வியாழக்கிழமை, 07 June 2018 20:55

சந்திரன்!

Written by

ஓம்நமசிவய!

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்க வெண்கோடொன்று மேசிதையா நிற்கும் வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

$$$$$

சந்திரன்!

உலகுக்கு மகிழ்ச்சி அளித்து அமுதைப் பொழிவதால் சந்திரன் என்று பெயர். பௌர்ணமி - சந்திரனின் நாள். அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்தவன் சந்திரன். ஸ்ரீலட்சுமிக்கு சகோதரன். உண்ணாமல் நோன்பு கடைபிடித்தால் செல்வ வளம் கிட்டும். நல்ல கீர்த்தியை தருபவர். சித்திரையில் வரும் பௌர்ணமி-சித்ராபௌர்ணமி மிகவும் கீர்த்தி பெற்றது. ஏனெனில் அன்று சந்திரன் தனது 64 கிரணங்களையும் முழுமையாக வீசிப் பிரகாசிப்பார். சந்திரன் மனைவி -ரோகினி,

சுக்ல பட்சத்தில் சந்திரனின் கிரணங்கள் விருத்தியடைவதற்கும் கிருஷ்ணபட்சத்தில் சந்திரன் கிரணங்கள் தேய்வடைவதற்கும் காரணம் சூரியனின் சக்தி ஆதாரம். சந்திரனின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-வேப்ப மரம்

அத்ரிமா முனிவர் 3000 ஆண்டுகள் தவம் செய்ததன் பலனாக அவர் உடம்பு சோமரசமயமாயிற்று. தேவஸ்திரீகளை அழைத்த பிரம்மன் அவர் கண்களிலிருந்து வழியும் அந்த சோமபானத்தை அருந்துங்கள் கர்ப்பமாவீர்கள் என்றார். தேவ மங்கைகள் அந்த சோமபானத்தை எடுத்து அருந்தமுடியாமல் அதன் கனத்தை தாங்காமல் கீழே விட்டனர். கீழே விழுந்த அவை ஒன்றாக இனைய சோமன்-சந்திரன் உருவானதும் அவனை கீழே விடாமல் பிரம்மன் தன் தேரிலேற்றிக் கொண்டு உலகை 21 முறை சுற்றிவர ஔஷதிகள், வனஸ்பதி- தாவரங்கள் தோன்றி வளர்ந்தன. சந்திரன் தவம் செய்து தன் சக்தியைப் பெருக்கிக் கொண்டான். சந்திரன் மூலம் சிருஷ்டி தழைத்து பெருகுவதால்தான் மூலிகைச் செடிகளும் மருந்துவ செடிகளும் வளர்கின்றது. தாணியங்கள், உணவுப் பொருட்கள், காய் கறிகள் கிடைக்கின்றன.

ஒருவர் தெளிவான சிந்தனையுடன் மனக்குழப்பம் இல்லாமல் இருப்பதற்கு சந்திரனின் அமைப்பே காரணம். தட்சனின் 27 பெண்களை சந்திரன் மணந்தான். புராணங்கள் 27 நட்சத்திரங்களையும் கன்னியராகக் கொண்டு அந்த பெண்களின் கணவனாக சந்திரனை சொல்கின்றன. இதன் உட்பொருள் என்னவென்றால் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் அவரது மனம்தான் அவரது செயல்களைக் கட்டுப்படுத்துவதால் அந்த மனத்தினை செலுத்திடும் கிரகம் சந்திரன் எல்லோருக்கும் பொதுவானவன் என்று பொருள். ஒருவருடைய மதியை சந்திரனின் அமைப்புதான் தீர்மானிக்கின்றது என்பதை உணர்த்தவே சந்திரனை மதி என்று குறிப்பிடுகின்றோம்.

விதி வலியது! பிரம்மாவின் மகன் தேவர்குரு பிரகஸ்பதி மனைவி தாரை. மிகுந்த அழகுள்ளவள். நடந்தது. நடக்கவிருப்பது. வேதம், உபநிஷத்துக்கள் எல்லாம் அறிந்த பிரகஸ்பதி பிசாசு, மரம், செடி, கொடிகளின் பாஷைகளையும் அறிந்தவராவார். அவரிடம் சந்திரன் குரு கல்வி கற்றான். தேர்ச்சியடைந்தான். அதனால் யாகம் ஒன்று செய்தான். அதற்கு தன் குரு பிரகஸ்பதியை அழைத்தான். அவரால் செல்ல முடியாததால் தன் மனைவி தாரையை அனுப்பினால் சந்திரன் மகிழ்வான் என நினைத்து அனுப்பினார். குரு பத்தினி வருகைகண்டு பூரித்தவன் மரியாதையுடன் வரவேற்றான். யாகம் முடிந்ததும் அவரவற்கு அளிக்க வேண்டிய காணிக்கை தட்சனைகளை வழங்கினான். அதைப் பெற்றுக் கொண்ட தாரை சந்தரனின் தேஜஸ் கண்டு மதிமயங்கி திரும்ப போகாமல் சந்திரனை வசீகரித்து அவனுடன் தங்கி விட்டாள். சந்திரனும் தன் அழகால் மயக்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். பலநாட்கள் சென்றும் தாரை வரவில்லை. ஏன் என அனுப்பிய ஆட்களிடம் தான் வரவில்லை என தாரகை சொன்னாள். அவர்கள் சந்திரனிடம் கேட்டதற்கு அவள் வந்தால் அழைத்துச் செல்லுங்கள் என்றான். பிரகஸ்பதி மீண்டும் கேட்டும் திருப்பி அனுப்பவில்லை. எல்லாம் அறிந்தவராயிருந்தாலும் விதி வலியதாகும்போது என்ன செய்வது என மனம் நொந்த பிரகஸ்பதி பலசேத்திரங்கள் சென்று சிவனை வழிபட்டு பெருஞ்சேரி வந்தார். பஞ்சாட்சார மந்திரம் ஜபித்து தவம் செய்தார். சுவந்திரநாயகியை லிங்கத்தின் வடகிழக்கு மூலையில் ஸ்தாபித்து வழிபட்டார். ஒரு மாதம் பழம் மட்டும், பின் இரண்டு மாதம் பால், பின் அதுவுமின்றி நீர் மற்றும் காய்ந்த சருகுகளை உண்டு 12 ஆண்டுகள் தவம் செய்தார். பின் தன்னைச் சுற்றி அக்னி மூட்டி வழிபட தோன்றிய சிவனிடம் தன் சீடன் தன் மனைவியை பறித்ததை சொன்னார். சிவன் நினைக்க சந்திரன் அங்கு தோன்றினான். நடந்ததை அறிந்த சிவன், நீ உடனே தாரையை விடுவிப்பாய் என்றார். பிரம்மா சந்திரன், தாராவுடன் பேசி தாராவை பிரகஸ்பதியிடம் சேர்க்கும்போது தாரா கருவுற்றிருக்க பிரகஸ்பதி அந்த கருவை விட்டுவரச் சொல்ல தாரா அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டுச் சென்றாள். அந்தக் கரு வளர்ந்து சந்திரனைப் போல அழகுடன் விளங்க அதற்கு புதன் என்று பெயரிடப்பட்டு தவம் செய்து கிரகங்களுள் ஒன்றாக பதவி பெற்றான். தாரைமேல் தவறு இருப்பதால் சந்திரனை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை என குரு பிரகஸ்பதி சந்திரனை மன்னித்தார்.

மனச் சோர்வு, மனக்குழப்பங்கள், தாயாருடனும் தாய்வழி உறவுகளுடனும் சுமூக உறவு இல்லாமை, தாயரின் உடல்நிலை பாதிப்பு, சிறுநீர உபாதை, ஜலதோஷம், சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதற்கு சந்திர தோஷம் காரணமாகும். சிவனும் பார்வதியும் இனைந்த அர்த்தநரீஸ்வரரி வணங்குவது- திருச்செங்கோடு, சிவனும் பார்வதியும் ஒன்றினைந்து இருக்கும் நாளான பௌர்ணமியன்று சிவபூஜை செய்வது சிறப்பு.

கிரகத்தின் பெயர்: சந்திரன்
உரிய மலர்: வெள்ளரளி
உரிய மரம்: வேப்ப மரம்
தானியம்: பச்சரிசி
வாகனம்: வெள்ளை குதிரை
ரத்தினம்: முத்து
கிழமை: திங்கள் கிழமை
திசை: தென்கிழக்கு
உலோகம்: ஈயம்
நிறம்: வெள்ளை
சமித்து: முருங்கை
வழிபடும் பலன்கள்: தடங்கள்கள் நீங்கி முன்னேற்றம்

நவகிரக சந்திர பகவான் காயத்திரீ-(மனம் ஒரு நிலைப்பட, சோம்பல் விலக)
”ஓம் பத்வ த்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தன்னோ ஸோம பிரசோதயாத்”
(குறைகள் தீர்க்கும் திங்களே, தாமரை மலரைத் தாங்கி தரணியெங்கும் தண்னொளி தருபவனே, தாழ்விலா மனம் தரும் தண்ஒளி மதியே போற்றி.)

$$$$$

வியாழக்கிழமை, 07 June 2018 19:58

சூரியன்!

Written by

ஓம்நமசிவய!

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

$$$$$

மார்த்தாண்டன் சூரியன் ! 

சூரியன் பிறப்பு-கச்யபமுனிவர் தன் மனைவி அதிதியுடன் கானகத்தில் வாழ்ந்து வந்தபோது அங்கு வந்த அந்தணர் ஒருவர் யாசகம் கேட்க நிறைக் கர்ப்பிணியான அதிதி மெதுவாக வந்ததால் கோபமடைந்த அந்தணர் கோபம் கொண்டு கர்ப்பம் காக்க மெதுவாக வந்தாய் அந்த கர்ப்பத்தில் இருக்கும் கரு கலையட்டும் என சாபமிட, இதை அறிந்த கச்சயபமுனி சிவனை நோக்கி யாகம் வளர்த்தார். அதன் பலனாக மிகுந்த தேஜஸுடன் சிவபெருமான் அருளாசியுடன் பெரிய முட்டை- அண்டம் உண்டானது. பல நாட்கள் ஆனபின்னும் எந்த உயிரும் தோன்றவில்லை. முட்டை கெட்டுவிட்டது என அதிதி காஸ்யபரிடம் சொல்ல முட்டை-அண்டம் இறக்கவில்லை மிருதா என்றார் காஸ்யபர். அவரின் வாக்கு சத்யவாக்கு. முட்டையை உடைத்துக் கொண்டு உயிர் ஜனித்தது. மிருத்தா, அண்டம் என்ற இரு வார்த்தைகளை அடக்கி மார்த்தாண்டன் எனப் பெயர் வைத்தார். இந்த மார்த்தாண்டனே சூரியன், பரிதி, பகலவன், கதிரவன், ஒளிக்கடவுள். உயிர் ஜனித்த அந்த நாளே சப்தமி.

சூரியனை கச்யபமுனி சிவபெருமானை நோக்கித் தவமிருக்க பணித்தார். அந்தக் கடுந்தவத்தை மெச்சிய சிவபெருமான் வானத்தில் கிரகமாக உலவும் தன்மையையும், உலகுக்கு ஒளியாகவும் அன்னதாதாவாகவும் இருக்க வரம் அளித்து ஆசிபுரிந்தார். பிரம்மன் காலத்தைச் சக்கரமாகச் செய்து ஒற்றைச் சக்ர ரதத்தை உருவாக்கி சூரியனுக்குத்தர விஷ்ணு ஏழு வண்ணங்கள் கோண்ட ஏழு குதிரைகளை அளித்து வானத்தில் வலம்வரச் செய்தார். சூரியனை வணங்கினால் மூம்மூர்த்திகளை வணங்குவதாக ஐதீகம்.

ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு வண்ணங்களின் சேர்க்கை வெண்மை கொண்ட ஏழு குதிரைகளை (காயத்திரி, ப்ருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்கதி) பூட்டிய ஒரு சக்கரமுள்ள தேர். சூரியன் தேர் செல்லும்போது சக்கரத்தின் சுவடுகள் பதியாது. வாயுவின் ஏழு மண்டலங்கள் ஓன்றன்பின் ஒன்றாக சூரியனை தம் தோள்களில் சுமந்து செல்வதாக ஐதீகம். அதுவே சூரியனின் தேர்க் குதிரைகள். தன் கடமை தவறாத சூரியன் பக்தர்களுக்கு ஆரோக்யம், புகழ், நிர்வாகத்திறன், மங்களம் அளிப்பவர்.

சூரியன் மனைவி -உஷா, பிரத்யுஷா-சூரியன் விஸ்வகர்மா புதல்வி ஸுர்வர்சலாவை திருமணம் செய்தார்- வைவஸ்தாமனு (ஞான வடிவம்), யமன் (தர்ம வடிவம்) என இரண்டு புதல்வர்கள், யமி/யமுனா (நீர் வடிவம்)-புதல்வி. கணவனின் சூடு தாங்க முடியாமல் தன் நிழலிருந்து பிரதி உஷாவை உருவாக்கி கணவனுக்கு மணமுடிக்க சனி, சாவர்ணுமனு, தபதி, விஷ்டி என்று நான்கு குழந்தைகள். சூரியன் தன் வெப்பம் தனிய தவமிருந்த தலம் கொளப்பாக்கம்-சென்னை.

சூரியனை உதயத்தின்போது-தேவாதி தேவர்களும், இந்திரனும், மதியத்தில்- வாயுவும், அஸ்தமத்தில்- சந்திரனும், வருணனும், இரவில் மும்மூர்த்திகளும், நள்ளிரவில் குபேரணும் வணங்குவர்-(ஆதித்யபுராணம்). தேவர்கள் தங்களது தேஜஸை சூரியனிடமிருந்து பெருகின்றனர்.

காலவ முனிவர் முக்காலமும் உணர்ந்தவர். தனக்கு தொழுநோய் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து நவக்கிரகங்களை நோக்கி தவமிருந்து நோய் வராமல் இருக்க வரம் பெற்றார். இதனை அறிந்த பிரம்மன் சினம் கொண்டு நவகிரகங்களை பூலோகத்தில் அவதரித்து தொழுநோய் பீடிக்க சாபம் கொடுத்தார். சபவிமோசனமாக காவிரி நதிக்கரையில் அர்க்கவனத்தில் கார்திகை முதல் ஞாயிறு முதல் பன்னிரண்டு ஞாயிறு தவம் செய்து திங்கட்கிழமை வைகறைப் பொழுதில் சிவபெருமானை வழிபட்டு உதயாதி ஏழு நாளிகைக்குள் வெள்ளெருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து உண்டு சாபம் நீங்கினர். சூரியனை முதன்மையாக வைத்து நவகோள்களும் வழிபட்ட தலம் சூரியனார் கோவில்-சிவசூரிய நாராயண சுவாமி-சாயாதேவி, உஷாதேவி. ஆடுதுறையிலிருந்து மூன்று கி.மீ.

அனந்தக் கோடான கோடி சூரியன்கள் பிரபஞ்சத்தில் உள்ளன. அவைகளும் ஒளியை வீசத்தான் செய்கின்றன. ஆனால் நம்முடைய விழிப்புலன் சிறியது. அதனால் அந்த விழியால் ஓர் சிறிய எல்லையைத்தான் பார்க்க முடியும். இறைவனின் சைதன்யத்தின் அளவை, மகிமையை யோகிகள் கோடானுகோடி சூரிய ஜோதியாக அளவிட்டிருக்கின்றார்கள். கதிரவன் உலகத்தின் அடிப்படை இயக்க சக்தி. ஒரு பிண்டம்-உடம்பு இயங்கவும் ஒரு அண்டம் –உலகம் இயங்கவும் வெப்ப ஆற்றலை கதிரவனிடமிருந்துதான் பெறுகின்றன.

எல்லாம் என்றால் சர்வம் என்று பொருள். எல் என்பது சூரியனைக் குறிக்கும். சர்வம் என்பதைக் குறிக்க நம்முன்னோர்கள் சூரியனையே ஆராதனை செய்தார்கள். சர்வம் என்ற கொள்கைவேறு. சர்வம் என்ற ஞானலோகம் வேறு. சர்வம் என்ற பகிர்லோகம் வேறு. சர்வம் திசைமயமான லோகம் வேறு. காலமயமான ஜகத் வேறு. என்று பல அனந்த லோகங்கள் இருந்தாலும் சர்வம் என்பது ஒன்றே அது கடவுளைத்தான் குறிக்கும்.

சூரியன் எல்லோருக்கும் பிரத்யட்ச தெய்வம், கண்கண்ட தெய்வம் அவரை சிவசூரியன், சூரிய நாராயணன் என்றழைப்பர். இந்த உலகம் நேரில் பார்க்கும் பெரிய தெய்வம் சூரியன். அவர் உதயமானால் உலகம் விழித்திருக்கும். அவர் மறைந்தால் உலகம் அஸ்தமித்து இருளில் மூழ்கும். சத்ய, த்ரேதா, த்வாபர, கலி என்ற நான்கு யுகங்களும் இவரின் கணக்கு. கிரகங்கள், நட்சத்திரங்கள், யோகம், கரணம், ராசி, ஆதித்யன், ருதுக்கள், வசு, வாயு, அக்னி, அசுவினி குமாரர்கள், இந்திரன், பிரஜாபதி, திசைகள் எல்லாம் அவரால்தான் இயக்கம் பெறுகின்றது. அந்தச் சூரியனுக்குகந்த நாள் சப்தமி. ஏழு குதிரைகள் கொண்ட ரதம் அவரின் இயக்கத்திற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதால் சூரியனின் பிறந்தநாள் சூரிய ஜெயந்தி அல்லது ரதசப்தமி என்று கொண்டாடப்படுகின்றது.

சூரியனின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-உருத்திராட்ச மரம்
ஆதித்ய ஹ்ருதய விரதம்- சங்கராந்தி ஞாயிற்றுக் கிழமை வந்தால் அன்று அந்த விரதத்தை துவங்க வேண்டும். ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படித்து சூர்ய பூஜை செய்க. அஸ்தமத்திற்குப்பின் வேத வல்லுனருக்கு உணவு அளித்து உபசரிக்க. வெள்ளரிக்காய் கலந்த அன்னம் உண்டு தரையில் படுக்க. 108 நாட்கள் தொடர்ந்து செய்க. தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிக்கலாம். போரில் மனம் தளர்ந்த இராமனிடம் அகத்தியர் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை சொல்லச் சொல்லி அவரின் கஷ்டங்களை தீர்க்க உதவினார்.

கிரியா யோகத்தின் மூலம் சூரியனின் அருளைப் பெறலாம். மனதில் சூரியனை நினைத்து, பஜனைசெய்து, பாடல்பாடி, பாராயணம் செய்து, ஆன்மாவிற்குள் சூரியன் இருப்பதாக நினைத்து நமஸ்காரம் செய்து, அன்று என்ன செய்தாலும் அது சூரியனுக்கு செய்வதாக நினைத்துச் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் சூரியனைக் காண்பதே கிரியா யோகம்.

சூரியனுக்கு 12 நாமங்கள் 1.லோலார்க்கர், 2.உத்திர அர்க்கர், 3.ஸாம்பாதித்யன், 4.திரௌபதி ஆதித்யன், 5.மயூகாதித்யர், 6.கஷோல்கா ஆதித்யர், 7.அருணாதித்யர், 8.விருத்தாதித்யர், 9.கேசவாதித்யர். 10.விமலாதித்யர், 11.கங்காதித்யர், 12.யமஆதித்யர்.
இவர்களை வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்கமாலி, திவாகரன் என்றும் அழைப்பதுண்டு.சூரியனின் காரண பெயர்கள்

கர்பத்தில்வாசம் செய்யாமல் அவதாரம்-அஜன்,
இருளை மறைத்து ஒளி தருவதால்-ஆதித்யன்
உலகப் பிரஜைகளின் உற்பத்தி சூரியனிடமிருந்து தொடங்குவதால்-பிரஜாபதி,
அதிதியிடமிருந்து பிறந்ததால்-ஆதவன்,
ஒளி மழையாய் பொழிவதால்-சவிதா,
பல வண்ணங்களைக் கொண்டவர்-சித்ரபாணு,
பிரகாசமான ஒளிக்கற்றைகளைப் பெற்றவர்- பாஸ்கரன்,
3 உலகங்களிலும் பயனித்து ஒளிதோற்றுவிப்பதால்-திவாகரன்,
அண்டம் இரண்டாக பிளந்தபோது கஸ்யபர் ஆறுதல்-மார்த்தாண்டன்,
விரைவாக சஞ்சரிப்பதால்-அரியமான்,
உயிர்களுக்கு அருள் பாலிப்பதால்-புவனமித்ரன்,
செல்வங்களைப் பெற்றிருப்பதால்-இந்திரன்,
கேட்ட வரத்தை அள்ளித் தருவதால்-வருணன்,
உலகங்களை படைக்கும் வல்லமை- சக்கரன்,
தேவர்களின் இதயத்தில் இடம்-விவஸ்வான்,
மேகத்தின் மூலம் இடி முழக்கம் செய்வதால்- மர்ஜன்யன்,
உலகங்களை போஷிப்பதால்- பூஷ்வா,
நாளும் உதயமாகி உலகை காப்பாற்றுவதால்-சூரியன்
கதிர்களை பரப்பி ஒளி கொடுப்பதால்- கதிரவன்

சூரியனை ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பிப்பதால் 12 ஆதித்தியர்கள். மாசிசப்தமி-வருணன், பங்குனி-சூரியன், சித்திரை-விசாகன், வைகாசி-தாதா, ஆனி-இந்திரன், ஆஷாட-ஆடி-ரவி, ஆவணி-நபு, புரட்டாசி-யமன், ஐப்பசி-பர்ஜயன், கார்த்திகை-த்விஷ்டா, மார்கழி-மித்ரன், தை-விஷ்ணு.

சூரிய ரதத்திற்கு ஒரே சக்கரம்- காலச்சக்கரம்
மூன்று நாபிகள்
நடுப்பகுதி- குடம்
மூன்று மேகலைகள்- காலை, நடுப்பகல், பிற்பகல்
வெளிவட்டம் 6 சுற்றுக் கட்டைகள்-6 ருதுக்கள்- வசந்தருது-பழுப்பு நிறம், க்ரீஷ்மருது-பொன்நிறம், வர்ஷருது-வெள்ளைநிறம், சரத்ருது-கருமை நிறம், ஹேமந்த ருது-தாமிரவர்ணம், சிசிர ருது-சிவப்புநிறம்- இந்த நிறங்கள் மழை பொழிவின் விளைவைக் காட்டும்.
அருணன் தேரோட்டி

சூரியஒளி நிறப்பிரிகை ஏற்பட்டால் ஏழு வண்ணங்கள் தோன்றும். 7வண்ணங்களின் சேர்க்கை சூரியஒளி. குதிரை-அசுவம்-வண்ணம். சூரியனுக்கு 7குதிரைகள் என வேதம் வர்ணிப்பதன் சூட்சமம்- வர்ணங்களையே! சூரியனின் நிறங்கள் ஏழு. அதனால்தான் ஏழு குதிரைகள் பூட்டியதேர் என வர்ணிக்கப்படுகின்றார்.

சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். அயனம்- முகம். சூரியனின் முகம் வடக்கு நோக்கி தை முதல் ஆனி மாதம் வரை பயணிக்கும்போது உத்ராயணம் என்றும் தெற்கு நோக்கி ஆடி முதல் மார்கழிவரை பயணிக்கும்போது தட்சிணாயனம் எனப்படும். உத்தராயணம்-புண்ணியகாலம்- தை முதல் ஆனி வரை (சூரியனின் பாவன இயக்கம்- வடகிழக்கு). சூரியனின் கதிர்வீச்சு பகல் பொழுதில் அதிகமாக இருக்கும். இந்தக் காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். தட்சணாயணம்-புண்ணியகாலம்- ஆடி முதல் மார்கழி வரை (சூரியனின் பாவன இயக்கம்- தென்கிழக்கு). சூரியனின் கதிர்வீச்சு பகலில் குறைந்து குளிர்ச்சி அதிகரிக்கும். இந்தகாலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மனிதர்களின் ஓராண்டுகாலம் (உத்ராயணம்+தட்சிணாயணம்) சித்திரை முதல் பங்குனி வரையிலான ஒரு வருட காலமே தேவர்களுக்கு ஒரு நாள் என்பதால் தட்சிணாயணத்தின் இறுதி மாதமான மார்கழி அவர்களின் அன்றைய அதிகாலைப்பொழுதாகவும், உத்ராயணத்தின் இறுதி மாதமான ஆனி தேவர்களின் பகல் பொழுதின் இறுதிப் பகுதியாகவும் உள்ளது. தேவர்களின் ஒருதினப்பொழுதின் சந்தியா காலங்களாக விளங்கும் ஆனிமாதமும் மார்கழியும் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதங்கள்.

தட்சிணாயனத்தின்போது இரவு நேரம் அதிகமாகவும் பகல் பொழுது குறைவாகவும், தைமாதம் முதல் நாள் உத்ராயணத்தின் துவக்கத்திலிருந்து பகல் பொழுது அதிகமாகவும் இரவு பொழுது குறைவாகவும் இருக்கும். தேவர்கள் துயிலெழும் நேரம் தை மாதம். ஆகவே இந்த உத்ராயண காலத்தின் துவக்கமாகிய தை மாதத்தின் முதல் நாள் புனிதமானது. இந்த நாளே மகர சங்கராந்தி எனப்படும் உத்ராயணத்தின் தொடக்கமாக தைமாதம் வளர்பிறை ஏழாம்நாள் கதிரவன் தன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரை வடக்கு நோக்கி திருப்புவதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ள நாளே ரதசப்தமி (ரதம்-தேர், சப்தமி-ஏழு) உத்ராயணம் தேவர்களின் பகல் பொழுதின் தொடக்கம் என்பதால் உத்ராயண புண்ணிய காலம் என்பர். அதனால்தான் பீஷ்மர் தன் விருப்பப்படி இறக்கும் வரம் பெற்றிருந்து தனது மரணத்தை அடுத்தநாள் அஷ்டமி (பீஷ்மாஷ்டமி) தொடங்கி அனைவரிடமும் விடைபெற்று 11ம் நாள்-பீஷ்ம ஏகாதசி. உத்ராயணம் வரும்வரை தள்ளி வைத்து முக்தியடைந்தார் என புராணங்கள் சொல்கின்றன.

சூரிய கதிர்கள் சிறப்பு! பீஷ்மர் அவர் விரும்பும்போது உயிர்போகும் என்ற வரம் பெற்றிருந்தும் உத்ராயண காலம் வந்தபோது உயிர்போக விரும்பியும் போகமல் துன்பம் மேலிட அதுபற்றி வியாசரிடம் கேட்டபோது மனம், வாக்கு, செயல் மூன்றாலும் நீங்கள் பாவம் செய்யாமலிருந்தும் பாஞ்சாலியின் துகில் உரியப்படும் பாவச் செயலை பார்த்தும் கண்டித்து தடுக்கவில்லை என்பதனால்தான் இந்த துன்பம் என்றார். அவரின் ஆலோசனைபடி இரண்டு எருக்க இலைகளை கண்களின் மீதும் மூன்று எருக்க இலைகளை கழுத்திலும் வைத்து அதன் மீது சூரிய ஒளி படும்படிச் செய்து சூரியனை வேண்டச் சொல்லி கங்கை நீரால் நீராட்ட அவரது பாவங்கள் தீர்ந்தன. சூரியன் கதிர்கள் அவருக்கு முக்தி வழங்கியநாள் சூரிய ஜெயந்திநாள்.

உத்தராயண தை அமாவாசை, தட்சணாயணம் ஆடி அமாவாசை மற்றும், புரட்டாசி மாளய அமாவாசை காலங்களில் முன்னோர்களின் நினைவாக செய்யப்படும் ஆன்ம பூஜையை ஏற்று முன்னோர்கள் நமது துன்பங்கள் நீங்க உதவி புரிவர்.

ஆன்ம பூஜா தலங்கள்: அக்னிதீர்த்தம்- இராமேஸ்வரம், காவேரி, குடந்தை- மகாமகத்தீர்த்தகுளம், குமரிக்கடல்- சங்கமம், கோடியக்கரை, திருப்புல்லாணி, திருவெண்காடு, திருவையாறு- பஞ்சநதிக்கரை, திலதர்ப்பணபுரி, பவானி- சங்கமம், பூம்புகார், முக்கொம்பு, ஸ்ரீரங்கம்- அம்மா மண்டபம்,

சூரியனுக்கு ஆயிரமாயிரம் கிரணங்கள் இருந்தாலும் முக்கியமான கிரணங்கள் ஏழு. அந்த ஏழிலிருந்துதான் கிரகங்கள் ஏழும் தோன்றின,
ஹரிகேசவன் கிரணம் தானே உண்டான சூரியன்-ஞாயிறு
ஸுப்ஸம்ன கிரணம் வளர்ச்சி தேய்வுடைய சந்திரன்-திங்கள்
சம்பத்வசுவு கிரணம் குஜன் (எ) அங்காரகன்-செவ்வாய்
விஸ்வகர்ம கிரணம் சௌம்யன் (எ) புதன்
அர்வாவசுவு கிரணம் பிர்கச்பதி (எ) வியாழன்
விச்வச்ரவன் கிரணம் சுக்ராச்சாரியார் (எ) வெள்ளி
சுவராட்டு கிரணம் சனி

விண் மீன்களாகிய நட்சத்திரங்களும் சூரியனின் பிரபாவத்தால் ஏற்பட்டவை. உலகம் அழியினும் இவை அழியா என்பதாலும் வெண்மை நிறம் கொண்டுள்ளதாலும் நட்சத்திரங்கள் என்று பெயர்.

சுக்ல பட்சத்தில் சந்திரனின் கிரணங்கள் விருத்தியடைவதற்கும் கிருஷ்ணபட்சத்தில் சந்திரன் கிரணங்கள் தேய்வடைவதற்கும் காரணம் சூரியனின் சக்தி ஆதாரம். சந்திரன் மூலம் சிருஷ்டி தழைத்து பெருகுவதால்தான் மூலிகைச் செடிகளும் மருந்துவ செடிகளும் வளர்கின்றது. தாணியங்கள், உணவுப் பொருட்கள், காய் கறிகள் கிடைக்கின்றன.

கிரியா யோகத்தின் மூலம் சூரியனின் அருளைப் பெறலாம். மனதில் சூரியனை நினைத்து, பஜனைசெய்து, பாடல்பாடி, பாராயணம் செய்து, ஆன்மாவிற்குள் சூரியன் இருப்பதாக நினைத்து நமஸ்காரம் செய்து, அன்று என்ன செய்தாலும் அது சூரியனுக்கு செய்வதாக நினைத்துச் செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் சூரியனைக் காண்பதே கிரியா யோகம்.

மூன்று உலகங்களையும் துர்வாசமுனிவர் சுற்றி வரும்போது துவாரகபுரிக்கு வந்தார். கிருஷ்ணரின் மகன் சாம்பன் மிகுந்த அழகுடையவன். அந்தக் கர்வத்தால் துர்வாசரின் உருவத்தைக் கேலி செய்ய கோபம் கொண்ட துர்வாசர், ‘எந்த இளமையும் அழகும் உனக்கிருப்பதால் அகங்காரப் படுகின்றாயோ அந்த உருவம் அழிந்து பயங்கர பெரு நோயினால் உன்தேகம் பொழிவிழந்து வலுவிழந்து தேய்ந்து போகக்கடவது எனச் சாபமிட்டார். சாபத்தினால் குரூபியான சாம்பன், கிருஷ்ணர், நாரதர் ஆலோசனைப்படி மித்ர வனத்தில் சப்தமி விரத பூஜையை முடித்து சூரிய தேவன் அருளால் பெருநோய் நீங்கி பழைய யௌவன வடிவம் பெற்றான்.

சூரியனை வழிபடும் முறை சௌரம் எனப்படும். உலகின் கண்ணுக்குத் தெரிந்த முதல் கடவுள் சூரியன். சைவர்கள் சிவசூரியன் என்றும் வைணவர்கள் சூரியநாராயணன் என்றும் அழைப்பர். ஒரு ஆத்மா ஆரோக்கியமாக இருந்தால்தான் தர்மம், ஜபம், பூஜை, ஹோமம் முதலிய நல்ல காரியங்களைச் செய்ய முடியும். அந்த ஆரோக்கியத்தை தருபவன் சூரியன். விஷ்ணு கீதா உபதேசத்தில் உலகில் பிராகாசிக்கும் பொருள்களில் நான் சூரியனாக இருக்கின்றேன் எனக் கூறுகின்றார். அனைத்து தாவர சங்கமப் பொருள்களுக்கும் ஆத்மா போன்று செயலாற்றுபவன் சூரியன். பிரபஞ்சத்தின் வெப்ப நிலையை தக்க வைப்பதில் கதிரவனுக்கு பெரும் பங்கு உண்டு. உலகம் தன் நிலை தவறாது இருப்பதற்கு காரணம் பிரபஞ்சத்தில் உறைந்திருக்கும் கதிரவன் ஒரு கனம்கூட தன் வெப்பநிலை கடமையிலிருந்து தவறுவதில்லை, அப்படி தவறினால் என்ன வாகும் என யோசித்து பாருங்கள்.

பூமி சூரியனைச் சுற்றிவரும் நீள்வட்டப் பாதையை 12 ஆகப் பிரித்து அவற்றை ராசிகள் என்றனர். 360 டிகிரியில் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி. முதல் ராசி மேஷம் 0 டிகிரியில் தொடங்கும். இதன்படி சூரியன் முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழையும் மாதம் சித்திரை. இது இளவேனில் காலம். சூரியனது நகர்வை வைத்து அறிவியல் ரீதியாக கணக்கிட்டு மாதங்களைக் 12 எனக் கணக்கிட்டனர். எனவே இதிலிருந்து தமிழ் மாதங்கள் ஆரம்பிக்கும்.

சங்கராந்தி: சூரியனின் அயனம் என்ற இயக்கம் தவிர பூமியின் சுழற்சி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒரு ராசிக்குள் சூரியன் பிரவேசிப்பார். சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு நுழையும் வேளையே சங்கராந்தி. சங்கராந்தி என்றால் மாதப் பிறப்பு ஆகும். 12 ராசிக்கும் 12 சங்கராந்திகள். அந்த ராசியின் பெயராலேயே அந்த மாதங்கள் குறிபிடப்பட்டன. மேலும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதி எந்த நட்சத்திரத்தில் வருகின்றதோ அதுவே அந்த மாதத்தின் பெயரானது. சைத்ர-சித்திரை(சித்திரை)-மேஷமாதம் (மகரமாதம் என்றும் சொல்வர்), வைசாக-வைகாசி(விசாகம்)-ரிஷபமாதம், ஜேஜ்ட-ஆனி(ஆன்ஹி)-மிதுனமாதம், ஆஷாட-ஆடி(ஆஷாடம்)-கற்கடகமாதம், சிராவண-ஆவணி(திருவோணம்/அவிட்டம்)-சிம்ம, பாத்ரபத-புரட்டாசி(ப்ரோஷ்டபதி)-பாத்ரபதமாதம், ஆச்வின-ஐப்பசி(அசுபதி)-துலாமாதம், கார்த்திக-கார்த்திகை-விருச்சகமாதம், ஆக்ரஹயான-மார்கழி(மிருகசீரிஷம்)-தனுர்மாதம், பௌஷ-தை(பூசம்)-மகரமாதம், மாக-மாசி(மாகம்)-கும்பமாதம், பல்குண-பங்குனி(பூரம்/உத்திரம்)-மீனமாதம்

1.தான்ய சங்கராந்தி-சித்திரை-சூரியன் மேஷ ராசியில் நுழையும் வேளை.
2.தாம்பூல சங்கராந்தி-வைகாசி-சூரியன் ரிஷப ராசியில் நுழையும் வேளை.
3.மனோதர சங்கராந்தி-ஆனி-சூரியன் மிதுன ராசியில் நுழையும் வேளை.
4.அசோக சங்கராந்தி-ஆடி-சூரியன் கடக ராசியில் நுழையும் வேளை.
5.ரூப சங்கராந்தி-ஆவணி-சூரியன் சிம்ம ராசியில் நுழையும் வேளை.
6.தேஜ சங்கராந்தி-புரட்டாசி-சூரியன் கன்னி ராசியில் நுழையும் வேளை.
7.ஆயுள் சங்கராந்தி-ஐப்பசி-சூரியன் துலாம் ராசியில் நுழையும் வேளை.
8.சௌபாக்ய சங்கராந்தி-கார்த்திகை-சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் வேளை.
9.தனுஷ் சங்கராந்தி-மார்கழி-சூரியன் தனுசு ராசியில் நுழையும் வேளை.
10.மகர சங்கராந்தி-தை-சூரியன் மகர ராசியில் நுழையும் வேளை.
11.லவண சங்கராந்தி-மாசி-சூரியன் கும்ப ராசியில் நுழையும் வேளை.
12.போக சங்கராந்தி-பங்குனி-சூரியன் மீன ராசியில் நுழையும் வேளை.

மாகே சங்கராந்தி என்று நேபாளத்திலும், சொங்கிரான் என்று தாய்லாந்திலும், மோஹா சங்கிரான் என்று கம்போடியாவிலும் மாகே பிஹு/ போகாலி பிஹூ என்று அஸ்ஸாமிலும் மாக் சாஜி என்று இமாச்சலபிரதேசத்திலும், மகா சங்கராந்தி என்று டெல்லி, மற்றும் ஹரியானவிலும், உத்ராயண் என்று குஜராத் மற்றும் உத்ரபிரதேசத்திலும், ஹல்தி கும்கும் என்று மகாராஷ்டிராவிலும் சங்கராந்தி கொண்டாப்படுகின்றது.

உலகப் பிறப்புகள் எல்லாம் 27 நட்சத்திரங்களில் ஒன்றிலும் 12 ராசிகளில் ஒன்றிலும்தான் பிறந்திருப்பர். ஒருவர் பிறந்த வேளையில் சாதகமான அல்லது பாதகமான நிலையில் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரக தோஷத்தினை நீக்க பரிகாரங்கள் செய்திட வாழ்வின் தீமைகள் குறைந்து நன்மைகள் உண்டாகும்.

சூரியதோஷம் அதாவது சூரியனின் அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை இன்மை, த\ந்தையின் உடல்நலம் குறைபாடு, அந்த நபரின் உடல் நலம் ஆரோக்கியம் அடிக்கடி கெடுதல், தாழ்வு மனப்பான்மை, உஷ்ணாதிக்க நோய்கள் ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு. சூரிய தோஷத்தால் ஏற்படும் குறைகளை நிவர்திக்க சூரியனின் ஆதித்த ஹ்ருதய துதியுடன் சூரியனுக்குப் பிரியமான சீடனான அனுமனையும் வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிட்டும்.. முதலில் திருமங்கலக்குடி பின்னர் சூரியனார் கோவிலில் வழிபடவேண்டும். அருகில் உள்ள அனுமன் கோவிலுக்குச் சென்று வழிபடவும்.

அக்னி நட்சத்திரம்!

கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னிதேவன். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சமாக இருக்கும்போது அக்னி நட்சத்திர்மான கார்த்திகை வரும்போது நெருப்பிற்கு இனையாக வெப்பம் பொழிந்து தகிக்கும் சூரியன் சஞ்சரிக்கும் சூரியனின் காலம் அக்னி நட்சத்திர காலம் என்பர். சித்திரை மதம் பரணி 4 ம் பாதத்தில் தொடங்கி (முன் கத்திரி காலம்) ரோகிணி முதல் பாதம் வரை (பின் கத்ரி காலம்)

ரிக் வேதம் அக்னி என்பது சூரியனின் ஆற்றல் என்கின்றது. சுவேதகி என்ற மன்னன் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் யாகம் வளர்த்து அதில் நெய் உள்ளிட்ட ஏராளமான ஆகுதிகளை இட அவற்றைத் தொடர்ந்து உண்டதால் அக்னிக்கு அஜீரணம் ஏற்பட்டு வயிற்றுவலி உபாதையில் நீண்ட காலம் அவஸ்திபட்டு பிரம்மதேவரிடம் ஆலோசனைக் கேட்க மூலிகைகள் நிறைந்த காட்டை அப்படியே உண்டால் அக்னியின் ஜீரண உபாதையும் வயிற்றுவலியும் நீங்கும் என்றார்,

காண்டவ வனம் தன் துன்பத்திற்கு உதவி தன் நோயைத் தீர்க்கும் என்பதால் அக்னி அந்த வனத்தை உண்ணத் தொடங்க முற்படும்போது தனக்கு பிடித்த அந்த காண்டவ வனம் அழியாமல் இருக்க இந்திரன் மழை பொழிந்து ஒவ்வொரு முறையும் அக்னி உண்ண ஆரம்பிக்கும்போது தடுத்துவிட்டான். என்ன செய்வது என தவித்த அக்னி அப்பக்கம் அர்ஜுனனுடன் வந்த கிருஷ்ணரிடம் ஆலோசனை கேட்டான். அக்னியிடமிருந்து சிறப்பான வில்லான காண்டீபத்தையும் குறையவே குறையாத அம்பாறாத்துணியையும் பெற்று அர்ஜுனனிடம் கொடுத்து அதன்மூலம் தொடர்ந்து அம்புகளைச் செலுத்தச் சொல்லி சரக்கூடம் அமைக்க இந்திரனால் கனமழையைப் பொழிவித்தும் சரக்கூடத்தைத் தாண்டி நீர வராததால் அக்னி அந்த அடர்ந்த மூலிகைகள் நிறைந்த கண்டவ வனத்தை உண்ணத் தொடங்கினான். நிலமையைப் புரிந்த இந்திரன் கிருஷ்ணரிடம் வந்து அக்னி இந்த வனம் முழுவதையும் புசித்தால் இதில் வாழும் உயிர்களின் நிலை என்ன! இந்த வனத்தை புசித்த பின்னரும் பசி அடங்கா விட்டால் அக்னி மற்ற வனங்களையும் அழிக்கத் தொடங்கிவிடுவான் என்று கூற கிருஷ்ணர் அக்னியிடம் இருபத்தோரு நாட்கள் மட்டுமே அக்னி இந்த வனத்தைப் புசிக்க வேண்டும் என்றும் அதற்குள் அக்னியின் வயிற்றுவலி தீர்ந்துவிடும், அர்ஜுனனின் சரக்கூடமும் கலைந்து விடும். பின்னர் இந்திரன் மழை பெய்விக்கலாம் என்றார்.

அக்னி முதல் ஏழு நாட்கள் பூமிக்கு அடியில் இருந்த வேர்களையும் பூச்சிகளையும் புசித்து அடுத்த ஏழு நாட்களில் மேலே இருந்த மூலிகை மரங்கள், செடிகள் அனைத்தையும் உண்டு அடுத்த ஏழு நாட்களில் அங்கிருந்த மற்ற பொருட்களையும் பாறைகள் உட்பட விழுங்கினார். காண்டவ வனத்தை அக்னி விழுங்கிய 21 நாட்களே அக்னி நட்சத்திர காலம் ஆகும்.

அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்தவுடன் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், திருமஞ்சனங்கள், வழிபாடுகள் நடைபெறும். இதை அக்னி கழிவு என்பர்.

கிரகத்தின் பெயர்: சூரியன்
உரிய மலர்: செந்தாமரை
உரிய மரம்: உருத்திராட்ச மரம்
தானியம்: கோதுமை
வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்
ரத்தினம்: மாணிக்கம்
கிழமை: ஞாயிற்றுக் கிழமை
திசை: கிழக்கு
உலோகம்: தம்பாக்கு
நிறம்: சிவப்பு
சமித்து: வெள்ளெருக்கு
வழிபடும் பலன்கள்: காரிய சித்தி, லோக ஆகர்ஷணம்

சூர்ய நமஸ்காரம்

ஆதித்தாய நமஹ! சூர்யாய நமஹ!
பாஸ்கராய நமஹ! தினகராய நமஹ!
திரைலோக்யாய நமஹ! சூடாமணியே நமஹ!
திவாகராய நமஹ! லோகமித்ராய நமஹ!
ஜோதி ஸ்ருபாய நமஹ! அருணாய நமஹ!
வரத ஹஸ்தாய நமஹ! ரவியே நமஹ!
சூர்யநாராயண சுவமியே நமஹ!

(ஆரோக்கியமும் ஆனந்தமும் பெற)
”ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹத் விதிகராய தீமஹி
தன்னோ சூர்யப் பிரசோதயாத்”
(உலகிற்கு ஒளியூட்டும் பாஸ்கரனே, கோள்களையெல்லாம் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவனே, சூரிய பகவனே,எல்லா வளங்களும், பெற அருள்வாய்!)

சூரியனின் மூல மந்திரம்-ஏழு எழுத்துக்கள் - சப்தாக்ஷர மந்திரம் காலையில் கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவில் வடக்கு முகமாகவும், ஆறுதள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து மனம் ஒன்றி ஒரு வருடம் தியானிக்க வேண்டும்.
ஓம் ககோல்காய ஸ்வாஹா’

நவகிரக சூரிய பகவான் காயத்திரீ
(பார்வை பலம்பெற, ஆரோக்கியம் சிறக்க)
”ஓம் அச்வத் வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்ய பிரசோதயாத்”
(சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி, சூரியா போற்றி சுந்திரா போற்றி வினைகளைக் களைவாய் வீரியா போற்றி.)
”ஓம் ஏகசக்ராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய பிரசோதயாத்”
(ஒற்றைச் சக்ரத்தில் உலகை ஊர்ந்து சுழலன்று சூழ்வினைகளைச் சுட்டுப் போக்கி சுடரெளியால் அகிலம் காக்கும் ஆதியத்தனே போற்றி.)

$$$$$

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26942224
All
26942224
Your IP: 44.211.24.81
2024-03-29 11:32

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg