gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

இழந்த மகிழ்வு! அதிர்ஷ்டத்தின் மர்மம்!

Written by

இழந்த மகிழ்வு! அதிர்ஷ்டத்தின் மர்மம்!

அரசன் ஒருவன் வேட்டைக்குச் சென்றபோது உடன் அழைத்துச் சென்ற வீர்ர்களில் ஒருவன் வழிதவறிப் போய்விட்டான். அவனை மாலைவரைத் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் அனைவரும் அரண்மனைக்குத் திரும்பினர். வழிதவறிய வீரன் தன்னோடு வந்தர்களைக் காணாமல் தேடி அலைந்து களைப்படைந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தான். மாலை மங்கிக்கொண்டிருந்தது.

அப்போது ஒரு குரல் என்னால் பாதுகாக்கப்பட்டுவரும் புதையல் உனக்கு வேண்டுமா என கூறக் கேட்டவன், குரல் வந்த திசையை நோக்கி நீ யார். எதற்காக இப்படி பொய் பேசுகின்றாய் என்றான். அதற்கு அந்தக் குரல் இல்லை நான் பலகாலம் காத்திருக்கும் புதையல் அது என்றது. அப்படி என்றால் அதைக் காட்டு என்றான். உடனே அவன் முன்னாள் பத்து பானைகள் தங்க காசுகளுடன் தென்பட்டன. இதை நீ பெற்றுக் கொண்டால் எனக்கு விடுதலை கிடைக்கும் என்றது. இந்தப் புதையலை நான் எப்படி என் வீட்டிற்கு கொண்டுபோவேன். நீ இந்த புதையலை என் வீட்டில் கொண்டுவந்து கொடு, நான் வாங்கிக் கொல்கின்றேன் என்றான். அப்படியே அந்தக் குரலுக்குறிய பூதம் அந்தப் புதையல் பானைகளுடன் அவனை அவன் வீட்டில் கொண்டுபோய் விட புதையலை அவன் வாங்கிக் கொள்ள பூதத்திற்கு விடுதலைக் கிடைத்தது.

தனது அதிர்ஷ்டத்தை வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டே எல்லா பானைகளையும் திறந்து பார்த்தான். ஒன்பது பானைகள் நிறைய இருந்த பொற்காசுகள் பத்தாவது பானையில் மட்டும் கொஞ்சம் குறைவாக இருக்கவே எப்படி இந்தப் பானையில் மட்டும் குறைந்தது என சந்தேகப்பட்டான். இந்த எண்ணம் அவன் மனதில் வேரூன்றி பதிய ஆரம்பிக்க அதைப் பற்றிய நினைவே அவன் தூக்கத்தை கொடுத்தது.

கிடைத்ததை உண்டு உறவுகளோடு ஆனந்தமாக இருந்தவனுக்கு ஒன்பது பானைகள் நிறைய தங்க காசுகள் இருப்பது நிறைவாகத் தெரியாமல் பத்தாவது பானையில் குறைந்து காணப்படுவதே பிரச்சனையாகி நிம்மதி இழந்தான். தூக்கம் கெட்டான். உடல் நலிவு அடைந்தான்.

முதலில் பொருள் சேர்த்து பானையை நிறைக்க வேண்டும் என்ற நினைவுடன் இதுநாள்வரை அரண்மணக்கு வேலைக்குப் போகாமல் இருந்தவன் வேலைக்குப் போனான். பழையபடி கவனத்துடன் அவனால் வேலை செய்ய முடியவில்லை. காணமல் போய் அவனைத் தேடியதிலிருந்து அவன் திரும்பி வந்தது முதல் அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததை அனைவரும் உணர்ந்தனர். அரசனிடம் சென்று எனக்கு கொடுக்கும் சம்பளம் போதாது எனக் கேட்டான்.

அரசன், உன் நடவடிக்கைகளினால் முன்பு இருந்ததைவிட நீ இப்போது மாற்றத்துடன் காணப்படுகின்றாய். நீ உன நிம்மதி இழந்து விட்டாய் போலிருக்கின்றது. நான் நினைப்பது சரியாக இருந்தால் நீ காட்டில் பூதத்தின் புதையலை வாங்கிக் கொண்டு வந்தாயா! எனக் கேட்க, யாரிடமும் சொல்லவில்லை மன்னருக்கு எப்படித் தெரிந்தது என ஆச்சரியப்பட்டான். இருந்தாலும் மன்னரிடம் அதை ஒப்புக்கொண்டான்.

பத்தாவது பானை குறைந்திருப்பது பற்றிதானே கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்றாய். அது அவ்வளவுதான். அது குறைவாகவே இருப்பதால் அந்தப் பானைக்கு திருப்தியின்மை என்று பெயர். நானும் அந்த பூத்த்தை சந்தித்துள்ளேன். நான் அதனிடம் புதையல் பெற்றுக்கொண்டால் நீ விடுதலை அடைந்து விடுவாய். எனக்கு நிம்மதி கிடைக்குமா! என்றேன். பூதத்தை காணவில்லை. அதனிடம் நீ அகப்பட்டுக்கொண்டு உன் நிம்மதியை தொலைத்து விட்டாய் என்றார்.

உண்மை புரிந்த உடனே வீரன் எனக்கு நிம்மதிதான் வேண்டும். அந்த புதையல் எனக்கு வேண்டாம் எனக் கூவ அனைத்து பானைகளும் மறைந்தன. அரன்மணையில் மீண்டும் தன் பணியை மகிழ்வுடன் தொடங்கினான். மனநிறைவு, மகிழ்ச்சி, நிம்மதி சந்தோஷம், ஆரோக்கியம் இவைகள்தான் அதிர்ஷ்டத்திற்குரியது.குருஸ்ரீ

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26933457
All
26933457
Your IP: 54.160.243.44
2024-03-29 04:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg