gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

மனித நேயம் உங்களுள் மலரட்டும்!. மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது! இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்!

UJJAIN-SIVAN/உஜ்ஜெயின்#சிவன்/மஹாகாலேஸ்வரர்.ஜோ-3/12

செல்லும் வழி: போபால்-189,இந்தூர்-55, திவாஸ்-37,தார்-59.ர.நி.-2
தகவல்கள்:

ஊர்:உஜ்ஜெயின்.ஜோ-3/12.# இந்திரபுரி, அமராவதி, அவந்திகா, குமுதவதி, கனகசிருங்கா, குசஸ்தலி, பத்மாவதி, ப்ரதிகல்பா, போகவதி, ஹிரண்யவதி-ஷிப்ராநதிக்கரையில்
இறைவன்: ஸ்ரீமஹாகாலேஸ்வரர்(சு)
இறைவி: சங்கரி, ஹரசித்திதேவி(மகாகாளி)
பிறசன்னதிகள்: ஓங்காரேஸ்வரர், தாரகேஸ்வரர், பார்வதிதேவி, சுப்ரமண்யர், நாகசந்திரேஷ்வர், படாகனேஷ், நரசிம்மர், மங்கள்நாத்-செவ்வாய், சித்தநாத், சிந்தாஹரகணப்தி, பண்டரிநாதர்பிரஹஸ்பதேஸ்வரமகாதேவர், ஸ்வப்னேஸ்வரமகாதேவர், த்ரிவிஸ்தபேஸ்வர மகாதேவர், கோவிந்தேஸ்வர மகாதேவர், சங்கடமோசன சித்த ஹனுமான், சாட்சி கோபால், சித்திவிநாயகர், வடவிருட்சம், ஏகாதசலிங்கேஸ்வரர், ராமேஸ்வரர், விஸ்வநாதர், நவகிரகங்கள்,சித்ரகுப்தர், ஸ்ரீதர்மராஜர்.
மரம்-ஆலமரம்                                                                                                                                                                                                                                                                                                  தீர்-7சாகர், கோடி, சிப்ராநதி,சூரியகுண்டம், நித்ய புஷ்கரணி
தி.நே-0400-2230

சிறப்புகள்:

 #-12-02-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது

தொலைபேசி: 91 734 2550563

1000 ஆண்டுகள் பழமை. பிரளய காலத்தில் உலக உயிரினங்களின் கரு ஒரு லிங்க உருவத்தில் காப்பாற்றப்பட்டு பின் உயிர்கள் அதிலிருந்து தோன்றியதால் இத்தலம் பீஜாக்ஷேத்திரம் எனப்படும்.

விக்ரமாதித்தன், போஜராஜன் உதயாதித்தன் காலங்களில் மகாகலேஸ்வரர் ஆலய சுவர்களில் பொன்னும் மணியும் நிறைந்து காணப்பட்டது. சில காலங்களுக்குப்பின் இதன் செழிப்பு தில்லி சுல்தான் இல்டாமிஷ்க்குத் தெரிய அவந்தி நாட்டின்மீது படையெடுத்து ஆலயப் பொக்கிஷத்தைச் சூறையாடி கோவிலை இடித்து தரைமட்டமாக்கி ஜோதிர்லிங்கத்தை ஆலயப் புஷ்கரணியில் எறிந்தான்.

500 ஆண்டுகளுக்குப்பின் ரானோனி சிந்தியா காலத்தில் ஆலயம் இருந்த புராதன இடத்தை தேடிக்கண்டுபிடித்து புஷ்கரணியை தோண்டி ஜோதிர்லிங்கத்தைக் கண்டு எடுத்து பிரதிஷ்டை.

உஜ்ஜயினில் மாத்ருகா தேவிகளுக்கு-24, ஆதித்தனுக்கு-12, பைரவருக்கு-8, விநாயகருக்கு-6, இதர தேவதைகளுக்கு-12 என சிறிது பெரிதுமான கோவில்கள் உள்ளன. மேலும் சிவனுக்கு 84 கோவிகள்.

கரன் என்ற சிறுவன் சிவபக்தியில் கற்களை கொண்டு வணங்கி வரும்போது அவனின்தாய் அதைதூக்கி எறிந்துவிட அக்கற்கள் விழுந்த இடம்- மகாகாலேஸ்வரர். ஜோதிர்லிங்கதலம்-3/12. வின்னிலே தாரகம், பாதாளத்தில் ஹாடகேச்வரம், மண்ணிலே மகாலிங்கம் என முச்சிறப்பு.

84சித்தலிங்கங்கள், 25சிவலிங்கங்கள், 33முக்கோடி தேவர்கள் வாழுமிடம். தரிசித்தவர்களுக்கு முக்தி, மற்றும் கனவில் கூட துன்பங்கள் தோன்றாது என நம்பப்படுகின்றது.

கிருஷ்ணன், பலராமர் மற்றும் நண்பன் சுதாமா(குசேலர்) ஆகியோரின் குருகுலமான சாந்தீபினி ரிஷியின் ஆசிரமம்-சிறப்பு.

கும்பமேளா- சிங்ஹஸ்த்- 10யோகங்கள் கூடிவரும் பருவம்(பௌர்ணமி, சுக்லபட்சம், சோமவாரம், சுவாதிநட்சத்திரம், மேஷராசியில் சூரியன், சிம்மராசியில் சந்திரன், துலாமில் இல்லாதவேளை, வைகாசிமாதம், கேது உதயகாலம்.) கும்பமேள நடைபெறும் தலம். 

விடியற்காலை-பஸ்ம ஆரத்தி சிறப்பு-தாந்திரிக வழிபாடு- நரகசதுர்த்தி எனும் தீபாவளி திருநாளில்  ஆண்டுக்கு ஒருமுறை பாங்என்ற காப்பும் பின் வெந்நீர் அபிஷேகம்.

சக்தி பீடங்களில் மகோத்பால பீடம்.

நான்கு புறமும் மகத்தான சக்தி வியாபித்துள்ளது. கிழக்கில் - பிங்களேஸ்வரர், தெற்கில் காயாவரோஹனேஸ்வரர், மேற்கில் பில்வேஸ்வரர், வடக்கில் உத்தரேஸ்வரர்.

ஏழு மோட்ச நகரங்களில் ஒன்று.(அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகை) அருகில் ரிணமுக்தேஸ்வரர், மங்களேசுவரர், பராகணபதி, பர்த்ருஹரியின் குகை உள்ளது.

தேவாமிர்தம் சிந்திய தலம்.சித்திவடம்- அதிசய ஆலமரம்- பல நூறு வருடங்களாக சிரிய அளவில் உள்ளது.

சிப்ரா நதிக்கரையில் மகாகாளிக்கும் கோவில் உண்டு.தேவர்களுக்கு தொல்லை கொடுத்த சண்டன் பிரசண்டன் அரக்கர்கள் இருவரையும் தேவியே அழிக்க வல்லவள் என்று சிவன் - அரன் கூறியதால்  மகாகாளியாக மாறி நவசக்தி தேவிகளுடன் சென்று போர்புரிந்து அரக்கர்களை வதம் செய்தாள். அரன் விருப்பபடி அரக்கர்களை அழித்ததால் அரசித்தி தேவி.

மங்களன் என்ற செவ்வாய் மங்களநாதரைத் தரிசித்து மங்கள கிரகம் என்ற கிரகப்பதவியை அடைந்த தலம். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் சிப்ரா நதியில் நீராடி மங்களநாதரை தரிசித்து செவ்வாய் தோஷம் நீங்கப் பெறலாம்.

தேவர்களும் தேவதைகளும் பொன்மயமான மாளிகையில் வசித்ததால்-கனகஸ்ருங்கா. பிரம்மன் மகாவிஷ்ணுவை தர்ப்பை புல்லில் ஆவாஹணம் செய்து உலகில் சாந்தி நிலவ செய்ததால்-குஸஸ்தலி. மகாபிரளய காலத்தில் தேவதைகளும் தீர்த்தங்களும் ஒளஷதங்களும் இங்கு ஒதுங்கி இறைவனால் காப்பாற்றப்பட்டதால் அவந்திகா. காஸ்யப மகரிஷி தன் மனைவி அதீதி மூலம் அமரர்கள் பிறக்க காரணமான ஸ்தலமானதால் அவராவதி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-58

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17166044
All
17166044
Your IP: 172.69.63.57
2020-06-02 19:50

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg