gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

குருஸ்ரீ பகோரா

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:36

மர்கட் ஆசனம்

மர்கட் ஆசனம்- கடின தரம்-1

நற்பயன்கள்- முழங்கால், கனுக்கால், இடுப்பு ஆகியன பலம் பெறும். இந்த பகுதி நரம்புகள் நல்ல இயக்கம் தரும்.

முதல் நிலை

1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

2.இடது காலத்தூக்கி இடது காலின் குதிங்கால் வலது பெருவிரலுக்கு அடுத்து இருக்கும்படி வைக்கவும்.

3.ஒன்றின்மேல் ஒன்றாக இருக்கும் கால்பாதங்களை அப்படியே முதலில் இடப்பக்கம் திருப்பவும். தலையை வலது பக்கம் திருப்ப வேண்டும்

4.பின் எதிர் திசையில் வலப்பக்கம் திருப்பவும். வலது பக்கம் திருப்பும்போது தலையை இடது பக்கம் திருப்பவும். இருபக்கமும் திருப்பும்போது பாதங்களின் சுண்டுவிரல்கள் நிலத்தில் படவேண்டும். படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இடது, வலது காலைமாற்றிச் செய்யவும். 3/5 முறை செய்யவும்.

இரண்டாம் நிலை

1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

2.முழங்கால்களை மடக்கி பாதம் புட்டத்தை ஒட்டியவாறு இருக்கட்டும். முழங்கால் கணுக்கால் இரண்டும் சேர்ந்தவாறு இருக்கட்டும்.

3.சேர்ந்த முழங்காலை அப்படியே முதலில் இடப்பக்கம் மடக்கி நிலத்தில் படும் அளவிற்கு சாய்க்கவும். தலையை வலது பக்கம் திருப்ப வேண்டும்.

4.பின் எதிர் திசையில் வலப்பக்கம் கொண்டுவந்து நிலத்தில் படுமாறு சாய்க்கவும். தலையை இடது பக்கம் திருப்பவும். படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

மூன்றாம் நிலை

1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

2.முழங்கால்களை மடக்கி பாதம் இரண்டும் போதிய இடைவெளியுடன் இருக்கட்டும். கைகள் குதிங்கால்களை தொட்டிருக்கவும்.

3.இரு முழங்கால்களை அப்படியே இடது பக்கம் சாய்க்கவும். இடதுகாலின் பெருவிரல்மீது வலது முழங்கால் இருக்கும்படி வைக்கவும். இடது கை இடது முழங்காலிலும் தலை, தோள்பட்டை இடது பக்கமும் திரும்பியிருக்க வேண்டும்.

4.பின் அப்படியே எதிர் திசையில் வலது பக்கம் சாய்க்கவும். வலது காலின் பெருவிரல்மீது இடது முழங்கால் இருக்கும்படி வைக்கவும். வலது கை வலது முழங்காலிலும் தலை, தோள்பட்டை வலது பக்கமும் திரும்பியிருக்க வேண்டும். படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

நான்காம் நிலை

1.கால்கள் இரண்டையும் நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலின் அருகில் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

2.இடது காலைத் தூக்கி முடிந்த அளவிற்கு 90 டிகிரி கொண்டுவந்து அப்படியே வலது பக்கமாக நிலத்தில் படும்படி வைக்கவும். தலையை இடது பக்கமாக திருப்பவும். படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்

3.வலது காலைத் தூக்கி முடிந்த அளவிற்கு 90 டிகிரி கொண்டுவந்து அப்படியே இடது பக்கமாக நிலத்தில் படும்படி வைக்கவும். தலையை வலது பக்கமாக திருப்பவும்.

4.படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:35

சர்வாங்காசனம்

சர்வாங்காசனம்- சர்வ நிலை- கடின தரம்-5

 

நற்பயன்கள்- உடலை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தைராய்டு சுரப்பிக்கு உதவி செய்கிறது. ஆண், பெண் பால் உறுப்புகள், சுரப்பிகளுக்கு உதவுகிறது. மூலம், இரண்யா, பருத்த சிரைகளுள்ள இரத்தக்குழாய், மாதவிடாய் கோளாறுகள் ஆகியவற்றைச் சீராக்கி இயங்கவைக்கும். தூக்கம் குறந்ததாலோ, இல்லாமற் போனதனாலே ஏற்படும் தளர்ச்சியை காலைசெய்யும்போது நீக்கியும், மாலை செய்யும்போது நல்ல அமைதியான இரவு தூக்கத்தையும் அளிக்கும். முதுகைப் பலப்படுத்தி முதுகு வலியைப் போக்கும். தலைக்கும், மேல் உடம்பிற்கும் இரத்த ஓட்டம் அதிகமாகச் சென்று தலைவலி, மூக்கு அடைபடுதல், தொண்டை கரகரப்பு ஆகியன சரியாகும். உடம்பின் எல்லா நரம்பு மண்டலங்களும் சரியாக இயங்கும். கழுத்து எழும்பு குறைகள் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.

1.சவ ஆசனத்தில் உடலைக் கிடத்தவும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளின் பாதங்கள் நிலம் நோக்கியவாறு இருக்கட்டும். இடுப்பு நிலத்திலிருக்க கால்களை மடக்கி உயரத்தூக்கி மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு வயிற்றினருகில் கொண்டுவரவும்.

3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு கால்களைத் நிலத்திற்கு 90டிகிரி இருக்குமாறு நேராகத் தூக்கவும். உங்கள் வசதியைப் பொறுத்து கைகள் இடுப்பைத் தாங்கி இருக்கலாம் அல்லது முன் இருந்த நிலையிலே இருக்கலாம்.

4.முழங்கால்கள் இரண்டும் நேராக இருக்க வேண்டும். பாதங்கள் நேராக வான் பார்த்திருக்க வேண்டும். தலை நேராக மார்பை பார்த்தவாரும் தாவாய்கட்டை மார்பை தொட்டவாறும் இருக்கவேண்டும்.

5.இந்த நிலையில் அப்படியே சுவாசித்து சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:34

ஹாலாசனம்

ஹாலாசனம்-ஏர்கலப்பை நிலை- கடின தரம்-5

 

நற்பயன்கள்- உடலில் உள்ள எல்லா தசைகளையும், எழும்புகளை இனைக்கும் தசைநார்கள் மற்றும் உறப்புகளேடு இனைந்திருக்கும் தசைகளையும் இழுத்து ரப்பர் தன்மையை அதிகரிக்கின்றது. கால் எழும்புகளில்களில் லேசான விரிசல் முதலியன சரியாகும். இந்த ஆசனம் அடிவயிற்றை அழுத்துவதால் வெளியேறும் இரத்தம் நிறைய கழிவுப் பொருள்களை வெளியேற்றுகிறது. அழுத்தம் குறையும்போது நிறைந்த ஆக்ஸிசன் கூடிய இரத்தம் அடிவயிற்றுக்குச் செல்கின்றது. வாயு வெளியேற்றப்படுகிறது. சரியாக இயங்காமல் இருக்கும் ஜீரண உருப்புகளை நன்றாக இயங்க வைக்கும். இதே அழுத்தம் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் ஏற்பட்டு தொண்டை, தைராய்டு, ஹைப்பர் தைராய்டு ஆகியன, சீராக இயங்கவும் கீழ் முதுகு வலி, முது தண்டில் ஏற்படும் சுகமின்மை ஆகியன சரியாகும். கழுத்து எழும்பு குறைகள் உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.

1.சவ ஆசனத்தில் உடலைக் கிடத்தவும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து கைகளின் பாதங்கள் நிலம் நோக்கியவாறு இருக்கட்டும். இடுப்பு நிலத்திலிருக்க கால்களை மடக்கி உயரத்தூக்கி மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு வயிற்றினருகில் கொண்டுவரவும்.

3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு கால்களைத் நிலத்திற்கு 90டிகிரி இருக்குமாறுத் தூக்கவும். உங்கள் வசதியைப் பொறுத்து கைகள் இடுப்பைத் தாங்கி இருக்கலாம் அல்லது முன் இருந்த நிலையிலே இருக்கலாம்.

4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு கால்களைத் தூக்கி தலைக்குமேல் வந்து கூடுமான அளவில் நிலத்தை தொடுமாறு வைக்கவும். தேவைப்பட்டால் இடுப்பை வளைத்து தூக்கவும். கால்கள் சேர்ந்தவாறு இருக்கட்டும். முழங்கால்கள் நேராக இருக்கட்டும்.

5.இந்த நிலையில் அப்படியே சுவாசித்து சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:33

மத்யாசனம்

மத்யாசனம்-மச்ச நிலை- கடின தரம்-4

நற்பயன்கள்- மார்புக்கூடு விரிவடைகிறது. அதனால் சுவாசக் கோளாறுகள் நீங்கும். சைனஸ் குறைகள் நீங்கும். சர்க்கரை, சுவாசகாசம் மற்றும் நுறையீரல் நோய்களுக்கு நல்லது. தைராய்டு மற்றும் பார தராய்டு சுரப்பிகள் நன்றாக இயங்கும்.

முதல்நிலை-

1.சவ ஆசனத்தில் படுக்கவும்.

2.புட்டம் நிலத்தில் பதிந்திருக்கமூச்சுக்காற்றை உள்ளே இழுத்து தலை, தோள்பட்டை, மேல்முதுகு, கைகள் ஆகியவற்றைத் தூக்கி தலைநிலத்தில் படுமாறும் மார்பை உயர்த்தியும் இருக்கவும். கால்கள் இரண்டும் நீட்டியவாறு இருக்கவும்.

3.முழங்கையை மடக்கி உயர்த்தி நெஞ்சின் மேல் இருகைப் பாதங்களும் இனைந்தவாறு இருக்கவும். (அஞ்சலி நிலை)

4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

இரண்டாம்நிலை-

 

1.சவ ஆசனத்தில் படுக்கவும்.

2.வலதுகாலை மடக்கி இடது தொடையின்மேல் வைக்கவும். இடதுகாலை மடக்கி வலது தொடையின்மேல் பத்மாசனத்தினைப்போல் வைக்கவும்.

3.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து மார்பை மேலே தூக்கி தலையின் உச்சி நிலத்தில் இருக்கும்படி நிமிரவும். இடது கையால் வலதுகாலின் பெருவிரலையும் வலது கையால் இடதுகாலின் பெருவிரலையும் பிடித்துக் கொள்ளவும்.

4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:32

சவாசனம்

சவாசனம்-சவ நிலை- கடின தரம்-1

 

நற்பயன்கள்- எளிமையான ஆனால் முக்கியமான ஆசனம். உடல், மனது இரண்டையும் முழுமையாக அமைதிப்படுத்தும் ஆசனமாகும். அலையில்லா ஒரு ஏரியைப்போல் மனம் தியானதின்போதும், மற்ற செயலாக்கங்களிலும் உதவும். உடலின் குறிப்பிட்ட இடத்தை நினைத்து கவனத்தைச் செலுத்துவதால் அங்கு அதிக காற்று சென்று அந்த பகுதியின் திசுக்கள் நன்றாகச் செயல்பட உதவுகிறது. உடலில் தளர்ச்சி மனதில் அழுத்தம் உள்ளவர்கள் யோகப் பயிற்சிகள் செய்ய ஆரம்பிக்கும்போதும் முடிக்கும்போதும் இந்த ஆசனம் செய்தால் பயனாக இருக்கும்.

1.நிலத்தின்மேல் விரிப்பில் கால்களை நீட்டியவாறு ஒன்றை ஒன்று தொடாதவாறும், கைகளின் பாதங்கள் மேல்நோக்கிய வண்ணம் உடலை ஒட்டியவாறு படுக்கவும்.

2.மூச்சுக்காற்றை ஆழமாக மெதுவாக சுவாசித்துக்கொண்டு கண்களை இதமாக மூடியிருக்கவும்.

3.தலையிலிருந்து ஆரம்பித்து உடலின் ஒவ்வொருபகுதியாக தளர்த்தி பாதம்வரை நினையுங்கள்.

4.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். தூக்கம் வரும் நிலைவந்தால் சுவாசிக்கும் வேகத்தை கொஞ்சம் அதிகம் படுத்துங்கள். அதன்பிறகு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

 

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:32

பாவனமுக்தி ஆசனம்

பாவனமுக்தி ஆசனம்-முக்தி நிலை- கடின தரம்-3

நற்பயன்கள்- வயிற்றுப் பகுதியில் உருவாகும் தங்கும் வாயுவை நீக்கும். ஜீரணசக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கலைப் போக்கும். அடிவயிற்றில் ஏற்படும் சதைக்கோளாறுகளை நீக்கும்.

முதல்நிலை-

                                  1.சவ ஆசனத்தில் உடலைக் கிடத்தவும்.

2.இடது முழங்காலைத் 90 டிகிரி தூக்கி மடக்கி நேராக நீட்டவும். கைகள் இரண்டும் உடலின் பக்கவாட்டிலும் கைப்பாதங்கள் நிலம் பார்த்த வண்ணம் இருக்க வேண்டும். இடது முழங்காலை மடக்கி பின் நீட்டும்போது வலது முழங்காலை 90 டிகிரி தூக்கி மடக்கி நேராக நீட்டவும்.

3.ஒருகாலை நீட்டும்போது அடுத்தகாலை மடக்கியும், மடக்கிய காலை நீட்டும்போதும் நீட்டியகாலை மடக்கவும் செய்யவும். தொடர்ந்து சிறிது வேகமாகச் செய்யவும். சைக்கிளை கால்களால் மிதிப்பது போன்ற பாவனையாகும். முடிந்தவரை தொடர்ந்து செய்யவும்.

இரண்டாம் நிலை-

                                  1.சவ ஆசனத்தில் உடலைக் கிடத்தவும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடது முழங்காலைத் தூக்கி 90 டிகிரி வந்துபின் மடக்கி முழங்காலை நெஞ்சின் அருகே இருக்குமாறு கைகள் இரண்டினாலும் கோர்த்து பிடிக்கவும்.

3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு தலையைத்தூக்கி இடது முழங்காலுக்கருகில் கொண்டுவந்து மூக்கின்நுனி இடது முழங்காலில் படுமாறு செய்யவும்.

4.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து பின் வலது முழங்காலைத் தூக்கி 90 டிகிரி வந்துபின் மடக்கி முழங்காலைக் கைகள் இரண்டினாலும் கோர்த்து பிடிக்கவும்.

5.மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு தலையைத்தூக்கி வலது முழங்காலுக்கருகில் கொண்டுவந்து மூக்கின்நுனி வலது முழங்காலில் படுமாறு செய்யவும். இந்த நிலையில் அப்படியே சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். இயற்கையாக சுவாசிக்கவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்                                                

மூன்றாம்நிலை-

                                  1.சவ ஆசனத்தில் உடலைக் கிடத்தவும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து இடது, வலது முழங்கால் இரண்டையும் தூக்கி 90 டிகிரி வந்துபின் மடக்கி முழங்காலைக் கைகள் இரண்டினாலும் கோர்த்து பிடிக்கவும்.

3.மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு தலையைத்தூக்கி இடது, வலது முழங்காலுக்கருகில் கொண்டுவந்து மூக்கின்நுனி இடது, வலது முழங்காலுக்கு இடையில் படுமாறு செய்யவும்.

4.இந்த நிலையில் அப்படியே சில நொடிகள் இருக்கவும். அதன்பிறகு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும். இயற்கையாக சுவாசிக்கவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:30

ஆஞ்சநேய ஆசனம்

ஆஞ்சநேய ஆசனம்-அனுமன் நிலை- கடின தரம்-4

 

நற்பயன்கள்- முதுகு, கைகள், மார்பு, கால்கள், இடுப்பு ஆகியவற்றின் இயக்கத்திற்கு சிறந்த பலன்களைத் தருகின்றது. இந்த ஆசனம் பல முத்திரகளை கொண்டுள்ளது. வாழ்வில் ஓர் புனித தன்மையடைய உதவும் ஆசனமாகும்.

1.முதலில் வஜ்ர ஆசனத்தில் அமரவும்.

2.முழங்காலில் அழுத்தம்கொடுத்து எழுந்திருக்கவும். இடுப்பு, தொடை, மார்பு, தலை ஆகியன் ஓர் நேர் கோட்டில் இருக்க வேண்டும்.

3.இடதுகாலை முன்னால் மடக்கியவாறு 90 டிகிரி கோணத்தில் இருக்கும்படி செய்யவும்.

4.கைகளின் பாதங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இதயத்திற்கு முன்னால் அஞ்சலி முத்திரை நிலையில் வைக்கவும்.

5.நன்றாக உடலை சமநிலைப் படுத்திக் கொண்டு கூப்பிய கைகளை மேலே உயர்த்தவும். தலையை மேல்நோக்கிப் பார்த்தவண்ணம் பின்னால் சாய்க்கவும்

6.இரு கால்களையும் சமநிலையில் உறுதிப் படுத்திக்கொண்டு முதுகையும் கைகளையும் பின்பக்கமாக சாய்க்கவும். இயற்கையாக சுவாசிக்கவும்.

7.சீராக மூச்சை விட்டுக்கொண்டு சில நொடிகள் அப்படியே இருந்து பின் மெதுவாகப் படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்

இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.

இரண்டு பக்கமும் சேர்த்து 3/5 முறை செய்யவும்

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:29

அரசு ஆசனம் எனப்படும் சிரசானம்

அரசுஆசனம் (எ) சிரசானம்-அரசு நிலை- கடின தரம்-7

நற்பயன்கள்- முதுகுத்தண்டுவடத்திற்கு பலமும் நன்றாக இனையும் தன்மையும் கொடுக்கின்றது. கைகள், தோள்பட்டைகள், மேல்முதுகு ஆகியவைகளுக்கு பலமும் நரம்பு, தசைகளுக்கு இலகுவான இயக்கத்தையும் ஊக்கத்தையும் தரும். உடம்பு முழுவதற்கும் ஒரு ஆரோக்கியமான மருந்தை அருந்திய சக்தியை அளிக்கும். கழுத்து, மார்பு, தண்டுவடத்திற்கு பலம் தரும்.நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையைப் போக்கும். நுறையீரலைப் பலப்படுத்தும். இரத்தக்கொதிப்பு, மனஅழுத்தம் உள்ளவர்கள் இதைசெய்யக் கூடாது.

1.விரிப்பின்மேல் வஜ்ராசனத்தில் அமரவும். தலையைக் குனிந்து நிலத்தை முன்நெற்றி தொடுமாறு வைக்கவும். கைகளின் பாதங்களைக் கோர்த்து தலைக்குமேல் இருக்கும்படி முன்கைகள் நிலத்தில் இருக்கும்படியும் வைக்கவும். கோர்த்த கைகள் தலையை ஒட்டியவறு இருக்கட்டும்.

1.கால் பாதங்களின் முன்பகுதியில் அழுத்தம் கொடுத்து இடுப்பை உயரே தூக்கவும். தலை, மார்பு, இடுப்பு ஆகியவை நேராக இருக்கும். முழங்காலை மடக்கி இடுப்பிற்கு மேல் தூக்கவும்.

2.தலையில் முழு அழுத்தம் ஏற்பட்ட நிலையில் அப்படியே கால்களை நேராக உயர்த்தவும். தலை, மார்பு, இடுப்பு, கால்கள் எல்லாம் நேராக இருக்கட்டும்.

3.எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்கமுடியுமோ அதுவரை இருந்துவிட்டு பின் முதல் நிலைக்குப் படிப்படியாக வரவும்.

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:28

விருச்சாகாசனம்

விருச்சாகாசனம்-தேள் நிலை- கடின தரம்-9

{gallery}asana/sitting_posture_asanas/viruchaka_asana-p{/gallery

நற்பயன்கள்- முதுகுத்தண்டுவடத்திற்கு பலமும் நன்றாக வளையும் தன்மையும் கொடுக்கின்றது. கைகள், தோள்பட்டைகள், மேல்முதுகு ஆகியவைகளுக்கு பலமும் நரம்பு, தசைகளுக்கு இலகுவான இயக்கத்தையும் ஊக்கத்தையும் தரும். உடம்பு முழுவதற்கும் ஒரு ஆரோக்கியமான மருந்தை அருந்திய சக்தியை அளிக்கும். கழுத்து, மார்பு, தண்டுவடத்திற்கு பலம் தரும்.

குறிப்பு: இந்த ஆசனம் கண்டிப்பாக ஒரு ஆசிரியர் மேற்பார்வையில் செய்ய வேண்டும். முதலில் செய்ய ஆரம்பிக்கும்போது சுவற்றில் சாய்ந்து நிற்கின்ற அளவில் தலை 2-3 அடி தூரத்தில் இருந்து செய்யவும். அழுத்தத்தை தாங்க முடியாமல் நிலை தடுமாறினால் சுவர்களில் சாயவும். ஆசனம் செய்தபின் முதல் நிலைக்கு வரும்போது கூட தடுமாறலாம். கவனம் தேவை.

1.விரிப்பின்மேல் வஜ்ராசனத்தில் அமரவும். தலை நிலத்தை தொட்டவாறும் முழங்கையை மடக்கி கைகளின் பாதங்கள் பக்கவாட்டில் நிலம் பார்த்தபடி தலைக்கு இருபக்கமும் வைக்கவும். கைபாதங்களுக்கிடையே தோள்பட்டை அளவிற்கு இடை வெளிவேண்டும்.

2.முழங்கை மற்றும் கைப்பாதங்களில் அழுத்தம் கொடுத்து முழங்காலை மடக்கி கால்களை தலைக்குமேல் முதுகு பின்னால் வளைந்தவாறு தூக்கவும்

3.தலயை மேலும் நிமிர்த்தி கைமற்றும் கைப்பாதங்களில் அழுத்தம் தாங்கி கால்களை உயரே தூக்கவும். கால்பாதங்கள் தலைக்குமேல் இருப்பதை உணருங்கள்.

4.எவ்வளவு நேரம் இந்த நிலையில் இருக்கமுடியுமோ அதுவரை இருந்துவிட்டு பின் முதல் நிலைக்குப் படிப்படியாக வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

வெள்ளிக்கிழமை, 16 November 2012 15:27

மயூராசனம்

மயூராசனம்-மயில் நிலை- கடின தரம்-9

 

{gallery}asana/sitting_posture_asanas/mayur_asana-p{/gallery

நற்பயன்கள்- மலச்சிக்கல், நெஞ்சு எரிதல், அஜீரணம் இவைகளை நீக்கும். வயிற்றில் ஏற்படும் குறைகள் நீங்கும். முன்கைகள், மணிக்கட்டு, தோள்பட்டை பலம் பெறும். வாயு உற்பத்தியாகி ஓர் இடத்தில் தங்கி ஏற்படுத்தும் கோளாறுகள் நீங்கும். இருதயம் பலவீனமானவர்கள் இதைச் செய்யக் கூடாது.

1.விரிப்பின்மேல் வஜ்ராசனத்தில் அமரவும். தலை நிலத்தை தொட்டவாறும் கைகளின் பாதங்கள் பக்கவாட்டிலும் விரல்கள் கால்களை நோக்கியும் நிலம் பார்த்தபடி உடம்பிற்கு இருபக்கமும் வைக்கவும்.

2.மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து, வெளியே விட்டவாறு கால்களின் விரல்கள் நிலத்தை தொட்டவண்ணம் இருக்கட்டும். முழங்கையை மடக்கி அடிவயிற்றில் வைத்து உடம்பின் பளுவை தாங்கியவாறு தலையைத் தூக்கவும்.

3.முழங்கால்களை நிமிர்த்தி நேராக வைக்கவும். மேலும் வயிற்றில் அழுத்தம் கொடுத்து கால்களை நிலத்திலிருந்து தூக்கவும். கால்களின் முன்பாகம் விரல்கள் நிலத்தை தொடாதவாறு இருக்கட்டும்.

4.கால்கள், இடுப்பு, முதுகு, கழுத்து, தலை எல்லாம் ஓர் நேர் கோட்டில் இருக்கவும். உடல் நிலத்திற்கு இணையாக கைகளின் உயரத்தில் இருக்கட்டும்.

5.இந்த நிலையில் அப்படியே சில நிமிடங்கள் இருக்கவும். அதன்பிறகு மூச்சுக்காற்றை வெளியே விட்டவாறு மெதுவாக படிப்படியாக முதல் நிலைக்கு வரவும்.

இந்த ஆசனத்தை 3/5 முறை செய்யவும்

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26936227
All
26936227
Your IP: 3.89.116.152
2024-03-29 06:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg