gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

அவதாரங்கள்! (10)

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 12:17

கல்கி அவதாரம்!

Written by

ஓம்நமசிவய!

யானை முகத்தான் பொருவிடையான்சேய் அழகார்
மான மணிவண்ணன் மாமருகன் மேனிமுகம்
வெள்ளக் குமிழி மதத்து விநாயகன் என்
உள்ளக் கருத்தின் உளன்!

####

கல்கி அவதாரம்!

எல்லா கிரக தோஷங்களையும் நீக்கும். கலியுக அவதார புருஷர்.

விஷ்ணுவின் கல்கி அவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்குபவள் திரிபுர சுந்தரி

#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 12:14

பலராம அவதாரம்!

Written by

ஓம்நமசிவய!

முன்னவனே! யானை முகத்தவனே! முத்திநலம்
சொன்னவனே! தூய மெய்ச் சுகத்தவனே!
மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே!
செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்தாள் சரண்!

####


பலராம அவதாரம்!

விஷ்ணுவும் ஆதிசேஷனும் ஒரே சமயத்தில் அண்ணனாகவும் தம்பியாகவும் பிறப்பு எடுத்தது.

பாரத போரில் எந்தப் பக்கமும் சேரமுடியாத தர்மசங்கடமான நிலையில் போர் நடைபெறும்போது பலராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். நைமிசரண்யம் சென்ற போது சூதமுனிவரைத்தவிர மற்றவர் மரியாதை செலுத்த சூதமுனிமேல் கோபங்கொண்ட பலராமர் ஓர் தர்ப்பையை எடுத்து மந்திரித்து ஏவ அது சூதரைக் கொல்ல, பலராமரால் கொல்லப் பட்டதால் சூதர் பிரம்மலோகம் சென்றார். பலராமரை பிரமஹத்தி தோஷம் பற்ற மானிட பிறப்பு எடுத்த அனைவரும் உலக நியதிக்கு கட்டுப் பட்டவர் என்பதற்காக தமது தோஷ பரிகாரத்திற்கு பன்னிரண்டு ஆண்டுகள் தீர்த்த யாத்திரை தொடர்ந்தார்.

இந்த பலராமர் தரிசனம் –குளிகன் தோஷம் நீக்கும். பெரும்பாலான திருத்தலங்களில் தசாவதாரச் சன்னதிகளில்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 11:48

கிருஷ்ண அவதாரம்!

Written by

ஓம்நமசிவய!

அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்த தொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!

####


கிருஷ்ண அவதாரம்!

ஆகாது எனச் சொல்லும் அஷ்டமி திதியை. நல்ல காரியத்திலிருந்து விலக்கிவிடுவர். இதனால் வருந்திய அந்த திதி தேவதையின் வேண்டுகோளுக்கிணங்கி கிருஷ்ணாவதாரம் அஷ்டமியில் நடக்க அது கோகுலாஷ்டமி என சிறப்புற்றது. இறை நம்பிக்கை கொண்டு வழிபட்டால் ஆகாதது என்றில்லை எதுவும் இப்பூமியில்.

கண்ணன் என்ற இந்த அவதாரமே பிறக்குமுன்னே தன்னை வெளிப்படுத்திய அவதாரம். எட்டாவது குழந்தையைக் கொல்லத் தயாராக இருக்கும் கம்சனைப் பற்றிக் கவலையுடன் இருக்கும் பெற்றோர்களுக்கு தன்னைக் பற்றியும் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை பிறக்குமுன் தன் மாயையால் உணர்த்தினார். வாசுதேவர் பயணிக்க சிறைக்கதவுகளை திறந்துவிட்டு யமுனையை வழிவிடச்செய்தார். அன்னை தேவகியாக இருந்தாலும் யசோதையிடம் வளர்ந்தார்.

நினைவே அடுத்த பிறப்பிற்கு அச்சாரம்!

ரத்னமாலா அசுரமன்னன் மகாபலியின் மகளாவாள். மகாவிஷ்ணு வாமனராக உருக்கொண்டு மகாபலியின் அவைக்குவர வாமனரைக்கண்ட ரத்னமாலாவிற்கு வாமனுருவிற்கு பாலூட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவள் கர்ம காரணப்படி அவள் பிறந்த அடுத்தபிறவி பூதகி. தன் முற்பிறவி எண்ணப்படி அவள் கிருஷ்ணருக்கு பாலூட்ட முற்பட்டு இறக்கின்றாள்.

காசியில் தவம் செய்துவந்த புலஸ்தியமுனிவர் துரோணாசலன் என்ற மலையரசனின் மகன் கோவர்த்தனை தன்னிடம் அளிக்குமாறு கேட்க மகனை பிரிய மனமில்லா நிலையில் தந்தையிருக்க மகனோ ஒரு நிபந்தனையுடன் புலஸ்திய முனிவருடன் செல்லத் தயாரானான். முதலில் எங்கே இறங்கி விடுகின்றாரோ அங்கேயே நான் தங்கி விடுவேன் என்றான். விரிஜா மண்டலத்தைக் கடந்த சென்று கொண்டிருந்தபோது ஓர் இடத்தில் கோவர்த்தனை வைத்துவிட்டு நீராடச் சென்றார். திரும்பி வந்து கோவர்த்தனைத் தூக்க அவரால் அவனை அசைக்கக்கூட முடியவில்லை. பெரும் மலையாக மாறினான் கோவர்த்தன். கோபம் கொண்ட புலஸ்தியர் ஒவ்வொரு நாளும் கடுகளவு பூமிக்குள் சென்று இறுதியில் மலை முழுவதும் பூமியில் புதைய சாபமிட்டார். சாபத்தின் பலனாக சிறிது சிறிதாக குறைந்து சிறிய மலையானது.

விரஜா மண்டலத்தைச் சேர்ந்த ஆயர்பாடி மக்கள் கிருஷ்ணனைக் கொண்டாடி மகிழ்வதில் காலத்தைக் கடத்தினர். அதனால் இந்திர விழாவைக் கொண்டாடவில்லை. இது இந்திரனுக்கு வருத்தத்தை அளித்தது. மழைக்கு அதிபதியாகிய இந்திரன் கோபத்தினால் பேய்மழை ஏழு நாட்கள் தொடர்ந்து பொழிய வைக்க ஆயர்பாடி மக்கள் வீடிழந்து பயிர் பச்சைகள் அழிய அடை மழையால் நிற்க இடமின்றி தவித்தனர். மக்கள் மழையால் அவதியுறுவதைக் கண்ட கிருஷ்ணன் அருகிலிருந்த கோவர்த்தன் மலையைத் தூக்கி தன் ஒற்றை விரலால் குடையாய் பிடிக்க மக்கள், பசுக்கள் மற்றும் சகல ஜீவன்களும் அதன் கீழ் பத்திரமாய் தங்கினர்.

இந்திரன் கிருஷ்ணரின் பெருமையறிந்து மன்னிப்பு வேண்டினான். மக்கள் தங்களை காத்திட்ட கிருஷ்ணனையும் கோவர்த்தன் மலையையும் வணங்கினார்கள். விரஜா வாசிகள் கோவர்த்தன் மலைக்கு நைவேத்தியம் ஆரத்தி எடுத்து விமரிசையான பூஜை-அன்னகூடபூஜை செய்தனர். கிருஷ்ணருக்கு ‘கோவர்த்தன கிரிதன்’ என்றும் கிரிதரகோபலன் என்றும் பெயர் ஏற்பட்டது. பர்ஸானாவிலிருந்து 21 கி.மி. கோவர்த்தன் மலையை வழிபடும் கோவில்- கிரிராஜ்தான்கடி

இருக்கும் நீர் நிலையை மக்கள் பயன்படுத்த முடியாவகையில் செயல்பட்ட காளிந்தி பாம்பின் மீது தன் கால்பதித்து அதன் அகந்தை அகற்றியதால் ஞானம் பிறந்த காளிந்திக்கு அவன் நஞ்சை நீக்கி அபயம் அளித்து மக்கள் நீரை உபயோக்க உதவி செய்தார்.

வஞ்சகமாக தன்னை அழிக்க நினைத்த அரக்கர்களான சகடாசூரனையும், பூதகியையும் கொன்றார்.

வேதங்கள், சாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயம், பண்பாடு எல்லாம் ஆத்மவின் உடல் உள்ளம் இரண்டையும் தூய்மையாக்கும் நல்லுரைகளை வழங்குபவை. எத்தனை உயிர்கள் அவற்றை சரியாகப் பின்பற்றுகின்றோம். கலியுகத்தில் உயிர்கள் அவைகளை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்தால் ஆடம்பர வாழ்கை முறைகளை தன் வாழ்க்கையில் புகுத்திக் கொண்டாலும் துன்பம் நேரிடும்போது ஆத்மா வேதங்களின் பாதையில் செல்ல விழைகின்றது.

குளம், குட்டை, ஆறுகளில் சிறுநீர் மலம் கழித்தல் தவறு, ஆடையில்லாமல் நீர் நிலைகளில் நீராடாதே. இது வேதம் சொல்வது.

ஊனக் கண்களினால் ஊனத்தை பார்க்கும் நாம் அறிவுக் கண்ணால் ஞானத்தைப் பார்க்க வேண்டும்.

நீர் வாழ் இனங்கள் நச்சுப் பிராணிகள் நமது உடல் உறுப்புகளை தீண்ட வாய்ப்புண்டு. அது அந்த உயிர்க்கு ஊறு விளைவிக்கும். இதை உணர்த்தவே ஆடைகளின்றி நீரில் குளித்துக் கொண்டிருந்த கோபியர்களின் ஆடையை ஒளித்து வைத்து கண்ணன் நடத்திய நிகழ்வு. தலைக்குமேல் கைகூப்பி வணங்க வேண்டி நிலை ஏற்பட்டதை கோபியர்கள் மறக்கமாட்டார்கள். இன்னொரு முறை ஆடைகளை களைந்து நீராட மனம் விரும்பாது. தண்டனையாக வேதத்தை போதித்தார் கண்ணன். ஆனால் அது கண்ணனின் லீலையாக கருதப்பட்டு விட்டது.

கம்சனை அழிக்கும் காலம் வரும்வரை கோகுலத்தில் கண்ணனாக வாழ்ந்தவர் மதுராவில் மக்களின் துயர் தீர்க்க தந்தையைச் சிறையிட்டு தானே முடிசூடிக்கொண்ட கம்சனைக் கொன்று உக்கிரசேன மகாராஜாவை சிறையிலிருந்து விடுவித்து அவர் ஆசியுடன் மதுரா மன்னனார்.

போரில் மக்களின் உயிர்கள் அழிவதால் ஏற்படும் இன்னல்களைத் தடுக்க கடலின் நடுவில் துவாரகையை அமைத்து ஜராசந்தனுடன் போரிடும் முறையை மாற்றினார். சமயம் வரும்போது விவேகமாக இருப்பதும் வீரம் என்பதை தன் செயலால் உணர்த்தியவர்.

ருக்மணியை சிசுபாலனுக்கு மணமுடிக்க இருந்த நிலையில் தன்மனதில் குடியிருந்த கண்ணனை, குலதெய்வம் கோயிலுக்கு தான் வரும்பேது கடத்திசென்று மணம்புரிய காதல் கடிதம் எழுத அவ்வாறே கண்ணன் மணமுடித்து துவாரகையின் மாடவீதிகளில் செல்ல அனைவரும் வணங்க உலகாளும் மன்னனை அடைந்தோம் என ஆணவம் கொண்டாள் ருக்மணி. அப்போது துர்வாசமகரிஷி அங்குவர தான் அமர்ந்த தேரை கண்ணனும் ருக்மணியும் இழுக்க விரும்ப, உடல் உழைத்திராத ருக்மணி நாவரண்டு சிரமப்பட கண்ணன் நிலத்தை கீர கங்கை தோன்ற தாகம் தீர்த்த ருக்மணியை, அதிதியான என்னை கவனியாமல் உன் கணவன் இறைவன் என்ற இருமாப்பில் என்னை அவமதித்தாய் என்று கோபமடைந்து கணவனுடன் 12 ஆண்டுகள் இனைந்துவாழ இயலாது என சாபம். கண்ணன் ருக்மணியிடம் அகங்காரம் கொள்ளாதே ஆடம்பரத்திற்கு அடிபணியாதே என ஆறுதல்

ருக்மணியிட்ம் மறுகரையில் இருக்கும் துர்வாசமுனிவரிடம் நிவேதனப் பொருளை கொடுத்துவரச் சொன்னார் கிருஷ்ணர். வெள்ளம் அதிகமாக இருக்க திகைத்த ருக்மணியிடம் ‘கண்ணன் நித்யபிரம்மச்சாரி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக் கண்ணன் கூறிவாறு சொல்லி ஆற்றைக் கடந்தாள். துர்வாசரிடம் நிவேதனப் பொருளைக் கொடுத்து திரும்பும்போது நதியைக் கடக்க துர்வாசர் கூறியபடி, ‘துர்வாசர் நித்ய உபவாசி என்பது உண்மையானால் நதியே வழிவிடு’ எனக்கூறி நதியைக் கடந்தாள்.

திரும்பி வந்தவள் கண்ணனைப் பார்த்து, என்னுடன் குடும்பம் நடத்தும் நீங்கள் நித்ய பிரம்மச்சாரி என்கிறீர்கள், நான் கொடுத்ததை உண்டுவிட்டு துர்வாசர் நித்ய உபவாசி என்கிறார் இது எப்படி சரி என்று கேட்க, கண்ணன், ‘எங்கள் இருவருக்கும் எதன் மீதும் பற்று இல்லை. அதனால் இல்லறத்தில் இருந்தாலும் நான் பிரம்மச்சாரி, நீ அளித்ததை உண்டாலும் துர்வாசர் உபவாசி என்றார். பற்று இன்றி, அனைத்தும் இறைவனது என எண்ணி வாழ்ந்தால், வாழ்க்கை பயணம் ஆனந்தமும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும் என்பதை ருக்மணிக்கு புரிய வைத்தார்.

நாட்டில் தர்மம் நிலைக்க பாண்டவர்கள் வெற்றி அவசியம் என்பதற்காக பல செயல்கள் நடைபெற்றது. அந்த செயல்கள் எல்லாம் நடைபெறவில்லையாயின் பாண்டவர்களுக்கு வெற்றி என்பது நிச்சயமாக கிடையாது. அந்த வெற்றிக்காக முன்கூட்டியே நடந்த செயல்கள் ஒவ்வொன்றிற்கும் இறையின் ஆலோசனை, அரவனைப்பு இருந்து கொண்டிருந்ததுதான் நிதர்சனம். சதுரங்கத்தில் வெற்றி பெற சதுரங்க காய்கள் எப்படி நகர்த்தப் படுகின்றதோ அதைப் போன்றே பாண்டவர்கள் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிட்ட பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. எதிரி எவ்வளவு பல சாலியாகவும் சக்தி மிக்கவராக இருப்பினும் தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக விஷ்ணுவாகிய பெருமாள் கிருஷ்ண அவதாரமெடுத்து தர்மத்தை நிலைநாட்ட பல நிகழ்வுகளை தர்மத்துக்கு சாதகமாக்கி பாண்டவர்கள் வெற்றிபெற உதவியாகயிருந்த அந்த நிகழ்வுகளை அனைவரும் அறிவோம்!

பண்டவர்கள் இறையருள் நிறைந்தவர்கள். அடக்கம், வாய்மை பண்புகளைக் கொண்டிருந்த வீரர்களான அவர்களுக்கு இறுதிவரை எல்லா நிலைகளிலும் உதவி செய்தார் கிருஷ்ணர். காண்டவ பிரஸ்தமாக இருந்த முள்வனத்தை மனம் தளராமல் உழைக்க வைத்து அழகிய இந்திரபிரஸ்தமாக மாற்ற உதவினார்.

சூதாட்டம் கண்ணனுக்கு தெரியக்கூடாது என தர்மர் நினைத்ததால் கிருஷ்ணர் அங்கு வரவில்லை. தர்மரின் அந்த நினைவே பாண்டவர்கள் சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து பாஞ்சாலியையும் இழந்தனர். அவையில் பாஞ்சாலி துகிலுரியப்படும்போது பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார் ஆகியோர் தம் கண்களைத்தான் மூடிக் கொண்டார்களேயன்றி முழுவதுமாக அந்த அநியாயத்தை எதிர்க்கவில்லை.

கண்ணா அபயம் என்று பாஞ்சாலி சரணடைந்ததும் சேலையை அனந்தம்- (அளவின்மை, அளவில்லாதவை) என்ற எல்லையில்லாமல் வளரச் செய்து திரௌபதியான பாஞ்சாலிக்கு கருணை காட்டினார். காட்டில் பாண்டவர்களின் பசியைப் போக்க அட்சயப்பாத்திரத்தை சூரியனிடமிருந்து பெற உதவினார். வனத்தில் கோபத்திற்குரியவரான துர்வாசரால் பாண்டவர்களுக்கு துன்பம் விளைவிக்க சகுனி முயற்சித்தபோது அட்சயப் பாத்திரத்தில் ஒட்டியிருந்த ஒர் பருக்கையை உண்டு துர்வாசரின் பசிபோக்கி பாண்டவர்களைக் காப்பாற்றினார்.

பஞ்சபாண்டவர்கள் வனவாசத்திற்காக கூகூர்-திருச்சேறை அருகில் வந்தபோது ஒரு மாமரத்தில் மாங்கனி இருப்பதைக் கண்ட பாஞ்சாலி அதைக் கேட்க ஒவ்வொருவராக முயற்சித்தும் மரம் அசையவில்லை. பின் ஐவரும் ஒன்று சேர்ந்து உலுக்க பழம் கீழே விழ அதை பாஞ்சாலியிடம் கொடுக்க அப்போது அங்கே வந்த முனிவர், இந்த மரத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒரு மாங்கனி காய்க்கும். துர்வாசர் வந்துகேட்டால் மாங்கனி அவர் மடியில் விழும். அதனால் இந்தப் பழத்தை மரத்திலேயே வைத்துவிடு என்று கூறிச் சென்றார். இப்படிச் சிறப்பு வாய்ந்த மாங்கனியை எப்படி மீண்டும் மரத்தில் சேர்ப்பது என நினைத்து கிருஷ்ணரிடம் வேண்ட அவர் கணியை மரத்தின் கீழ் வைத்து விட்டு அவரவர் மனதில் இருக்கும் உண்மையான தகவலைக் கூறக் கூற கனி சிறிது சிறிதாக உயர்ந்து மேலே சொல்லும் தவறாக தகவல் கொடுத்தால் அப்படியே நின்று விடும் என்றார். அதன்படி ஒவ்வொருவரும் ஒரு உண்மைத் தகவலைச் சொல்ல கணி உயர்ந்து மரத்தில் ஒட்டிக் கொண்டது. ஆம்பரம்-மாமரங்கள் நிறைந்த இடம்-ஆம்பரவனேஸ்வரர். பண்டவர்கள் வழிபட்டது. ஆதித்த சோழனால் கட்டப்பட்டது- ஆதித்தேசுவரம்- இறைவன் ஆதித்தேசுவரர். துர்க்கையின் கரத்தில் கிளி.-கூகூர்-திருச்சேறை அருகில்

இருபத்தெட்டாவது சதுர்யுக துவாபரயுகத்தில் நரநாராயணர்களே கிருஷ்ணனும் அர்ஜுனனும் எனப் பிறந்தார்கள் என்கிறது பாகவதம். அர்ஜுனன் எல்லா நிலையிலும் கிருஷ்ணரின் ஆலோசனையின் பேரிலேயே செயல் பட்டு வெற்றிகளைப் பெற்றான். பாசுபத அஸ்திரம்பெற வழிவகைகளைச் சொல்லி அர்ஜுனன் அதை அடைவதற்கும் சுபத்திரை திருமணம் முதல் அனைத்தும் கிருஷ்ணரின் உதவியுடன்தான் நடந்தேறீயது.

ஆயுதம் தாங்காமல் யுத்தத்தின்போது அர்ஜுனனின் தேரோட்டியாக அமர்ந்து நாகாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை காப்பாறினார். பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் தங்கள் கடமையை எப்படி செய்ய வேண்டும் என்பதை வழிகாட்ட வேண்டியதுதான் இறைபணி என்பதை உணார்த்தவே கிருஷ்ணர் சாரதியாக தேரோட்டியாக செயல் பட்டார்.

ஒவ்வொரு உயிரும் எந்த நல்ல தர்ம செயல்களாக இருந்தாலும் தம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டு இனி எல்லாம் உன் செயல் என்று சொல்லும் பக்குவத்தை அடையவேண்டும். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே, என்னிடம் விட்டுவிடு என்பதை உணர்த்தவே பாரதபோரின்போது உலகப் புகழ் பெற்ற கீதா உபதேசம் நடைபெற்றது.

சத்யபாமாவிற்கு தான் அழகு என்பதில் கர்வம்! விஷ்ணுவின் சக்ரத்திற்கு இந்திரனின் வஜ்ராயுதத்தை துளாக்கியதால் தானே பலசாலி என்று கர்வம்! தன்னைவிட வேகமாகப் பறக்க யாராலும் முடியாது என்று கருடனுக்கு கர்வம்! இவர்களின் கர்வத்தை நீக்க நினைத்த கிருஷ்ணர்,

துவாரகா எல்லையில் உள்ள ஒரு தோட்டத்திற்கு அனுமனை வரச் சொன்னார். கருடனிடம் சிறுபடை ஒன்றை கொண்டு நகரின் எல்லையில் உள்ள தோட்டத்தில் அட்டகாசம் செய்யும் அந்த வானரத்தை பிடித்துவரச் சொன்னார். வனரத்தைப் பிடிக்க படையா என்று நினைத்து தனியே சென்ற கருடன் எவ்வளவு முயன்றும் வானரத்தை பிடிக்க முடியவில்லை. கிருஷ்ணரிடம் சென்று சொல்ல, ஸ்ரீராமன் அழைப்பதாகச் சொல், வருவார் என்றார்.

ஸ்ரீராமர் அழைக்கின்றார் என்று சொன்னவுடன் பரவசமான அனுமன் கருடனை முன்னே போகச் சொல்ல, கருடன் நான் உன்னை விரைவாக தூக்கிச் சென்று விடுகின்றேன் என்று சொன்னதை வானரம் மறுக்க, கருடன் பறந்து கிருஷ்ணர் இருக்குமிடம் செல்ல ஆரம்பித்தார். தனது சக்கரத்திடம் யாரும் துவரகா எல்லைக்குள் வரமால் பார்த்துக்கொள் என்று சொல்ல வானரம் வருவதை அறிந்த சக்கரம் வானரத்தைத் தடுக்க அந்தச் சக்கரத்தை தனது கையால் பிடித்து வாயில் போட்டுக் கொண்டார் அனுமன்.

சத்யபாமாவை சீதைபோல் உருவம்தாங்கி அலங்காரத்துடன் வரச் சொன்னார். அனுமனின் வருகையை எதிர்பார்த்து இராமர் கோலத்தில் கிருஷ்ணர் இருக்க அருகில் அலங்காரமாய் பாமா இருக்க அனுமன் ஸ்ரீராமரை வணங்கிவிட்டு சீதைபோலிருக்கும் அருகிலிருந்த பாமாவை வணங்கப் போனவன் பாமாவைக் கண்டு கோபம் கொண்டான். என் அன்னை எங்கே! அலங்கோலமாக இருக்கும் இந்தப் பெண் யார்! என்று அனுமன் கேட்க, கிருஷ்ணர் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்க, குனிந்த தலை நிமிராமல் இருந்த பாமாவின் தான் அழகு என்ற கர்வம் தூளாகி உடைந்தது. சீதையை அழகியா என நினைத்த தம்மை இந்த வானரம்கூட தான் அழகை அறியவில்லை என்றால், கணவனே தெய்வம் என்று வாழ்ந்த சீதையின் அழகைவிட தான் அழகில்லை என்று நினைத்தாள். அவளின் கர்வம் அடங்கியது.

ஸ்ரீராமர் உருவில் இருந்த கிருஷ்ணர் அனுமனை நோக்கி உன்னை யாரும் தடுக்க வில்லையா என்று கேட்டபோது தன் வாயிலிருந்து சக்ரத்தை எடுத்து வெளியேவிட்டார். ஒளி இழந்து மங்கிய நிலையடைந்திருந்த சக்ரம் தன் நிலை உணர்ந்து கர்வத்தை விட்டது.

வேகமாக வந்த கருடன் தனக்குமுன் அங்கு வானரம் இருக்கக் கண்டவுடன் தன்னை விட வேகமாக பறக்க ஒருவரால் முடியும் என்று அறிந்ததும் கருடன் கர்வம் அடங்கியது.

கிருஷ்ணரின் மனைவியரில் சத்யபாமாவிற்கு ருக்மணியைவிட தனக்குத்தான் அளவு கடந்த அன்பு உள்ளது என்று கர்வத்துடன் நினைத்திருந்தாள். கர்வம் கலந்த அன்பு தன் உயர் நிலையை இழந்து விடுகின்றது என்பதை சத்யபாமாவிற்கு புரிய வைக்க இருவருக்கும் ஒரு போட்டியை வைத்தார்.

துலாபாரத்தில் ஒரு தட்டில் அமர்ந்து கொண்டார். துலாபாரத்தை வைத்து அன்பை எடைபோடுவது என்றானதும் சத்யபாமா தன்னிடம் உள்ள பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம் என்று விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் சத்யபாமா கொண்டுவந்து வைத்தாள். எவ்வளவு வைத்தும் தட்டு சிறிதளவுகூட உயரவில்லை.

அடுத்ததாக அவற்றையெல்லாம் எடுத்துவிட்டு ருக்மணியின் முறை வந்தபோது அவள் தன்னைவிட உயர்ந்த பொருட்கள் எதை வைக்கின்றாள் என்று சத்யபாமாவும் மற்றவர்களும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்க ருக்மணி கிருஷ்ணரை வணங்கி தோட்டத்திற்குச் சொன்று சிறிது துளசி இலைகளைக் கொண்டுவந்து வைத்தாள். உடன் துலாபாரம் உயர்ந்தது. சத்யபாமா அப்போது தன் அன்பில் கர்வம் குடியிருப்பதை உணர்ந்தாள். தூய அன்பு மற்றும் துளசியின் பெருமை இதனால் உணரப்பட்டது.

கிருஷ்ணபக்தி யாரிடம் அதிகமாக இருக்கின்றது என்பதை அறிய எண்ணிய கிருஷ்ணன் தனக்கு தலைவலி எனச் சொன்னார். அந்த தலைவலி போகவே இல்லை. அங்கு வந்த ரிஷி நாரதர் உண்மையை உணர்ந்து கிருஷ்ணரிடம் உண்மையான பக்தி கொண்டவrகளின் பாத தூளியை கொண்டுவந்து தடவினால் வலி நீங்கும் என்றார். ருக்மணி சாத்யபாமா இருவரும் பாத தூளியினை பகவான் நெற்றியில் தடவுவதா என மறுத்துவிட்டனர். நாரதர் பிருந்தாவனத்திற்கு ஆட்களை அனுப்ப அங்கிருந்த கோபியர்கள் அனைவரும் வருத்தமுற்று தங்களின் கால்களில் உள்ள தூளியை சேர்த்து மூட்டையாகக் கட்டி இங்கு அனுப்பினர். அதை தடவியதும் அவர் தலைவலி நின்றது. கோபியரின் மேன்மை அப்போது புரிந்தது.

பூமாதேவியைக் கடத்திகொண்டுச் சென்று ஆழ்கடலில் ஒளித்துவைத்தான் இரண்யாட்சன் என்ற அசுரன். திருமால் வராக அவதாரமெடுத்து பாதாளாலோகம் சென்று இரண்யாட்சனுடன் போர் புரிந்து அவனைத் தன் கோரப்பற்களால் குத்தி கிழித்து வதம் செய்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார் திருமால் அசுர சம்ஹாரத்தினால் ஏற்பட்ட கோபம் தீராத வராக மூர்த்தியினால் கடல்வாழ் உயிரினங்கள் துன்பமடைந்தன. முனிவர்கள் கயிலைநாதனிடம் சொல்ல சிவன் தன் கைகளினால் வராகத்தின் கொம்புகளை உடைக்க அதன் ஆவேசம் அடங்கி ஸ்ரீ விஷ்ணுவாக மாறினார்.

அப்போது திருமாலுக்கும் பூமாதேவிக்கும் ஏற்பட்ட உறவால் பிறந்தவன் நரகாசுரன். தன் பிள்ளைக்கு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று சாகாவரம் கேட்டாள் பூமாதேவி. சாகாவரம் நேரிடையாக தரக்கூடாது என்பதால் தாய் தவிர வேறு எவராலும் மரணம் ஏற்படாது என வரமளித்தார். நீ விரும்பும்போது உன்னாலன்றி அவனுக்கு மரணம் வராது என்றார். வளர்ந்த நரகாசுரன் இந்த வரத்தால் அசுர பலம்பெற்று தனக்கென்று ஒர் நாட்டை உருவாக்கிக் கொண்டு மற்ற நாடுகளையும் ஆக்கிரமித்தான். தேவர்களையும் தவம் செய்யும் முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்திய நரகாசுரன் பற்றிய செய்திகளை அவர்கள் விஷ்ணுவிடம் கூறி தங்களை அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டினர்.

பூமாதேவி சத்யபாமாவாகப் பிறந்து கிருஷ்ணனின் மனைவியாக இருந்தாள். நரகாசூரனுடன் போர் புரிய கிருஷ்ணன் தன் தேரோட்டியாக சத்யபாமாவையே அழைத்துச் சென்றார். நரகாசூரன் விட்ட அம்பு தன்மேல் படும்படி செய்து அதனால் மயக்கமடைந்தவர் போலிருந்தார். இதைக்கண்டு கோபமடைந்த சத்யபாமா வில்லை எடுத்து நாணேற்றி நரகாசூரன்மீது அம்பை எய்தினாள். அம்மா என்று அலறியபடி நரகாசூரன் விழா அதைக்கேட்டு எழுந்தார் கிருஷ்ணன். நரகாசூரன் அவ்வாறு அலறியதற்கு காரணம் என்ன என்று சத்யபாமா கேட்க, நீ முந்தைய அவதாரத்தில் பூமாதேவியாக இருந்தாய். அப்போது நமக்குப் பிறந்தவன் இந்த நரகாசூரன். அவன் அட்டூழியங்கள் அதிமாகிவிட்டன. தாயைத் தவிர வேறு யாராலும் மரணமில்லை என்று வரம் பெற்றதால் உன்னை வைத்து அவன் அட்டூழியங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்தேன் என்றார். தாய்பாசம் பொங்கி இருக்கும் சத்யபாமாவிடம் நரகாசூரன் நான் மோட்சத்தைப் பெறும் இந்நாளை உலக மக்கள் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் எனவேண்ட அவள் கிருஷ்ணரைப் பார்க்க அவரும் அவ்வாறே வரம் தந்தார். தீபாவளி- ஐப்பசி சதுர்தசி நாளான அன்று மக்களுக்கு கங்காஸ்நானம் செய்த பலன் கிட்ட அருள் புரிந்தார்.

பிண்டாரக் சேத்திரம் என்ற இடத்திற்கு வந்த விஸ்வாமித்திரர், கண்வர், நாரதர் ஆகிய முனிவர்களை யாதவ குமாரர்கள் கிண்டல் செய்ய ஜாம்பவதியின் மகனான சாம்பனுக்கு பெண்வேடமிட்டு முனிவர்கள் முன் நிறுத்தி இவள் கர்ப்பவதி இவளுக்கு ஆண் குழைந்தையா, பெண் குழைந்தையா எனக் கேட்க உண்மை உணர்ந்த முனிவர்கள் ஓர் உலக்கைப் பிறக்கும். அது உங்கள் குலத்தையே அழிக்கும் என்றனர்.

அப்படியே நடக்க- உலக்கைப் பிறந்தது. பயந்த யாதவர்கள் அந்த இரும்பு உலக்கையை பொடிபொடியாக்கி கடலில் கரைத்தனர். இரும்புத் தூள்கள் கடற்கரையில் வந்து படிந்து நாணல் புதராக வளர்ந்தது. மீதி இருந்த இரும்புத் துண்டை மீன் விழுங்க அந்த மீன் மீனவன் வலையில் அகப்பட அதைக் கொன்றவன் அந்த இரும்புத் துண்டை வீசி எறிய அது ஜரா வேடனின் கையில் கிடைக்க கூர்மையாக இருந்த அந்த இரும்புத்துண்டை அவன் தன் அம்பில் பொருத்திக் கொண்டான்.

விதியின் வேலை சரியாக நடக்க யாதவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு தங்களிடமிருந்த ஆயுதங்கள் எல்லாம் தீர்ந்ததால் கடற்கரையில் உள்ள நாணல் புற்களைப் பிடுங்கி சண்டையிட உலக்கை துகள்கள் பட்டு அனைவரும் இறக்க கடல் வெள்ளம் துவாரகா நகரில் புகுந்து நகரை மூழ்கடித்தது.

கிருஷ்ணர் தான் பூஜித்து வந்த விக்ரகங்களை கடலில் விட்டு தியானத்தில் அமர்ந்தார். கடல் தண்ணீரில் வேடன் ஜரா விட்ட கூரிய அம்பு மிதந்து வந்த கிருஷ்ணரைக் குத்த மானிட சரீரத்தை துறந்து பிரம்ம சொரூபத்தில் ஐக்கியமாகி வைகுண்டம் சென்றார்.

கிருஷ்ணரைப் பிரிந்த துக்கம் தாளாமல் கோபியர்கள் பதினாறாயிரம் பேரும் துவாரகை அருகில் இருந்த குளத்தில் விழுந்து உயிர் துறந்தனர். அவர்கள் உயிர் தியாகம் செய்த குளம் கோபிதலாவ். குளத்தின் பக்கப் பாறைகள் சந்தன மணம் தருகின்றன. உயிரை மாய்த்த கோபியர்கள் சந்தனமாக மாறினர். இந்தக் குளத்தின் மண்ணிலிருந்துதான் கோபி சந்தனம் தயாரிக்கப்படுகின்றது. துவாரகை-கோபிதலாவ்

பலகாலங்கழித்து கேரளக் கடற்கரையில் வலை வீசிய மீனவன் கையில் ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்கணன், ஆகிய நான்கு விக்ரகங்களும் கிடைத்தன. சிற்றரசன் வாய்க்கல்கைமள் என்பவனிடம் ஒப்படைக்கபட்ட விக்கரகங்கள் ஒவ்வோர் இடத்தில் பிரதிஷ்டை. இராமர் விக்ரகம் திருப்பரையாரில் பிரதிஷ்டை. லட்சுமணன்- திருமூழிக்களம், பரதன்- கூடல் மாணிக்கத்தில், சத்ருக்கனன்-பாயமேயில் எனப் பிரதிஷ்டை. திருப்பரையார்-கேரளா

விஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் காளி.

ஸ்ரீ கிருஷ்ணனை வழிபட்டால் சந்திர தோஷம் நீங்கும் எண்ணற்ற கோவில்கள் உள்ளன

#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 11:29

ராம அவதாரம்!

Written by

ஓம்நமசிவய!

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா முகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்!

####

ராம அவதாரம்!

ஆகாது எனச் சொல்லும் நவமி திதியை. நல்ல காரியத்திலிருந்து விலக்கிவிடுவர். இதனால் வருந்திய அந்த திதி தேவதையின் வேண்டு கோளுக்கிணங்கி இராமவதாரம் நவமியில் நடந்து ஸ்ரீராமநவமி எனப் புகழ்பெற்றது. இறை நம்பிக்கை கொண்டு வழிபட்டால் ஆகாதது என்றில்லை எதுவும் இப்பூமியில். ராமர் திரேத யுகத்தில் ரகுவம்சத்தில் உத்தராயணத்தில் சித்திரை மாதம் சுக்லபஷ நவமிதிதியில் புனர்பூச நட்சத்திரத்தில் சிம்ம லக்னத்தில் அவதரித்தார். அந்த நாளே ஸ்ரீராமநவமி எனப்படும்.

ஆறுவது சினம் என்றார் ஒளவையார். சினம் சேர்ந்தாரைக் கொல்லும் என்றார் வள்ளுவர். எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும் என்றனர் பெரியோர். கோபம் செல்லுமிடம் செல்லாத இடம் இரண்டிலும் கோபம் கொடியதே! தீமை விளைவிக்கும். சூர்பணகை செயலால் இலக்குமணன் கொண்ட கோபம் செல்லக் கூடிய கோபம். மூக்கிழந்த சூர்பணகையைக் கண்டு இராவணன் கொண்டது செல்லாத இடத்தில் நிகழ்ந்துவிட்டது. அதனால் எத்தனைபேருக்குத் துன்பம்.

இராமன் கோபம் கொண்டிருந்து கைகேயின் ஆனையை மீறி நடந்திருந்தால் இராமயணம் என்ற இதிகாசமும் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி என்ற தியாகர் நமக்கு கிடைத்திருக்காது.

பொறுமையின் அவதாரம் ராமர். ஏக பத்னி விரதன். ராமன் உத்தமன் என்பதால் கல்லாக இருந்த அகலிகை ராமர் காலடி பட்டு சாபம் நீங்கி சுய உருவை அடைந்தாள்.

இராவணனை வதைத்துவிட்டு இராமேஸ்வரம் வந்ததும் ராமர் சிவ பூஜை செய்ய தீர்மானித்து அனுமனை காசிக்கு அனுப்பி லிங்கம் கொண்டுவரச் சொல்லிவிட்டு அவர் வருவதற்குள் சீதை செய்த மணல் லிங்கத்தை வைத்து பூஜையை முடிக்க பின் அனுமன் கொண்டு வந்த லிங்கமும் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உள்பொருள் ஒன்று மறைந்து கிடக்கின்றது.

சிவபூஜைக்கு அருகில் இருந்தே ஒரு லிங்கத்தைக் கொண்டுவரச் சொல்லி இருக்கலாம். அல்லது சீதை செய்ததைப்போல் தானே ஒரு லிங்கத்தை செய்து வழிபட்டிருக்கலாம். பின் ஏன் அனுமனை காசியிலிருந்து லிங்கம் கொண்டுவரச் சொன்னார்? இராமர்!

இராமர் முதலில் வழிபட நினைத்தது காசி விஸ்வநாதரை. ஈசன் இருப்பிடம் கயிலை என்றாலும் அவர் நிரந்தர வாசம் செய்வது வாரணாசி என்கிற காசியில்தான். விஸ்வம் என்றால் உலகம். அதன் தலைவர் விஸ்வநாதர். மானிடப் பிறவியில் உலகத்தின் தலைவர் விஸ்வநாதரை வழிபட நினைத்தார்.

அடுத்தது எல்லா சமயத்திலும் அஞ்சனை மைந்தன் அனுமனை அருகில் வைத்துக் கொண்ட இராமர் சிவ பூஜையின் போது மட்டும் அவர் தள்ளி யிருக்க நினைத்ததால் காசிக்கு அனுப்பினார். அதற்கு ஓர் காரணம் உண்டு. நம் எல்லோருக்கும் தெரியும் உற்சவர் உலாவரும்போது மூலவரின் சக்திகள் உற்சவரில் அடங்கும். கோவில்களில் உற்சவர் உலாவின் போது மூலவரை திரை போட்டு வைப்பார்கள் தெய்வ சன்னியத்தியம் விலகி இருக்கும்போது மூலவரை வழிபடக் கூடாது என்பதால்.

இராமேஸ்வரத்தில் உற்சவ வடிவமாக அவரது அம்சமான அனுமன் இருக்கும்போது எப்படி மூல விஸ்வநாதர் உருவத்தை வணங்க முடியும். மூல உரு இருக்க வேண்டியது காசியில். அனுமன் காசியில் சிவ அம்சமாக இருந்தால் தான் விஸ்வநாதரை உற்சவராக இங்கு பிரதிஷ்டை செய்த லிங்கத்தில் ஆரோகணம் செய்து வழிபடலாம் என்பதாலேயே அனுமனைக் காசிக்கு அனுப்பினார். அவர் வருவதற்குள் பூஜை முடித்தார்.

அனுமன் லிங்கம் கொண்டு வந்ததும் அவர் கையாலேயே பிரதிஷ்டை செய்ய வைத்தார். சிவனின் அம்சமான அனுமன் ஸ்தாபித்த சிவலிங்கம். அதனால்தான் முதல் பூஜை அனுமன் லிங்கத்திற்கு பிறகு இரண்டாவதாக தான் பிரதிஸ்டை செய்த லிங்கத்திற்கு நடக்க வேண்டும் என்றார்.

இதேபோன்றே பாபநாசம்- 108 சிவாலயத்திலும் இராமர் பூஜை செய்ய நினைத்தபோதும் இவ்வாறே செய்தார் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

சிவ அம்சமாக வடிவெடுத்த மாருதி காசிக்கு போய்விட்டு இராமேஸ்வரம் வந்து லிங்கம் பிரதிஸ்டை செய்து வழிபட்டிருக்கும்போது மானிடர்களான நாமும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே காசிக்குப் போகிறவர்கள் இராமேஸ்வரத்திற்கும் போகவேண்டும் எனச் சொல்லப்பட்டது.

மகாலட்சுமிதான் சீதையாக அவதாரம் கொண்டவள் என்பது அனைவரும் அறிந்ததே! சிவபக்தனாக இராவணன் இருந்தாலும் மகாவிஷ்ணுவின் மார்பில் உறையும் பாற்கடல் வாசியான மகாலட்சுமியை ஓர் அரக்கன் தூக்கிச் செல்ல முடியுமா! முடியும்! ஏனெனில் சீதை ஓர் மாயை. இராவணன் துறவி வேடமெடுத்து பர்ணசாலை வாயில் நிற்கும்போது அவன் எண்ணங்களை உணர்ந்த சீதை அக்னி தேவனை பிரார்த்திக்கின்றாள். சீதை அக்னிக்குள் ஒளிந்துகொள்ள அக்னிதேவன் அந்த இடத்தில் ஒரு மாயா சீதையை தோற்றுவிக்க அந்தச் சீதையையே இராவணன் தூக்கிச் செல்கின்றான். இந்த மாயா சீதையின் காராணமாகவே ராம-ராவண யுத்தம் நடைபெற்று இராவண சம்ஹாரம் நடைபெறுகிறது.

இராவணன் சீதையைக் கடத்திக் கொண்டு அசோக வனத்தில் வைத்திருந்தபோது எத்தனை முயற்சித்தும் சீதை அவனைத் திரும்பி பார்க்கவில்லை. மற்றவர்கள் ஆலோசனைப் படி தன் உருவத்தை இராமனாக மாற்றினான். அந்த உருவத்துடன் அசோக வனம் சென்று சீதைமுன் நிற்க நினைத்தவன் அங்கு போகமல் தன்னுடைய அந்தப்புரம் சென்று மண்டோதரி முன் நின்றான். யாரோ திடீரென்று தன் முன் வந்து நிற்கின்றார்களே என வெகுண்டு மண்டோதரி எழுந்திருக்க வந்திருப்பது இராவணன்தான், இராமர் உருவத்தில் வந்துள்ளேன் என உணர்த்தினான்.

அப்போது மண்டோதரி நீங்கள் நீங்களாக வராமல் ஏன் மாறுவேடத்தில் வந்துள்ளீர்கள் எனக் கேட்டாள். இராவணன் சொன்னான், நான் உன்னைப் பார்க்க உருமாறி வரவில்லை, சீதையைப் பார்க்க போவதற்காக இப்படி மாறியுள்ளேன் என்றான். அப்படியானால் அங்குதானே போக வேண்டும், இங்கு ஏன் வந்தீர்கள் எனக் கேட்டாள். அது என்ன வென்று தெரியவில்லை. இராமர் உருத்தரித்ததிலிருந்து உன்னைத்தவிர மற்ற ஸ்திரீகளைத் தாயாகப் பார்க்க தோன்றுகிறது. அதனால்தான் சீதையைப் பார்க்கப்போகாமல் இங்கு வந்து விட்டேன் என்றான் இராவணன். ராமாவதாரத்தின் சிறப்பே இது.

பித்துரு பரிகாரத்தலம். ராமர், சீதை பாத தரிசனம் செய்தபின், சிரார்தம் செய்ய ராமர் பொருட்கள் வாங்க செல்ல, அப்போது தசரதன் தான் செல்ல நேரம் ஆனதால் சீதையை சிரார்தம் செய்ய அனுமதி கொடுக்க, சீதை பசு, துளசி, அரசு, பவகலை ஆற்றுமணல், ஐயர் ஆகியோரை சாட்சி வைத்து செய்ய அதை ஏற்றுக்கொண்டு தசரதன் சென்றுவிட, அங்குவந்த ராமர் தந்தை வந்த நிகழ்வை நம்பாதாதபோது, அரசு தவிர மற்றவர்கள் தங்களுக்கு ஆதாயம் ஏதும் இல்லையாதலால் தாங்கள் கண்டதை மறைக்க பாவம் சேர்த்தனர். ஐயர்-தட்சனை எவ்வளவு பெற்றாலும் திருப்தியில்லை. துளசி- அசுத்தமான இடங்களிலும் தோன்றுதல், பசு- முகத்திற்கு மரியாதையில்லை, பவகலை மணல்- ஆற்றின்மேல் நீரில்லை. அரசுக்கு கோவிலில் மரியாதை.-கயாசேத்திரம்

பிரமஹத்தி தோஷத்திற்கு பரிஹாரம் செய்து அயோத்தியில் அரசு பொறுப்பேற்றபின் ஓர் சூழலில் சீதை ராமரின் சந்தேகத்தின் பேரில் அக்கினி பிரவேசம் செய்கின்றாள். அக்கினி தான் தோற்றுவித்த மாயா சீதையை பெற்றுக் கொண்டு தம்மிடம் அடைக்கலமாக இருந்த சீதாவை திருப்பி அனுப்புகின்றான். இதனால் உண்மையான சீதைக்கும் இராவணனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது பிரம்ம வைவார்த்த புராணம் சொல்வது.

அன்பே சிவம்-இராமாவதாரம்!

எல்லா உயிரையும் மனித நேயத்துடன் நேசி. ஜாதி, மதம், இனம், தேசம், மொழி எல்லாம் கடந்து அன்பு ஒன்றையே பிரதானமாகக் கொண்டால் வாழ்வு வளம் சேர்க்கும். எல்லோரும் போற்றுவர். இதை உணர்த்தும் விதமாக இராமாவதாரத்தில், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த குகனுடனும், குரங்கு இனத்தில் பிறந்த சுக்ரீவனுடனும், அரக்க குலத்தில் பிறந்த விபீஷணனுடனும் சகோதர உணர்வுடன் பழகியுள்ளார் இராமர். சபரிக்கும், அகலிகைக்கும் தாய்ஸ்தானத்தில் வைத்து போற்றினார். பறவை இனத்தில் பிறந்த ஜடாயுவை தன் பெரியப்பா ஸ்தானத்தில் வைத்து போற்றினார். உயிர்களின்மேல் தூய அன்பு எல்லாவற்றையும் கடந்து நிற்கும்.

விஷ்ணுவின் ராமாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் தாரா. எனவேதான் ராமருடைய மந்திரம் ‘தாரகா மந்திரம்’ எனப்பட்டது.

வாலியைக் கொன்ற பிரமஹத்தி பாவம் தீர இராமர் வழிபட்டது –அன்னியூர்-இராமநாத ஈஸ்வரர். இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமர் வழிபட்டது- பாபநாசம்-108சிவன்.

ஸ்ரீ ராமரை வழிபட்டால் சூரியன் தோஷம் நீங்கும். அயோத்தியிலிருந்து பல ராமர் கோவில்கள் இருக்கின்றன.

#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 11:21

பரசுராம அவதாரம்!

Written by

ஓம்நமசிவய!

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணியாவுறை
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்!

####

பரசுராம அவதாரம்!

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி தினமும் கலைக் கடன்களை முடித்து குளித்துவிட்டு ஆற்று மணலில் குடம்செய்து கணவரின் யாகத்திற்கு நீர் எடுத்துச் செல்வது வழக்கம். ஒருநாள் குடம் செய்ய முற்படும்போது வானில் கார்த்தவீரியார்ஜூனன் என்ற மன்னன் தன் ஆயிரம் கைகளுடன் வானில் செல்வதைப் பார்த்து பிரமித்த ரேணுகாதேவியினால் அன்று மணலில் குடம் செய்யாமல் போக தன் கணவரிடம் செல்ல ஞானதிருஷ்டியில் அனைத்தையும் உணர்ந்த ஜமதக்னி தடம் மாறவில்லை, மனம் தடுமாறிவிட்டாள் என்பதை அறிந்து கற்பில் தவறி விட்டாய் பெண்ணே என்று சொல்லி தன் மகன்களை அழைத்து அவளது சிரசை கொய்யச் சொன்னார்.

முதல் மூவரும் மருகி நிற்க நான்காவதான பார்க்கவன். தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை என்றாலும் உபநிடத கருத்துப்படி தந்தையின் விந்துதான் தாயின் கருவினுள் போய் முதல் பிறப்பு தந்தையுடையது என்கிறது. தாயின் கருப்பையை கோவிலாக்குவது தந்தையின் பிரதிஷ்டை, அதனால்தான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதால் பிதாவின் வார்த்தைகளை நிறைவேற்றுவது தன் கடமை என்று தன் தாயின் சிரசை கொய்து எடுத்து வந்து தன் தந்தையிடம் சமர்ப்பித்தார்.

பின்னர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று செயல் பட்டிருந்தாலும் அவரின் மனம் தாயைக் கொன்ற வேதனை நிறைந்திருந்தது. அப்போது அவரைக் கண்ட ஜமதக்னியிடம், தங்கள் தவ வலிமையால் தாயை உயிர் பிழைக்க வைக்க வேண்டும், மேலும் நடந்தது எதுவும் தாயின் நினைவில் இல்லாமல் குற்றமற்றவளாக விளங்க வேண்டும் என்ற இரண்டு வரங்களைப் பெற்றார்.

பத்தொன்பதாவது சதுர்யுகத் திரேதாயுகத்தில் விஷ்ணு ஜமதக்னிக்கு மகனாகப் பிறந்தார். மகாவிஷ்ணுவின்  அவதாரங்களுள் ஒன்று பார்க்கவன். சிறந்த சிவபக்தர். அவர் சிவனை நோக்கி கடுமையான தவம் மேற்கொண்டிருந்தபோது அவரை சோதிக்க எண்ணங்கொண்டார் சிவபெருமான். வேடன் உருவமெடுத்து தான் கொன்ற மானின் மாமிசத்தை எடுத்து வந்து பரசுராமர் அருகில் வைத்தார்.

முகம் சுழித்த பார்க்கவன் இதை எடுத்துச் செல்லுமாறு வேடனிடம் சொல்ல, தவசிரேஷ்டரே, என்னை ஒன்றும் தூஷிக்க வேண்டாம், என் மனைவி, மக்களின் உணவிற்காக இந்த மாமிசத்தை கொண்டு போகிறேன். இது பிரம்மன் அளித்த உணவு. நாங்கள் உயிர் வாழ வேட்டையாடுகின்றேன் என்று தர்ம நியாயம் பேசினான். மேலும் நீங்கள் உங்கள் தகப்பனார் சொன்னார் என்பதற்காக உன் தாயையே கொன்றாயே. இதை தெரிந்தவர் உங்களை நிச்சயம் பழிப்பர். ஆதலால் நீங்கள் வேறு இடம் சென்று உங்கள் தவத்தை தொடர்ந்து செய்க என்றான்.

ஒரு வேடன் தன் செயலை அறிவது என்றால். அதிர்ச்சியடைந்தார் பரசுராமர். இவன் சாமான்யன் இல்லை என்ற நினைவு பார்க்கவனை தட்டி எழுப்ப, வேடனே நீயார்! சாதாரன வேடன் இப்படி அறிவு சார்ந்த கேள்வியை கேட்க முடியாது! தயவு செய்து நீ உன் சுய உருவை காட்டு என வேண்ட பரமேஸ்வரன் காட்சியளித்து அருள். பார்க்கவனே! நீ கேட்ட சாஸ்திர அஸ்திரங்களை உனக்கு வழங்குகின்றேன் அவற்றை நிர்வகிக்கும் ஆற்றலை பெற நீ தீர்த்த யாத்திரை சென்று ஸ்தல தேவதைகளை உபாசனை மேற்கொள் என்றார். அவ்வாறே பல தலங்களுக்கு யாத்திரை சென்று வழிபட்டு கைலாயத்தில் தன் தவத்தினை தொடர்ந்தார்.

முகலு என்ற அரக்கியால் துயறுற்ற தேவர்கள் ஈசனிடம் சென்று அவளிடமிருந்து காப்பாற்ற வேண்டினர். பெருமான் பார்க்கவனிடம் சென்று பார்க்கவ உன்னிடம் வலிமை இருக்கின்றது. இப்போது தவத்தின் சக்தியும் சேர்ந்துள்ளது. நான் தரும் இந்த பரசை-கோடாரியை ஆயுதமாக வைத்துக் கொள். எல்லா வெற்றியும் அடைந்து சித்திக்க என் ஆசீர்வாதம் தேவர்களை துன்புறுத்திய அரக்கி முகலுவை சம்ஹாரித்து தேவர்களுக்கு உதவி செய்க என்று அருள் புரிந்து பார்க்கவன் என்ற அவன் பெயர் கொண்ட பார்க்கவாஸ்திரத்தை தந்தருளினார். பார்க்கவன் பெருமான் தனக்கு அளித்த பரசை ஆயுதத்தால் முகலு அரக்கியை சம்ஹாரம் செய்தார். அன்றிலிருந்து பார்க்கவன் பரசுராமர் எனப் பெயர் பெற்றார்.

விண்ணில் பறந்த கர்த்தவீர்யாஜுனன் ஜமதக்னியை கொல்ல, அவனையும் அவன்பின் தோன்றிய 21 தலைமுறை சத்திரியர்களையும் பரசுராமர் கொன்றார். ஸ்ரீராமர் சீதாவை திருமணம் செய்து கொண்டு போகும் வழியில் அவரைப் போட்டிக்கு அழைத்து அவரிடம் தோற்று தனது தவ வலிமையை ராமருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். குருசேத்திரத்தில் சியமந்த பஞ்சகம் என்ற குளத்தை வெட்டி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்தார். அசுரர்களைக் கொன்ற பாவம் தீர அசுவமேத யாகம் செய்தார். கோகர்ணம் நீரில் மூழ்கியபோது முனிவர்களின் வேண்டு கோளுக்கிணங்க சமுத்திர ராஜனை அழைத்து கோகர்ணத் தலத்தை விட்டு நான்கு புறமும் விலகி இருக்க வேண்டி மீண்டும் முனிவர்கள் கோகர்ணேஸ்வரரை வழிபட வழிவகைச் செய்தார். தன்னிடம் இருந்த மற்ற பூமிப் பகுதிகளைத் தானம் செய்துவிட்டு தான் வசிக்க தவம் புரிய மகேந்திர பர்வதம் சென்றார்.

பரசுராமர் வழிபாடு சுக்கிரன் தோஷம் நீங்கும். பெரும்பாலான திருத்தலங்களில் தசாவதாரச் சன்னதிகளில்.

விஷ்ணுவின் பரசுராமாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் மாதங்கி.

#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 11:05

வாமன அவதாரம்!

Written by

ஓம்நமசிவய!

பிடி அதன்உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

####


வாமன அவதாரம்!

வாமனம்-குள்ளம். குள்ளமான உருவை உடையவன். வாமன அவதாரம் மாகாவிஷ்ணுவால் 2முறை எடுக்கப்பட்டுள்ளது.

1.காஸ்யபர்-தனுவின் மகன் துந்து அரக்கன். பிரம்மனை நோக்கி தவமிருந்து தேவர்களால் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்று வரம் வாங்கி அதை சோதிப்பதற்கு இந்திரனிடம் போரிட்டு அவனை வென்று இந்திரப் பதவியைப் பெற்றான். தோற்ற இந்திரனும் மற்ற தேவர்களும் சத்ய லோகம் சென்று ஒளிந்தனர். இது தெரிந்த துந்து பிரம்மனின் சத்ய லோகத்தையும் வெல்ல வேண்டும் என நினைத்தான். அதுபற்றி தன் குல குரு சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டு அஸ்வமேத யாகம் செய்ய முடிவு செய்து யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து யாகத்தை ஆரம்பித்தான்.

யாகத்திலிருந்து வரும் நறுமணத்தின் மூலம் விபரம் தெரிந்த தேவர்கள் விஷ்ணுவை சரணடைந்தனர். ஐந்தாவது சதுர்யுக கிருதயுகத்தில் விஷ்ணு அவர்களுக்கு அபயம் அளித்து தன்னை வாமன உருவிற்கு மாற்றிக்கொண்டு தேவிகா நதிகரையில் யாகம் நடக்கும் இடத்தினருகில் நதியில் மூழ்கியும் மூழ்காமலும் தத்தளிப்பதுபோல் இருக்க இதைக்கண்ட துந்துவும் மற்றவர்களும் அவனைக் காப்பாற்றினார்கள்.

அவர்களிடம் என் தந்தை இறந்ததும் என் அண்ணன் நேத்ரபாலன் வாமனன் போன்று குறையோடு இருப்பவனுக்கு சொத்து தரமுடியாது என்று சொல்லி என்னை இந்நதியில் போட்டுவிட்டு போய்விட்டான். என்னைக் காப்பாற்றிய உங்களுக்கு நன்றி என்றான். அப்போது அங்கிருந்தவர்கள் அவனுக்கு ஆதரவாக பேசி அவனுக்கு உதவி செய்ய பிந்துவிடம் சொன்னார்கள். வாமனன் பிந்துவிடம் எனக்கு வீடு எல்லாம் வேண்டாம் எனது காலால் மூன்று அடி மண் கேட்க, இவன் விவரம் போதாதவன் என்று நினைத்து சரி தந்தேன் என்று பிந்து வாக்கு கொடுத்தான்.

மறுகணம் குள்ளமான வாமனன் ஓங்கி வளார்ந்து ஒரு அடியால் உலகை அளந்து மறு அடியால் வானை அளந்து மூன்றாவது அடியை பிந்துவின் சிரசின்மேல் வைத்து அழுத்தி அவனை மண்ணில் புதையுண்டு போகச் செய்தார். இது விஷ்ணுவின் முதலாவது வாமன அவதாரம் ஆகும்.

2.இந்நிகழ்வு பற்றி கேள்விப்பட்ட விஷ்ணு பக்தன் பிரகலாதன் விசாரமடைந்தான். தனது மகன் விராசனனை ராட்சச ராஜ்யத்திற்கு அரசனாக்கினான். இவன் மகனே பலி. சிவாலயத்தில் மங்கிய நிலையில் இருந்த விளக்கின் திரியை எதிர்பாராமல் தூண்டிய நல்வினைக்காக எலி அடுத்த பிறவியில் பலியாகப் பிறந்தான். அசுரனாகப் பிறந்தாலும் சாஸ்திர வழியிலே தானதர்மங்களில் சிறந்து விளங்க அவன் புகழ் இந்திரலோகம் வரை பரவ இந்நிலை தனக்கு ஆபத்து என நினைத்த இந்திரன். பயமடைந்த தேவர்கள் தந்தை காஸ்யபரிடம் சென்று முறையிட்டனர். அவர் தேவர்களை பிரம்மாவிடம் அழைத்துச் சென்றார். அனைவரும் விஷ்ணுவை சந்தித்தனர். விஷ்ணு ஐந்தாவது சதுர்யுக கிருதயுகத்தில் தான் வாமன அவதாரம் எடுத்து பலியை அடக்குவதாக காஸ்யபரிடம் சொன்னார்.

மேலும் காஸ்யபரும் அதிதியும் பரம நிஷ்டையுடன் தன்னை மகவாக அடைய தவம் செய்ய அருளாசி வழங்கினார். அதிதி இதைக் கேட்டு ஆனந்தம் அடைந்தாள். ஆனால் விஷ்ணுவின் பாரத்தை தான் சுமக்க முடியுமா எனக்கேட்க, உன் குழந்தையாக நான் பிறப்பெடுப்பதால் உன்னையும் கருப்பளுவையும் நானே சுமப்பேன் என்றார்.

விஷ்ணு அதிதி கருவில் பிரவேசித்த சமயம் ராட்சசர்களிடையே மகிழ்ச்சி குன்றியது. இதை உணர்ந்த பலி சக்ரவர்த்தி தன்பாட்டன் பிரகலாதனிடம் கேட்க அவர் தியானத்தில் ஈடுபட்டு தன் ஞான திருஷ்டியில் விஷ்ணு வாமனனாக அவதரிக்கப் போகின்றார் என்பதை அறிந்து சொன்னார். மகாபலி நாராயணன் என் அசுரத் தலைவர்களைவிட சக்தி வாய்ந்தவனா என்று இகழ திருமால்மேல் பக்தி கொண்ட பிரகலாதன் தீய புத்தி உள்ள அசுரர்களின் தலைவன் என்பதால் உனக்கு கெட்ட புத்தி வந்து விட்டது, “விநாச கால விபரீத புத்தி‘ என்றார். விரைவில் நீ உன் ராஜ்யத்தை இழப்பாய் என்று சாபமிட்டார்.

நிலைமையைப் புரிந்த பலி தன் பாட்டனிடம் மன்னிப்பு கேட்டு அன்று முதல் விஷ்ணு பக்தனாக இருந்தான். மகாபலி அசுவமேத யாகம் நடத்த தன் குரு பரத்வாஜருடன் வாமனர் யாகசாலைக்கு வந்தார். பணிந்து வணங்கி உபசரித்த பலி, தங்களுக்கு வேண்டுவது எதுவானாலும் அளிக்கத் தயாராக இருப்பதாக வாக்குத் தானம் செய்தான்.

வாமனர் அருகிலிருந்த பரத்வாஜரைக் காண்பித்து இவர் என் குரு, அக்னி ஹோத்திரம் செய்ய மூன்று அடி மண் என் கால்களால் கொடுக்க வேண்டும் என்றார். கொடைத்தன்மை கொண்ட மாவலி நீங்கள் யாசகர். நான் தாதன்-அளிப்பவன். ஆனால் மூன்று அடி மண் கொடுப்பது எனக்கு வெட்கமாக இருப்பதால் இன்னும் என்ன வேண்டும் என்றான். வாமனர் மன்னா நான் கேட்ட மூன்று அடி மண்ணே போதும் என்றதும் குலகுரு தடுத்தும் கேளாமல் அந்த பரமனே என்னிடம் கேட்கிறார் என்றால் அதைக் கண்டிப்பாக நான் கொடுப்பேன் எனக்கூறி நிலம் கொடுக்க சம்மதிக்க பலியின் மனைவி வித்யாவளி அருகில் நின்று நீரூற்ற மன்னன் அந்த நீரால் வாமனிரின் கால்களைக் கழுவினான்.

பின்னர் மந்திரங்களைக் கூறி தானத்திற்கான நீரைத் தாரை வார்க்கும்போது குரு சுக்ராச்சாரியார் கமண்டலத்தினுள் வண்டாகப் புகுந்து மூக்கிலிருந்து நீர் வராமல் தடுக்க வாமனர் தர்ப்பைப் புல்லை எடுத்து துவாரத்தைக் குத்த அது அவர் ஒருகண்னை குருடாக்கி தடை நீங்கி நீர் வந்து தானம் முடிந்தது.

பலி மன்னா! நானே மூன்றடி அடி மண்ணை எடுத்துக் கொள்கின்றேன் என்ற வாமனர் ஓங்கி உயர்ந்து உலகலந்த உத்தமராக ஒரடியில் மண்ணையும் ஈரண்டாவது அடியில் விண்ணையும் அளந்து மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்றார்! எல்லா இடமும் பெருமாளுக்குச் சொந்தமானபின் வேறு இடமில்லாததால் குனிந்து அமர்ந்த பலிச்சக்ரவர்த்தி தன் தலையை காட்ட மூன்றாவது அடியை பலின் தலைமீது வைத்து பாதாள லோகத்தில் அமிழ்த்தி, உன் மனைவி மக்கள் பரிவாரங்களுடன் பாதாள உலகிலே இப்போதுள்ள அனைத்து சுக போகங்களுடன் வாழ்வாயாக என வாழ்த்தினார்.

மகாவிஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்வுடன் பாதாளலோகம் செல்லுமுன் பலி ஒர் வரம் கேட்டான். தங்களால் ஆட்கொள்ளப்பட்ட இந்நாளை மக்கள் எண்ணெய் ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி, இனிப்புகள் உண்டு, தீபமேற்றி மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்பதே அது. அதன்படியும் ஐப்பசி சதுர்த்தசி அன்று தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது.

விஷ்ணுவின் வாமன அவதரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் தூமாவதி.

அப்போது மாபலியை கொன்ற மமதை காரணமாக வாமனர் ஆவேசம் அடங்காமலிருக்க அவரின் உக்ரம் உலக உயிர்களுக்கு துன்பமாயிற்று. தேவர்கள் ஈசனை நாடினர். அந்த வாமனரின் ஆவேசத்தை அடக்க வந்தார் ஈசன். கங்காளநாதர் உருவில். செருக்குற்ற விஷ்ணுவை, வடுகநாதராக வஜ்ரதண்டத்தினால் மார்பில் அடித்து முதுகு தண்டை தன் கையில் ஏந்த, சிவ விஷ்ணு சக்திகள் ஒன்றாயின. இலக்குமி மாங்கல்ய பிச்சை கேட்க அருள்-மீண்டும் சிவனிடமிருந்து உயிர்பெற்ற விஷ்ணு தம்தோல்+எலும்பை அணிந்துகொள்ள வேண்ட எலும்பைக் கதையாகக் கொண்டு தோலைச் சட்டையாக போர்த்து அருள்-சட்டைநாதர்-வடுகநாதர்.சீர்காழி. கங்காளநாதர்-பிரம்மதேசம்

செய்த வினைக்கு விதிவிலக்கில்லை!- செய்த வினைக்கு எவரும் விதிவிலக்கல்ல. தன்னால் வரம்பெற்ற மாவலியை தான் அழித்தல் தர்மமில்லை என சிவன்கூற பெருமாள் வாமன அவதாரத்தில் சிவதொண்டன் மாவலியின் சிரசில் கால்வைத்து அழுத்த தர்மத்தின் காவலன் மறைவு கண்டு தர்மதேவதை கண்ணீர் சிந்த அந்த துளிகள் பெருமாள் காலில் பட்டு புற்று வளர தங்கை மதுரை மீனாட்சி வழி காட்டுதலின்படி வாசுகி தீர்த்தத்தில் நீராடி பெருமாள் வழிபாடு. இறைவன் இறைவியை பிரித்து பார்க்கக்கூடாது என இரட்டை அர்ச்சனை. தீராத நோய்கள் தீரும். விஷம் குணமடையும். சித்திரை விழா. ஈசன்- புற்று நோய்க்கு மருந்து.-திருவெற்றியூர்(திருவாடானை)

இது விஷ்ணுவின் இரண்டாவது வாமன அவதாரம் ஆகும்.

வாமனப் பெருமாளை வழிபட்டால் குருதோஷம் நீக்கும்- 1.உலகளந்தபெருமாள்-காஞ்சி, 2.திருவிக்ரமன்-திருக்கோவிலூர், 3.தாடாளன்-சீர்காழி

#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 10:55

நரசிம்ம அவதாரம்!

Written by

ஓம்நமசிவய!

விநாயகனே வல்வினையை வேர் அறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து!

####

நரசிம்ம அவதாரம்!

தேவர்களின் துயரைத் துடைக்கவும் பக்தன் பிரகலாதனைக் காப்பாற்றவும் ஹிரண்யகசிபுவை வதம் செய்யவும் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம்.

பெருமாளை தரிசிக்க அனுமதி அளிக்காமல் தடுத்த துவார பாலகர்கள் ஜயன், விஜயன் இருவரையும் அரக்கர்களாக மூன்றுமுறை பிறந்து அழிச்சாட்டியம் பண்ணி இறுதியில் பகவானால் ஆட்கொள்ளப்படுவீர்கள் என சனகாதி முனிவர்கள் சாபம்.

அதன்படி முதல் பிறப்பில் இரண்யன் (எ) இரண்யகசிபு, இரண்யாட்சன் எனப் பிறந்தனர். இரண்யாட்சன் இறந்ததனால் சகோதரன் இரண்யன் என்கிற இரண்யகசிபு கோபம் கொண்டு பிரம்மாவை நோக்கித் தவமிருந்து தேவர்களாலோ, மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பஞ்சபூதங்களாலோ, மரணம் சம்பவிக்கக்கூடாது மேலும் இரவும் அல்லாத பகலும் அல்லாத வேளையில், மிருகமும் அல்லாத மனிதனும் அல்லாத ஒரு பிறவியினால், உலகத்தில் செய்யப்படாத ஆயுதத்தால், பூமியிலும் ஆகாயத்திலும் இல்லாத இடத்தில் தான் கொல்லப்படவேண்டும் என்ற வரத்தை பெற்றதனால் செருக்குற்று தானே சர்வேஸ்வரன் என்று செயலாக்கம் கொண்டான்.

இரண்யாட்சனை திருமால் கொன்றதால் அவர்மேல் கோபங்கொண்டு விஷ்ணுவை தன் எதிரியாக நினைத்தான். இரண்யகசிபு ஹிரண்யாய நமக என்றுதான் தன் ஆட்சியில் அனைவரும் சொல்ல வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தான்.

கருவுற்ற அவனின் மனைவியை நாரதர் தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு திருமாலின் புகழ் எப்போதும் பாடப்பட கருவிலிருந்த குழந்தை அதைக் கேட்டே நாராயணின்மேல் பக்தி கொண்டது. குழந்தை பிறந்து வளர்ந்து குருகுலத்தில் சேர்க்க மற்ற குழந்தைகள்போல் இல்லாமல் நாராயணாய நமஹ என்று சொல்லியது.

நாரயணின் திருநாமத்தைச் சொல்லும் தன் மகன் பிரகலாதனை இரண்யாய நம எனச் சொல்லப் பணிக்க மறுக்க அவனுக்கு விஷம் கொடுத்தும் ஒன்றும் செய்யவில்லை. பிரகலாதனை மலைமீதிருந்து உருட்டி விட்டும் மாற்ற முடியவில்லை.

ஹோலி: ஆதிநாரயணனைவிட தானே உயர்ந்தவன் என்று மகாவிஷ்ணுவை வணங்கியவர்களை கொடூரமாக தண்டித்தான் இரண்யன். அவன் மகன் பக்த பிரகலாதன் ஹரியே தெய்வம் என வாழ்ந்தான். விஷம் கொடுத்தும் கொல்ல முடிய வில்லையாதலால் இரண்யனின் சகோதரி ஹோலிகா நெருப்பு எரிக்காத துணியை தன் மந்திர சக்தியால் உருவாக்கி துணியைப் போர்த்திக் கொள்கிறேன். உன் மகனை என் மடியில் வைத்து தீயிடு. நான் எரியமாட்டேன். பிரகலாதன் எரிந்து சாம்பலாகி விடுவான். எனக்கூற இரணியனும் அதற்கு சம்மதித்து பிரகலாதனை அவள் மடியில் வைத்து தீ மூட்டினான்.

நாராயணன் நாமத்தில் மெய் மறந்து இருந்த பிரகலாதன் அத்தை மடியில் ஆனந்தமாய் அமர்ந்து ஹரி நாமத்தை உச்சரித்தான். நாராயணன் வாயுவை ஏவி காற்றை வீச நெருப்பு எரிக்காத துணி பறந்து பிரகலாதனை மூட ஹோலிகா தீயில் எரிந்து மாண்டாள். அவள் இறந்ததைக் கொண்டாடும் விதத்தில் வர்ணப் பொடிகளை பூசி மகிழ்ந்தனர். ஹோலிகா தகன் என்றது ஹோலி யானது

எதைச் செய்தும் மாற்ற முடியாததால் அரசவையில் சங்கிலியால் பினைக்கப்பட்ட பிரகலாதனிடம் தன்னை தெய்வம் என்று ஒப்புகொள்ள கேட்ட ஹிரண்யனிடம், மனிதர்கள் தெய்வமாக முடியாது. ஹரியே தெய்வம் என்று கூற கோபமடைந்த ஹிரண்யன் அருகிலிருந்த தூணைக் காட்டி இங்கே இருக்கின்றான உன் தெய்வம் என்று கேட்க தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று பிரகலாதன் கூற அந்த தூணை உடைக்க ஆரம்பித்தான் ஹிரண்யன்.

உடைத்த தூணிலிருந்து வெளிப்பட்ட சிம்மமுகம் மனித உடலுடன் கூடிய நரசிம்மருடன் இரண்யன் போரிட, நரசிம்மர் வாயிலில் அமர்ந்து தனது மடியில் இரண்யனின் உடலைக் கிடத்தி தன் கை நகங்களால் மார்பைக் கிழித்து அந்த நேரத்தில் அவன் பெற்ற வரத்திற்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் சம்ஹாரம் செய்து முடிந்த பின்னரும் கோபம் தீராமல் உக்ரமாக இருக்க தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவனார் யாளி, பஷி, மனித உருவம் என்று எல்லாம் இணைந்த சரபேசுவர உருவத்தில் போர்புரிந்து நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கினார்.-திருபுவனம்

விஷ்ணுவின் நரசிம்மாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் திரிபுரபைரவி

இந்த அவதாரம் நிகழ்ந்தது நான்காவது சதுர்யுகக் கிருத யுகத்தில் வைகாசி மாத சுக்லபட்ச சதுர்த்தசி நாளில் சுவாதி நட்சத்திரத்தில் பிரதோஷவேளையில் என்பதால் சுவாதி நடசத்திர தினத்தில் செய்யும் நரசிம்மர் வழிபாடு சிறப்பானது.

இப்பெருமாளை வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் நரசிம்மர் தலங்கள் 1.அஹோபிலம், 2.சோளிங்கர், 3.சிங்கப்பெருமாள்கோவில், 4.சிங்கிரிகுடி, 5.பூவரசன்குப்பம், 6.பரிக்கல், 7.நரசிங்கம்பேட்டை, 8.சிம்மாசலம், 9.மங்களகிரி, 10.மட்டப்பள்ளி, 11.வாடபள்ளி

உக்கிர குணம் கொண்ட அவதாரத்தை பிரகலாதன் தன் பக்தியாலும் ஆழமான பாடல்களாலும் சாந்தப்படுத்த லட்சுமியும் அவர்மடிமீது அமர மேலும் சாந்தமாகி லட்சுமி நரசிம்மராக அருள்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 10:48

வராக அவதாரம்!

Written by

ஓம்நமசிவய!

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!

#####

வராக அவதாரம்!

தேவர்கள் அசுரர்களுக்கு அஞ்சி வாழ்ந்திருந்தாலும் தேவர்களின் கௌரவம் மற்றும் இறையருளும் மேலோங்கி இருப்பதன் காரணம் முனிவர்களும் யோகிகளும் செய்யும் ஹோமத்தில் தரப்படும் ஆகுதி என்ற அவிஸ்ஸே தேவர்களின் பலத்திற்கு காரணம் என்பதை அறிந்த இரண்யாட்சன் தேவர்களுக்கு அவிஸ் கிடைக்காமல் இருக்க என்னவழி என்று யோசித்து பூமியிருந்தால்தான் யாகங்கள் நடைபெற்று தேவர்களுக்கு அவிஸ் கிடைக்கின்றது. எனவே பூமியில்லையென்றால் தேவர்களுக்கு யாகம் நடந்து அவிஸ்கிடைக்காது என்று முடிவுசெய்து பூமியை பாயாகச் சுருட்டி பாதாள உலகத்தில் பதுக்கிவிட்டான். அவிஸ்கிடைக்காமல் துன்பமுற்ற தேவர்கள் பூமியைக் காணாததால் பிரம்மனிடம் முறையிட அவர் திருமாலிடம் சென்று வணங்கி தேவர்களின் துயரத்தை தெரிவித்தார்.

வராக அவதாரமெடுத்து பாதாளாலோகம் சென்று இரண்யாட்சனுடன் போர் புரிந்து அவனைத் தன் கோரப்பற்களால் குத்தி கிழித்து வதம் செய்து பூமாதேவியை மீட்டுக் கொண்டு வந்தார் திருமால் அசுர சம்ஹாரத்தினால் ஏற்பட்ட கோபம் தீராத வராக மூர்த்தியினால் கடல்வாழ் உயிரினங்கள் துன்பமடைந்தன. முனிவர்கள் கயிலைநாதனிடம் சொல்ல சிவன் தன் கைகளினால் வராகத்தின் கொம்புகளை உடைக்க அதன் ஆவேசம் அடங்கி ஸ்ரீ விஷ்ணுவாக மாறினார்.

அப்போது திருமாலுக்கும் பூமாதேவிக்கும் ஏற்பட்ட உறவால் பிறந்தவன் நரகாசுரன். தன் பிள்ளைக்கு யாராலும் மரணம் ஏற்படக்கூடாது என்று சாகாவரம் கேட்டாள் பூமாதேவி. சாகாவரம் நேரிடையாக தரக்கூடாது என்பதால் தாய் தவிர வேறு எவராலும் மரணம் ஏற்படாது என வரமளித்தார். நீ விரும்பும்போது உன்னாலன்றி அவனுக்கு மரணம் வராது என்றார். வளர்ந்த நரகாசுரன் இந்த வரத்தால் அசுர பலம்பெற்று தனக்கென்று ஒர் நாட்டை உருவாக்கிக் கொண்டு மற்ற நாடுகளையும் ஆக்கிரமித்தான். தேவர்களையும் தவம் செய்யும் முனிவர்களையும், மக்களையும் துன்புறுத்திய நரகாசுரன் பற்றிய செய்திகளை அவர்கள் விஷ்ணுவிடம் கூறி தங்களை அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டினர்.

விஷ்ணுவின் வராக அவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் புவனேஸ்வரி

வர+அஹ=வராஹ, வர என்றால்-மூடுபவர், அஹ என்றால் எல்லை இல்லாததற்கு எல்லையை நிர்ணயத்தல். வராஹ (யக்ஞ வராஹ) என்றால் உருவமற்ற ஒன்றுக்கு எல்லை காண்பவர் என்றும் அதற்கு உறை இடுபவர் என்று பொருள். யக்ஞவராஹம்- உலகத்தை சிருஷ்டிக்க சிறந்த சக்தியை மேற்கொள்ளும் எண்ணத்துடன் கலவரம் ,குழப்பதிலிருந்து உலகை உயர்த்தும் சக்தி எனப்படும்.

வராக மூர்த்தியை வழிபட கார்த்திகை மாதம் துவாதசி திதி, சந்திர கிரகண நாட்கள் சிறந்தவை. இந்த விரத காலங்களில் சிரிதளவாவது அரிசியை தானம் செய்ய வேண்டும், அவ்வாறு அரிசி தானம் செய்யாதவன் மரணமடைந்து சொர்க்கத்தை அடைந்தாலும் எல்லா வசதிகளிருந்தும் அன்னம் மட்டும் அவனுக்கு கிடைக்காது. நாம் எதைக் கொடுக்கின்றோமோ அதுவே நமக்கு திரும்பிக் கிடைக்கும்.

வராகப்பெருமாளை வழிபட்டால்-ராகு தோஷம் நீக்கும், 1.ஸ்ரீமுஷ்ணம்-பூவராகர், 2.திருவிடந்தை-ஆதிவராஹமூர்த்தி. வழிபடுவோருக்கு தாமதம் நீங்கி திருமணம் விரைவில் நடக்கும். நன்மக்கட்பேறு கிட்டும் கிரஹ பீடைகள் விலகும்.

#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 10:13

கூர்ம அவதாரம்!

Written by

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!

####

கூர்ம அவதாரம்!

காஸ்யப முனியின் மனைவி அதிதி- இவரின் குழந்தைகள் இந்திரன் உள்பட தேவர்கள் மற்றும் பன்னிரண்டு ஆதித்தியர்கள். இன்னொரு மனைவி திதி- இவரின் குழந்தைகள் இரணியாட்சகன், இரணியகசிபு மற்றும் நிறைய அசுரர்கள். மேலும் அசுரகளின் அரசன் அசுரேந்திரன்- மங்களகேசி இருவருக்கும் பிறந்த சுரசை அசுர குரு சுக்கிரன் மூலமாக மாயையின் கல்விகளைக் கற்று மாயை என்று பெயர் பெற்று காஸ்யபரை மணந்தாள்.

தேவ வடிவெடுத்த அவர்களுக்கு முதலில் சூரபத்மன் பிறந்தான். அவர்களது உடலிலிருந்து வியர்வை தோன்ற அதில் முப்பதாயிரம் வெள்ளம் அசுரர்கள் தோன்றினர். அடுத்து சிங்க வடிவமெடுத்த அவர்களுக்கு சிங்கமுகாசுரன் பிறந்தான் .அப்போது ஏற்பட்ட வியர்வையில் நாற்பதினாயிரம் வெள்ளம் அசுரர்கள் தோன்றினர். யானை வடிவமெடுத்த அவர்களுக்கு தாருகாசூரன் பிறந்தான் அப்போது ஏற்பட்ட வியர்வையில் நாற்பதாயிரம் வெள்ளம் அசுரர்கள் தோன்றினார்கள். ஆட்டுருவம் கொண்ட அவர்களுக்கு அசமுகியும் அந்த வியர்வையில் முப்பதாயிரம் வெள்ளம் அசுரர்களும் தோன்றினர். நான்கு ஜாமத்திலும் நான்கு உரு கொண்டு கூடியவர்கள் அடுத்து யாளி, புலி, குதிரை, மான், பசு, கரடி, பன்றி, கூளி முதலிய வடிவங்களைக் கொண்டு கூடி அறுபதுனாயிரம் வெள்ளம் அசுரர்களை தோற்றுவித்தனர்.

காசிபர் அந்தக் அசுரக் குழைந்தைகளுக்கு அறநெறியில் நின்று தவம் செய்து வாழும்படி அறிவுறுத்தினார். சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாருகாசூரன் மூவரும் அசுர குரு சுக்கிரனின் ஆலோசனைப்படி பல ஆண்டுகள் தவமிருந்து சிவனிடம் தன்னுடைய சக்தி யன்றி வேறு ஒரு சக்தியால் வெல்ல முடியாது என்ற வரத்துடன் பாசுபத அஸ்திரம் பெற்றனர்.

தேவர்கள் அசுரர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையில் அடிக்கடி கருத்து மோதல்கள் அடிதடித் தகராறுகள் நடந்து கொண்டேயிருந்தன. சகோதர்களான அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் தோன்றிய பிரச்சனைகளே அடிக்கடி அசுரர்- தேவர் யுத்தம் நடைபெறக் காரணமானது. அசுரர்களின் ஆதிக்கத்தால் முதலில் பாதிக்கப்படுபவன் இந்திரன். ஹிரண்யாட்சசன், ஹிரண்யகசிபு, முதல் இராவணன், இந்திரஜித் போன்ற அசுரர்களால் ஆக்கிரமகிக்கப்பட்டு சிறைப்பட்டு அல்லல்களுக்கு ஆளாகி பிரம்மா, விஷ்ணு, சிவனின் அனுக்கிரகத்தால் மீண்டும் போராடி தேவருலகத்தை அடைந்துள்ளான்.

பாற்கடல்! பிருந்தாவனத்தில் இருந்த கிருஷ்ணனுக்கு ஒருநாள் பால் அருந்த ஆசையேற்பட அவர் சுரபியை நினைத்தார். சுரபி என்பவள் பசுக்களுக்கெல்லாம் தாயானவள். சுரபியிடமிருந்து பாலை ஒரு கலயத்தில் கறந்து குடித்துவிட்டு மீதியை வைக்க அதுவே க்ஷீரசரோவரம்-பாற்கடல் ஆனது. சுரபியின் உடலிருந்துதான் காமதேணு தோன்றியது. காமதேனுவிடமிருந்து தோன்றியதே நாம் காணும் பசுக்கள்.

தொடரும் பிரச்சனைகளுக்கு சுகுமமான முடிவிற்கு வர பிரம்மா பாற்கடலைக் கடையலாம் என்று கூறிய ஆலோசனையை மகாவிஷ்ணு அவ்வாறு பாற்கடலை கடைந்தால் அகண்ட ரத்தினங்களும் மற்றும் அபூர்வ பொருளகளும் கிடைக்கும் என்பதால் ஏற்றுக் கொண்டார்.

சாவா மூவா நிலைபெற அமுதம் உண்ணவேண்டித் தேவர்கள், அசுரர்கள் எல்லோரும் உணவு ஏதும் உண்ணாமல் உபவாசமிருந்து ஏகாதசி அன்று மந்தார மலையை மத்தாகக் கொண்டு வாசுகி நாகத்தை கயிறாக்கி பாற்கடலைக் கடைய திட்டம் தீட்டப்பட்டது திருமாலும் தேவந்திரனுக்காகவும் குபேரனுக்காகவும் இதற்கு ஒப்புக்கொண்டார். மந்தாரமலை சம நிலையில் இல்லாமல் கீழும் மேலும் சென்றுவர அதை ஒர் நிலையில் நிறுத்த திருமால் கூர்ம உருவெடுத்து கடலின் அடியில் சென்று மந்தாரமலையைத் தாங்கி ஓர் நிலையில் இருக்கச் செய்தார்.

வாசுகி துயரம் தாங்காமல் நஞ்சை கக்க தேவ அசுரர்களைக் காக்க திருமால் முயல நஞ்சின் வேகத்தால் அவரது நிறம் கருமை நிறமானது. எம்பெருமான் சுந்தரர் மூலம் ஆலகாலத்தை எடுத்து தானே உண்டார், மீண்டும் கடைய பாற்கடலிலிருந்து மூதேவி தோன்ற அவளை வருணனுக்கு அளித்தனர். தண்டம் கமலத்துடன் தன்வந்திரி என்ற மருத்துவன் தோன்றினான். பின்னர் அறுபது கோடி மகளிர் தோன்ற அவர்கள் தேவலோகத்திற்கு அணுப்பப் பட்டனர். பின்னர் மது தோன்ற தேவர்கள் பருக அசுரர்கள் அதனைப் புறக்கணித்தனர். பின் தொடர்ந்து வந்த உச்சைச்சிரவம் என்ற குதிரையை இந்திரனுக்கும், கசுத்துவமணியை திருமாலுக்கும், பஞ்சதருக்கள், காமதேணு, சிந்தாமணி ஆகியவை இந்திரனுக்கும், சந்திரன் உலகிற்கு ஒளியூட்டவும், திருமகளை திருமாலுக்கும் அளித்தனர். இறுதியில் அமிர்தம் வந்தது. திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு மட்டும் வழங்க ஒரு அசுரன் சுவர்ணபானு மட்டும் அமிர்தம் அருந்த அதைக் கண்ட சூரிய சந்திரர்கள் திருமாலிடம் சொல்ல அவர் அந்த அசுரனின் தலையை வெட்ட அமிர்தம் அருந்தியதால் சாகாமல் உயிர் வாழ்ந்து சிவார்ச்சனை செய்து இராகு, கேது கோள்களாக மாறினர்.

இந்நிலையில் ஆமை உருக்கொண்ட மாயை கடல் ஏழையும் ஒன்றாக்கி அதன் வெள்ளம் உலகை அழிக்கும் படியாக கலக்கி உயிரினங்களை துன்புறுத்தலாயிற்று. இந்திரன் பிரம்மன் இருவரும் கயிலை சென்று சிவபெருமானிடம் பாற்கடலில் அமுதம் கடைய ஆமை வடிவம் கொண்ட திருமால் இன்னும் ஆவேசம் அடங்காமையால் உயிர்கள் துன்புருவதைத் தெரிவிக்க, சிவபெருமான் தன் கையிலிருந்த சூலப்படையால் மாயை ஆமையின் வயிற்றில் குத்தி அதன் இறைச்சியை குடைந்து எடுத்ததன் காரணமாக ஆமையின் வலிமை குன்றியது. அந்த ஆமை ஓட்டினை தேவர்கள் விருப்பப்படி தன் மார்பில் அணிந்து கொண்டார். சுய உணர்வு கொண்ட திருமால் சிவனைப் பணிந்து வைகுந்தம் சென்றார்.

விஷ்ணுவின் கூர்மாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் பகாளாமுகி

இப்பெருமாளை வணங்கினால் சனி சங்கடம் நீங்கும்.-கூர்மாவதாரப் பெருமாள்- ஸ்ரீகூர்மம்-ஆந்திரா.

#####

ஞாயிற்றுக்கிழமை, 15 July 2018 10:07

மச்ச அவதாரம்!

Written by

ஓம்நமசிவய!

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு!

#####

மச்ச அவதாரம்!

பிரளயம் முடிந்து உலகம் சகஜ நிலைக்கு வந்து பூபாக மண்டலம் நீரின் பாதிப்பிலிருந்து மேலெழுந்து சூரியன் தோன்ற பிரம்மன் தனது படைப்புத் தொழிலைச் செய்ய ஆரம்பித்தார். சோமுகாசுரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வரம் பெற்றதனால் அகந்தைக் கொண்டு பிரம்மன் முன் தோன்ற, அசுரனைக் கண்ட பிரம்மன் அஞ்சி நிற்க உன் வலிமை இவ்வளவுதானா எனக்கேட்டு அவர் கையிலிருந்த நான்மறைகள் நான்கினையும் பறித்துக்கொண்டு கடலிற் சென்று மறைந்தான்.

வேதங்கள் இல்லாமையால் சிருஷ்டிக்கான ஆற்றலும் சமர்த்தியங்களும் அவரிடம் இல்லாமல் போயின. வேதங்கள் இல்லாமல் என்னால் சிருஷ்டி காரியங்களைச் செய்ய இயலவில்லை. தாங்கள்தான் வேதங்களை மீட்டு எனக்கு உதவி புரிந்திட வேண்டும் என்று பிரம்மன் விஷ்ணுவிடம் கேட்டுக்கொண்டார். சோமகன் பசியினால் வேதங்களை விழுங்கி விட்டான். கோபங்கொண்ட திருமால் மச்ச வடிவமெடுத்து கடலினுள் புக, பசி அதிகமெடுத்ததால் மச்ச வடிவமெடுத்த விஷ்ணுவையும் விழுங்க வந்த சோமுகாசுரனைக் கண்டு அவனுடன் சண்டையிட்டு அவனுடைய ரத்தத்தைக் குடித்து அவன் வயிற்றைக் கிழித்து நான் மறைகளையும் தக்ஷாவர்த்த சங்கையும் மீட்டு பிரம்மனிடம் அவைகளை ஒப்படைத்தார்.

விஷ்ணுவின் மச்சாவதாரத்திற்கு உகந்த அரிய சக்தியை அபரிதமாக வழங்கியவள் கமலாத்மிகா.

ஆனால் அதன் பின்னரும் விஷ்ணுவின் ஆவேசம் அடங்காமல் ஏழு கடலையும் ஒன்றுகூட்டி கலக்கினார். இதனால் உலக உயிர்கள் துன்பமடைந்தன. தேவர்கள் இதனை சிவபெருமானிடம் கூற மீன்பிடி வலைஞராக உருவெடுத்து ஏழு கடலையும் மறைக்கத்தக்கவாறு வலை வீச அந்த மீன் அகப்பட்டது. அதன் விழிகளைப் பறித்து அதன் வலிமையைக் குன்றச் செய்தார். தேவர்கள் விருப்பப்படி அந்த மீனின் கண்களை திருமேணியில் கையில் மோதிரமாக அணிந்தார். கண்ணிழந்த மீன் வடிவம் பெற்ற திருமால் தன் உணர்வு அடைந்தார்

அசுரன் வயிற்றில் இருந்து எடுத்தமையால் வேதங்களின் சில பகுதிகள் காணவில்லை. அவற்றை நினைவில் கொண்டு பூர்த்தி செய்க என்று பிரம்மனுக்கு அருள் புரிந்தார் விஷ்ணு.

மச்சாவதாரப் பெருமாளை வணங்கினால் கேது தோஷம் நீங்கும்-மத்ஸ்ய பெருமாள்- புத்தூர் அருகில்- நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள், வேதவல்லி.

#####

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27045049
All
27045049
Your IP: 3.15.221.136
2024-04-20 02:40

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg