gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60
வெள்ளிக்கிழமை, 08 June 2018 04:53

சனீஸ்வரன்!

Written by
Rate this item
(1 Vote)

ஓம்நமசிவய!

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

$$$$$


சனீஸ்வரன்!

சூரியன் தேவ சிற்பி விஸ்வகர்மாவின் மகள் சம்க்ஞா- ஸுர்வர்சலாவை திருமணம் செய்தார்- வைவஸ்தாமனு (ஞான வடிவம்), யமன் (தர்ம வடிவம்) என 2 புதல்வர்கள், யமி/யமுனா (நீர் வடிவம்)- என்ற ஒரு புதல்வி. கணவனின் சூடு தாங்க முடியாமல் சம்க்ஞா தன் நிழலிருந்து பிரதி சாயா-உஷாவை உருவாக்கி கணவனுக்கு மணமுடிக்க சனி, சாவர்ணுமனு, தபதி, விஷ்டி என்று 4 குழந்தைகள். ஒரு தகறாரில் யமன் சனியை உதைக்க சனியின் கால் முறிந்ததால் சனியால் மெல்லத்தான் நடக்க முடியுமாதலால் மந்தன் என்ற பெயர் ஏற்பட்டது. சிவனை வணங்கி நவக்கிர பட்டம் பெற்றார். உயிர்களின் ஆணவத்திற்கேற்பவும் தவறுக்கேற்பவும் பலன்கள் கொடுக்கும் அதிகாரம் பெற்றார். சனியின் இயக்கத்திற்கு தொடர்புடைய மரம்-வன்னி மரம்

சனீஸ்வரன்-தன் கடமையைச் சரிவர செய்துவந்த சனி கைலாயம் சென்று அம்மையப்பரை வணங்கி, இறைவா உங்களை ஏழரை நாழிகை நான் பற்ற வேண்டும் என்றார். பூ உலகில் பிறவி எடுக்காத எனக்கு எப்படி வந்தது கர்மா என்றார். ஐயனே, அன்னையை மணக்கவும் பக்தர்களுக்கு திருவருள் புரியவும் நீங்கள் பூமிக்கு சென்று வந்ததால், நீங்கள் வகுத்துக் கொடுத்த நியதிப்படி உங்களையும் நான் பீடிக்கும் காலம் வந்தது என்றார். சனியுடன் விளையாட நினைத்த சிவன் அந்தர்மயமாகி உமையின் கழுத்தில் உள்ள மணியில் ஒளிந்தார். சனி அங்கேயே அம்மையின் எதிரில் அமர்ந்து விட்டார். ஏழரை நாழிகை கழிந்து சிவன் வெளிப்பட்டு, உன்னால் என்னை பீடிக்க முடியவில்லையெ என்றார். ஐயனே என்னை மன்னிக்க வேண்டும். என் பார்வையிலிருந்து தப்பிக்க ஏழரை நாழிகை தாங்கள் ஒரு சிறு மணியில் ஒளிந்திருந்தீர்களே அதுவே நான் பீடித்த காலம் என்றான் சனி. கடமையினைச் செய்வதில் சிறந்தவனே எனப் பாராட்டி ஈசுவரப் பட்டமளித்து இன்று முதல் நீ சனீஸ்வரன் என அழைக்கப்படுவாய் என்றார் இறைவன்.

தசரதரின் குரு வியாசர் இனி வரும் 12 வருடங்கள் சனிபகவானால் நாட்டிற்கும் மக்களுக்கும் கெடுதல் எனக் கேள்விப்பட்ட தசரதர் சனியை எதிர்த்து சண்டையிட வந்தார் . அங்கு வந்த நாரதர் சண்டையை விட சரணாகதி சிறப்பு என அறிவுருத்த சனீஸ்வரரை வலம்வந்து வணங்கி இனிவரும் 12 வருடங்களுக்கு உங்களால் என் குடிமக்கள் துன்பக்கூடாது அதற்கு உரிய வழிமுறைகளைச் சொல்லக் கேட்டார். அவர் சொல்லியபடி கலைவாணியை நாவில் நிறுத்தி சனீஸ்வரக் கவசத்தை நம்பிக்கையுடன்பாடி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி எள் சாதத்தை நிவேதனம் செய்தார். அப்படியே நாட்டு மக்களுக்கும் பறை அறிவித்து வழிபாடு செய்ய வைத்து சனியின் ஆதிக்க துன்பங்களை குறைய வைத்தார்.

சனீஸ்வரனால் பீடிக்கப்பட்டு பல துயரங்களுக்கு ஆளான நளன் சனீஸ்வரரை வழிபட்டு தவமிருந்து தான் இழந்ததை மீண்டும் பெற்றார். தான் பெற்ற துன்பங்களை தன் நாட்டு மக்கள் பெறக்கூடாது என்பதற்காக நளன் மீண்டும் சனிஸ்வரர் நோக்கி தவமிருக்க காட்சி கொடுத்தவரிடம் தனகென்று இல்லாமல் நாட்டு மக்கள் பொது நலம்கொண்டு கேட்டதால், நல்லெண்ணெய் தீபமேற்றி சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து கருங்குவளை மலர்களால் அர்ச்சித்து எள்ளுருண்டை அல்லது எள்சாதம் நிவேதனம் செய்து வழிபட்டால் கெடு பலன்கள் குறையும் என்றார்.

அனுமனைப் பீடிக்க சென்ற சனி அனுமனின் வாலில் அமர முயற்சிக்க ஒய்வு இல்லாமல் இராமர் லட்சுமணருக்கு உபசாரங்கள் செய்வதிலும் பாலம் கட்ட வானர சேனைகளுக்கு உதவி புரிவதிலும் இருந்ததால் அவரது வால் அங்கும் இங்கும் மோதவே சனியால் அவரைப் பற்ற முடியாமல் அனுமன் முன்வந்து உன்னைப் பற்ற வேண்டும் என்றார். ஐயா உங்கள் கடமையைச் செய்யுங்கள் அதே சமயம் என் கடமையையும் செய்ய விடுங்கள் என்றார். எனது கரங்களுக்கு அதிக வேலை இருக்கின்றது. கால்களில் இடம் தருவது அபசாரம். எனவே சிரசில் ஏறிக்கொள்ளுங்கள் என்றதால் அங்கு அமர்ந்தார் சனி. ஆனால் அனுமன் தன் தலைமீது பாறாங்கற்களை ஏற்றி சென்றதால் அங்கே அமர்ந்திருந்த சனியால் அந்த பாரத்தை தாங்க முடியவில்லை. ஏழரை ஆண்டுகள் பீடிக்கலாம் என வந்தவர் அந்த நிலைமாறி ஏழரை விநாடிகள் பீடிக்க முடிவெடுத்தார். இறுதியில் அதுவும் முடியாமல் ஏழரை நொடிகள் பீடித்து கீழிறங்கினார். ஏன் அதற்குள் இறங்கி விட்டீர்கள் என்றுக் கேட்ட அனுமனிடம் உன்னைப்போல் சுயநலமின்றி பக்தியுடன் இறை பணி செய்பவர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நீ தொடர்ந்து உன் பணியைச் செய் என்றார். மேலும் ராமரை தியானித்து சரணாகதி அடைந்தவருக்கு என்னால் எந்தக் கெடுதலும் வராது என்றார்.

சனியின் பார்வை வக்ரம் ஏன்! சூரியன்-ஸம்க்ஞாதேவி மகன் யமன். ஸம்க்ஞாதேவி சூரியனின் வெப்பம் தாங்காமல் தன் நிழல் சாயாதேவியை சிருஷ்டித்து தன் தந்தை வீடு சென்றாள். சாயாதேவியின் முதல் மகன் ஸாவர்ணிமனு, 2வது மகன் சனி. மூன்றாவது மகள் பத்ரா. அண்ணன் யமன் தன் சிறுதாயின்மேல் உள்ள கோபத்தால் சனியை அடிக்க கால் ஒடிந்தது. தட்சன் யாகத்தில் கலந்துகொண்டதால் தன் ஒரு கண்ணை இழந்தார். சித்திரதர் என்பவரின் மகள் ஜ்யேஷ்டாவை சனிக்கு மணம் செய்வித்தார் சூரியன். ஒருநாள் கணவனின் பார்வைக்காக ஜ்யேஷ்டா ஏங்கி நிற்க அது கவனியாமல் தியானத்தில் சனி இருக்க அவள் ஒரு பெண்ணின் மனத்தை கணவர் என்ற முறையில் புரிந்து கொள்ளாத உங்களுக்கு இப்போது கண்டு களிக்கும் ஆனந்தம் இல்லாமல் போகட்டும் எனச் சபித்தாள். தியானம் கலைந்து எழுந்த சனி தவறை உணர்ந்தார். வருத்தத்தை தெரிவித்தார். ஆறுதல் அடைந்த அவள் தன் சாபத்தை நீக்க வழி தெரியாமல் தவித்தாள். இந்தச் சாபமே சனியின் பார்வை எப்போதும் வக்கிரமாக இருந்து தீமை தருவதாக அமைந்தது. சனி தோஷமுள்ளவர்கள் எள் முடிச்சு தீபம் பிரார்த்தனை. –திருநள்ளாறு

சனியின் பார்வைகளின் விளைவு!- கயிலையில் அனைவரும் அமர்ந்து சிவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். சனிபகவான் மட்டும் சிவனுக்கு முதுகை காட்டியபடி அமர்ந்திருப்பதை அங்கு வந்த நாரதர் கண்டார். நாரதர் ஆயிற்றே! அதை யாரிடமாவது சொல்லாமல் இருக்க முடியவில்லை. அங்கு வந்த அம்மையிடம் இதைக் கூற அவர் சிவனிடம் இது பற்றிக் கூறினார். அவருக்கு காரணம் தெரியுமாதலால் அமைதியாக இருக்க கோபம் கொண்ட உமை சிவனிடம் அவரும் மற்றவரைப்போல் இந்தப் பக்கம் பார்த்து அமருட்டும் என்றார். சிவன் சம்மதிக்க சனி திரும்பி அமர்ந்தார். உமையும் சனி திரும்பியவுடன் பார்க்க சனியும் அம்மையைப் பார்த்தான். உமை திருப்தியுடன் தன் ஆசனத்தில் அமர்ந்தாள். அருகே சிவனும் பிரம்மனும் ஐந்து தலைகளுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த உமையால் யார் சிவன் என்று அறிய முடியவில்லை. சிவனை நினைத்து தியானத்தில் அமர சிவன் சனியை திரும்பி அமரச் சொன்னார். பார்வதி கண் விழித்து பார்க்க ஒரே இருக்கையில் சிவன் மட்டும் அமர்ந்திருக்கக் கண்டு சிவனை நோக்கிப் புன்னகைப் புரிந்தாள். சிவன் சொன்னார் உமையே உனக்கே இந்த நிலை என்றால் சனியின் பார்வைபட்டால் மற்றவர்களின் நிலை என்னாகும்! ஆகவேதான் சனியை திரும்பி அமரச்சொன்னேன் என்றார். நாரதரைக் கண்ட உமை அவரிடம் சனியின் பார்வை இவ்வளவு பொல்லாதுதாய் இருக்கும் என நான் எண்ணவே இல்லை என்றார். என்னால்தானே இந்தக் குழப்பம் என்னை மன்னியுங்கள் என்றார் நாரதர்.

கைடபனின் மகன்கள் அஸ்வத்தன் அரசமரத்தில மறைந்தும் பிப்பிலன் அந்தணனாக வடிவம் கொண்டும் யாகம் நிறைவு பெரும்போது அந்தணர்களை வதை செய்து யாகத்தை அழிக்க, அந்தனர்கள் அங்கு தவம் செய்த சனி பகவானிடம் முறையிட சனி பகவான் அந்தணர் வேடம் கொண்டு அவர்களிடம் செல்ல அவர்கள் அவரை விழுங்க தன் சக்தியால் அவர்கள் வயிற்றை கிழித்து வெளி வந்தார். அவரை பிரமஹத்தி தோஷம் பிடித்து கொள்ள லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு-சனீஸ்வரர். சனியின் மற்றொரு பெயர் மந்தன் அதனால் இந்த ஈசன் பெயர் மந்தேஸ்வரர், தலம் மந்தப்பள்ளி. பிரம்மா, கார்க்கோடன் பிரதிஷ்டை லிங்கங்கள்- பிரமேஸ்வரா, நாகேஸ்வரா(படிக லிங்கம்). சனிக்கு எதிரில் மந்தேஸ்வரர். கருவறைக்கு வெளியில் வடிகால் போன்ற அமைப்பில் எண்ணெய் விட்டால் அது மந்தேஸ்வரர் சிரசில் அபிஷேகமாக விழும் சிறப்பு. சனிவாரத்தில் அரசமரத்தை வலம் வந்து ஈஸ்வரனை எள் எண்ணெய்யால் (திலதைல) அபிஷேகம் செய்தால் சனிதோஷம் அண்டாது அவர்கள் வேண்டுதல்கள் நிறைவேறும். சப்த ரிஷிகளும் அவர்களது மனைவியரும் பிரதிஷ்டை-பார்வதி. சேத்ரபாலகர் வேணுகோபாலமூர்த்தம் அழகானவர். அவர் முன்னால் உற்சவவிக்ரகம். இது கௌதம மகரிஷியால் பிரதிஷ்டை. கார்த்திகை-லட்சபத்ரி பூஜை சிறப்பு

சனி பகவானின் ஆட்சிக்காலத்தில் அவர் கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கி விடுவதாலும் ஈஸ்வரனையே பீடித்தார் என்பதாலும் இவரைக் கண்டு அச்சப்படுதல் உண்டு. சனியைப் போல் கொடுப்பாருமில்லை கெடுப்பாருமில்லை என்பது பழமொழி. அதாவது ஒருவரது முன்வினையால் ஏற்பட வேண்டிய சங்கடங்களை குறுகிய காலத்தில் அனுபவிக்க வைத்து பின் தோஷம் நீக்கி சகல நன்மைகளும் கிடைக்க அருள்பவர் சனிபகவான். ஒரே ராசியில் நீண்ட காலம் இருப்பவர். சனி மனைவி -நீளாதேவி,

கிரகத்தின் பெயர்: சனி
உரிய மலர்: கருங்குவளை
உரிய மரம்: வன்னி மரம்
தானியம்: எள்
வாகனம்: காகம்
ரத்தினம்: நீலம்
கிழமை: சனிக்கிழமை
திசை: மேற்கு
உலோகம்: இரும்பு
நிறம்: கருப்பு
சமித்து: வன்னி
வழிபடும் பலன்கள்: வியாதி, கடன், பேய் மற்றும் பிசாசு பயம் நீக்கம்

நவகிரக சனி பகவான் காயத்திரீ-(நோய்கள் நீங்க, தொழிலில் முன்னேற்றம் அடைய)

”ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த பிரசோதயாத்”
(காகத்தை வாகனமாக கொண்ட சனி பகவானே கட்க ஆயுதத்தால் மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் குறையின்றி வாழ இன்னருள் தா சனீபகவானே.)

சோம்பல், பணிகளில் தடை, முன்னேற்றத்தில் முடக்கம், இனம்புரியாத பயம், உறுப்புகளில் காயம், விபத்துகள், உறவை பிரிதல், தொழில் நஷ்டம், சங்கடங்கள், வழக்குகளில் சிக்கல் ஆகியவற்றிற்கு சனிதோஷம் காரணமாம். திருக்கொள்ளிக்காடு, திருநள்ளாறு வழிபாடு சிறப்பு.

$$$$$

Read 24890 times Last modified on திங்கட்கிழமை, 16 July 2018 09:00
More in this category: « வெள்ளி! ராகு! »
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26931878
All
26931878
Your IP: 44.212.39.149
2024-03-29 00:28

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg