Print this page
ஞாயிற்றுக்கிழமை, 03 September 2017 10:12

சிவ வழிபாடு

Written by
Rate this item
(2 votes)

ஓம்நமசிவய!

ஈந்திடும் கரத்தாய் போற்றி ஈசன்தன் குமரா போற்றி
ஈசையாள் மகனே போற்றி ஈரநெஞ்சுடையாய் போற்றி
உம்பர்கோனே போற்றி உலகினர் புகலே போற்றி
உமைதிரு மகனே போற்றி உருவினில் மலையே போற்றி!

 

சிவவழிபாடு!

முதல்வனாக பரம்பெருள் இருந்தாலும் ஆனைமுகத்தானை முதலில் வழிபட்டு ஆரம்பிக்க வேண்டும் என்கிறது நமது வேதம். ஒற்றைக் கொம்பன், இரு செவியன், முக்கண்ணன், சதுர்புஜன், ஐங்கரன், ஆறாதாரத்துள்ளான் அவனை வணங்கி ஏழுபிறவி நீங்கி, எண்திசை போற்ற, நவமணிகளும் சம்பத்தும் பெற்று அனைவரும் வாழ்க! வாழ்கவே பல்லாண்டு!
வேதங்கள், சாஸ்திரம், புராணங்கள், இதிகாசங்கள், சம்பிரதாயம், பண்பாடு எல்லாம் ஆத்மவின் உடல் உள்ளம் இரண்டையும் தூய்மையாக்கும் நல்லுரைகளை வழங்குபவை. எத்தனை உயிர்கள் அவற்றை சரியாகப் பின்பற்றுகின்றோம். கலியுகத்தில் உயிர்கள் அவைகளை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. விஞ்ஞானத்தால் ஆடம்பர வாழ்கை முறைகளை தன் வாழ்க்கையில் புகுத்திக் கொண்டாலும் துன்பம் நேரிடும்போது ஆத்மா வேதங்களின் பாதையில் செல்ல விழைகின்றது. -குருஸ்ரீ பகோரா

சகல உயிர்களையும் எரித்து அழித்திடும் திருபாற்கடலில் உற்பத்தியான ஆலகால நஞ்சினை உண்டு 33முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றுமுள்ள உலக உயிர்களை ரட்சித்து காத்து அருளிய நீலகண்டனே, சதாசிவ பிரம்மமே, பிரணவ ஸ்வரூபியே, சகலத்தையும் ரஷிக்கும் ஆனந்த சித்தனே, ஒலிவடிவானவனே, நாத ஸ்வரூபனே, வேத வடிவானவனே, பரமேஸ்வரனே உன் திருபாதார விந்தங்களுக்கு வந்தனம்-குருஸ்ரீ பகோரா. 

#####

சிவ வழிபாடு என்பது சில வழிமுறைகளைக் கொண்டது.அவை

நீராடல்!
சிவச் சின்னங்கள்!
திருமுழுக்கு- அபிஷேகம்!
அன்னாபிஷேகம்! சோறுகண்ட இடம் சொர்க்கம்!
அர்ச்சனை!
ஆகமங்கள்!
பஞ்சாக்கரம்! வேதத்தின் இதயம் ஸ்ரீ ருத்திரம்! தாரகமந்திரம்!
பிரதோஷம்!
லிங்கோத்பவக்காலம்!
முக்குணத்தோன்! நிர்குணத்தோன்! எண்குணத்தான்!
ஜோதிலிங்கம்!
சகஸ்ரலிங்கம்!
ஜோதிர்லிங்கங்கள்!
பஞ்சமுக தரிசனம்!
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன! முயலகன் யார்!
சிவராத்திரி!
பலிபீடம்!
ஆலயங்கள் உடல் அமைப்பில்!
எப்படி வணங்க வேண்டும்!
கோவிலுக்கு எந்த காலத்தில் (நேரம்) போக உத்தமம்!
இறைவன் ஏன் சின்முத்திரையுடன் காட்சி!
யோகம்!
ஞானம்!
உயர்வானவன்!
இன்பக்காத்தல் துன்பக்காத்தல்!
மார்கழியில் பள்ளியெழுச்சி! ஆனியில் திருமஞ்சனத் திருநாள்!
சிவன் ஏன் அபிஷேகத்தை விரும்புகின்றார்!
உலகம் பலவிதம்!
சிவமயம்!
இறையருள் அறிவு!
இசையால் இறையருள் வசமாகும்!
மீண்டும் பிறவி! ஆவுடையார் என்றால் என்ன!
சிவனுக்குரிய விரதங்கள்!
லிங்க பூஜை பலன்கள்!
வேதங்களில் சொல்லப்பட்ட தவங்கள் !
சிவலிங்க வழிபாடு செய்பவர்கள் அறிய வேண்டியது!
வணங்கும்முறை!
தண்டம் சமர்ப்பித்தல்!
ஒரே நிகழ்வுகள் எப்படி வேறுவேறு தலங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றது! மன்வந்திரம் என்றால் என்ன!

#####

Read 11436 times Last modified on வியாழக்கிழமை, 03 August 2023 10:26
Login to post comments