gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

சந்திரனைப்போல் உங்கள் அருகிலிருக்கும் உயிர்களை அன்பு மழையில் நீராட்டுங்கள்.!
சனிக்கிழமை, 11 November 2017 20:06

சிவச் சின்னங்கள்!

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா

சிவச் சின்னங்கள்!                                                                                                                                                                                                                                                                        சிவஅடையாளங்களாகக் கருதப்படுவது இரண்டு. 
1.திருநீறு- பஸ்மம்- விபூதி- நம் பாவங்களை அழித்து இறைவனை நினைவூட்டும் ஒன்று (ப -பர்த்ஸ்னம்- அழித்தல், ஸ்ம- ஸ்மரணம்- நினைத்தல்.) பஸ்மம்- ரக்ஷை- அணிபவரை நோயிலிருந்தும், தீயனவற்றிலிருந்தும் காத்தல். திருநீறு அணிபவரின் அருகில் துஷ்ட சக்திகள் நெருங்காது. பகை, தீராத நோய், தீவினை, மனநோய் நீங்கும். திரு என்றால் மகாலட்சுமி என அர்த்தம். விபூதி என்றால் ஐஸ்வர்யம் என ஓர் அர்த்தம் உண்டு. நெற்றியில் திருநீறோ, திருமண்ணோ, குங்கும்மோ, சந்தனமோ இட்டுக் கொள்வது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியமானது ஆகும்.
திருநீறு வகைகள் 
1.கல்பம்-ஆரோக்கியத்துடன் கன்றுக் குட்டியுடன் கூடிய பசுவின் சானத்தை பஞ்ச, பிரம்ம மந்திரங்கள் ஓதி அக்னியில் எரிப்பதன் மூலம் கிடைப்பது. 
சத்யோஜாதம்- பிருதிவித் தத்துவம் அதிலிருந்து தோன்றிய நந்தினி என்ற பெயருள்ள கபிலவர்ணமுள்ள கோவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- விபூதி
வாமதேவம்- நீர்த் தத்துவம் அதிலிருந்து தோன்றிய பத்ரை என்ற பெயருள்ள கருப்பு நிறமுள்ள பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸிதம்
அகோரம்- தேஜஸ் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுரபி என்ற பெயருள்ள சிவப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- பஸ்மா
தத்புருஷம்- வாயுத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுசீலா என்ற பெயருள்ள வெளுப்பு நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- க்ஷாரம்
ஈசானம்- ஆகாசத் தத்துவம் அதிலிருந்து தோன்றிய ஸுமனா என்ற பெயருள்ள பல நிற பசுவின் கோமயத்தால் தயாராகும் பஸ்மம்- ரக்ஷா
2.அனுகல்பம்-தோட்டம், காடுகளில் மேயும் பசுக்களின் சானத்திலிருந்து தயாரிப்பது. 
3.உபகல்பம்-பசுக்கள் தங்கியிருக்கும் தொழுவத்திலிருந்து கிடைக்கும் சானத்திலிருந்து தயாரிப்பது. 
4.அகல்பம்-பல பசுக்களின் சானத்தை ஒன்றாக்கி முறையான மந்திரம் ஓதாமல் தயாரிப்பது.                                                                                                                                                                                                                                           

2.ருத்திரம்- ருத்ரா என்ற சொல் ‘ருத்’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. அழுது கண்ணீர் விடுவது என்று பொருள். அட்சம் என்றால் கண் என்று அர்த்தம். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று அசுரர்களின் முப்புரங்களை தனது நெற்றிக் கண்ணால் சிவன் எரித்தபோது அவருடைய மனம் இளகி கண்களிலிருந்து நீர் முத்து முத்தாக உதிர்ந்தது.
சிவனாரின் மூன்று கண்களிலிருந்து பனித்துளிகள் போன்ற நீர்த்துளிகள் முத்திட்டு கீழே விழுந்து அவை ருத்ராக்ஷ விருக்ஷங்களாக மாறின. பெருமானின் வலதுகண்-சூரியன்- அதிலிருந்து தோன்றிய கபிலநிற நீர்த்துளிகள் பன்னிரண்டு வகையான பேதங்களோடு கூடிய ருத்திராக்ஷங்களாகவும், இடதுகண்- சந்திரன்- அதிலிருந்து தோன்றிய வெண்ணிற நீர்த்துளிகள் பதினாறு வகையான பேதங்களோடு கூடிய ருத்திராக்ஷங்களாகவும், நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நீர்த்துளிகள் பத்து வகை பேதங்களுடனும் தோன்றி மொத்தம் ,38 வகையாகயாக இருந்தாலும் 14முகம் வரைதான் சொல்லப்பட்டிருக்கின்றது. சிறந்த ருத்திராக்ஷத்தை நீரில் போட்டால் மூழ்க வேண்டும். அதற்கு பத்ராக்ஷம் என்று பெயர். 

காணப்படாததைக் காண்பதாலும், கேட்கப்படாததைக் கேட்பதாலும், முகரப்படாததை முகர்வதாலும், உண்ணப்படாததை உண்பதாலும், சொல்லத்தகாதை சொல்வதாலும் செய்யத்தகாததை செய்வதாலும், எண்ணக்கூடாதை எண்ணுவதாலும், நடக்கக்கூடாததை நடத்துவதாலும், கொடுக்கக்கூடாததை கொடுப்பதாலும் ஏற்படும் பாவ பேதங்கள் எல்லாம் ருத்திராட்சம் அணிவதால் தொலைந்து போகும்.
மேலும் ருத்திராக்ஷத்திற்கு தெள்தொளி, சிவமணி, கண்டிகை, அக்கமணி, கண்மணி, நாயகன் விழிமணி என்றும் பெயர்களுண்டு. அளவில் நெல்லிக்கனி அளவுள்ள ருத்திராக்ஷம் உத்தமம். இலந்தை அளவு மத்தியமம். கடலை அளவு அதமம். உலகின் உள்ள கொட்டைகளில் ருத்திராக்ஷம் மட்டுமே துளையுடன் மனிதர்கள் அணிவற்காக இயற்கையாக இறையால் படைக்கப்பட்டுள்ளது. ருத்திரன் சக்தி வாய்ந்த மின்காந்தப் பண்புகளையும், காந்த முனைகளால் ஈர்க்கும் மற்றும் தூண்டும் தன்மை உடையது ஆகையால் அணிபவர்களுக்கு பலன் உண்டு.
ஒருமுகம்- சிவ சொரூபம்-பிரம்ம ஹத்தியை நீக்கும்
இருமுகம்- அர்த்தநாரீஸ்வர சொரூபம்-புத்தி பூர்வம், அபுத்தி பூர்வம் என்ற இரண்டு பாவங்களை நீக்கும்.
மூன்றுமுகம்- திரேதாக்கினி சொரூபம்-ஸ்திரீ ஹத்தியெனும் பெண்வதை பாவத்தை ஒரு கணத்தில் நீக்கிவிடும்.
நான்குமுகம்- பிரம்ம சொரூபம்—நரஹத்தி எனும் மனித வதை பாவத்தை நீக்கும்.
ஐந்துமுகம்-காலாக்னி ருத்ர சொரூபம்-உண்ணக்கூடாத்தை உண்டதாலும், சம்போகம் செய்யக்கூடாத மங்கையைச் சம்போகம் செய்ததினாலும் உண்டான பாவங்களையும், இது போன்ற மற்ற பாவங்களையும் நீக்கும்
ஆறுமுகம்- சுப்ரமண்ய சொரூபத்துடன் கணபதி அருள். பிரம்மஹத்தி-பிராமணவதை முதலான பாவங்களைப் போக்கும்
ஏழுமுகம்- ஆதிசேஷ சொரூபம்.பொன் முதலியவற்றை திருடிய பாவத்தைப் போக்கும்.
எட்டுமுகம்- மகா கணபதி சொரூபம்.-அன்னக்கூடம், தூலக்கூடம், சுவர்ணகூடம், துஷ்குல ஸ்திரீ சம்போகம், குருபத்தினி சம்போகம் முதலிய பாவங்களையும் சகல இடையூறுகளையும் நீக்கி சகல குணநலன்களை வழங்கி பரமபத்த்தைக் கொடுக்கும்.
ஒன்பதுமுகம்- கால பைரவ சொரூபத்துடன் அம்பிகை அருள். புத்தி முத்திகளிடன் ஈசுவர குணத்தை அளிக்கும். ஆயிரம் புருஷஹத்தியும் நூறு பிரம்ம ஹத்தியையும் நீக்கி சிவலோகம் கிட்டும்.
பத்துமுகம்- மகாவிஷ்ணு சொரூபம். கிரக தோஷங்களையும், பூத, வேதாள, பைசாச, பிரம்மராஷச முதலான பீடைகளையும் சர்ப்ப விஷங்களையும் போக்கும்
பதினோருமுகம்- ஏகாதச ருத்திர சொரூபம், ஆயிரம் அசுவமேதயாகம், நூறு வாஜ்பேயம், கோடி கோதானம் செய்த பலன்.
பன்னிரண்டுமுகம்- துவாதசாதித்தியர் சொரூபம்-கோமேத, அசுவமேத யாகங்களைச் செய்த பலன் கொம்புள்ள மிருகங்கள், ஆயுதபாணிகள், புலி முதலிய கொடிய விலங்குகளால் உண்டாகும் பயம், நடுக்கம் போன்ற துன்பங்களையும், யானை, குதிரை, மான், சர்ப்பம், எலி, நாய், பூனை ஆகியவற்றைக் கொன்றதாலுண்டான பாவங்களை நீக்கும்.
பதிமூன்றுமுகம்- இந்திர சொரூபம், சதாசிவரூபம்., ஷண்முக சொரூபம். தாய், தந்த, உடன் பிறந்தவர்களை கொன்ற பாவங்களை நீக்கும். சகல இஷ்டங்களை சித்தி பெறச் செய்யும். ரசம், ரசாயனம் முதலான போக போக்கியப் பொருள்களை விரும்பியபடி கொடுக்கும்.
பதினான்குமுகம்- ருத்ர மூர்த்தி சொரூபம். இது யாரிடம் இருக்கின்றதோ அவர்கள் சிவனுக்கு சமமாக வணங்கப்படுவர். இதை சிரசில் அணியவேண்டும்.

 ருத்ர ஜபம்

பஞ்சாங்க ருத்ர ஜப பாராயணம் - மெய், வாய், கண், காது, நாசி இவற்றுடன் மனதையும் அடக்கி ஒரு நிலையோடு ஜபிப்பது-
ஏகாதச ருத்திரம் ஜப பாராயணம் - 11வேதவிற்பன்னர்கள் 11முறை சொல்வது- சஷ்டியப் பூர்த்தி, வீடுகளில் ஹோமங்கள் ஆகிய சமயத்தில் பாராயணம் செய்வது- நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியத்திற்கு
மஹா ருத்திரம் ஜப பாராயணம் - 121 ரித்விக்குகள்- வேதம் அறிந்தவர்கள் தலா 11 முறை பாராயணம் செய்வது கோவில் கும்பாபிஷேகம் சமயத்தில் பாராயணம் செய்வது-உலகத்திற்கு நன்மையும் நாட்டிற்கு சுபிட்சத்தையும் பெற
அதி ருத்ர ஜப பாராயணம்- 1331 வேத விற்பன்னர்கள் 11முறை சொல்வது- மன்னர்கள் காலத்தில் செய்தது

&&&&&

Read 4557 times Last modified on ஞாயிற்றுக்கிழமை, 08 July 2018 10:51
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

12779298
All
12779298
Your IP: 162.158.78.27
2019-09-21 04:37

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg